புதன், 5 மார்ச், 2008

எதிர்கேள்வி

நமது நாட்டின் மக்கள் பற்றி எரிகின்ற பிரச்சினைகளால் அல்லல்பட்டுக்கொண்டுள்ளார்கள்.நாடு விடுதலைபபெற்று 60ஆண்டுகளாகியும் அவை ஏன் இன்னமும் நீடித்து வருகின்றன?பல ஆண்டுகளாகியும் அவை இன்னமும் தீர்க்கப்படாமல் இருப்பதற்கான காரணங்கள் என்ன? அப்படிப்பட்ட கேள்விகளுக்கு இந்த பிளாக் பதில் அளிக்கும் பஞ்சம்,பட்டினி,வறுமை,வேலையின்மை;மதமோதல்கள் ஜாதியக் கொடுமை ;தீண்டாமை; பரிவினைவாதம் ஆகியவை பற்றிய கேள்விகள் கேட்கப்படுகின்றன.இவைகள்தான் எல்லா பிரச்சனைகளுக்கும் காரணங்களா? அவை இவ்வளவு ஆண்டு காலமாக நமது நாடு கடைப்பிடித்து வரும் கொள்கை மற்றும் பாதையோடு ஏதேனும்மொரு வகையில் சம்பந்தப்பட்டவைகளா?இந்த பிளாக் அதற்கான காரணங்களைக் கண்டறிய உதவும்.தீர்வுக்கான் முதல் படி,பிரச்சினைகளுக்கான அடிப்படை காரணங்களை அடையாளம் காண்பதே!

கருத்துகள் இல்லை: