செவ்வாய், 30 டிசம்பர், 2008

நெருக்கடியின் பிடியில் அமெரிக்கப் பொருளாதாரம்

பி.சாய்நாத்
அமெரிக்கப் பொருளாதாரம் எப்போதும் போலில்லாமல் மிக மோசமான இறங்குமுக வளர்ச்சியைத் தொடங்கியுள்ளது. செப்டம்பர் 1,2008 முதல் ஒவ் வொரு நாளும் ஏறத்தாழ 14 ஆயிரம் வேலையிழப்புகள் ஏற்பட்டுள்ளன. கடந்த 90 நாட்களில் ஏறக்குறைய 13 லட்சம் அமெரிக்கர்கள் தங்களது வேலையை இழந்துள்ளனர். 1974 டிசம்பரிலிருந்து இதுவரை கண்டிராத அளவுக்கு, கடந்த நவம்பர் மாதத்தில் மட்டும் 5லட்சம் அமெரிக்கர்கள் வேலையிழந்துள்ளனர்.

அமெரிக்கப்பொருளாதாரம் பலவீன மடைந்து வருகிறது. இரு மாதங்களுக்கு முன் செப்டம்பரில் வேலையிழப்பு 1 லட்சத்து 59 ஆயிரம் ஆகும். தொழிலாளர் புள்ளியியல் துறையின் தற்போதைய தகவல்படி இது 4 லட்சத்து 3 ஆயிரம் என்ப தாகும். அக்டோபர் துவக்கத்தில் இது 2 லட்சத்து 40 ஆயிரம், தற்போது 3 லட் சத்து 20 ஆயிரமாக அதிகரித்துள்ளது. தேசிய வேலையின்மை விகிதம் 6.7 சதவீதம். ஆனால் இதைக்காட்டிலும் மூன்று மடங்கு இளைஞர் மத்தியில் அதி கரித்துள்ளது. அதாவது 20.4 சதவீத வேலையின்மை நிலவுகிறது. கடந்த 15 ஆண்டுகளில் சந்தித்திராத அளவிற்கு வேலையின்மை அமெரிக்காவில் அதிக ரித்துள்ளது. நவம்பரில் வேலையிழந்த மக்களின் எண்ணிக்கை 103 லட்சம். இது கடந்த ஓராண்டுக்கு முன்னர்விட 31 லட்சம் அதிகமாகும். மோசமான அதிக அளவிலான வேலைபறிப்பு தொடர்கிறது. தகவல் தொழில்நுட்பத்துறைகூட ஆயிரக் கணக்கான வேலைகளை இழந்துள்ளது.

குளிர்காலமாதலால் வேளாண்மை, கட்டிடம் ஆகிய இரு பெரிய துறைகளில் அதிகளவில் ஆட்கள் வேலைபெற வாய்ப் பில்லை. வசந்த காலத்தின் வேலை யிழப்பு எண்ணிக்கை பெருகும். கிறிஸ்து மஸ், புத்தாண்டு விடுமுறைக்குப்பின், ஜனவரி 2009ல் சில்லரை வாணிபம் உள் பட பல துறைகளில் இந்த எண்ணிக்கை வித்தியாசமானதாக இருக்கும். சந்தர்ப்பங் கள் அமெரிக்காவை இடதுசாரிப்பாதை யில் செலுத்துகிறது என்றுகூட சொல்லப் படலாம். நிறைய வேலைகளை உருவாக் கும் திட்டங்கள் தேவை. அடுத்த இரண் டாண்டுகளில் 30 லட்சம் வேலைகளை உருவாக்கும் திட்டத்தை பாரக் ஒபாமா செய்தாலும் கடந்த 2 ஆண்டுகளில் இழந் தவற்றை மீட்க முடியாது என்பதுதான் உண்மை.

பெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகி தத்தை 0.25 சதவீத அளவிற்குக் குறைத் துள்ளது. இதனால் காலத்திலான நேரடி விளைவுகள் ஏற்படும் என நம்பப்படு கிறது. ஆனால் இதுமட்டும் கடன் நெருக் கடியைத் தீர்க்க உதவாது. வங்கிகள் பணம் தேவைப்படுபவர்களுக்கு வழங்க விரும்ப வில்லை அல்லது பயப்படுகின்றன. புஷ் மற்றும் ஒபாமாவின் நிர்வாகங்கள் கொண்டு வந்த அல்லது கொண்டுவரக் கூடிய அனைத்து நடவடிக்கைகளும் அமெரிக்கப் பொருளாதாரத்தை முந்தைய நிலைக்கு கொண்டு செல்லாது. ஒரு கோடி அமெரிக்க மக்களுக்கு வாழ்க்கை முன்புபோல் அமையாது.

வீட்டு அடமானக் கடன் நெருக்கடி இன்னும் வலுவடைகிறது. அடுத்த இரண்டாண்டுகளில் 60 லட்சம் மக்கள் தங்களின் வீடுகளை இழந்து நிற்பார்கள். கடன் அட்டை நெருக்கடியும் இன்னும் சில மாதங்களில் அமெரிக்கப் பொருளா தாரத்தை நுணுக்கமாகப் பாதிக்கும். வீட்டு அடமானக் கடனாளிகள் 11 சதவீதம். ஆனால் கடன் அட்டை மூலம் கடன் பெற்று திரும்பச் செலுத்த முடியாதவர் எண்ணிக்கை 30 சதவீதம். அமெரிக்கா வில் பெரும்பாலும் ஒவ்வொருவரும் கடன் அட்டை பயன்படுத்துகிறார்கள் என்ற நிலைதான் இதற்குக் காரணம்.

இந்நிலையில் வேலையிழப்புகள் தொடர்ந்தால், வேலையிழந்தவர்கள் கடனை திரும்பச் செலுத்த இயலாது. மேலும் அவர்களுக்குத் தேவையான அத் தியாவசியப் பொருட்களை வாங்க முடி யாமல் மீண்டும் கடன் வலையில் சிக்கு வார்கள். 2002ல் கடன் அட்டை மூலம் பெறப்பட்ட கடன் அளவு 21,100 கோடி டாலராக இருந்தது. 2007ன் முடிவில் அது 91,500 கோடி டாலரை எட்டியது. இக் கடன்கள் அதிக வட்டி விகிதத்தில் பெறப் பட்டதால் நிதிநெருக்கடி மேலும் தீவிர மாகும்.

அடுத்த பிரச்சனை பெரிய நிதி நிறுவனங்களுக்கு நிதி உதவி செய்து அவற்றை நெருக்கடியிலிருந்து வெளியே கொண்டுவர அமெரிக்கா முயல்வதாகும். இத்தகைய முயற்சி ஏழ்மையை ஒழிப் பதற்குப் பதிலாக நிதி நெருக்கடியை மேலும் வலுவடையச் செய்யும். தினமும் வால் மார்ட்டில் புதிய ஊழல்கள் வெளி வந்துகொண்டிருப்பதைப் பார்க்கிறோம்.

பெரிய நிதி நிறுவனங்களுக்கும், வங்கி களுக்கும் பல நூறுகோடி டாலர் நிவா ரணமாக வழங்கப்பட்டிருந்தாலும், இப் பணம் பொதுமக்களின் கடன் மற்றும் அட மானக்கடன் நெருக்கடியை போக்கு வதற்குப் பயன்படுத்தப்பட்டதாகத் தெரிய வில்லை. இதற்கிடையில் 5000 கோடி டாலர் அளவுக்கு ஏற்பட்ட பெர்னாட் எல்.மேட் ஆப் முதலீட்டு பங்கு பத்திரங் களின் ஊழல் வெளிவந்துள்ளது. இதில் பலமான டிரஸ்ட்களும், தனி நபர்களும் அதிகளவில் இழந்துள்ளனர். இத்தகைய ஊழல்களை எப்படி நிதிநிறுவனங்கள் அனுமதித்தன? இது பல ஊழல்களில் ஒன்றுதான்.

ஒபாமாவால் உருவான செனட் காலிப் பதவியை விற்கக்கூடிய சில்லரைத்தன மான செயலை கவர்னரே செய்திருப்பதும் நடந்துள்ளது. இது பிக்பாக்கெட்டுக்குச் சமமான செயலாகும். பொதுமக்களின் பணத்தைச் சூறையாடுவதாகும்.

ஒரு நிறுவனத்தின் கதவுகள் அடைக் கப்பட்டதால் 200க்கு மேற்பட்ட தொழிற் சங்கத் தோழர்கள் வேலையிழந்தார்கள். கதவடைப்புக் காலத்திற்கான ஊதியம் கேட்டுப்போராடி சம்பளமும் பெற்றுள் ளனர். இதற்குப் பொதுமக்களும் ஆதரவாய் நின்றுள்ளனர். இந்தநிகழ்வு தேசிய அளவில் பலரின் கவனத்தை ஈர்த்துள் ளது. ஒபாமாவும் தொழிலாளர்களின் கோரிக்கைகளை ஏற்றுள்ளார். இதுவே நிதி நெருக்கடிக்கு முன்னால் எனில், காவல்துறை ‘அத்துமீறியவர்கள்’ எனக் கூறி தொழிலாளர்களை நிறுவனத்தை விட்டு வெளியேற்றியிருக்கும். ஆனால் நிதிநெருக்கடிக்குப் பின்னால், வித்தி யாசமான போக்கு நிலவுவதைப் பார்க்கி றோம். சாதாரண மக்கள் தொழிலாளர் களுக்கு உணவுப் பொட்டலங்களை வழங் கியது இன்னும் உற்றுநோக்க வேண்டி யது. இத்தகைய செயல்கள் அமெரிக்கப் பொருளாதாரத்தில் தொடரவேண்டும். வலுவான தொழிலாளர் இயக்கம் முன் னெடுத்துச் செல்லப்பட வேண்டும்.

நன்றி : இந்து (27.12.08)
தமிழில்: கொ.சதாசிவம்

கருத்துகள் இல்லை: