செவ்வாய், 21 செப்டம்பர், 2010

‘நாங்கள் ஒருபோதும் தோல்வி அடையமாட் டோம் இடதுமுன்னணி மீண்டும் வெல்லும் புத்ததேவ் பட்டாச்சார்யா உறுதி


மேற்குவங்கத்தில் இடது முன்னணி மீண்டும் மகத்தான வெற்றி பெறும் என்று முதலமைச் சர் புத்ததேவ் பட்டாச்சார்யா முழக்கமிட்டார்.

நாங்கள் ஒருபோதும் தோல்வி அடையமாட்டோம். பொறுப்பற்றவர்களிடம் ஆட்சியைக் கொடுத்து விட்டு மேற்கு வங்கத்தை இருளில் தள்ளிவிடமாட் டோம் என்றும் அவர் கூறினார்.

கொல்கத்தாவில் ஞாயி றன்று மாலை நடை பெற்ற விழா ஒன்றில் பங்கேற்று பேசிய முதல மைச்சர் புத்ததேவ் பட் டாச்சார்யா, அடுத்த சட்டமன்ற தேர்தலிலும் இடது முன்னணி மகத்தான வெற்றிபெற்று ஆட்சியில் நீடிக்கும் என்று குறிப் பிட்டார்.

‘நாங்கள் ஒருபோதும் தோல்வி அடையமாட்டோம். எவ்விதப் பொறுப்பில்லாமல், எவ்வித ஒழுங்குமில்லாத ஒரு கட்சியிடம் அதி காரத்தை கொடுத்து விட்டு இந்த மாநிலத்தை ஒட்டுமொத்த இருளில் தள்ளிவிடமாட்டோம்’ என்று புத்ததேவ் பட்டாச்சார்யா கூறினார்.

சிங்கூர், நந்திகிராமம் ஆகிய இடங்களில் ஏற்பட்ட நிலைமைகளை கருத்தில் கொண்டு, 1894ம் ஆண்டு நில கையகப்படுத்தல் சட்டத்திற்கு பதிலாக புதிய சட்டத்தை மத்திய அரசு இயற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்று குறிப்பிட்ட அவர், நிலம் கொடுப்பவர்களுக்கு அதிகபட்ச நிவாரணம் மற்றும் மறுவாழ்வுக்கான உத்தரவாதம் அளிக்கும் விதத்தில் புதிய சட்டம் அமைய வேண்டும் என்று கூறினார்.

இத்தகைய சட்டம் இயற்றப் பட்டால் ஒட்டுமொத்த நாடும் பலன்பெறும் என்று குறிப்பிட்ட முதலமைச்சர், நாட்டின் அனைத்து பகுதிகளிலும் அளிக்கப் படுவதைவிட சிங்கூரில் நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு மிகவும் அதிகபட்ச தொகை வழங்கப்பட் டது என்பதை நினைவு கூர்ந்தார்.

எனினும், இடதுமுன்னணியின் அரசுக்கு எதிரான கும்பலின் கண் மூடித்தனமான எதிர்ப்பு காரணமாக சிங்கூரில் தொழிற்சாலை அமையவில்லை என்ற போதிலும், அதற்கு பின்னர் 2009ம் ஆண்டில் மட்டும் மேற்குவங்கத்திற்கு ரூ.8ஆயிரத்து 500 கோடி அளவிற்கு தொழில் மூலதனங்கள் வந்து சேர்ந்துள்ளன என்பதையும் புத்த தேவ் சுட்டிக்காட்டினார்.

(பிடிஐ)

கருத்துகள் இல்லை: