புதன், 9 பிப்ரவரி, 2011

ஏழைகளின் கண்ணீர் திமுக அரசை தகர்த்தெறியும்



தமிழக அரசின் ஐந் தாண்டு சாதனைகளை மாநிலஅரசு பட்டியலிடும் போது இந்த ஐந்தாண்டு காலத்தில் மக்கள் சந்தித்த பிரச்சனைகளை அரசின் கவ னத்திற்கு கொண்டுவருவது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடமையாகும்.

சென்னையில் வித்யா என்ற கல்லூரி மாணவி 4 ஆயிரம் ரூபாய் திருடிவிட் டார் என்று கூறி, அந்த கல் லூரியின் நான்கு பேராசிரி யர்கள் அவர்களே போலீஸ் அதிகாரியாக மாறி அந்த மாணவியை கொடுமை யான முறையில் விசாரித்த னர். இதனால் நேர்மையான அந்த ஏழை மாணவி மன முடைந்து தற்கொலை செய்துகொண்டார். அந்த மாணவியின் தற்கொலை மரணத்தில் அவரது ஏழ் மை, ஏழ்மையிலும் நேர் மையாக இருக்கக்கூடிய குணம் உள்ளது. தாழ்த்தப் பட்ட சமூகத்தை சேர்ந்த அவரது பெற்றோர், வீடு களில் துப்புரவு பணி செய் பவர்கள். இதுதான் அந்த மாணவியின் குடும்ப நிலை மை. அந்த மாணவியின் குடும்பத்தினருக்கு நீதி வழங் கப்படவேண்டும்.

வேலூரில் நான்கு கைக் குழந்தைகளுடன் உள்ள ஒரு பெண், மைக்ரோ பை னான்ஸ் என்ற நுண் கட னை வாங்கி அதனை கட்ட முடியாத காரணத்தினால் அந்த குழந்தைகளுடன் தற் கொலை செய்து கொண் டார். திமுகவும் நாங்களும் விரைவில் சட்டமன்ற தேர்த லை சந்திக்க இருக்கிறோம். பல கட்சிகளுடன் கூட் டணி வைக்கவும் இருக்கி றோம். ஆனால், தமிழக மக் கள் ஏழ்மையோடும், வறு மையோடும் பலமான கூட் டணி அமைத்து வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை இந்த நேரத்தில் சுட்டிக்காட்ட விரும்பு கிறேன்.

விலைவாசி உயர்வுக்கு உலகமயக் கொள்கை, பருவ மழை தவறியது ஆகியவை தான் காரணம் என்று அரசு கூறுகிறது. விலை வாசி உயர்வு என்று சொன் னாலே அமைச்சர் பல்வேறு பொருட்களின் விலையை சுட்டிக்காட்டி விலை உயர்வே இல்லை என்ற போராட்டத் தை தனியாக நடத்திக் கொண்டிருக் கிறார்.

ஆளுநர் உரையின் போது, காய்கறி விலை கூடியது, பட்ஜெட்டின் போது அந்த உயர்வு குறைந்து விட்டது என்று சொல்கி றார். ஹோட்டல்களில் 20 ரூபாய்க்கு மலிவு விலையில் சாப்பாடு வழங்கப்பட வேண்டும் என்று முதல மைச்சர் மூன்று முறை உத் தரவு போட்டார். ஆனால், அந்த உத்தரவு அமல்படுத் தப்படவில்லை. ஹோட் டல்களில் 20 ரூபாய்க்கு சாப்பாடு கேட்டால் உப் பும், ஊறுகாயும்தான் இலையில் வைக்கிறார்கள். கேட்டால், இதைத்தான் வைக்க முடியும் என்று கூறுகிறார்கள்.

இரண்டு பேர் 50 ரூபாய்க்கு சாப்பிட முடியவில்லை. 100 ரூபாய் கொடுத்தால்தான் சாப்பிட முடியும் என்ற நிலைமை உள்ளது. இந்த எதார்த்தமான நிலையை அரசு உணர வேண்டும். இதற்கு காரணம் உலகமயக் கொள்கை மற்றும் பருவ மழை தவறியது மட்டும் அல்ல, பதுக்கல், கடத்தல், உணவுப்பொருட்கள் மீதான ஆன்லைன் வர்த்தகம், பண வீக்கம் ஆகியவையும் இதன் பின்னணியில் உள்ளது என் பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக் காட்டுகிறது.

விலைவாசி உயர்ந்தால் தான் நல்லது என்று இங்கே பேசிய காங்கிரஸ் உறுப்பி னர் கூறினார். வெங்காய விலை ஏறியதால் விவசாயி கள் மகிழ்ச்சியாக இருந்த தாக கூறினார். (இதே போலத்தான் என்று ராகுல்காந்தி கூறிய சில வார்த்தைகளை பாலபாரதி பேரவையில் சுட்டிக்காட்டிய போது அதற்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ராகுல் காந்தி மக்களவை உறுப்பினர் அவர் பேசியதை இங்கே குறிப்பிட அனுமதிக்கமுடியாது என்று பேரவைத் தலைவ ரும் கூறி அவைக் குறிப்பில் இருந்து நீக்குவதாக கூறினார்.)

பாலபாரதி : இந்த அவையில் தவறாக பேசியிருந்தால் நீக்குவதில் அர்த்த மிருக்கும், நாடாளுமன்றத் தில் ராகுல்காந்தி பேசியதை இங்கே கூறினால் அதை ஏன் நீக்குகிறீர்கள்.

விலைவாசி உயர்ந்துள்ளது என்று கூறினால் உடனே அமைச்சர்களும், ஆளுங்கட்சி உறுப்பினர் களும் வருமானம் அதிகரித் திருக்கிறது என்ற வாதத்தை முன்வைக்கிறார்கள். பஞ்சாலை தொழிலாளிக்கு தினக் கூலி 94 ரூபாய்தான். விவ சாய தொழிலாளர்களுக்கு அரசு நிர்ணயித்துள்ள சட்டப் படியான தினக்கூலி 80 ரூபாய் தான். தீப்பெட்டி தொழிற் சாலையில் பணிப்புரியும் பெண்களுக்கும் குறைந்த கூலிதான். அதுவும் ஆண்களும் - பெண்களும் அத் தொழிலில் நாள்தோறும் ஆபத்துடன் பணிபுரிந்து வருகிறார்கள். கடுமையாக இவர்கள் உழைத்தாலும் நாள் கூலி 54 ரூபாய்தான். தனியார் அலுவலகங்களில் வேலை பார்ப்போருக்கு மாத சம்பளம் 5ஆயிரம் ரூபாய்தான். பணக்கார பிள் ளைகள் படிக்கும் பள்ளிகளில் பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கோ மாதந் தோறும் 5 ஆயிரம் ரூபாய் தான். கால் நடைத் துறையில் 60 ரூபாய்தான் கூலி. ஆயாவுக்கு மாதம் 300தான் சம்பளம். காலையில் இருந்து இரவு வரை ஜவுளிக்கடை களில் கால்கடுக்க நிற்கும் இளம் பெண்களுக்கும் குறைந்த சம்பளம் தான் வழங்கப்படுகிறது. ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் துப்புரவு தொழி லாளிக்கு தினக்கூலி 2 ரூபாய் தான் வழங்கப்படுகிறது. சுகா தாரத்துறையில் 600 ரூபாய்க்கு பலர் பணிபுரிந்து வருகிறார் கள். இப்படி 80 விழுக்காடு மக்களின் ஊதியத்தையும், மற்றவர்கள் ஊதியத்தையும் ஒப்பிட்டு பார்க்க வேண் டாமா? சட்டமன்ற உறுப்பி னர்களின் சம்பளம் 50 ஆயி ரம் ரூபாய். ஆனால், இதே சட்டப் பேரவையில் பணி யாற்றிக் கொண்டிருக்கும் சிப்பந்திகளுக்கு எவ்வளவு வழங்கப்படுகிறது என்று தெரியாதா? எனவே, வரு மானம் உயர்ந்துள்ளதால் தான் விலைவாசி உயர்ந்துள் ளது என்று சொல்லப்படும் வாதம் ஆளுங்கட்சிக்கு வேண்டுமென்றால் சரியாக இருக்கும். தமிழக மக்களின் உண்மை நிலைக்கு ஒப்பிட முடியாது.

இன்று தமிழக அரசு ஒரு லட்சம் கோடி ரூபாய்கு மேல் கடன் பெற்றுள்ளது. கடன் வாங்குவது தவறல்ல. சில மாவட்டங்களில் மைக்ரோ பைனான்ஸ் என்ற நுண் கடனை மக்கள் வாங்கு கிறார்கள். பள்ளிப்பாளை யத்தில் எங்கள் கட்சியின் தோழர் வேலுச்சாமி கந்து வட்டியை தட்டிக்கேட்ட தால்தான் படுகொலை செய்யப்பட்டார்.

தமிழ்நாட்டில் சிறுகுறு தொழில்கள், ஜவுளித் தொழில் என பல்வேறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. கைத் தறி, நெசவு, விசைத்தறி, தீப் பெட்டி உள்ளிட்ட தொழில் கள் உலகமய கொள்கையா லும், மத்திய அரசு கடை பிடிக்கக்கூடிய தவறான பொருளாதார கொள்கை யாலும் பாதிக்கப்பட்டுள் ளன. இப்படிபட்ட நிலை யில்தான் பன்னாட்டு நிறு வனங்கள் தமிழ்நாட்டில் இளைஞர்களை வளைத் துப் போட்டு வருகிறார்கள். அங்கு 12 மணி நேரம் வேலை செய்ய வேண்டும். தொழிற் சங்கம் அமைக்க கூடாது, அமைத்தாலும் கொடியை வெட்டிவிடுகிறார்கள். அந்த தொழிலாளி தனக்குள்ள உரிமையை பெறமுடியாத நிலைதான் உள்ளது.

விலை வாசி உயர்கிறது ஆனால் ஒரு மனிதனுடைய உழைப்பின் மதிப்பு உயர்ந் துள்ளதா? கூலி உயர்வு இருக்கிறதா? ஆனால், மற்ற பொருட்களின் விலை மட் டும் உயர்ந்துகொண்டே இருக்கிறது. இந்த வேறு பாட்டை சரிசெய்யக்கூடிய பொருளாதார நடவடிக்கை களில் திமுக அரசு படு தோல்வி அடைந்துவிட் டது என்று வருத்தத்துடன் சொல்லவேண்டியுள்ளது. மத்திய அரசின் கொள்கை யுடன், மாநில அரசு கட்டி போடப்பட்டுள்ளது என்பது தான் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் குற்றச்சாட் டாகும்.

(இப்படி பாலபாரதி பேசிக் கொண்டிருக்கும் போது முதலமைச்சர் உட் பட அமைச்சர்கள் அவரது பேச்சில் குறுக்கிடாமல் கவ னமாக கேட்டுக் கொண்டி ருந்த போது அரசின் கொள் கைகளுக்கு எப்போதும் வக்காலத்து வாங்கும் காங் கிரஸ் கட்சியின் கொறடா பீட்டர்அல்போன்ஸ் எழுந்து நீண்ட உபதேசம் செய்தார். அதற்கு பேரவை தலைவரும் அனுமதி அளித்தார். விளக் கம் கேட்க எழுந்தவருக்கு நீண்ட நேரம் பேச அனுமதிக் கலாமா என்று அதிமுக உறுப் பினர்கள் கேட்ட உடன் பீட்டர் அல்போன்ஸ் பேச்சை முடித்துக் கொண்டார்.)

பாலபாரதி : அவையை திசை திருப்ப பீட்டர் அல் போன்ஸ் முயற்சிக்கிறார். அவரால் அதைதான் செய்ய முடியும். இந்தியா முழுவ தும் 1.5 லட்சம் விவசாயி கள் தற்கொலை செய்துக் கொண்டுள்ளனர். காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல்காந்தி ஊர் ஊராக விதவைகளின் குடிசைகளுக்கு சென்று ஆறுதல் கூறி வருகிறார். இதுதான் இந்தி யாவின் உண்மை நிலை.

இரண்டு ஏக்கர் இலவச நிலம் வழங்கும் திட்டம் அரசின் நிதிநிலை அறிக்கை யில் இடம்பெறவில்லை. ஏன் என்று தெரியவில்லை. ராமநாதபுர மாவட்டத்தில் இலவச நிலத்திற்காக மக்கள் அலையவேண்டிய நிலைஉள்ளது. திருவள்ளூர் மாவட்டம் காவேரி ராஜபுரத்தில் தனியார் ஆக்கிரமித்திருந்த நிலத்தை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மீட்டனர்.

பாலபாரதி : காவேரி ராஜ புரத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சொந்தமான நிலத்தை இன்னும் அரசு வழங்கவில்லை. அதை வழங்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மாநிலத்தில் இலவச மாக வண்ணத் தொலைக்காட்சி பெட்டிகள் வழங்கப்பட்டன. அரசு கேபிள் டிவி நிறுவனமும் தொடங் கப்பட்டது. அது தற்போது எந்தநிலையில் உள்ளது. அது செயல்படுமா? செயல் படாதா? அல்லது கைவிடப் பட்டுள்ளதா? என்ற எந்த குறிப்பும் இடைக்கால நிதி நிலை அறிக்கையில் இல்லை.

சட்டம் ஒழுங்கு என் பது மாநிலத்தில் மிக மோச மாக பாதிக்கப்பட்டுள்ளது. கள்ளச்சாராய பேர்வழியை எதிர்த்த ஒரே காரணத்திற் காக திருவாரூர் மாவட்டத் தில் எங்களது கட்சி தோழர் நாவலன் வெட்டி படு கொலை செய்யப்பட்டார். அவரை வெட்டியது திமுகவை சேர்ந்த பன்னீர் செல்வமா, தண்ணீர் செல்வமா என்று கேள்வி கேட்ககூடிய அள விற்கு அவர் ஆளும் கட்சிக் குள் ஐக்கியமாகி இருக்கி றார். எனவே, நாவலனை கொலை செய்த குற்றவாளி கள் மீது தமிழக அரசு நடவ டிக்கை எடுக்க வேண்டும்.

மணல் கொள்ளை

மணல் கொள்ளையை சுட்டிக்காட்டினால் கொலை மிரட்டல் வருகிறது. எதிர்த்து போராடினால் சமூக விரோத சக்திகள் தாக்குதல் நடத்து கிறார்கள். இவர்கள் எல்லா கட்சிக்கும் எதிரிகளாக இருக்கிறார்கள். மணல் கொள்ளையை தடுத்து நிறுத் தாவிட்டால் ஆறுகளில் மகாத்மா காந்தி உருவம் பொறித்த ரூபாய் நோட்டு கள் தான் ஆறாக ஓடும். இந்த கடத்தலை தடுத்து நிறுத்தினால் அரசு வெளி சந்தையில் கடன் வாங்க வேண்டிய அவசியமே இருக் காது. மணல் கொள்ளையில் ஈடுபடும் சமூக விரோத சக்திகளை எதிர்த்து மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிச்சயமாக போராடும். மக்கள் சக்தியின் ஆதர வோடு இத்தகைய சமூக விரோத சக்திகளை முறிய டிப்போம். அதற்கு அரசும் துணை நிற்க வேண்டும்.

தீண்டாமை கொடுமை

தீண்டாமை கொடுமை இன்னமும் சில இடங்களில் நீடிக்கிறது. உத்தபுரத்தில் முத்தாலம்மன் கோவிலுக் குள் தலித் மக்கள் இன்ன மும் நுழைய முடியவில்லை. நுழைய முயன்றால் காவல் துறையை வைத்து 144 சட்டத் தின் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.

வீடுகட்ட தொகை போதாது

பள்ளிகளில் துப்புரவு தொழிலாளர்கள் மிக குறைந்த கூலியில் வேலை வாங்கப்படுகிறார்கள். அவர் களுடைய பணி நிரந்தரப் படுத்தப்படவே இல்லை. சுனாமி வீடுகட்ட இரண்டு லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. பெரியார் சமத்துவபுரத்தில் வீடுகட்ட ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், கலைஞர் வீடு வழங் கும் திட்டம் முதலமைச்சர் பெய ரில் இருக்கிறது என்ற கார ணத்தில் என்னவே 75 ஆயி ரம் ரூபாய்தான் கொடுக்கப் படுகிறது. அதுலேயும் காண்ட் ராக்ட் உள்ளது. இந்த மிகக் குறைந்த தொகையில் எப் படி வீடுகட்ட முடியும். அரசே வீடுகட்டும் திட்டத் தில் செலவு போதவில்லை என்று அரசு ஊழியர்கள் போராடிக் கொண்டிருக் கிறார்கள்.

வேலை வாய்பகங்களில் 63 லட்சம் பேர் பதிவு செய்து வேலைக்காக காத்திருக் கிறார்கள். அரசு அலுவல கங்களில் ஒரு லட்சத்திற்கு அதிகமாக பணியிடங்கள் காலியாக உள்ளன. 4 ஆயிரம் 5 ஆயிரம் ரூபாய்க்கு என தனியார் நிறுவனங்களால் வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு ஆள் எடுக் கப்படுகிறது. இதை அனும திக்க கூடாது. இலவச திட் டங்கள் நல்ல திட்டங்கள் என்றாலும், உலகமய பொரு ளாதார கொள்கையின் தாக்கத்தால் இலவச திட் டம் பிரசர் குக்கரில் இருந்து வெளியாகும் நீராவி போன்று உள்ளது. இலவச திட்டங் கள் இல்லை என்றால் தமிழ் நாட்டில் மிக பெரிய கொந் தளிப்பு ஏற்பட்டுவிடும். அந்த அளவிற்கு அரசின் நிலை உள்ளது.

அரசாங்க பேருந்து களில் இன்று மறைமுகமாக கட்டணம் உயர்த்தப்பட் டுள்ளது. ஆனால், உயர்த்தப் படவில்லை என்று எப் போதும் போக்குவரத்துத் துறை அமைச்சர் கூறி வரு கிறார்.

மொத்தத் தில் கடந்த நான்கரை ஆண்டுகளில் ஆட்சி செய்து வரும் திமுக அரசு அனைத்து துறைகளிலும் தோல்வி அடைந்து விட்டது. இதை குறிப்பிடும் போது, “அல்லல் பட்டு ஆற்றாது அழுத கண்ணீர் அன்றே செல் வத்தைத் தேய்க்கும் படை” திருக்குறள்தான் ஞாபகத்திற்கு வருகிறது. துன்பம் தாங்காமல் அழுத ஏழைகளின் கண் ணீர் மிகப்பெரிய அதிகா ரத்தை உடைத்து சுக்கு நூறாக்கும்” என்பதே அந்த திருக்குறளுக்கு அர்த்த மாகும். இந்த நிலை திமுக அரசுக்கு நிகழப்போகிறது.

சட்டப்பேரவையில் புத னன்று (பிப்.9) இடைக்கால நிதி நிலை அறிக்கை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சட்ட மன்றக் குழு தலைவர் கே. பாலபாரதி பேசியது

கருத்துகள் இல்லை: