வெள்ளி, 21 ஜனவரி, 2011

கள்ள சாரயம் விற்க சிறந்த இடம் தமிழ்நாடு காய்ச்சுபவர்களுக்கு முழுபாதுகாப்பு வழங்கப்டும்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூர் மாவட்ட முன்னணித் தலைவர்களில் ஒருவரும், மாவட்ட செயற்குழு உறுப்பினரும், விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளருமான தோழர் ஜெ. நாவலன் (54) புதனன்று (19. 1.2011) இரவு சுமார் 7 மணி அளவில் சமூக விரோத, கள்ளச்சாராய கும்பலால் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். திருவாரூர் மாவட்டம் தண்டத்தோப்பு பகுதியில் கள்ளச்சாராய தொழிலை நடத்திவரும் நாராயணன் மகன் பன்னீர் செல்வம் (இவர் அப்பகுதின் திமுக தலைவர்) தூண்டுதலின் பேரில் பன்னீர் செல்வம் மகன் காளீஸ்வரன், கோவிந்தன் மகன் பிரகாஷ், பன்னீர் செல்வம் மகன் ஜீவா, நாராயணன் மகன் ராமன், சுகுமாரன் மகன் பச்சைபிள்ளை, நாராயணன் மகன் பரதன் ஆகிய ஆறு பேரும் பேரளம் காவல் சரகம் கொட்டூர் மாங்குடி பகுதியில் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங் களை கொண்டு சரமாரியாக தாக்கியதுடன் அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்குள் தஞ்சம் புகுந்த அவரை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்துவிட்டனர். சமூக விரோத கும்பலை எதிர்த்து மார்க்சிஸ்ட் கட்சி தீவிரமான போராட்டங் களை தொடர்ந்து நடத்தி வந் தது. தமிழக அரசும், காவல் துறையும் சமூக விரோதிகள் மீது உறுதியான நடவடிக்கை எடுக்காத நிலையில் தோழர் நாவலன் படுகொலை செய்யப் பட்டுள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு போலீஸ் சந்தேகத்தின் பேரில் ஒரு நபரை பிடித்து விசாரித்ததில் தோழர் ஜெ. நாவலனை கொலை செய்ய வந்துள்ளதாக வாக்குமூலம் அளித்துள்ளான். இவ்வளவுக்குப் பிறகும் காவல்துறை மெத்தனமாகவே செயல்பட்டது.

மாறாக, கள்ளச் சாராய கும்பலுக்கு துணை நிற்கும் வகையில் தோழர் நாவ லன் உள்ளிட்ட கட்சித் தலை வர்கள் மீதே காவல்துறை பொய் வழக்கு புனைந்தது. இந் தப் பின்னணியில் இந்தப்படு கொலை நடந்துள்ளது.

தோழர் நாவலனுக்கு வசந்தா என்ற மனைவியும், லெனின், ஸ்டாலின் என இரு மகன்களும், செங்கொடி, செம் மலர் ஆகிய மகள்களும் உள் ளனர். தோழர் வசந்தா ஜன நாயக மாதர் சங்கத்தின் முன் னணி ஊழியராக பணியாற்றி வருபவர்.

கடந்த ஆண்டில் (மார்ச் 2010) நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் கட்சியின் கிளைச் செயலாளர் தோழர் சி.வேலுச்சாமி (வயது 38) கந்துவட்டி கொடுமையை எதிர்த்து போராடிய போது, கந்துவட்டி, சமூக விரோத கும்பல் மீது புகார் கொடுத்தும், காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்காத நிலையில் படுகொலை செய்யப்பட்டார். தமிழக அரசும், காவல்துறையும் சமூக விரோத கும்பல்களின் செயல்பாடுகளை தடுத்திட உறுதியான நடவடிக்கை எடுக் காததின் காரணமாகவே மேற் கண்ட கொடூர கொலைச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

கள்ள சாரயம் விற்க சிறந்த இடம் தமிழ்நாடு காய்ச்சுபவர்களுக்கு முழுபாதுகாப்பு வழங்கப்டும். மேலும் கந்துவட்டி வாங்குபர்களுக்கு சிறப்பு பாதுகாப்பு வழங்கப்படும் .
நன்னிலம் வட்டத்தில் நன்னிலம், பேரளம், சன்னாநல்லூர், கொல்லு மாங்குடி, ஆண்டிபந்தல் உள்ளிட்ட மாவட் டத்தின் பல்வேறு இடங்களில் இரங்கல் தெரி வித்து கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உட்பட பல மாவட்டங்களிலிருந்து நூற்றுக்கணக் கான வாகனங்கள் மூலம் மக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக திரண்டதால் பேரளம் திருமெய்ச்சூர் பகுதியில் மக்கள் திரளாக கட்சி அளித்தது.


2 கருத்துகள்:

vijayan சொன்னது…

கீழ் வெண்மணியில் இருந்து திராவிட இயக்கங்களின் நடைமுறை இவ்வாறுதான் இருக்கிறது.ஆனாலும் தோழர்கள் தம்பிகளிடமும்,ரத்தத்தின் ரத்தங்களிடமும் மாறி மாறி உறவு.

விடுதலை சொன்னது…

விஜயன் அவர்களே

//ஆனாலும் தோழர்கள் தம்பிகளிடமும்,ரத்தத்தின் ரத்தங்களிடமும் மாறி மாறி உறவு. //

எந்த காலத்திலும் அப்போதைய அரசியல் நிலை மக்கள் நலன் கருதியே தேர்தல் உடன்பாடு கொள்ளப்படுகிறது. அதை பயன்படுத்தி மக்களுக்கு என்ன செய்ய முடியும் என்பதையும் கிடைக்கும் குறைந்த அதிகாரத்தை பயன்படுத்தி தம்மை தற்காத்துக்கொள்ளவும்தான் இந்த தேர்தல் உறவு. அதன் மூலம் எவ்வளவு கொள்ளை அடிக்கலாம், எந்த அமைச்சர் பதவி வாங்கலாம் என்பதற்காக அல்ல