ஞாயிறு, 27 பிப்ரவரி, 2011

விவசாயம்....இனி..?


மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி(பொருளாதார அடியாள் Made in america) பொருளாதார ஆய்வறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறார். இந்த அறிக்கையில், நாட்டின் விவசாயத் துறை குறித்து அவர் மிகவும் அக்கறை கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள தோடு, இந்த துறை போதிய அளவு வளர்ச்சி பெறவில்லை என்றும் கவலை தெரிவித்திருக் கிறார். இரண்டாவது பசுமைப் புரட்சியை நிகழ்த்த வேண்டிய காலம் வந்துவிட்டது என்றும் அவர் திருவாய் மலர்ந்திருக்கிறார்.

முதலாவது பசுமைப் புரட்சி குறித்து இயற்கை வேளாண் நிபுணர்களும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் ஏராளமான கேள்விகளை எழுப்புகின்றனர். ரசாயன உரங்கள் மற்றும் பூச்சி மருந்துகளைச் சார்ந்து விவசாயம் இயங்கவேண்டி வந்துள்ளதும், மண் மலடாக்கப்பட்டுள்ளதும், உணவே விஷமாக மாற்றப்பட்டுள்ளதும், பசுமைப்புரட்சி என்ற பெயரில் புகுத்தப்பட்ட நவீன விவசாய முறையால் விளைந்த கேடுகள் என்று இவர்கள் வாதிடுகிறார்கள்.

மறுபுறத்தில் தாராளமயமாக்கல் கொள்கையை விவசாயத் துறையிலும் தாராளமாக புகுத்திய பிறகு பன்னாட்டு நிறுவனங்களின் வேட்டைக் காடாக இந்திய விவசாயத் துறை மாற்றப்பட்டு விட்டது. நாடு முழுவதும் உலகிற்கு உணவளிக் கும் விவசாயிகள் கடன் சுமை தாங்காமல் தற் கொலை செய்து கொள்ளும் அவலம் அன்றாடச் செய்தியாகிவிட்டது.


இந்த நிலையில், நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி அடுத்த நிதியாண்டில் விவசாயத் துறை 8.5 சதவீதம் அளவிற்கு வளர வேண்டுமென்று ஆருடம் கூறியுள்ளார். நாட்டில் நெல், கோதுமை போன்ற உணவு தானிய உற்பத்தி குறைந்து வரு கிறது என்றும், இதற்கு அடிப்படைக் காரணம் உணவு தானியப் பயிர்களை பயிரிடும் விவசாயி கள் நஷ்டம் காரணமாக அவற்றைப் பயிரிடத் தயங்குகின்ற னர் என்றும், இதனால் உணவு தானிய உற்பத்தி நிலப்பரப்பு சுருங்கி வருகிறது என்றும் ஆய்வுகள் கூறுகின்றன.

ஆனால், இரண்டாவது பசுமைப் புரட்சியில் பருப்பு, பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்ற வற்றின் உற்பத்தியை பெருக்கக் கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமென்று பிரணாப் முகர்ஜி கூறுகிறார். மறுபுறத்தில் உணவு தானியத்திற் கான தேவை அதிகரித்து வருகிறது என்றும், அதே நேரத்தில் உற்பத்தி குறைந்து வருகிறது என்றும் கூறுகிறார். பன்னாட்டு நிறுவனங்கள் பணப் பயிர்களை அதிக அளவில் பயிரிடுமாறு நிர்ப்பந்தம் செய்கின்றன. தங்களது நாட்டின் தேவைக்கு இங்கே விவசாயம் செய்யச் சொல்வதும், உணவு தானியத் தேவைக்கு நாம் வெளிநாடு களைச் சார்ந்திருக்க வேண்டுமென்பதும் அந்நிய நாடுகளின் நோக்கமாக உள்ளது. அவர்களது வலையில் விவசாயிகளைச் சிக்கவைக்கும் நோக்கத்துடனேயே இரண்டாவது பசுமைப் புரட்சி குறித்து பிரஸ்தாபம் செய்கிறாரோ என்ற ஐயப்பாடு எழுகிறது.

நாட்டின் இன்றைய தேவை இரண்டாவது பசுமைப் புரட்சி என்பதை விட வறண்டு கிடக்கும் விவசாயிகளின் வாழ்க்கையில் புதிய மலர்ச்சி என்பதே ஆகும்.

கருத்துகள் இல்லை: