சமூகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சமூகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 7 ஆகஸ்ட், 2012

உயிர்காக்கும் மருந்தில் பன்னாட்டு படையெடுப்பு


மருந்து விற்பனை என்பது இன்று வேகமாக லாபம் ஈட்டும் தொழிலாக மாறியுள் ளதை உலகமய சூழலில் நாம் காண்கிறோம். பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள்கூட தங்கள் வர்த்தகத்தை அதிகப்படுத்திட, இத்துறையில் கால் பதிக்க துவங்கியுள்ளன. சேவை என்பது முற்றிலும் இல்லாமல் போய்விட்டது. லாபம்.. லாபம்.. கூடுதல் லாபம் எனும் தாரக மந்தி ரத்தை பின்புலமாய் கொண்டு இத்துறையில் உள்ளவர்கள் செயலாற்றி வருகின்றனர்.ஒரு மருந்து சிலகுறிப்பிட்ட நோய்களுக்கு மட்டுமே கொடுக்கப்படாமல், அதன் விரி வான பயன்பாட்டின் காரணமாக வேறு சில நோய்களுக்கும் கொடுக்கப்படும் வாய்ப் புள்ளது. சமீப காலமாக உலக அளவில் புதிய மருந்து கண்டுபிடிப்பில் தேக்கமும் வறட்சி யும் ஏற்பட்டுள்ளது.

ஆராய்ச்சி பணிகளுக்கு ஆகும் பெரும் செலவே இதற்கு முக்கிய கார ணமாகும்.ஏற்கனவே மேற்கத்திய நாடுகளில் ஏற் பட்டுள்ள பொருளாதார நெருக்கடி இதற்கு கூடுதல் காரணமாகவும் அமைந்துள்ளது.இது தான் இன்றைய நிலவரம். இந்தப் பின் னணியில் லண்டனை தலைமையிடமாக கொண்டு வர்த்தகம் செய்யும் கிளாக்சோ ஸ்மித் கிளைன் (ழுடுஹஓடீ ளுஆஐகூழ முடுஐசூநு) எனும் நிறு வனம் தான் தயாரித்து விற்பனைக்கு வந் துள்ள, சில நோய்களுக்கு மட்டுமே பயன் படுத்திட வேண்டிய சில மருந்துகளை விதி களை மீறி மற்ற நோய்களுக்கும் விற்பனை செய்தது இப்போது உலகுக்கு தெரியவந் துள்ளது.மன நோய்க்கு மட்டுமே கொடுக்கப்பட வேண்டிய ஒரு மருந்தின் பக்க விளைவான, இளம் வயதினருக்கு தற்கொலை உணர்வை தூண்டும் எனும் தகவலை தனக்கு சாதகமாக இந்நிறுவனம் மறைத்துள்ளது. பாக்சில் (ஞஹஓஐடு) எனும் வர்த்தகப் பெயரில் (கூசுஹனுநு சூஹஆநு) வந்துள்ள இம் மருந்துகளின் தன்மை கள் மறைக்கப்பட்டுள்ளது. இளம் வயதின ருக்கு-குழந்தைகளுக்கு இம்மருந்து கொடுக் கப்படலாம் என்பதற்கு சாதகமாக சில மருத் துவ அறிக்கைகளை பிரபலமான மருத்துவ புத் தகங்கள் மூலம் வெளியிட்டுள்ளது.இதே கிளாக்சோ நிறுவனத்தின் மற்றொரு தயாரிப்பான வெல்பர்டின் (றுநுடுடு க்ஷருசுகூஐசூ) மனநோய் சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட வேண்டிய மருந்தாகும். ஆனால் இம்மருந்தை உடல் எடை குறைப்பிற்கும், பாலியல் பிரச்ச னைகளுக்கும் இந்நிறுவனம் பரிந்துரைக்க சொன்னது. இதற்கு ஆதாரமாக தங்கள் நிறு வனமே பரிசோதனைகள் செய்ததாக அறிக் கைகளை வெளியிட்டது. இப்போது அவ்வ றிக்கைகள் அனைத்தும் தவறானது, முறையற் றது எனவும், அந்த அறிக்கைகள் வெளியிடப் பட ஆராய்ச்சியாளர்களுக்கு லஞ்சம் கொடுக் கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.கிளாக்சோ நிறுவனத்தின் இந்த தவறான வழிகாட்டுதல்களை மிகப் பெரிய குற்றம் என்று அந்நாட்டு கட்டுப்பாடு அதிகாரிகள் சொல்லியுள்ளனர்.

எப்போதும் போல இந்த பன்னாட்டு பெரும் வணிக நிறுவனமும் இதற்கு சில மூத்த அதிகாரிகளே காரணம் என ஒரு சில பேர்களின் பக்கம் தள்ளி விடப் பார்க்கின்றது. இது ஓர் நிறுவனத்தின் வர்த்த கம்/வியாபாரம் சம்பந்தப்பட்ட கொள்கை (ளை) முடிவுகள். அப்படியிருக்க ஒட்டுமொத்த நிறுவனமே தண்டிக்கப்பட வேண்டியுள்ளது.இப்படி தவறு செய்யும் நிறுவனங்கள் மீது நஷ்டஈடு என்ற பெயரில் பல்லாயிரக்கணக் கான டாலர்கள் செலுத்த வேண்டும் எனும் வழக்கு தொடரப்படுகின்றது.இப்படி ஏதோ ஒரு நிறுவனம் தான் தவறு செய்கின்றது என்பது மட்டுமல்ல. பன்னாட்டு நிறுவனங்களின் லாப வெறி ஓட்டத்தில் இது ஒரு சிறு புள்ளியே!அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் அபோட் (ஹக்ஷக்ஷடீகூகூ) எனும் நிறுவனம் நரம்பு தளர்ச்சி மற்றும் மன உளைச்சலை கட்டுப்படுத்தும் மருந்தான டெபாகோட் (னுநுஞஹமுடீகூநு) வேறு சில பிரச்ச னைகளுக்கும் எழுதப்படலாம் எனும் தவ றான தகவல் கொடுத்ததற்காக ஆறு மாதம் முன்பு 1.6 பில்லியன் டாலர் நஷ்ட ஈடாக கொடுக்க வேண்டும் என்று அந்நாட்டு நீதி மன்றம் தீர்ப்பளித்தது.அதே போல் ஜான்சன் & ஜான்சான் நிறு வனம் தயாரித்துள்ள ஒரு மருந்தை விற் பனை செய்ய மட்டுமே உரிமை பெற்ற அபோட் நிறுவனம் தவறான தகவல்களை அளித்தது கண்டுபிடிக்கப்பட்டு , 2 பில்லியன் டாலர் அபராதத் தொகையாக செலுத்திட வேண்டும் என தீர்ப்பு வந்துள்ளது. இந்த அபராதத் தொகைகளை கட்டாமல், தட்டிக்கழித்து விட லாம் எனும் எண்ணத்தில், நிறுவனம் வழங் கிய தகவல்கள் அனைத்தும் உண்மையே என மருத்துவர்கள் மூலம் சொல்ல வைத்தது.

அதுவும் முற்றிலும் தவறு என தெரியவந்தது.எங்கள் நிறுவனத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க பார்க்கிறார்கள் எனும் விஷம பிரச்சாரமும் செய்யப்பட்டது. தங்க ளின் கார்ப்பரேட் நற்பெயரை காப்பாற்றிக் கொள்வதற்கு இந்த நிறுவனங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யும் என்பதை பல வரலாறுகள் நமக்கு சொல்லியிருக்கின்றன.இந்த மோசமான வழித்தடத்தை கொண் டுள்ள பன்னாட்டு நிறுவனங்களான கிளாக் சோவும் - அபோட்டும் தங்கள் நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்க, வளரும் நாடுகள் மீது கவனம் திருப்பி சந்தைகளை தங்கள் வசமாக்கி, ஒட்டு மொத்தமாக மக்களை ஏமாற்றி சுரண்டப் பார்க்கின்றன. மேற்சொல்லப்பட்ட நிறுவனங் கள் தங்கள் சொந்த நாடுகளிலேயே தவறான அனைத்தையும் செய்து அபராதம் கட்டி விதியை மீறியவைகள். நம்நாட்டில் என்ன செய்தார்கள்? ஆட்சியாளர்களோ கதவுகளை அகலமாக திறந்துவைத்து எதை வேண்டு மானாலும் செய்யுங்கள்- என ரத்தினக் கம் பளம் விரிக்கின்றனர்.அதனால் தான் இன்று தடுப்பூசிகள் வர்த் தகத்தில் சுமார் 70 சதவீதத்திற்கு மேலான சந்தையை தன்னுடைய ஆதிக்கத்திற்குள் வைத்திருக்கிறது கிளாக்சோ நிறுவனம். இவர் கள் வசதியாக நம்நாட்டு மக்களை சுரண்ட இந்தியாவிலுள்ள தடுப்பூசி நிறுவனங்கள் (பொதுத்துறை) இயங்காமல் - உற்பத்தி செய் வது தடுக்கப்பட்டு முடக்கி வைக்கப்பட்டது. விளைவுகளை இன்று நாம் சந்திக்கின்றோம். இதற்கு ஏற்றாற்போல், சில ஆண்டுகளுக்கு பிறகு (சுமார் 6 ஆண்டுகளுக்கு மேல்) இப் போது இந்தியாவின் மூன்று தடுப்பூசி நிறு வனங்களில் உற்பத்தி துவங்கியுள்ளது. இந்த நிறுவனங்களின் வெளியீட்டு திறன் (டீருகூஞருகூ ஊஹஞஹஊஐகூலு) அரசு மருத்துவமனை களின் தேவைக்கும் குறைவாகத்தான் இருக் கும். இதைத்தவிர வெளிச்சந்தை உள்ளது. ஆக, நாமே அறியாமல் நமது எதிர்கால தலை முறை பன்னாட்டு நிறுவனங்களின் கட்டுப் பாட்டில் பிறந்த நாள் முதல் இருக்கும். மற்றொரு புறத்தில் அபோட் நிறுவனம் இந்தி யாவில் உள்ள பெரும் இந்திய நிறுவனங்களை விழுங்கி இந்திய சந்தையில் அழுத்தமான கால் பதித்து, சந்தையில் 30 சதவீதம் இடத்தை பிடிக்க மேலும் நிறுவனங்களை வாங்கவும் முயற்சிக்கின்றது.

இப்படி செய்யும் போது பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் (தொழிற்சாலை மற்றும் மருத்துவ பிரதிநிதிகள்) எந்தவிதமான உரிமைகளும் இன்றி நசுக்கப் படுகின்றனர்.இந்த பன்னாட்டு நிறுவனங்களின் படை யெடுப்பை - கொள்ளை முயற்சியை தடுப்பது தேச பக்த கடமையாகும். மருத்துவ அரங்கில் பல சாதனைகளை நம்நாட்டு அறிஞர்கள் புரிந்து வருவது ஒரு புறம். அதே நேரத்தில், சுகாதார மேம்பாட்டிற்காக அரசு செலவிடும் தொகையோ ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருகின்றது. தனியார் மயத்தை நோக்கி இந்த துறையை அரசே தள்ளி விடுகின்றது. இன் னும் பெருவாரியான மக்களுக்கு சுகாதாரமான குடிதண்ணீர் கிடைப்பதில்லை. சமீபத்திய ஆய்வு அறிக்கை மூலம் நமக்கு கிடைக்கும் செய்தி நம்மை அதிர்ச்சியில் தள்ளுகின்றது.உலகப் புகழ்பெற்ற தி லான்செட் (கூழநு டுஹசூஊநுகூ) எனும் மருத்துவ இதழில், 2010ம் ஆண்டு மட்டும் 1.7 மில்லியன் மக்கள் உயிர் இழந்துள்ளனர்; அதில் சுமார் 4 லட்சம் பேர் நிமோனியா காய்ச்சலால் (ஞசூநுருஆடீசூஐஹ) மடிந் துள்ளனர்; அடுத்ததாக, சுமார் 2 லட்சத்தி பத் தாயிரம் பேர் வயிற்றுப் போக்கால் மறித்துள் ளனர் எனும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது..இப்படி வயிற்றுப்போக்கு நோய் வருவ தற்கு பல காரணங்கள் உண்டு. ஆனாலும் சுதந்திர இந்தியாவில் எந்த ஆட்சியிலும் அதைப்பற்றிய கவலையோ, அதை போக்கு வதற்கு உருப்படியான உறுதியான நடவடிக் கைகளோ எடுக்கப்பட்டதில்லை.சமீபத்திய யுனிசெப் நிறுவனத்தின் அறிக் கையை படிக்கும்போது மேலும் வேதனை யளிக்கிறது. அதாவது நம் நாட்டின் மொத்த மக் கள்தொகையில் கிட்டத்தட்ட 54 சதவீத மக் கள் (சுகாதாரமான) கழிவறை வசதியின்றி திறந்தவெளிகளில் மலம் கழிக்கின்றனர். நம்மைவிட பொருளாதாரத்தில் பின்தங்கிய, ஏன் ஏழ்மை நாடான வங்கதேசத்தில் கூட நம்மை விட முன்னேற்றம் கண்டுள்ளனர். ஆனால் நமது நாட்டின் நிலை மிகவும் மோச மானதாக உள்ளது.சுற்றுச்சூழல் துறையில் தண்ணீர் மற்றும் சுகாதாரத்திற்கான அமைச்சராக உள்ள ஜெய் ராம் ரமேஷ், 2017க்குள் மொத்த மக்கள் தொகைக்கும் கழிவறை வசதி கிடைத்து விடும் என ஆரூடம் போல சொல்லி வருகின் றார். திட்டங்கள் எதுவும் உருப்படியாக வடி வமைக்கப்படவில்லை.

கழிவறை கட்டுவதற்கு மானியங்கள் வழங் கப்படுவதாக பெரும் விளம்பரங்கள் அரசு தரப் பில் செய்யப்பட்டாலும், அதை வாங்குவதற் குள் மக்கள் பாடு திண்டாட்டம் தான்!சுகாதாரமான தண்ணீர் இல்லை. குடிப் பதற்கு தண்ணீர் கிடைக்க பல மைல் தூரம் நடக்கும் பெண்களின் அவலம் நீடிக்கும் நமது நாட்டில், முறையற்ற பன்னாட்டு நிறுவனங் களின் படையெடுப்பு ஒரு பக்கம்; திட்டமிட்டு தனியார் மயத்தை நோக்கி தள்ளும் மத்திய, மாநில அரசுகள் மறுபக்கம். மக்களை ஒட்டு மொத்தமாக சுரண்ட நினைக்கும் இவர்களுக் கெதிரான அரசியல் போராட்டத்தை மார்க் சிஸ்ட் கட்சியின் அரசியல் தீர்மானத்தில் வழி காட்டியிருப்பதைப் போல், வெகு மக்க ளிடத்தில் தொடர் விழிப்புணர்வு பிரச்சாரமாக கொண்டு சென்று, ஆட்சியாளர்களின் மக்கள் விரோத கொள்கைகளை முறியடிப்போம்!

வியாழன், 26 ஜூலை, 2012

மக்களின் நம்பிக்கைகளை கொச்சைப்படுத்தும் பூசைகள்

கர்நாடகம், மஹாராஷ்டிரா, குஜராத், ராஜஸ் தான், ஹரியானா, பஞ்சாப் ஆகிய 6 மாநிலங் களில் பருவமழை அளவு குறைந்ததால் வறட்சி நிலை உருவாகும் அபாயம் ஏற்பட்டிருப்பதாக ஒரு செய்தி கூறுகிறது. ஆகவே நிலைமையை சமாளிக்கவும், வறட்சியின் தாக்குதல்களி லிருந்து மக்களைக் காக்கவும் அரசுகள் திட்ட மிட்டு முனைப்புடன் செயல்பட வேண்டிய தேவை இருக்கிறது. அந்த வகையில் கர்நாடக மாநில அரசு ஒரு நடவடிக்கையை எடுத்துள் ளது. ஆனால், அது வரவேற்கத்தக்கதாகவோ பின்பற்றத்தக்கதாகவோ இல்லை!

மாநிலம் முழுவதும் உள்ள கிட்டத்தட்ட 34,000 இந்துக் கோவில்களில் சிறப்பு வழிபாடு கள் நடத்துவதுதான் அந்த நடவடிக்கை. “அபி ஷேகம்,” “ஜலாபிஷேகம்,” “வருண மந்திரம்” என்ற சடங்குகளை நடத்துமாறு மாநில அரசின் வருவாய்த் துறையிலிருந்து சுற்றறிக்கை அனுப் பப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு கோயிலுக்கும் ரூ.5,000 வீதம் மொத்தம் ரூ.17 கோடி நிதி ஒதுக் கீடும் செய்யப்பட்டுள்ளது. ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 2 வரையில் இந்தச் சடங்குகள் நடத்தப்படுமாம்.

மழை வேண்டி இப்படிப்பட்ட வழிபாடு களை சம்பந்தப்பட்ட கோவில் நிர்வாகிகள், அல் லது தனிப்பட்ட சில அமைப்புகளைச் சேர்ந் தோர் நடத்துவது உண்டுதான். ஆனால், அர சாங்கமே இதற்கு இவ்வாறு யாகம் நடத்தச் சொல்வதையும், மக்களின் பணத்தை அதற் காகச் செலவிடுவ தையும் கொஞ்சமும் நியாயப் படுத்துவதற்கில்லை. இரண்டு அடிப்படை யான அம்சங்களில் இது இந்தியாவின் அரச மைப்பு சாசனத்திற்கு எதிரானதுமாகும். ஒன்று - இந்தியாவின் அரசமைப்பு மதச்சார்பற்றதாக இருக்கும் என்பது மீறப்படுகிறது. இரண்டு - இந்திய சமுதாயம் அறிவியல் கண்ணோட்டத் துடன் வளர்க்கப்படும் என்ற அரசமைப்பு சாசன லட்சியம் அவமதிக்கப்படுகிறது.

பாரதிய ஜனதா கட்சியிடம் ஆட்சி சிக்கு மானால் ஒற்றை மதவாத - கலாச்சார ஆதிக்கத் தை ஏற்படுத்துகிற நோக்கத்துடன்தான் நட வடிக்கைகள் எடுக்கப்படும் என்பதற்கு இது ஒரு சரியான சான்று. இதே போன்ற மழை யாகங் களை குஜராத்தின் நரேந்திர மோடி அரசும் நடத்தியிருக்கிறது.

மழை நீர் சேகரிப்பு, அறிவியல் பூர்வமான நீர் நிர்வாகம், எதிர்பாரா நிலைமைகளுக்கான முன் தயாரிப்பு, வறட்சியை எதிர்கொள்ள போதிய உணவு தானியங்களும் இதர அத்தியாவசியப் பொருள்கள் கையிருப்பு போன்ற திட்டங்க ளைத்தான் ஒரு அரசு மேற்கொள்ள வேண்டும். அதை விடுத்து, இவ்வாறு பூசைகளை நாடுவது என்பது, கர்நாடக பாஜக தலைமையின் பதவிச் சண்டைகளைப் பார்க்கிற மக்களின் கவனத் தைத் திசை திருப்புகிற உத்தியுமாகும். மழைக் காக இன்று இவ்வாறு இப்படிப்பட்ட அபிஷேக சடங்குகளை நடத்துவோர், நாளை விலைவாசி யைக் கட்டுப்படுத்தவும், வேலை வாய்ப்பு களைப் பெருக்கவும், தொழில் வளர்ச்சிக்காக வும், விவசாயத்தில் அமோக விளைச்சலுக் காகவும், கல்விக்காகவும், சுகாதாரத்துக்காக வும் இன்ன பிற தேவைகளுக்காகவும் மத சாத் திரங்களின்படி சடங்குகளை நடத்திக் கொண் டிருப்பார்களோ என மக்களில் ஒரு பகுதியினர் கேட்பதில் முழு நியாயம் இருக்கிறது.

ஜனநாயக இயக்கங்களும், மக்களுக்கான அறிவியல் அமைப்புகளும் அரசாங்க எந்திரம் இவ்வாறு தவறாகக் கையாளப்படுவதை வன்மையாகக் கண்டிக்க வேண்டும்.

புதன், 28 டிசம்பர், 2011

லோக்பால் மசோதா 1968 முதல் 2011 வரை

லோக்பால் மசோதா, உணவுப்பாதுகாப்பு மசோதா ஆகிய இரண்டு மசோதாக்களும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப் பட்டுள்ளன. டிசம்பர் 27ம் தேதி துவங்கி மூன்று நாட்களும் விவாதம் நடைபெற உள்ளது. இதற்காக நாடாளுமன்றத்தின் குளிர் கால கூட்டத்தொடர் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இம் மசோதாக்கள் குறித்து பரபரப்பும் எதிர்பார்ப்பும் உருவாகியுள்ளது இயல்பான தொன்றே. பிறப்பிலிருந்து இறப்பு வரை இந்தியாவில் அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருப்பது ஊழல். இந்திய மக்கள் தங்கள் வாழ்க்கையின் அனைத்து நிலை களிலும் ஊழலைச் சந்தித்து வருகிறார்கள்.

சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே தான் முன்வைத்துள்ளபடி இம்மசோதா அமைய வேண்டுமென வலியுறுத்தி மும்பையில் மூன்று நாட்கள் உண்ணாவிரதப்போராட்டத்தை துவக்கியுள்ளார். தில்லி ராம்லீலா மைதானத்தில் ஹசாரே குழுவினர் மற்றும் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்து கின்றனர்.

லோக்பால் மசோதாவை பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் சட்டம், நீதித்துறை தொடர்பான நிலைக்குழு செப்டம்பர் 23 முதல் டிசம்பர் 2வதுவாரம் வரை சுமார் இரண்டரை மாதங்கள் செலவிட்டு உருவாக்கியுள்ளது. நிலைக் குழுவின் முன்பு 140 பேர் ஆஜராகி இம் மசோதா குறித்து சுமார் 40 மணி நேரம் தங்களது பரிந்துரைகள், ஆலோ சனைகளை முன்வைத்துள்ளனர்.

லோக்பால் மசோதாவின் பூர்வீகம் நீண்ட நெடிய ஒன்றாகும். 1966 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட நிர்வாகச் சீர் திருத்த ஆணையம், லோக்பால் அமைப்பு உருவாக்கவேண்டியதன் அவசியத்தை வலி யுறுத்தியது. அதன் பின்னர் மத்திய அரசு மாநிலங்களவையிலும் மக்களவையிலும் 1968, 1971,1977,1985,1989,1996,1998 மற்றும் 2001ஆம் ஆண்டுகளில் லோக்பால் அமைப்பிற் கான மசோதாக்களை அறிமுகப்படுத்தியது. ஆனால் மசோதா நிறைவேற்றப்படவில்லை.

இந்தப் பின்னணியில்தான் 2011ம் ஆண்டு ஏப்ரல் 8ம் தேதி அமைச்சரவை இம் மசோதாவை உருவாக்க ஒப்புதல் அளித்தது. லோக்பால் அமைப்பு உருவாக்கப்பட வேண்டுமென்று இடதுசாரிக்கட்சிகள் தொடர்ச்சியாக குரல் கொடுத்து வந்துள்ளன. அன்னா ஹசாரே, பாபா ராம்தேவ் போன்றவர்களும் இந்தப் பிரச்சனையை சமீபத்தில் கையிலெடுத்தனர். இவர்களது பின்னணி என்ன வென்று அறியாவிட்டாலும் கூட மக்கள் இவர்களது கோரிக்கைக்கு ஆதரவளித்தனர். ஊழலுக்கு எதிராக மக்களிடம் எழுந்துள்ள விழிப்புணர்வு மற்றும் எதிர்ப்புணர் வின் வெளிப்பாடே ஆகும் இது.

லோக்பால் மசோதாவின் நகல் டிசம்பர் 22அன்று நாடாளுமன்ற உறுப்பினர் களுக்கு வழங்கப்பட்டது. 62 பக்கங்களைக் கொண்ட இந்த மசோதாவில் 15 பிரிவுகள் இடம் பெற்றுள்ளன. மத்திய அளவில் லோக் பால் அமைப்பையும், மாநிலங்களில் லோக் அயுக்தா அமைப்பையும் உருவாக்குவதற் கான பரிந்துரைகள் இம் மசோதாவில் இணைக்கப்பட்டுள்ளன.
இந்த மசோதா நிறைவேறுமா? என்ற ஐயப்பாட்டை ஊடகங்கள் எழுப்பிக்கொண்டுயிருந்தன.  மக்களவையில் இந்த மசோதா  ஒருவழியாக நிறைவேற்பட்டுள்ளது . மசோதா எந்த வடிவில் வந்தாலும் அதை ஆதரிக்க திமுகஇ திரிணாமுல் காங்கிரஸ் போன்ற கட் சிகள் தயாராக உள்ளன. அரசுக்கு நெருக்கடி ஏற்படும்போதெல்லாம் கை கொடுக்கும் ஆர்ஜேடிஇ சமாஜ்வாதிஇ பகுஜன் சமாஜ் போன்ற கட்சிகள் மசோதாவை ஆதரிக்க வில்லை என்றபோதிலும்  மசோதா நிறைவேற்பட்டுள்ளது குறிபிடதக்கது .

ஆனால் மாநிலங்களவையில் மசோதாவை நிறைவேற்றுவதற்கான பலம் ஐ.மு. கூட்டணிக்கு இல்லை. எதிர்க்கட்சியான பாஜக ஆதரித்தால்தான் மசோதாவை நிறை வேற்ற முடியும். சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவதால் மசோதாவை எதிர்ப் பதாக பாஜக கூறியுள்ளது. ஆர்ஜேடி போன்ற கட்சிகளும் வேறு சில காரணங் களைக் கூறி மசோதாவை எதிர்ப்பதாகக் கூறுகின்றன.

மகளிர் இடஒதுக்கீடு மசேதா மாநிலங் களவையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால் மக்களவையில் இம் மசோதாவை நிறைவேற்ற விடாமல் ஆர்ஜேடி, சமாஜ்வாதி போன்ற கட் சிகள் தடுத்துவிட்டன என்பது முந்தைய அனுபவம். இதைச் சாக்காக வைத்து, கருத் தொற்றுமை ஏற்படுத்தப்போவதாககக் கூறி மசோதாவை கிடப்பில் போட்டுவிட்டது மன் மோகன்சிங் அரசு.

 மசோதாவை தயாரிப்பதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குறிப்பிடத்தக்க பங்காற் றியுள்ளது. நிலையாணைக்குழுவில் இடம் பெற்றிருந்ததின் மூலம் பல்வேறு ஆலோ சனைகளை கட்சி முன்வைத்துள்ளது. எனி னும் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை. அதைத் தொடர்ந்து நடைபெற்ற அனைத் துக்கட்சி கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி முன்மொழிந்த சில தீர்மானங் கள் ஏற்கப்பட்டன. அது எந்த வடிவில் உள் ளது என்பது விவாதத்தின்போதே வெளிச் சத்திற்கு வரும். மார்க்சிஸ்ட் கட்சி தமது ஆலோசனைகள், திருத்தங்களை எழுத்துப் பூர்வமாக அளித்துள்ளது.

இதே போன்று பல்வேறு கட்சிகள் தங் களது திருத்தங்கள், கருத்துக்களை முன் வைத்துள்ளன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சியை பொறுத்தவரை சில முக்கியமான ஆலோசனைகளை முன்வைத்தது.

1. பிரதமர் பதவியையும் லோக்பால் விசா ரணை வரம்பிற்குள் கொண்டுவர வேண்டும்.

2. நாடாளுமன்ற உறுப்பினர்களையும் விசாரணை வரம்பிற்குள் கொண்டுவர வேண்டும். அதற்கு தடையாக உள்ள அரசியல் சாசனத்தின் 105வது பிரிவில் உரிய மாற்றம் செய்ய வேண்டும்.

3. மத்திய மற்றும் மாநில அரசு நிலை யில் குரூப்-ஏ, குரூப்-பி, குரூப்-சி, குரூப்-டி அதிகாரிகளை விசாரணை வரம்பிற்குள் கொண்டுவரவேண்டும். மத்திய அரசு அதிகாரிகளை லோக்பால் வரம்பிற்குள்ளும், மாநில அரசு அதிகாரிகளை லோக் அயுக்தா விசாரணை வரம்பிற்குள்ளும் கொண்டுவர வேண்டும்.

4. லோக்பால் அமைப்பின் தலைவர் உட்பட, சுதந்திரமான தேர்வுக்குழுவின் தேர்வு அடிப்படையிலேயே நியமிக்கப்பட வேண்டும்.

5. மாநிலங்களில் லோக் அயுக்தா அமைப்பை உருவாக்க தனி மசோதா தாக்கல் செய் யப்பட வேண்டும்.

மத்திய புலனாய்வுத்துறை இயக்குநர் நியமனம், லோக்பால் தேர்வுக்குழு பரிந்துரை அடிப்படையிலேயே நடைபெற வேண்டும்.

6.ஊழல் குறித்த வரையறையில் தெளி வில்லை. 1988ஆம் ஆண்டு உருவாக்கப் பட்ட ஊழல் தடுப்புச்சட்டத்தின் அடிப்படை யிலேயே வரையறுக்கப்பட்டுள்ளது. எனவே உரிய வகையில் ஊழல் குறித்த வரையறை செய்யப்பட வேண்டும்.

7. மிக முக்கியமாக பெரும் முதலாளி களையும், அவர்களது நிறுவனங்களையும் லோக்பால் விசாரணை வரம்பிற்குள் கொண்டுவர வேண்டும். தவறிழைக்கும் நிறுவனங்களின் உரிமம் மற்றும் குத்தகையை ரத்து செய்யவேண்டும். இழப்பீட்டுத் தொகையை அவர்களிடமிருந்து வசூலிக்க வேண்டும். ஊழலில் ஈடுபடும் நிறுவனங் களின் சொத்துக்களை பறிமுதல் செய்து, அரசு கஜானாவில் ஒப்படைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட முக்கியத் திருத்தங்களை மார்க்சிஸ்ட் கட்சி முன்மொழிந்துள்ளது. விவாதத்தின்போதும் முன்வைக்கும்.

இம்மசோதாவை நிறைவேற்றுவதற்கு முன்பு அரசியல் சாசன திருத்தத்தை அரசு முன்மொழிந்திருக்கவேண்டும். ஆனால் அவ்வாறு செய்யவில்லை. பலவீனமான லோக்பால் அமைப்பையே அரசு விரும்பு கிறதோ என்ற ஐயப்பாடு எழும்புகிறது.

எதிர்க்கட்சியான பாஜக மற்றும் சில கட்சிகள் எதிர்க்கும் வேகத்தைப் பார்க்கும் போது மசோதா நிறைவேறுமா? என்ற கேள்வி வலுவாகவே எழுகிறது.

லோக்பால் அமைப்பை உருவாக்கு வதற்கான போராட்டம் 1968ல் அதாவது 20ம் நூற்றாண்டில் துவங்கி இந்த நூற்றாண்டு வரை நடைபெற்று வருகிறது. இம் மசோதா வலுவான லோக்பால் அமைப்பை உரு வாக்கும் வகையில் நிறைவேற்றப்பட வேண்டு மென்று இந்திய மக்கள் எதிர்பார்க்கி றார்கள். அவர்களது விருப்பம் நிறை வேறுமா? என்பது இரண்டொரு நாளில் தெரிந்துவிடும்.

- டி.கே.ரங்கராஜன் எம்.பி.,

 மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி 

வெள்ளி, 23 டிசம்பர், 2011

தடயம் :சுறுக்கு என்று பாயும் சாதி

நாலுபேரும் மடியை அவுத்து வெத்திலை பாக்கு போட ஆரம்பிச்சாங்க. கிட்டத்தட்ட அந்தப்படிக்கே செய்து முடிக்கிறதுன்னு தீர்மானமாகிப்போச்சி. ஊருக்குள்ள வலுவான சம்சாரிகள் இங்கே உட்கார்ந்திருக்கிற நாலே நாலுபேர்தான். இதுகளுக்குள்ளே ஒரு ஒத்துமை. ஒரு கட்டு திட்டுன்னு வச்சி ஒரு அமைவோட இருந்தா கிழக்குத் தெருக்காரங்க ஆட்டமும் வச்சிருக்கிற சங்கமும் எம்மாத்திரம்?

மூணு தேறம் வயித்துக்கு திங்கவும் உடுத்திக்கிட குண்டித்துணிக்கும் நம்மகிட்டெ கையேந்துற பயல்கள் இப்பொ என்ன வெறப்பா திரியுறான். தலையில லேஞ்சி கட்டுறதென்ன கால்ல கிறீச்சி மிதியடி போட்டு லாத்துறதென்ன பயமத்துப் போச்சுங்கிறேன்.
காட்டுல வேல விட்டும் விடுமுன்னே டவுனுக்கு பொதுக்கூட்டம் போகணும்ங்கிறான். பேரணிங்கிறான் ஆர்ப்பாட்டம்ங்கிறான் டேஙப்பா ஆட்டம் கொஞ்சமா? அட இந்த பொட்டெ சிரிக்கி பிள்ளெக! நண்டுஞ்சிண்டுகளை கூட்டிவந்து ஒப்புக்கு கணக்குகாட்டி கும்புட்டு கூத்தாடி கூலி வாங்கிட்டுப் போனவ, இப்பொ பிள்ளைகளை பள்ளிக்கூடம் காலேஜ்ன்னு அனுப்பிட்டு இவளும் இன்னக்கி நான் லீவுங்கிறாள். என்னன்னு கேட்டா நாளைக்கு மேதினம் தோசைக்கு நனையப்போட்டு ஆட்டி வைக்கணும்ங்கிறா.
அவங்க வீட்டுக் கூரையில அவங்களுக்குள்ள ஒருத்தனையொருத்தன் பிடிக்காம தீவச்சுக்கிட்டு நம்மள கை நீட்டுறான். அவங்க சங்கம் வச்சது பிடிக்காம நாமதான் தீவச்சோமாம். தெக்குள்ள பயக கூரை எரியும்போது வடக்குட்டுப் பயகளோட செருப்பும் துண்டும் பொடிமட்டை மொதக்கொண்டு அங்கே கிடந்த தடயம் இருந்திருக்கு. இந்தப் பக்கம் அந்தப் பயல்களோட நடமாட்ட தடயங்கள் கிடந்திருக்கு. பாத்திருக்காங்க. என்னடான்னா நாமதான்னு சாதிக்கிறாங்களே படவா!
விசுக்குன்னு போலீஸ் கோர்ட்டுன்னு படியேறிர்ராங்க. இதுக்கெல்லாம் கை கொடுக்கிறது அவங்க பன்னிகள் வளத்து துட்டு துக்காணின்னு பண்ட் சேக்கிறதுதான். பன்னிகளுக்குத்தான் அதுக இரைபாடுகளுக்கு நாம மெனக்கிட வேண்டியதில்லை. அதுகளா 'மந்தை' க் காட்டுல மேய்ஞ்சி சாக்கடை சலதாரையில புரண்டு உருண்டு வதவதன்னு குட்டிகளைப் போட்டு பயகளுக்கு வருமானத்தை கொடுத்து உதவுது.
அவங்களை ஒடுக்கணும்ன்னா நாமளும் பண்ட் சேக்கணும். பன்னி வளப்புல இறங்கீற வேண்டியதான். அருவமில்லாம அது பாட்டுக்க திரியட்டும். தொறட்டு இல்லே. கொண்டு வந்து விடுறதோட சரி. நாம நம்ம பாடு சோலிகளைப் பாக்கலாம்.
தொரைச்சாமி நாக்கெரு தெக்காட்டுக்கும், கரையா நாக்கெரு கீகாட்டுக்கும், வடக்குட்டும் மேற்கிட்டும் வரதாழ்வாரும் போத்தி நாயுண்டும், சரியாவுள சாதிப் பன்னி எங்கே வாங்கலாம்ன்னு அலைஞ்சி விசாரிச்சிட்டு வந்தாங்க. பன்னிகள்லயே வத்தலக்குண்டு பன்னிதான் ரொம்ப ஒசத்தியாம். இனப்பெருக்கம் அந்த மாதிரி எங்கேயும் கிடையாதுங்கிறாங்க. ஒரு ஈத்து வகைய்யா ஈண்டதுன்னா ஒரு குடும்பத்துக்கான மொத்த நல்லது பொல்லதுகளும் நடத்தி முடிச்சிரலாமாம்.
தாம்சமே கூடாதுன்னு நாலு பேரும் ஒரே நா ராத்திரியில வத்தலக்குண்டுக்கு நடந்தே வந்து சேந்தாங்க. அங்கேயும் சுத்தோ சுத்துன்னு சுத்தி கடைசியில் வியாபாரி பன்னி மாடசாமித் தேவர் வீட்டை கண்டுபிடிச்சி நல்ல சினைப்பன்னி ஒண்ணு விலையப்பத்தி கவலையில்ல உடனடியா வேணும்ன்னு மன்றாடி கேட்டு நின்னாங்க.
தேவரு நாலு பேரையும் மேலேயும் கீழேயும் பாத்தாரு. போட்டிருக்கிற கதர் சட்டைக்கும் வாங்க வந்த வியாபாரத்துக்கும் சம்பந்தமில்லாமயிருந்தது. அதுவும் ஊரு விருதுபட்டிக்கு தெற்கேயிருந்து வர்றதா வேற சொல்றாங்கன்னு ரொம்ப நேரம் யோசிச்சார்.
பிறகு கெத்து விடாம "ஹ்ர்ம்ம்... சரி! பெரும்பாலும் நான் வெளியூருக்கு உருப்படிகளை கொடுக்கிறதில்லே. ஊரைவிட்டு சீதேவி போயிரும்ன்னு நெனப்பேன். எங்க ஊர் பன்னிகன்னா அவ்வள பேர் போனது. மணப்பாறை மாடு, ஊத்துக்குளி வெண்ணெ, தாமிரபரணி தண்ணி, வத்தலக்குண்டு பன்னி. நல்லது. நம்பி வந்துட்டீங்க இப்பொ போயிட்டு சாயுங் காலமா வாங்க. எம்பேரு சொல்றாப்புல ஒரு உருப்படி கொடுத்து விடுறேன்னு அனுப்பிச்சு வச்சார்.
அவங்க அந்தப்பக்கம் நகரவும் தேவர் வேட்டியை வரிஞ்சு கட்டுனார். இன்னக்கி தூங்கி முழிச்ச நேரம் நல்ல நேரம். நம்ம குல தெய்வந்தான் இவங்களை அனுப்பிச்சி வச்சிருக்குன்னு திசை பாத்து தரை மண்ணள்ளி நெத்தியில பூசுனார். தேவர் வீட்டுல ரொம்பத் தவங்குன நாள்ப்பட்ட பன்னி ஒண்ணு சாகமாட்டாம கிடந்தது. பல ஈத்து ஈண்ட கிழட்டுப் பன்னி.. ஈத்து முறிஞ்சு எதுக்கும் ஆகாம அறுத்துப் போட்டாலும் கறியை வாங்க நாதி கிடையாது. அவ்வள வங்கிழடு. அதுக்கு போக காலம் பிறந்திருச்சி.
இருக்கிற கழி தண்ணியெல்லாம் சட்டி சட்டியா அதுக்கு முன்னாடி குடிக்க வச்சார். ஒவ்வொரு பலகாரக் கடையிலயும் அள்ளிவந்த மிச்ச சூத்தக்காயி, எச்ச இலைன்னு கொண்டுவந்து தினசரி சலவன் பன்னிகளுக்குத் தான் வெப்பாரு. இன்னக்கி கிழடுக்கு முன்னாடி வந்து கொட்டுனாரு. அவ்வளவு பதவலையும் தின்னு குடிச்ச பன்னி நல்லா யானைக்குட்டி உயரத்துல எழுந்திருச்சி நின்னது. வயிறு பொம்முன்னு பொடச்சி எட்டு எடுத்து வெக்கெ மாட்டாம கிறங்கி கிறங்கி நடந்தது.
தேவரு ஓடிப்போய் சம்சாரிகளை கூட்டி வந்து காண்பிச்சார். நாலு பேருக்கும் ரொம்ப திருப்தியாயிருந்தது. ஒருத்தருக்கொருத்தர் நாடிய நாடிய வெட்டி குசுகுசுன்னு பேசுனாங்க. எப்படிக் குறைச்சுப் பாத்தாலும் வயித்துல பத்துக்குட்டிக்கு குறையாம இருக்கும்ன்னார் கரையா நாக்கெரு. அதென்ன அப்படிச் சொல்லிப்புட்டெ ஒரு டஜணுக்கு கூடத்தான் சொல்லலாமேயொழிய குறைச்சி மதிக்க முடியாதுன்னார் தொரைச்சாமி நாக்கெரு. அட நீ ஒண்ணு இப்படித்தான் வெள்ளாமை செஞ்சி வரவு-செலவு பாத்திருப்பே ஒன்றரை டசன் குட்டி ஓடுற ஓட்டத்துல இருக்குமப்பான்னு போத்தி நாக்கெரு சொல்ல, ஒரே குதூகலமாகிப் போனாங்க.
நேரமாக ஆக அத்தாவுத்தியா நிக்கிற பன்னியை விட தேவருக்குத்தான் வயிறு ரொம்ப கலங்குனது. குலை பட்டினியாக் கிடந்தது திட்டமில்லாமத் தின்னு சட்டி சட்டியா கழி தண்ணியக் குடிச்சிருக்கு. செமிக்காம செய்யாம வயித்தால பிடுங்கீருச்சுன்னா! குட்டு வெளிப்பட்டிருமே.
"மொதலாளி வாங்குறாப்புலயிருந்தா ரூபாய கொடுத்திட்டு உருப்படிய தூக்குங்க. இல்லேன்னா கொஞ்ச நேரத்துல வேற வியாபாரிக வர்றாங்க அவங்க நூறு ஐநூறு கூட கொடுத்தா மாறிருவேன் ஆமா"
அவ்வளவுதான் இவங்க தடபுடலா ருபாயை எண்ணிக் கொடுத்ததும் பன்னியை கிளப்புனாங்க. தேவரு பதட்டமா ஓடிப்போயி "முதலாளி அயிட்டம் நிறை மாத்தச் சூலி. இப்பொ ஈனுமோ பிறகு ஈனுமோ! பிடிச்சு தூக்கிட்டு போறதுதான் சரி. ஒரு லட்சம் பெறுமான மொதுலு பாத்துக்குங்க.
அதுவுஞ்சரிதான்னு பின்னாடி ரெண்டு பேரும் முன்னாடி ரெண்டு பேரும் தூக்கி தோள்ல வச்சு கிளம்பிட்டாங்க.
கனம்ன்னா கனம் செமக்கனமாயிருந்தது. சும்மாதானா ஒரு பன்னியை கொண்டு போயி பண்ணையா பெருக்கி லட்சக்கணக்குல சம்பாத்யம் பண்ணி எதிரியை சந்திக்கிறது!
ஒரு மைல் தொலைவுதான் சுமந்து வந்திருக்காங்க. பின்னாடி சுமந்த ரெண்டுபேர் மேலயும் பன்னி சத சதன்னு பேல ஆரம்பிச்சது. முதுகிலிருந்து குதிகால் வரைக்கும் நனைச்சு விட்டிருச்சி நனைச்சி. வீச்சம்ன்னா வீச்சம் இன்ன மட்டுமின்னுல்லே. சுமை தான் கடுமையா மே மூச்சு கீ மூச்சு வாங்குதுன்னா உடுப்புக தொப்பு தொப்பாப் போச்சி. நாத்தம் வேற குடலைப் புரட்டுது. சே. பெரிய ஜீன்றமாப் போச்சே!
இந்த ரெண்டு பேரும் முன்னாடி சுமக்கிறவங்களைப் பாத்தாங்க. சுமை தாங்க மாட்டமத்தான் அலப்பறைப்படுறாங்களே யொழிய இந்த மோசமில்லை. ஙொப்பனோலி நாம மட்டும் பைத்தியாரங்களா பின்னாடி சுமந்து சீரழிய அவங்களுந்தானே வரிக் கொடுத்தான்?
"ஏய் இந்தாங்கப்பா நீங்க கொஞ்சம் பின்னாடி பிடிங்க. நாங்க முன்னாடி வந்து கொஞ்சம் மூச்சு வாங்கிக்கிடறோம்ன்னு மாத்திக்கிட்டாங்க. பன்னிக்கு வயிறு காலியாக காலியாக கழிச்சலோட காத்தும பர்ர்ர்... பர்ர்ர்ன்னு வெளியேறுனது. "பய புள்ளைகளை நல்லாக் குளுப்பாட்டுது" முன்னாடி போறவங்களுக்கு பின்னாடி சீப்படுறவங்களை நெனச்சி ஏகச் சந்தோசம்.
விடிய விடியச் சுமந்து தன்னால அலுத்து சலுத்து இருப்பிடத்துல கொண்டு வந்து போட்டாகளோ இல்லையோ காத்துப்பிடுங்குன லாரி டயர் டியூப் மாதிரி பன்னி கொடேர்ன்னு விழுந்து கிடந்தது. உசிரு போக ஆத்த மாட்டாம உர்ர் உர்ர்ன்னது. "மாப்ளெ நாக்கெரே... மாப்ளெ நாக்கெரோய்! குட்டிக ஒன்றரை டசனுக்கு குறையாம ஓடுற ஓட்டத்திலெ இருக்கும்ன்னீரு வரும்போது குட்டிய ஒழுக விட்டுட்டீரோ"
போத்தி நாக்கெரை கரையா நாக்கெரு கேலி பண்ணுனார். இவரு பெரிய யோக்கியர் அரண்மனை கணக்குப் பிள்ளை மாதிரி எடுத்தவுடனே பத்துக்குட்டிக்கு குறையாதுன்னு இவன்தானே கணிச்சான் பக்கத்திலிருக்கிறவர்கிட்டெ முணுமுணுத்தார் கரையா நாக்கெரு. ஒருத்தருக்கொருத்தர் பேசவும் பாக்கவும் சகிக்கலை. நாலு பேரும் கரேர்ன்னு நனைஞ்ச கதர்சட்டை உடுப்புகளோட நாலு மூலைக்கும் மூஞ்சியை திருப்பிக்கிட்டு போனாங்க.
அதுக்குப்பிறகு தான் விவகாரமே ஆரம்பிச்சது.
தேவர் வீட்டுல ஆத்தமாட்டாம கிடந்த பன்னி மந்தையில வந்து விழுகவும் பக்கத்து தோட்டக் கால்ள பயிர் பச்சைக வாசனையில நகண்டு போயி வாய் வக்கெ ஆரம்பிச்சது. போத்தி நாயுண்டுவுக்கு மந்தைத் தோட்டம் எட்டுக்குறுக்கம் விஸ்தீரணத்துல நிலக்கடலை போட்டிருந்தார். ஒரு நா விடிய பம்மல்ல வந்து தோட்டத்தைப் பாக்கும் போது நாயுண்டுகாரு விருள்தட்டிப் போய் நின்னுட்டாரு. கால்வாசிக்கு மேலே கடலைச் செடியை முண்டி முண்டி நாசக்காடு பண்ணி வெறுஞ்செடியாய் சாய்ச்சி வச்சிருந்தது பன்னி.
அன்னையிலிருந்து ராக்காவலுக்கு வர ஆரம்பிச்சார். தின்னு ருசிகண்ட பன்னி நிலையில நிக்கிமா? செடிகளுக்குள்ளே நுழைஞ்சி முண்டி உழப்பிக்கிட்டிருந்தது. பக்கத்துப் பொலி துரைச்சாமி நாக்கெரு தோட்டம் சீனிக்கிழங்கு வெள்ளாமை வச்சிருந்தாரு. ராத்திரியோட ராத்திரியா அப்படியே அணச்சி பத்திக் கொண்டுபோய் கிழங்குத் தோட்டத்துல கொண்டு போய் விட்டுப் போட்டு ஓடியாந்துட்டார் போத்தி.
வந்தா வந்த பக்கந்தான். நடக்கமாட்டாத பன்னி அங்கேயே ஜாகையை போட்டிருச்சி. சீனிக்கிழங்கு தின்ன பன்னி செவியறுத்தாலும் போகாதுங்கிற சொலவடை சும்மா ஆகுமோ?
கிழங்குக் கொடி ஒரு ஏக்கருக்கு மேலே பன்னி முண்டி நாசமாக்கிடந்ததை ஒருநாள் பார்த்த தொரைச்சாமி நாக்கெரு வயிறெரிஞ்சி போயி பன்னியை தேடிப்பிடிச்சு கல்லாலயே எறிஞ்சு ஆளில்லாத நேரம் பார்த்து பக்கத்து கடலை தோட்டத்துக்கு முடுக்குனாரு. மறுநாள் அவரு முறை பன்னி இங்குட்டும் அங்குட்டுமா அலைமோதி திரிஞ்சது.
அடுத்து அக்க பக்கமாத்தான் வரதாழ்வார் தோட்டமும் கரையா நாக்கெரு தோட்டமும். அங்கேயும் சேனைக்கிழங்கு சாகுபடி தரைப்புடலை, தக்காளி, கத்திரிக்காய் வகைகள் பாக்கப் பசேர்ன்னு நல்ல தண்ணியில விளைஞ்சு பசபசன்னு கண்ணுக்கெட்டுன தூரம் கிடந்தது.
மொத ரெண்டு புண்ணியவான்கள்ல யாரோ ஒருத்தர் எதுக்கு நாம அங்க விரட்ட அங்கிருந்து இங்கு விரட்ட கொஞ்சம் எட்டி தள்ளிக் கொண்டு போய் விட்டிரலான்னு ஒருநாள் மத்த ரெண்டு பேர் தோட்டப் பக்கமா பன்னியை கொண்டு சேத்துட்டாங்க. அங்கேயும் அந்த ரெண்டு பேரால இந்தப் பொலிக்கும் அந்தப் பொலிக்குமா தொறட்டுப்பட்ட பன்னி இப்பொ நாலா இடத்தையும் கண்டுக்கிட்டது. இப்பொ நாலு தோட்டத்திலயும் முறைபோட்டு வாய் வெக்கெ ஆரம்பிச்சது. ஆளரவம் தெரிஞ்சால் ஒதுங்கி ஓடைப்பக்கம் ஒளிஞ்சிக்கிடவும் பழகிக்கிட்டது.
இவங்க நாலு பேரும் ஒருத்தரையொருத்தர் பார்த்தாலும் விலகி விலகி போய்க்கிடறது. தோட்டங்கள்ல அழிம்பு கூடிக்கிட்டே போனது. ஒருதரைத்யொருத்தர் கறுவிக்கிட்டே அலையுறாங்க.
ரொம்ப நாளைக்குப்பிறகு இந்த நாலு சம்சாரிகளும் அன்னைக்கி ஒண்ணா கூட வேண்டிய கட்டாயமாகிப் போச்சு. பண்ட் சேர்த்து எதிரிகளை சந்திக்க கொண்டு வந்த பன்னி வேல்க்கம்புனால குத்துப்பட்டு மல்லாக்க செத்துக்கிடந்தது.
போத்தி நாக்கெரு தோட்டத்துல வச்சுதான் குத்திக்கொன்னு ஓடை வரைக்கும் இழுத்திட்டு வந்து போட்ட தடயம் இருந்தது.போத்தி நாக்கெருதான் குத்தவாளின்னு ருசிபிக்க இருந்த நேரம் மத்த மூணு பேரு தோட்டத்திலிருந்தும் இதே தடயம் ஓடை வரைக்கு கத்தி இழுத்திட்டு வந்த தடயங்க அச்சடிச்ச மாதிரி இருந்தது.
நாலு பேரும் ஓடை வரப்பு மேல இருந்த வேப்ப மரத்துக்கு கீழே வந்து உட்கார்ந்தாங்க. ஒருத்தரையொருத்தர் காக்கா மாதிரி கண்ணை சாய்ச்சி சாய்ச்சி பாத்தபண்டமா இருந்தாங்க.
ஒண்ணு போல மடியை அவுத்து வெத்திலை பாக்கு போட ஆரம்பிச்சாங்க. கொஞ்ச நேரத்துக்குப்பிறகு போத்தி நாயுண்டுதான் எச்சிலைத் துப்பிட்டு பேச ஆரம்பிச்சார்.
"வர்ற வியாழக்கிழமை முத்துலாபுரத்துல கழுதைச்சந்தை நடக்குதாம். நல்ல சினைக் கழுதை ஒண்ணு பிடிச்சு பொதுவுல விட்டா என்ன?
குத்துப்பட்டுக்கிடந்த பன்னி நிலை முழிகுத்த ஆன்னு வாயை பிளந்தமட்டுல இவங்களைப் பார்த்துக்கிடந்தது.


நன்றி செம்மலர்
 எஸ்.லட்சுமணப்பெருமாள்

திங்கள், 5 டிசம்பர், 2011

அழுகி நாற்றமெடுக்கும் அமைப்பின் மீது காறித் துப்புவதற்கு மாற்றாக

மிழ் நாவல்கள் குறித்த தர்க்கங்களும் விவாதங்களும் இன்றுவரை நடந்து கொண்டு தான் இருக்கின்றன. தொண் ணூறுகளுக்குப் பிறகு தமிழில் பொருட் படுத்தத்தக்க நாவல்களின் வருகை கணிசமாகியிருக்கிறது. பால்யகால ஞாபகங்கள் மட்டுமே இருந்த நிலை மையெல்லாம் காணாமல் போய்க்கொண் டிருக்கிறது. வரலாற்றை கட்டமைப் பதில் நாவல்களைத் தவிர வேறு எந்த இலக்கிய வகைமைக்கும் சாத்திய மில்லை. எழுத்தாளன் உருவாக்கி மிதக்கவிட்டிருக்கிற பிரதிகளே இவை யாவற்றிற்கும் சாட்சி. இத்தகைய பார தூர மாற்றங்களை தமிழில் உருவாக் கியதில் தனக்கு பங்கிருக்கிறது, தவறு, தனக்கு மட்டுமே பங்கிருக்கிறது என் பதில் மிகுந்த நம்பிக்கையோடிருப்ப வர் எழுத்தாளர் ஜெயமோகன். அந்த மாபெரும் நம்பிக்கையில் தான் “விஷ்ணு புரம்” எனும் தன்னுடைய நாவலைத் தலைப்பாக்கி இலக்கிய வட்டம் எனும் அமைப்பையே உருவாக்கியிருக்கிறார்.

பின்தொடரும் நிழலின் குரல், காடு கொற்றவை (நாவல் அல்ல காப்பியம்/ ஜெயமோகனின் மதிப்பீடு ) என இக் காலத்தில் அவருடைய புனைவிலக் கியங்கள் வெளிவந்திருக்கின்றன. மற்ற யாவற்றையும் விட அவருடைய ஏழாம் உலகம் கவனித்துப் பரிசீலிக்க வேண்டிய நாவலாக இருக்கிறது.

நிறுவனமயமாகிவிட்ட பெருங் கோவில்களின் வழிநெடுக வீற்றிருக் கும் பிச்சைக்காரர்களை நமக்குத் தெரியும். தம்முடைய கொடைப் பணியை நிரூபித்திடக் கிடைத்திட்ட வர்கள் அவர்கள் என்ற புரிதலுடன் தான் மனிதர்கள் அவர்களை அணுகு கிறார்கள். தரையோடு ஒடிந்து கிடக் கும் அவர்கள் எவரின் முகமும் பார்ப் பதில்லை. கால்களே அவர்களுக்கு மனிதர்கள். தன்னைக் கடந்து போகும் மனிதனிடம் இருந்து ஏதாவது பெற்றாக வேண்டிய நிர்ப்பந்தம் ஒரு கூரான கத்தி யாக தொங்கிக் கொண்டிருக்கிறது. பிச்சைப் பாத்திரம் நிறைய வேண்டும், இல்லையென்றால் தண்டனை நிச்ச யம். தன்னை விலைக்கு வாங்கிய எஜ மானனுக்கு விசுவாசமாக இருந்து சம்பாதிப்பதைத் தவிர வேறு எந்த வழியும் இல்லை அவர்களுக்கு. அப்படி யான மனிதத் தசைகளின் கதையே “ஏழாம் உலகம்”.

போத்தி வேலுப் பண்டாரம் மூன்று பெண் குழந்தைகளின் தகப்பன். தன் செல்லப் பிள்ளைகளைக் கரையேற் றவே உருப்படிகளை வாங்கி பழனி படிக்கட்டிகளில் பிச்சையெடுக்க விடுகிறான். நாவலுக்குள் பழனி காட் சிப் படுத்தப்பட்டுள்ள விதம் மிக நுட்ப மானது. எல்லா இடங்களும் அதனதன் தன்மையில்தான் இருக்கிறது. இருப்பை உணர்வதும், இருத்தலைப் பற்றிய புரிதலும்தான் வேறு வேறாக இருக்கிறது. தைப்பூசத்து நாட்களில் பழனியின் வண்ணத்தையும் வாசத் தையும் பக்தர் கூட்டம் அள்ளித் தெளிக் கிறது. உருப்படிகள் பிச்சையேந்தி நிற்கிறார்கள். வாழ்க்கையில் எல்லோ ரும் தான் பிச்சையெடுக்கிறோம் என் கிற நூதன புரிதல் அவர்களுக்குள் வந்து சேர்கிறது. வாழ்க்கைதான் எல்லாவற்றையும் கற்றுத் தருகிறது. “பிச்சை எடுக்கானுகடே சாமிகிட்ட பிச்சை எடுக்கானுக சும்மா கேட்டா பிச்ச குடுத்துடுவானா?” என்றார் ராமப்பன் “ நாம இவனுகள்ட்ட பிச்ச எடுக்கம். இவனுக அங்க மேலே உள்ள பிச்சக்காரஆண்டிக் கிட்ட பிச்ச எடுக் கானுக” இப்படி வழிநெடுக நக்கலும் நையாண்டியுமாகத் தான் வாழ்நாளை எதிர்கொள்கிறார்கள்.

நாவலில் முத்தம்மை பிள்ளை பெற்றுத்தரும் இயந்திரம். வாழ்க்கை யில் கசப்பை ருசித்தபடியே வாழ எப்படி முடிகிறது இவர்களால் எனும் கேள்வி முளைத்துக் கொண்டேயிருக் கிறது. போத்தி வேலுப் பண்டாரத்தின் விளை நிலம் முத்தம்மை. அவளின் பிரசவ அவஸ்தையின் துயர்மிகு குர லில் தான் நாவல் துவங்குகிறது. நாவ லின் உரையாடல்கள் நம்மை பசுமாடு கன்று ஈனப்போகிறது போல என்ற மனநிலையில்தான் வைத்திருக் கிறது. முத்தம்மை மல்லாந்து கிடந்து உருவம் சிதைந்த குழந்தையைப் பெறும் போது மனம் அடையும் பெருந்துயரம் வழி நெடுக வாசகனை நிலை குலையச் செய்கிறது. பதினாறாவது பிள்ளையே நாவலுக்குள் முத்தம்மை பிரசவிக்கும் குழந்தை. எல்லாக் குழந்தைகளும் போலவே இதுவும் குறை பிறவிதான். அதற்கு பண்டாரமும், ஜெய மோகனும் நமக்குச் சொல்லும் காரணங்கள் குருடு, கூன் போன்ற சக உருப்படிகளோடு தான் இணையவிடப்படுகிறாள் முத் தம்மை. எனவே தான் இப்படி பிறக் கின்றன குழந்தைகள். அறிவியலுக்கு முரண் ஆனது என்று சொன்னால் ஜெயமோகன் நிச்சயம் சொல்வார், அறிவால் என்னுடைய படைப்பை உணர முடியாது. ஆழ்மனதிலுள் பய ணிக்கும் போது மட்டுமே எல்லாம் சாத்தியம் என்று.

“ஏழாம் உலகம்” நாவல் விவாதத் திற்குள்ளாக்கப்பட வேண்டிய எழுத் துப்பிரதி என்று எனக்குப்படுகிறது. விரிவும், அழகும் கொண்டதான தமிழ் புனைவுப் பரப்பில் மனிதகுலத்தின் வாழ்வு பதிவாகிக்கொண்டுதான் வருகிறது. வாழ்க்கை முன்வைக்கும் விசித்திரமான சிக்கல்களை எதிர் கொண்டு படைப்பிலக்கியம் இயக்கம் பெறுவது ஒருசில நேரங்களில் தான் நடக்கிறது. காலந்தோறும் மனித குலம் கட்டி வளர்த்த அறமும், அன்பும், ஒழுங் கும் இன்று நொறுங்கிப் போவதைக் கண்டு பதைத்திடத்தான் செய்கிறது மனம். வாழ்ந்து தீர வேண்டிய நிர்ப் பந்தத்தில் பொய்மையைக் கவசமாக் கித் திரிகிறார்கள் மனிதர்கள். படைப் பாளி இவையாவற்றையும் கூர்ந்து நோக்குகிறான். பொய்மைகளையும், தந்திரங்களையும் நிகழ்த்தியபடி பொருள் தேடியலையும் மனிதக் கூட்டத்தின் கதைகளை மறுமுறையும் உருவாக்கிப் பார்க்கிறான் படைப்பாளி. சொல்லித் தீராத வாழ்வின் சிக்கல்களின் தொகுப்பே “ஏழாம் உலகம்” எனும் படைப்பாகி யிருக்கிறது.

ஏழாம் உலகத்திற்குள் உலவித்திரி கிற மனிதக்கூட்டம் தமிழ் இலக்கியப் பிரதிகளுக்குள் இது வரை வந்து சேர்ந் திராத அங்க ஹீனர்கள், பெரு நோய்க் குள்ளானவர்கள், குரூரத் தோற்றம் கொண்டவர்கள், குறைபிறவிகள். அத னால் பிச்சையெடுத்து வாழ்வதைத் தவிர வேறு எந்த வழியும் அற்றவர்கள். இவர்களைப் பின் நவீனத்துவ சொல் லாடலில் விளிம்புநிலை மாந்தர்கள் என்று சொல்லலாமா என யோசித் தால், விளிம்பிற்கும் வெளியே நிற்கும் வெளியே வாழ விதிக்கப்பட்டவர் களாக இருக்கிறார்கள். பிச்சை யெடுத்து வாழும் இரப்பானிகளாக வாழ வாழ்க்கை அவர்களை நிர்ப்பந்திக் கிறது. இதற்குள் இயங்கும் வர்த்தகம், உள்ளூர் அதிகாரக் குறியீடான போலீஸ் ஸ்டேஷனின் குரூரம் என யாவும் நம்மை நோக்கி முகத்தில் காறி உமிழ்கிறது, மனிதர்கள் அல்ல; இவர்கள் யாவரும் உருப்படிகள். ரத்தமும் சதையுமான ஊத்தப் பொருட்களாகவே இவற்றை போத்தி வேலுப் பண்டாரம் பார்க்கிறார். தனக்கும் தன் குடும்பத்திற்கும் பொருள் ஈட்டித் தரும் மாயாவிகளாக வும் அவரைப் பார்க்கச் செய்கிறது வாழ்க்கை.

ஆழ்மன பயண சாகசம் எதுவும் வாசகனுக்கு தேவையாக இருக்கப் போவதில்லை. ஏழாம் உலகத்தை வாசித்தறிய மிக நேரடியான மொழியில் எழுத்தாளனின் ஆழ்மனம் நாவலெங் கும் வெளிப்பட்டுக் கொண்டேயிருக் கிறது. உருப்படிகளை வைத்து பணம் பார்த்திடும் போத்தி வேலுப் பண்டா ரத்தின் மகள் சின்னவள். அக்காவின் கல்யாணத்திற்காக பிச்சையெடுக்க வைத்து சேர்த்திட்ட பணம், நகை என எல்லாவற்றையும் சுருட்டிக் கொண்டு ஒரு நாடாருடன் ஓடிப்போகிறாள். அவனுக்கு ஏற்கெனவே மூன்று திரு மணம் நடந்தேறியிருக்கிறது என்றும் நாவல் பதிவு செய்கிறது. ஏன் ஒடிப் போனாள் என்பதற்கான ஜெயமோக னின் கண்டுபிடிப்பு தான் இங்கு முக் கியம்.

“சின்னவள் அப்போதும் எழுந் திருக்கவில்லை, கலைந்த உடையும் உலர்ந்த எச்சில் கோடுகளுமாக பப் பரக்கா என்று தூங்கிக் கொண்டிருந் தாள்” “பண்டாரம் வீட்டிற்கு வந்த போது சின்னவள் திண்ணையில் ராணி, தேவி, வாரமலர் எல்லாவற்றை யும் பரத்திப்போட்டு உட்கார்ந்திருந் தாள்” ஒருவேளை ராமாயாணமும் மகாபாரதமும் படிக்கிற பெண்ணாக இருந்திருந்தால் ஒடிப்போகாமல் இருந்திருப்பாள் என நினைத்திருப் பார் ஜெயமோகன்.

நாவலுக்குள் மலையாள அரசியல் பேசுவதற்காகவே இரண்டு பேர் வந்து போகிறார்கள். ஒருவர் கொச்சன் என்கிற கம்யூனிஸ்ட், மற்றவர் அகமது குட்டி என்கிற எரப்பாளி. அகமது குட்டி பெரிய அறிவாளியாக தோற்றம் பெறுகிறான். லோக்கல் போலீஸிற்கே எப்.ஐ.ஆர் போட சொல்லித் தருகிற வன். “ கேரள மண்னை எடைபோட்டு தூக்கி விக்கிறாங்க, கேவலம் ஆயிரம் கோடிரூபாய்க்கு மரகதப் பட்டுடுத்த மலையாள மண்ணை விக்கிறானுங்க நாயின்ற மோம்மாரு....” “நாடு ஃபரிக் கான் அறியாத்த நாயின்டை மோன் அவனானு நாயனாரு. கேக்கிறதுக்கு நல்ல உசிருள்ள காங்கிரஸ்காரன் இல்லை. கருணாகரன்றெ பல்லு போயி, ஆன்டனிக்க பண்டே பல்லு இல்ல...” “உம்மயும் என்னையும் பண் டாரம் வித்து வாங்குறான். எல்லாரையும் சேத்து ராஜிவும் நாயனாரும் விக்கி றான்” இப்படி வழிநெடுக கம்யூனிஸ்ட் களின் மேல் இருக்கும் தன்னுடைய கோபத்தையெல்லாம் அகமது குட்டி வழியாக நாவலெங்கும் பேச விடுகிறார் எழுத்தாளர். நமக்கு, ஏன் அகமது குட்டி இந்துத்துவ அபாயம் குறித்தெல்லாம் பேசவில்லை என கேட்கத் தோன்று கிறது. நாவல் நிகழும் காலத்தில் இந் துத்துவ அபாயம் மேலோங்கியிருக்க வில்லை என ஜெயமோகன் சமாளிக் கத் தான் செய்வார். ஆனால் மாட்டுக் கறி உணவு பற்றி ய அகமதுவின் கருத் தில் மாடு ஹராம் இல்லை. ஆனால் குடியானவனும், பசுவும் சொர்க்கத்தில் நண்பர்கள் என்றெல்லாம் அகமதுவை சொல்ல வைத்து சந்தோஷப்பட்டுக் கொள்கிறார்.

மற்றொருவர் கொச்சன். அவர் கம்யூனிஸ்ட் பார்ட்டி ஆள். அவரு டைய தொழிலும் உருப்படிகள் வாங்கி விக்கிறது தான். கட்சி பற்றிய உளறல், புரட்சி பற்றிய உளறல் எல்லாவற்றை யும் கொச்சன் வழியாகவே செய்து பார்க்கிறார் ஜெயமோகன். “மனுசனை மனுசன் விக்காம முதலாளித்துவம் உண்டா மக்கா?” “பண்டாரமே , இது ஒரு மாஸ் ஹீஸ்டீரியாவாக்கும். இதே மாதிரி மாஸ் ஹிஸ்டீரியாவாக்கும் போர். புரட்சியும் அப்படித்தான்” “ நீரு சாமியார் ஆயிடும் காவி வேட்டி, கமண் டலம் விபூதி காம்ரேடுன்னு சொல்லா மல் மைசன் அப்படீன்னு சொன்னா தீந்தது. உதிர நிமித்தம் பல வித வேஷம்”. இது போதுமானதாக இருக்கிறது ஜெயமோகனை அறிய, அவரின் இலக் கியப் புலத்தின் நிலை அறிந்திட.

எப்போதும் தன்னுடைய பணியை கச்சிதமாக செய்து முடிக்கிறவர் ஜெய மோகன். கடவுள்களின் கோவில் களின் மீது சின்ன , சின்ன அதிர்ச்சி களை ஏற்படுத்திட மட்டுமே ஏழாம் உலகைப் பயன்படுத்தியுள்ளார். அழுகி நாற்றமெடுக்கும் அமைப்பின் மீது காறித் துப்புவதற்கு மாற்றாக கம்யூ னிஸ்ட்களின் மீது வசை, கிறிஸ்தவத் தின் மீது கோபம், இஸ்லாமானவர்களி டம் மட்டும் இருக்கும் மதவெறியர் களைப் பட்டியலிடுகிறார். கவனமாக இந்துத்துவ விமர்சனம் எங்கும் இல்லை. இது தான் ஜெயமோகன்.

ம.மணிமாறன்

சனி, 26 நவம்பர், 2011

விளம்பரம் உருவாக்கிய மூளைஅற்ற மனிதனா நீங்கள்

அன்பினாலும், இரைச்சல்களாலும் நிறைந்து கிடந்த நமது தெருக்கள் இப்போது வெறிச்சோடிக்கிடக்கின்றன. வண்ணங்களும், கனவுகளுமாய் விரிந்து கொண்டேயிருந்த உலகம் இப்போது சுருங்கி வருகிறது. எல்லைகளில்லாமல் ஒலித்துக்கொண்டிருந்த மழலைகளின் இசை, இன்று சுவர்களுக்குள் அடைபடுவதால் சுவடு தெரியாமல் நடந்து செல்கிறது வரலாறு. பின் மாலைப்பொழுதில், முற்றத்தில் நின்றுகொண்டு விரல் நீட்டி நட்சத்திரங்களை எண்ணிக் கொண்டிருந்தவர்கள், இருட்டு அறையில் ஸ்டிக்கர் நட்சத்திரங்கள் மின்னுவதை பார்க்க காத்திருக்கிறார்கள்.

கற்பனை தோரணங்களால் மின்னிக்கொண்டிருந்த அவர்களின் உலகம் மின் காந்த அலைகளால் நிரப்பப்படுகிறது. என்னைப் பாருங்கள், என்னிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள், என்னோடு மட்டுமே பேசுங்கள் என தன்னைத் தானே சுற்றிக்கொண்டே நம்மையும் சுற்றி வந்து கொண்டிருந்த பிரபஞ்சம் இப்போது நின்ற இடத்திலேயே இயக்கம் இல்லாமல் நின்று விடும் போலிருக்கிறது.

ஆம்..., காட்சி ஊடகங்களால் பேராபத்து ஏற்பட்டிருக்கிறது குழந்தைகளின் உலகிற்கு. மலட்டுத்தனமான பொய்களை தேசமெங்கும் விதைத்து மொட்டை மரமென நுகர்வு ஆசைகளை வளர்த்து இலாபம் மட்டுமே அறுவடை செய்யும் காட்சி ஊடகங்களின் விளம்பரங்களால் குழந்தையெனும் விளைநிலங்கள் பாலைகளாக மாறிவருகின்றன. விளம்பரங்களில் பொய்களை பயன்படுத்த வரம்புகளில்லா அனுமதியும், அளவில்லாத அங்கீகாரமும் வழங்கப்பட்டிருக்கும் இந்நாட்டின் எதிர்காலம் பொய்யர்களின் பெயரால் தீர்மானிக்கப்படும் அவலம் மெல்லத் துவங்கி இருக்கிறது.


என்ன பேசுவது, என்ன உடை உடுத்துவது, எதை சாப்பிடுவது, ஆண் எதை விரும்ப வேண்டும். பெண் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என அனைத்தையும் தீர்மானிக்கும் காட்சி ஊடகங்கள், குழந்தைகள் அ, ஆவன்னா கற்றுக்கொள்ளும் முன்பே தாங்கள் தீர்மானித்ததை சொல்லிக்கொடுக்கத் துவங்கிவிடுகின்றன. பேசப்பழகும் குழந்தை டிவியில் இருந்துதான் அதிகமான வார்த்தைகளை காதில் கேட்கின்றன. கேட்கும் திறன் அறியத்துவங்கும் குழந்தைகள் டிவியின் இசை கேட்டே திரும்பிப் பார்க்கத்துவங்குகின்றன. இந்த சீரியல் டைட்டில் சாங் கேட்டால் போதும் எங்க இருந்தாலும் திரும்பிப் பார்ப்பான் என பெருமையோடு பேசும் தாய்க்கு அதன் விளைவுகள் அறிந்திருக்க நியாயம் இல்லை. முதல் மூன்று வயதுக்குள்ளேயே டிவி ரிமோட் மூலம் விளையாடத்துவங்கும் குழந்தைகள், பின்னர் டிவியை தன் முதல் நண்பனாக உணரத்துவங்கி இறுதியில் வழிகாட்டியாய் வாழத்துவங்கி விடுகிறது.

சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு நிலாச்சோறு ஊட்டிய கதைகள் காணாமல் போய்விட்டன. டிவி பார்த்துக்கொண் ட சாப்பிடுவது, தூங்குவது என ஒரு புதிய வாழ்க்கை முறை பழக்கமாக்கப்படுகிறது வீட்டினுள். எந்த தொந்தரவும் இல்லை என துவக்கத்தில் அனுமதிக்கும் பெற்றோர்கள் குழந்தை வீட்டுப்பாடம் செய்ய மறுக்கும் பருவத்தில் தான் டிவி நம் குழந்தையின் வாழ்வில் மறுக்க முடியாத அங்கீகாரம் பெற்றுள்ளது என உணரத்துவங்குகின்றனர். ஆனாலும், டிவி இல்லாத வீட்டை கற்பனை செய்வது பெற்றோர்களுக்கும் சாத்தியமில்லை என்பதால் மறுக்க முடியாமல் உடன்படுகின்றனர் அனைவரும்.


செய்திகள் தருவது என்ற சமூகத் தளத்தில் இருந்து பொழுதுபோக்கு என்ற தளத்திற்கு தாங்களாகவே மாறிக்கொண்ட காட்சி ஊடகங்கள் விளம்பரங்கள் மூலம் கட்டியமைக்க விரும்பும் உலகை சிருஷ்டிப்பது கார்ப்பரேட் நிறுவனங்கள் தான் அந்த உலகின் ஒரே மொழியாக ஆங்கிலம் மட்டுமே இருக்க வேண்டுமென்பதுதான் அவர்களின் விருப்பம். டிவியில் பார்ப்பதை நம்புவது, வாங்குவது, அதன் வழியே வாழ்வை தீர்மானிப்பது என்று மட்டுமே வாழ்க்கை முறை அமைந்தால்தான் வியாபாரம் பெருக்கி கொண்டேயிருக்கும் அவர்களுக்கு. கார்ப்பரேட் நிறுவனங்கள் தரும் விளம்பரங்கள் மூலம் கோடி கோடியாய் வருமானமீட்டும் காட்சி ஊடகங்கள், தங்கள் இலக்கை குறி வைத்து மகளிர், குழந்தை என தனித்தனி நேரம் ஒதுக்கிய காலம் மாறிவிட்டது.

இப்போது அவர்களின் முதல் இலக்கு குழந்தைகள் தான். குழந்தைகளுக்கு என தனி சானல் இன்று தமிழகத்தில் மட்டும் சுமார் 22 வரை 24 மணி நேரமும் ஒளிபரப்பாகிக் கொண்டேயிருக்கிறது. இதில் அதிகம் தமிழ் சேனல்கள் தான். ஆங்கில நிகழ்ச்சிகளை தமிழாக்கம் செய்து ஒளி பரப்புவதும் மிகத் தாராளமாக நடைபெறுகின்றன. குழந்தைகளிடையே மிகப் பிரபலமான ஆங்கில- தமிழ் மொழியாக்க நிகழ்ச்சிகளும் பல உண்டு. ஆக, ஒரு குழந்தை டிவிக்கும் தனக்குமான உறவை மிக நெருக்கமாக்கிக்கொள்ள வாய்ப்புகள் இங்கு மிக அதிகம். எந்தவொரு நாட்டிலும் இத்தனை குழந்தைகள் சானல் இருக்குமா என்றால் இல்லை என அழுத்தமாய் பதில் சொல்லிவிடலாம். இவை தவிர தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிகளிலும் உள்ள சுமார் 50 சானல்கள் தாராளமாய் 24 மணி நேரமும் ஒலிபரப்பாகிக்கொண்டே இருக்கின்றன. இதிலும் பல சானல்களை குழந்தைகள் விரும்பிப் பார்க்கும் சூழல் தற்போது பல வீடுகளிலும் சாதாரணமாக மாறிவிட்டது.

போரடிக்கும் ஒவ்வொரு விநாடிக்கும் ஒவ்வொரு சானல் என கையில் ரிமோட் வைத்து மாற்றிக்கொண்டிருக்கும் ஒரு குழந்தை சராசரியாக ஒரு வாரத்தில் என்னென்ன பார்க்க நேரிடுகிறது தெரியுமா?


துப்பாக்கி கொண்டு சுடும் சுமார் 100 காட்சிகள், 100 முதல் 200 வரையான ஆபாச, காட்சிகள் மற்றும் இரட்டை அர்த்த வசனங்கள், சுமார் 20 முதல் 30 வரையான, பாலியல் காட்சிகள், சுமார் 25 முதல் 40 கொலைகள், எப்போதும் குழந்தை கேட்கும் அனைத்தையும் வாங்கித் தரும் விளம்பர பெற்றோர்கள் 100 பேர் இயல்பிற்கு புறம்பான சாகசங்கள் செய்யும் கதாபாத்திரங்கள், கேடு செய்யும் மந்திரவாதிகள், பேய், ஆவிகளின் பழிவாங்கும் செயல்கள், பேசும் பாம்பு போன்ற மூடநம்பிக்கைகள், இரட்டை அர்த்த வார்த்தைகள், பெண்ணை கேலி செய்தல், அப்பா-அம்மாவை இழிவு செய்தல், நண்பர்களோடு சேர்ந்து வம்புகள் செய்தல், பொய் சொல்லுதல், பிறரை துன்புறுத்தல் போன்றவை அடங்கிய நகைச்சுவைக் காட்சிகள். பணக்காரர் ஆவதற்காக எதையும் செய்யும் கதாபாத்திரங்கள் போன்றைவைதான் எப்போதும் ஒலிபரப்பாகிக் கொண்டே இருக்கின்றன.

திரைப்படங்களை குடும்பத்துடன் உட்கார்ந்து பார்க்கையில் மட்டுமே அன்பு பெருகி வீடெங்கும் ஒடுவதாக எண்ணும் நம்மவர்கள் எந்தக் காட்சியையும் குழந்தையின் கண்களில் இருந்து மறைக்க இயலாது. மறைத்து விடலாம் என நாம் ரிமோட்டை தேடுகையில் குழந்தை நம்மைப் பார்த்து உதட்டோரம் சிரிக்குமே அதன் அர்த்தம் என்ன தெரியுமா? இத்தனை விளைவுகளுக்கும் காரணமான திரைப்படங்களை எந்த தடையும் இல்லாமல் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப அனுமதிப்பது மிக அபாயகரமான ஒன்றாகும். திரைப்படத்தில் வளர்ந்துவரும் ஆபாசம், வன்முறைகளை கட்டுப்படுத்த இயலாத அரசு அதை தொலைக்காட்சியிலும் அனுமதிப்பது ஒரு சமூக விரோதச் செயலாகும்.


அடுத்து விளம்பரங்கள் உருவாக்கும் உலகில் நடக்கும் அநீதிகளை பேசுவோம். ஒரு குழந்தை சராசரியாக ஒரு நாளைக்கு குறைந்தது 150 முதல் 200 தடவை விளம்பரங்களைப் பார்க்கின்றன. இதில் 20 முதல் 30 வகையான விளம்பரங்களே மீண்டும் மீண்டும் வருகின்றன. ஊட்டச்சத்து பானங்கள், சாக்லெட், பிஸ்கட்,நூடுல்ஸ், குலோப் ஜாம், கோக்-பெப்சி, சிப்ஸ், மிண்ட், பிஸ்ஸா போன்ற விளம்பரங்களே இதில் மிக அதிகம். விளம்பரத்தில் வரும் காட்சியில் மிக முக்கியமாக குழந்தைகள் மனதில் பதிவது இதை வாங்கித் தருவோரே சிறந்த பெற்றோர் என்பதுதான்.

 சாக்லேட் பற்சொத்தையை உருவாக்கும் எனத் தெரியாத பெற்றோர் யாரும் இருக்க முடியாது. ஆனாலும், ஏன் வாங்கித் தருகிறார்கள்? ஒரு வேளை, கோல்கேட், குளோஸ் அப் மற்றும் பெப்சோடண்ட் தரும் நம்பிக்கையோ என்னவோ. அதை விடவும் உண்மையானது என்னவெனில், என் குழந்தைக்கு டிவியில் வரும் அனைத்தையும் வாங்கித்தரும் அப்பா, அம்மாவாக நான் இருப்பேன் எனப் பலர் சபதம் போட்டுத் திரிவதுதான்.


என்ன பிராண்ட் வேணும் என குழந்தைகள் கேட்பதை பலர் ரசிக்கிறார்கள். கடையில் நின்று கொண்டு டைரி மில்க் வேணுமா- மன்ச் வேணுமா என குழந்தையிடம் கேட்பதை மிக சந்தோசமாக நினைக்கிறார்கள் பலர்.என்னமோ குழந்தை அறிவார்ந்து ஒன்றைக் கேட்பது போல் நினைந்து நெஞ்சுருகிப்போகும் பெற்றோர்கள் அதன் எதிர்கால விளைவை யோசிப்பதில்லை. குழந்தையின் மனதில் பிராண்டை பதிய வைக்க விளம்பரங்கள் கையாளும் வழிமுறைகள் பல மோசடியானது. சாக்லெட்டில் புதியதாக வந்துள்ள கிண்டர் ஜாயின் விலை ரூ.30, ஆனால் இதர சாக்லேட்டுகள் ரூ.5 முதலே கிடைக்கும். ஆக, கிண்டர் ஜாய் தன்னுடைய வரவை மிக நவீனமாக காட்டிக்கொள்ள விலை உயர்வையும் ஒரு காரணியாக காட்டிக்கொள்கிறார்கள்.

 விலை உயர்ந்த பொருள்கள் கட்டாயம் தரம் உயர்வாக இருக்கும் என்பதும் ஏற்கனவே விளம்பரங்கள் உருவாக்கி வைத்த பிம்பங்கள் தானே. இரண்டாவதாக முட்டை உருவத்திலான வடிவத்தை சாக்லேட் பாக்கெட்டிற்கு பயன்படுத்துவது. மூன்றாவது, கால்சியம் உள்ளதால் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு ஏற்றதென ஒரு வாசகம். போதாதா வியாபாரம் சூடு பிடிக்க. இன்று இந்தியாவின் குழந்தைகள் சந்தையில் மிக முக்கிய பொருட்களில் ஒன்றாக மாறிவிட்டது இத்தாலியைச் சேர்ந்த கிண்டர் ஜாய். கிட் காட் மற்றும் மன்ச் ஆகியன நெஸ்டில் என்ற ஸ்விட்சர்லாந்து நிறுவனத்தின் தயாரிப்புகளாகும். இதன் இதர தயாரிப்புகளாக போலோ, நெஸ்டில் பால், ஜாஸ், மேகி என பல குழந்தைகளுக்கானதாகும். பெர்க், 5 ஸ்டார், டைரி மில்க் போன்ற சாக்லேட் அனைத்தும் காட்பெரி எனும் இங்கிலாந்து நிறுவனத்தின் தயாரிப்புகளாகும். எக்லேர்ஸ், டங் டிரிங்ஸ், ஜெம்ஸ், ஹால்ஸ், போர்ன்விடா, போர்ன்வில்லா, பப்பல்லோ பபுள் கம், ஆகியன இதன் இதர தயாரிப்புகள். சில நிறுவனங்கள் மட்டுமே குழந்தை சந்தையில் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். இவர்கள் தங்களின் அனைத்து தயாரிப்புகளையும் குழந்தைகளிடம் விற்பனை செய்வதற்காக கையாளும் விளம்பர முறைகள் அனைத்தும் குழந்தைகளிடம் அறிவியல் பூர்வமற்ற பார்வையை ஏற்படுத்துவது மட்டுமல்ல, உடல்நலத்தையும் பாதிப்படையவே செய்கின்றன.


காம்பிளான் குடித்தால் வளர முடியாது என விளக்கங்களுடன் மக்களுக்கு முதலில் சொன்னது குடும்ப ஊட்ட சத்து பானம் என தன்னைக்கூறிக்கொள்ளும் ஹார்லிக்ஸ் தான். அதே போன்று ஹார்லிக்ஸில் சத்து என எதுவும் கிடையாதென அடித்துச் சொன்னது காம்பிளான் தான். 

கோக்-பெப்சி போட்டி விளம்பரங்களால் இரண்டும் உடல்நலத்துக்கு கேடு என வெளிப்படையாக அறிவிக்கப்பட்டதைப் போன்று காம்பிளான், ஹார்லிக்ஸ் இரண்டும் மோசடியானது, உடல் நலத்துக்கு நல்லதல்ல என பரஸ்பரம் கூறிக்கொண்ட போதிலும் காட்சி ஊடகங்கள் இந்த விளம்பரங்களை இன்றளவும் ஏன் ஒளி பரப்புகின்றன?

 ஊடகங்களுக்கு குழந்தைகள் மீது அக்கறை உள்ளதா? காம்பிளான் ஒரு பிரிட்டிஷ் நிறுவனம். ஹார்லிக்ஸ் ஒரு லண்டன் நிறுவனம். சக்தியின் ரகசியம் என கபில்தேவ், டெண்டுல்கர், சேவாக், தோனி ஆகியோரால் கூறப்பட்ட பூஸ்ட் ஒரு லண்டன் நிறுவனமாகும். தற்போது குழந்தை மருத்துவர்களால் முன்மொழியப்படும் உலகின் நம்பர் ஒன் பிராண்ட் என அறிவு வளர்ச்சியை முன்மொழிந்து வந்துள்ள பீடியா ஸ்யூர் ஒரு அமெரிக்க நிறுவனமாகும். ஆக, சத்துள்ள எந்தப்பொருளும் தாய்மார்களுக்கு பரிந்துரைக்க இந்தியாவில் இல்லை போலும்.
`

பெற்றோர்களின் அன்பு, குழந்தைகளின் ஆரோக்கியம், குழந்தைகளுக்காக பரிசு வாங்கித்தருவது, மற்ற குழந்தைகளிடமிருந்து நம் குழந்தை தாழ்ந்து, தனிமைப்பட்டு போய்விடக்கூடாது என்ற பெற்றோர்களின் பாசத்தை மையமாக வைத்துத் தான் பெரும்பாலான பொருட்களின் விளம்பரங்கள் தயாரிக்கப்படுகின்றன. பிரஷ், பேஸ்ட், காம்பிளான், சோப், ஷாம்பு, நூடுல்ஸ் என மாறிவிட்ட காலைப்பொழுதில் சுமார் ரூ.300 மாத செலவாகிவிடுகிறது ஒரு குழந்தைக்கு. ஆலும், வேலும் பல்லுக்கு உறுதி என சொல்லிக்கொடுத்த பள்ளிக்கூடங்கள் பிரஷ் கொண்டு டூத் தேய்க்கும் பேஸ்ட் விளம்பர பாடங்களை போதிக்கின்றன நவீனம் என்ற பேரில்.

 குழந்தைகள் கைகளில் அழுக்கு அதிகம் இருக்கும். எனவே, சாப்பிடுவதற்கு முன்பும், பின்பும் டெட்டால் போட்டு சுத்தப்படுத்துங்கள். வீட்டின் தரையிலும் அழுக்கு இருப்பதால் டெட்டால் கொண்டு கழுவித் துடைப்பவளே அன்புள்ள தாயாகிறாள். பாத்திரங்கள் கழுவுவதிலும், துணிகளைத் துவக்கையிலும் உங்களுக்கு கவனம் அதிகம் தேவை, இல்லையெனில் பாதிப்பு குழந்தைகளுக்குத் தானாம். சுத்தம் சுத்தம், ஆரோக்கியம் என எத்தனையெத்தனை விளம்பரங்கள்.

 திடீரென ஒரு நாள் பள்ளி சென்ற குழந்தைகளிடம் உங்கள் வீட்டில் பயன்படுத்தும் உப்பில் அயோடின் உள்ளதா என பரிசோதிக்க ஒரு கொத்து உப்பை கொடுத்து விடுங்கள் என ஒரு சுற்றறிக்கை கொடுத்து அனுப்பினார்கள். அயோடின் இல்லையெனில் குழந்தைகளின் அறிவு வளர்ச்சி பாதிக்குமென விளம்பரமும் அதே நேரம் டிவியில் வந்தது. விளைவு, கடைக்கு வெளியே மூட்டையாக திறந்தே வைக்கப்பட்டிருந்த உப்பு காணாமல் போனது. வண்ண நிறங்களில் அமெரிக்க நிறுவனத்திலிருந்து உப்புத்தூள் வந்திறங்கியது. 

இதே போன்று, குடிநீர் பற்றி பேசிப்பேசி இன்று சுடவைத்த குடிநீர் என்பதற்கு மாறாக விலை கொடுத்து வாங்கும் பழக்கத்தை ஏற்படுத்திவிட்டனர். வாழ்க்கையின் ஒவ்வொரு பொருளைப் பற்றியும் ஒரு பயத்தை எழுப்பி, அதன் முன் உங்கள் குழந்தையை நிறுத்தி, எனவே ஆரோக்கிய வாழ்விற்கு வாங்குவீர்....... இது தான் காட்சி ஊடகங்களின் இன்றைய சேவை. .

தரமான குடிநீர், சுகாதாரமான வாழ்வு முறை, சுற்றுச் சூழல் பராமரிப்பு, கல்விச்சூழல், கல்வித்தரம், குழந்தையின் கல்வி மனநிலை என எந்த ஒரு பொருளைப் பேசினாலும் விளம்பரத்தை மட்டுமே முன்நிறுத்தும் இந்த பேரழிவு வாதங்கள் நாடு முழுக்க உள்ள அனைத்து குடும்பங்களிலும் உள்ள பணத்தை சில பெரு முதலைகளின் வாயில் போட்டு மெல்ல வைக்கும் வேலையை மட்டுமே செய்கின்றன. எந்த ஒரு பொருளிலும் அரசின் பங்கு, பொது மக்களின் பங்கு என எதையும் பேச மறுக்கும் காட்சி ஊடகங்களை ஊடகங்களின் பட்டியலில் இருந்து முதலில் நீக்கவேண்டும். திரைப்பட நிகழ்ச்சிகளை தொலைக்காட்சியில் ஒலிபரப்புகையில் கால ஒதுக்கீடு செய்து வரைமுறைகளை உருவாக்கிட வேண்டும். 

குழந்தை விளம்பரங்களை முழுமையாக தடை செய்வதோடு மட்டுமல்லாமல், எந்த ஒரு பொருளுக்கும் மக்களிடையே பயத்தை உருவாக்கும் விளம்பரங்களை தயாரிக்கக்கூடாது எனவும் உத்தரவிட வேண்டும். குறிப்பாக குழந்தை சானல்கள் அனைத்தையும் தடை செய்வதோடு, இதர சானல்களில் ஒரு குறிப்பிட்ட நேரத்தை மட்டுமே முழு தணிக்கையோடு குழந்தைகளுக்கான நிகழ்ச்சி ஒளிபரப்பிட வேண்டும். அதில் கல்வி நோக்கம் மட்டுமே இருந்திட வேண்டும்.




- இல.சண்முகசுந்தரம்

வியாழன், 10 நவம்பர், 2011

உங்களால் இதை நம்ப முடியுமா

வரும் எட்டாண்டுகளில் 28 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கப்போவதாக வெனிசுலாவின் ஜனாதிபதி ஹியூகோ சாவேஸ் அறிவித்துள்ளார். இதற்கான நடவடிக்கைகள் நடப்பாண்டிலேயே துவங்கும் என்று கூறிய அவர், வேலைவாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் இளைஞர்களுக்கு நவீன முறையில் பயிற்சிகள் தரப்படும்.

புதுமையான எண்ணங்களோடு அவர்கள் பணிகளில் ஈடுபடும் வகையில் தயார் செய்யப்படுவார்கள். விவசாயம், உற்பத்தித்துறை, கட்டுமானம், சுற்றுலா மற்றும் வர்த்தகம் ஆகிய துறைகளில் இந்த வேலைவாய்ப்புகள் அதிகமாக உருவாக்கப்படும் என்று குறிப்பிட்டார்.

இந்த முயற்சியின் முதல் கட்டமாக, 1,075 கி.மீ. நீளமுள்ள புதிய ரயில்பாதையை உருவாக்க அரசு திட்டமிட்டிருக்கிறது. இதில் தொழில்நுட்ப வல்லுநர்களோடு, பெரிய இளைஞர் பட்டாளத்தை
யும் இறக்கிவிடப் போகிறார்கள். கட்டுமானத்துறை வல்லுநர்களாக அந்த இளைஞர்களை உருவாக்குவதே அரசின் திட்டமாகும். மேலும், இந்தத் திட்டத்தால் 3 ஆயிரத்து 500 கவுரவமாக வேலைகள் உருவாகப் போகிறது. இத்தனைக்கும் இப்பணியின் முதல் கட்டத்திலேயே இவ்வளவு வேலைகள் உருவாக்கப்படுகின்றன.

வெறும் உடலுழைப்பு மட்டுமல்லாமல், அறிவுசார்ந்த பணியாகவும் இவற்றில் இளைஞர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று சாவேஸ் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.தொடரும் தேசிய மயம்
குறைவான தொழிலாளர்களை வைத்துக் கொண்டு சுரண்டும் பெரும் நிறுவனங்களின் நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில்தான் நாட்டுடைமையாக்கும் வேலையை வெனிசுலா அரசு மேற்கொள்கிறது. தொலைத்தொடர்பு, கனிமம், பெட்ரோலியம் உள்ளிட்ட பல்வேறு முக்கியமான துறைகள் இப்படித்தான் தேசியமயமாக்கப்பட்டுள்ளன. அதேவகையில்தான் பிரிட்டனின் வெஸ்டே குழுமத்தைச் சேர்ந்த துணை நிறுவனமும், விவசாயப் பணிகளைச் செய்து கொண்டிருந்த நிறுவனமுமான அக்ரோ புளோராவை தேச உடைமையாக்கும் உத்தர வில் சாவேஸ் கையெழுத்திட்டுள்ளார். நாட்டின் உணவுப் பாதுகாப்பு மற்றும் இறையாண்மைச் சட்டத்தின் கீழ் இந்த நடவ டிக்கை எடுக்கப்படுவதாக வைவ் தொலைக்காட்சி மூலம் மக்க ளுக்கு ஆற்றிய உரையில் தெரி வித்தார்.

இந்த நிறுவனத்திற்குச் சொந்தமாக 2 லட்சத்து 90 ஆயிரம் ஹெக்டேர் நிலங்கள் இருந்தன. அரசின் நேரடி நிர்வாகத்திற்கு இந்த நிலங்களும் கொண்டு வரப்பட்டுள்ளன. இது குறித்துப் பேசிய சாவேஸ், இது மக்களின் சொத்தாகும். ஒரு சிலரின் சொத்தாக மாற்றும் அவர்களது முயற்சி நீர்வழிகளையும் ஆறுகளையும் மாசுபடுத்தவே உதவும் என்று குறிப்பிட்டார். இந்த தேசமய நடவடிக்கையால் இறைச்சி விற்பனை அதிகரிக்கும். மாடு வைத்திருக்கும் 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் நேரடியாகப் பயனடைவார்கள். அதைச் செய்ய தேசமய நடவடிக்கைதான் ஒரேவழி. அரசுத்தரப்பில் பேசியபோது நிறுவனத்தினர் ஒப்புக் கொள்ளவில்லை. அவர்கள் டாலர்கள் கேட்கிறார்கள். அதனால் வலுக்கட்டாயமாகத்தான் இந்த நிறுவனத்தை மக்களுக்கு சொந்தமாக்கியுள்ளோம் என்றார்.

“சமூக உற்பத்தி வர்த்தகம்”வேலைவாய்ப்புகளை உருவாக்கும் அடுத்த உத்தியாக சமூக உற்பத்தி வர்த்தகம் என்ற திட்டத்தையும் சாவேஸ் அறிவித்துள்ளார். அராகுவா மற்றும் கராபோபோ மாகாணங்களுக்கு இடையில் உள்ள டகாரிகுவாஸ் என்ற இடத்தில் இந்தத் திட்டத்தை வெனிசுலா அரசு அறிமுகப்படுத்துகிறது. இதற்காக 13 ஆயிரம் ஹெக்டேர் நிலங்களை கையகப்படுத்துகிறார்கள். இந்த இடத்தில் பத்து சமூக உற்பத்தி நிறுவனங்களை ஒருங்கிணைத்து அமைக்கிறார்கள். இது பற்றிப் பேசியுள்ள சாவேஸ், முதலாளித்துவவாதிகளின் கைகளில் இந்த நிலங்கள் திறமையாகப் பயன்படுத்தப்படவில்லை. மேலும் அவர்கள் சுற்றுச்சூழலுக்கு சேதம் ஏற்படுத்தி வந்தனர் என்று குறிப்பிட்டுள்ளார்.



வேலைவாய்ப்புகளை உருவாக்குவதோடு, உணவில் தன்னிறைவு என்ற இலக்கையும் சேர்த்து அடையும் நோக்கத்தோடு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. சாவேஸ் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டபோது வெனிசுலா மக்களின் அடிப்படை உணவுத் தேவைகளுக்கு இறக்குமதியையே நம்பி இருந்தனர். சாவேசின் முன்முயற்சிகள், தேசமய நடவடிக்கைகள் அந்த இறக்குமதியில் பெரும் அளவைக் குறைக்க உதவின. பதுக்கலை ஒழிக்கவே உணவுத்துறையில் செயல்படும் பெரும் நிறுவனங்களை அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களாக மாற்றி வருகிறோம் என்கிறார்கள் வெனிசுலா அரசு அதிகாரிகள்.

சே மிகவும் சரியாகவே சொன்னார். இது வெறும் வீடுகளைக் கட்டுவதல்ல, அல்லது தானியத்தையோ, ஆடைகளையோ உற்பத்தி செய்வதல்ல. அனைத்தையும் தாண்டி, புதிய ஆணை, புதிய பெண்ணை, புதிய சமூகத்தை உருவாக்குவதாகும் என்கிறார் சாவேஸ்.

வெள்ளி, 4 நவம்பர், 2011

இப்படியும் சில நீதிபதிகள்!


உச்ச நீதிமன்றத்தில் ஐந்தாண்டு காலம் நீதிபதியாக பணியாற்றி, உச்ச நீதிமன்ற வரலாற்றில் முத்திரை பதிக்கும் சில தீர்ப்புகளை வழங்கியவரும், அண்மையில் ஓய்வு பெற்ற வருமான மார்க்கண்டேய கட்ஜூ, ஓய்வு பெறு வதற்கு முன்பாக ஒப்பந்தத் தொழிலாளர் களைப் பற்றிய வழக்கில் அவர் வழங்கிய தீர்ப்பு மேலும் ஒரு முத்திரை பதித்துள்ளது. தொழிலாளர் விரோதக் கொள்கையைக் கடைப்பிடிக்கும் மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் கிடைத்த ஒரு சவுக்கடியாகும்.

இவர், 2006ம் ஆண்டுதான் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அதற்கு முன்னால் சென்னை உயர்நீதிமன்றத்திலும், தில்லி உயர்நீதிமன்றத்திலும் தலைமை நீதிபதியாகவும் பணியாற்றியுள்ளார்.

கவுரவக்கொலை என்று கூறப்படும் காட்டுத் தனமான இந்தக் கொடுமையை செய்வோ ருக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்று உயர்நீ திமன்றங்களுக்கு தாக்கீது அனுப்பியவர்.

வரதட்சணைக் கொடுமையால் மரணம், மணப்பெண் உயிரோடு எரித்தல் போன்ற குற் றங்களுக்கு மரண தண்டனை வழங்கினார்.

உணர்வின்றி, செயலின்றி கிடக்கும் நோயாளிகளை சுலப மான முறையில் அவர்கள் மீது இரக்கம் கொண்டு மரணத்தைத் தழுவ செய்வது என்ற ஏற்பாட்டுக்கு சம்மதத்தோடும், உயர்நீதிமன்ற வழிகாட்டுதலோடும் வழி வகுத்தவர்.

நக்சலைட் என்று குற்றம் சாட்டப்பட்ட (மனித உரிமை காப்பாளர்) பினாயக் சென்னை விடுதலை செய்தவர். 27 ஆண்டுகளாக லாகூர் சிறையில் (பாகிஸ்தான்) வாடிக்கிடந்த இந்திய பிரஜை கோபால்தாஸ் என்பவரை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்யக்கோரி பரிந்துரை செய்தார். பாகிஸ் தான் அரசும் அவரை விடுதலை செய்தது. இப் படி சில துணிகரமான நடவடிக்கைகளையும், தீர்ப்புகளையும் வழங்கியுள்ளார்.

(அபூர்வமாக, அரிதிலும் அரிதாக மரண தண்டனைகளை வழங்க சட்டத்தில் இட முள்ள போது, அப்படிப்பட்ட கொடுமையான குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்பது இவர் வாதம்.)

“உலகமய வளர்ச்சி, தாராளமய வளர்ச்சி என்ற பெயரால் ஒப்பந்தத் தொழிலாளர்கள் மனிதாபிமானமற்ற முறையில் சுரண்டும் கொடுமையை உச்சநீதிமன்றம் ஏற்க இய லாது” என்று தீர்ப்பு எழுதினார்- அத்தி பூத் தாற் போல் சில நேரங்களில் சில நீதிபதி களால்தான் இப்படிப்பட்ட தீர்ப்புகளை வழங்க முடிகிறது. சட்டம் எப்படி இருந்தாலும் நீதிபதிகளின் சமூகப் பார்வைகளும் இதற்கு அடிப்படையாக இருக்க வேண்டும்.

இந்திய ஒப்பந்தத் தொழிலாளர் சட்டம்-89, தொடர்ந்து தொழிலாளர்களை சுரண்ட வழிவகுக்கும் ஒரு சட்டமாகும். முதலாளிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு லாப வேட்டை விகிதாச்சாரத்தை பல மடங்கு உயர்த்திக் கொள்ள வாய்ப்பு உருவாகிறது. முத லாளிகளின் வாதமே, ஒப்பந்த தொழிலாளர்கள் எங்களின் தொழிலாளர்களே அல்ல என்பதுதான். அவர்களுக்கும், ஒப்பந்த ஏஜெண்டு களுக்கும்தான் சம்பந்தம், ஏஜெண்டுகளின் அதிகாரத்தின் கீழ்தான் அவர்கள் பணிபுரி கிறார்கள் என சட்டத்துக்குள் ஒளிந்து கொள்கிறார்கள்.

தனியார் தொழிற்சாலைக்கு மட்டும் இந்த நிலை என்பதில்லை. மத்திய அரசும், மாநில அரசுகளுமே ஒப்பந்தத் தொழிலாளர்களைப் பயன்படுத்திக் கொள்ளும் முறை மிக சர்வ சாதாரணமாக அமல்படுத்தப்படுகிறது.

சில குறிப்பிட்ட தொழில்துறைகளில் ஒப் பந்தத் தொழிலாளர்களைப் பயன்படுத்தக் கூடாது என்ற அரசின் விதிமுறை இருந்தும் அமல்படுத்தப்படுவதில்லை.

உதாரணமாக, உச்சநீதிமன்றம் 1996ம் ஆண்டு வழங்கிய தீர்ப்பு இதற்கு ஒரு சாட்சி.

ஏர் இந்தியா விமானத்துறையில் ஒப்பந்தத் தொழிலாளர்களை நியமிக்கக்கூடாது என்ற விதியை அந்த நிர்வாகம் மீறியது. இதை விசா ரித்த நீதிமன்றம், ஒப்பந்தத் தொழிலாளர்கள் இத்துறையில் பணி அமர்த்தக்கூடாது என்று இருப்பதால், இப்போது பணிபுரியும் ஒப்பந் தத் தொழிலாளர்கள் அனைவரையும் ஒழுங்கு முறை தொழிலாளர்களாக நியமிக்கத் தீர்ப்பு வழங்கியது. இப்படிப்பட்ட தீர்ப்பு 2001ம் ஆண்டு நீதிமன்றத்தின் மற்றொரு தீர்ப்பால் மாற்றப்பட்டு விட்டது. ளுவநநட ஹரவாடிசவைல டிக ஐனேயை டுவன என்ற வழக்கில் தீர்ப்பு தலைகீழாக மாற்றப்பட்டு விட்டது. ஒப்பந்தத் தொழிலாளர்கள் பெரும்பகுதி வந்தேறிகளாக இருப்பார்கள், கூட்டுப் பேர சக்தி இல்லாது பலஹீனமானவர்களாக இருப்பார்கள். உயிர் வாழவே கஷ்டமான ஜீவனம் நடத்தும் விளிம்பு நிலையில் உள்ளவர்கள். இவர்களின் அவல நிலையை முதலாளிகளும் பயன்படுத் திக் கொள்கிறார்கள். தரகர்களும் பயன்படுத் திக் கொள்கிறார்கள். ஒரு பக்கம் நவீன இயந்தி ரங்களைக் கொண்டு வந்து ஆட்களைக் குறைப்பது, மறுபக்கம் நிரந்தர பணி அமர்த் தல் முறையை குறைப்பது, தற்காலிக தொழி லாளர்களை நியமிப்பது என்ற முறை மிக நேர்த்தியாக அமல்படுத்தப்படுகிறது.

 இந்தியா முழுவதும் இது அமலாக்கப்படுகிறது. தமிழகத்தில் கூட ஏராளமான உழைப்பாளி கள் பீகார், உத்தரப்பிரதேசம், ஒரிசா, பூடான், மணிப்பூர் போன்ற மாநிலங்களிலிருந்து வந்து பணியாற்ற குடியேறுகிறார்கள். குறிப் பாக சென்னையிலும், சென்னையை அடுத்த மாவட்டங்களிலும் வெளி மாநில மக்கள் பணி புரிகிறார்கள், கடுமையாக உழைக்கிறார் கள்; சுரண்டப்படுகிறார்கள். எட்டுமணி நேர வேலை எங்கோ மறைந்து போனது.

மத்திய அரசின் உலகமயம், தாராள மயம், தனியார் மயம் என்கிற புதியபொருளாதாரக் கொள்கையின் வெளிப்பாடு என்பது சாதா ரண மக்கள் மீது இடியாக விழுகிறது.

உழைப்பாளிகளுக்கு எதிராக இந்தியா முழுவதும் இதுபோன்ற கோரத்தாண்டவம் கொடிகட்டிப் பறக்கின்ற வேளையில், நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு வழங்கிய தீர்ப்பு ஆற் றில் சிக்கித் தவிக்கும் ஒருவருக்கு ஆலமரக் கிளை ஒன்று சிக்கியது போன்ற சம்பவமாகும்.

“தொழிலாளர்கள்-முதலாளிகள் தொழில் உறவு என்பது ஆரோக்கியமாக இல்லை. ஒப்பந்தத் தொழில் முறையைப் பயன்படுத்தி முதலாளிகள், தொழிலாளர்களுக்கு உள்ள சட்டரீதியான உரிமைகளை அமல்படுத்தாது அலட்சியப்படுத்துகிறார்கள், குறைக்கிறார் கள்” என்ற பொருளில் நீதிபதிகள் மார்க் கண்டேய கட்ஜு , சி.கே. பிரசாத்- இருவரும் குறிப்பிட்டுள்ளார்கள்.

தொழில் உறவு சம்பந்தமாக சட்டத்தில் உள்ள சட்ட ரீதியான உரிமைகளை அமல் படுத்துவதை முதலாளிகள் தவிர்க்கிறார்கள். ஒப்பந்தத் தொழிலாளர்கள் எங்கள் தொழி லாளர்கள் அல்ல, அவர்கள் ஒப்பந்த ஏஜெண் டுகளின் தொழிலாளர்கள் என்று தந்திரம் பேசி சூழ்ச்சி செய்கிறார்கள். இவர்களின் இந்தத் தப்பித்துக் கொள்ளும் முயற்சிகளுக்கு முடிவு கட்டுவது இன்றைய கால கட்டத் துக்கு தேவையானது.

நீதிபதிகள் மேலும் சொன்னது :-

தொழிற்சட்டங்கள், தொழிலாளர்களின் - பணியாளர்களின் உரிமைகளைப் பாதுகாக் கவே உருவாக்கப்பட்டுள்ளன. காரணம், முதலாளிகளும், தொழிலாளிகளும் கூட்டுப் பேர சக்தியில் சம பலமாக இருக்க இயல வில்லை என்பதனால்தான் தொழிலாளர் உரிமை சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள் ளன. ஆகவே இந்தச் சூழலில் தொழிலாளர் கள் பாதுகாக்கப்பட வேண்டும். அவர்கள் சுரண்டலுக்கு ஆளாக்கப்படக்கூடாது.

“ஆயினும் இந்தப் புதிய தந்திரத்தை, தப்பித்துக்கொள்ளும் சூழ்ச்சியை சில முத லாளிகள் பயன்படுத்திக்கொள்கிறார்கள். அவர்கள் எங்களுக்கு சம்பந்தப்பட்ட தொழி லாளர்கள் அல்ல, காண்ட்ராக்ட் ஏஜெண்டு களுக்கு சம்பந்தப்பட்டவர்கள் என்று சொல்லி, தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய அடிப்படை உரிமைகளைக் கூட அமல்படுத்தாது தப்பித்துக் கொள்கிறார்கள்.

பிகல்வாரா துக்த் உபடக் சகாகாரிக் லிமிடெட்(க்ஷடமைடறயசய னுரபனா ருவயீயனயம ளுயாயமயசமை டுவன) நிறுவனத்துக்கு எதிராக உச்சநீதிமன்றம் இந்தத் தீர்ப்பு வழங்கியது”.

அந்தத் தொழிலாளர்களை வேலையில் அமர்த்த உத்தரவு போட்டது தனியார் நிறுவ னம்தான், ஒரு தொழிலாளிக்கு ஒரு நாள் கூலி ரூ.70 என தன் கணக்கில் காட்டியதும் இந்தத் தனியார் நிறுவனம்தான். ஆனால் இந்த ஊதியம், ஒப்பந்தத் ஏஜெண்டிடம் தரப் பட்டு, ஏஜெண்ட் மூலம் தொழிலாளிக்கு ரூ.56 என ஒருநாள் ஊதியமாக குறைத்து வழங்கப் பட்டுள்ளது.

இந்த உண்மைகளை புறந்தள்ளி விட்டு, அவர்கள் ஒப்பந்தத் தொழிலாளர்கள் தான்- என்ற வார்த்தைக்குள் புகுந்து கொண்டு கொள்ளை லாபம் அடிக்கும் தொழிலாளர் விரோதப் போக்கை எதிர்த்து தொழில் நீதிமன் றமும், ராஜஸ்தான் நீதிமன்றமும் வழங்கிய தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.

அவர்கள் தினக்கூலிகள், தற்காலிக ஊழியர்கள், அவ்வப்போது வேலைக்காகத் தேவைப்படுகிறவர்கள் என்று சொல்லியும் முதலாளிகள் தப்பித்துக் கொள்கிறார்கள். ஆனால் அந்தத் தொழிலாளர்கள் வேலை செய்வதோ அந்த முதலாளிகளின் தொழிற் கூடத்தில்தான். ஆகவே, இந்த நீதிமன்ற அமர்வு வெளிப்படையாக, உறுதியாக ஒன் றை சொல்ல விரும்புவது, இனி உச்சநீதி மன்றம் இதுபோன்ற தொழிலாளர் விரோத செயல்பாடுகளுக்கு ஆதரவு தராது.

உலகமய வளர்ச்சி, தாராளமய வளர்ச்சி என்ற பெயரால் தொழிலாளர்களைச் சுரண் டும் மனித வதையை இனி ஏற்க இயலாது என்றும் உச்சநீதிமன்றம் வன்மையாக தன் கருத்தை பதிவு செய்கிறது.

உச்சநீதிமன்ற (அண்மையில் ஒய்வு பெற்று விட்ட) நீதிபதிகளான மார்கண்டேய கட்ஜு, சி.கே.பிரசாத் ஆகியோரை இந்த துணிகர மான தீர்ப்பிற்காக பாராட்டியே ஆக வேண்டும்.

இந்தப் புதிய பொருளாதாரக் கொள்கை யை தொழிலாளர்களுக்கு எதிராக அமல்படுத் தும், மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இந்தத் தீர்ப்பு ஒரு சாட்டை அடி என்று சொல்லியே ஆக வேண்டும்.

தே.இலட்சுமணன்.

ஞாயிறு, 30 அக்டோபர், 2011

விவசாயத்தின் வேர்களை அழிக்கும் அரசு!




விவசாயிகள் அதிக அளவு பயன்படுத்தும் பொட்டாஷ் உரத்தின் விலை கடந்த 6 மாதங்களாக கடு மையாக அதிகரித்து வருகிறது. “வல்லான் வகுத் ததே வாய்க்கால்” என்பது போல் உர நிறுவனங்கள் வைத்ததே விலையாக இருக்கிறது. நாள் தோறும் உரத்தின் விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது.

உழுதவன் கணக்கு பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது, என்பதுதான் இன்றைய விவசாயி களின் வாழ்நிலையாக நீடிக்கிறது. இதில் மென் மேலும் உர விலை உயர்வு என்றால் விவசாயம் என்னவாகும்? விவசாயிகளின் நிலை என்ன வாகும்? என்பதை பற்றியெல்லாம் மத்திய அரசு யோசித்து பார்க்கக் கூட தயாராக இல்லை. அதற்கு மாறாக, மிகப்பெரிய உர நிறுவனங்களின் லாபம் மட்டும் எந்த விதத்திலும் குறைந்திடக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்து வருகிறது.

பெட்ரோல், டீசல் விலையை பெட்ரோலிய நிறுவனங்களே தீர்மானித்துக் கொள்ளலாம் என்று மத்திய அரசு ஒதுங்கி நிற்கிறது. அதே போன்று தற்போது உரத்தின் விலையையும் உர நிறுவனங்களே தீர்மானித்துக் கொள்ளலாம் என மத்திய அரசு கட்டவிழ்த்து விட்டிருக்கிறது. இதன் விளைவு கடந்த 5 மாதங்களுக்கு முன்பு 50 கிலோ பொட்டாஷின் விலை ரூ.232 ஆக இருந்தது. ஆனால் இன்று அதே 50 கிலோ பொட் டாஷின் விலை ரூ.656 என விலை உயர்வு விண் ணில் றெக்கை கட்டிப் பறக்கிறது.

உரத்தை தயாரிக்கும் உர நிறுவனங்கள் தாங்கள் உற்பத்தி செய்யும் பொருளுக்கு தாங் களே விலையை நிர்ணயம் செய்து கொள்ளலாம். ஆனால் இந்திய நாட்டின் முதுகெலும்பாக இருக் கும் விவசாயிகள், தாங்கள் உற்பத்தி செய்யும் விளை பொருளுக்கு விலையை தீர்மானிக்க முடியாது. இது எந்த வகையில் நியாயமாக இருக்க முடியும்? அதுமட்டுமல்ல, உரவிலை எவ்வளவு கூடினாலும், விளை பொருட்களின் உற்பத்திச் செலவு எவ்வளவு கூடினாலும் அரசு நிர்ணயிக்கும் விலைக்கோ அல்லது மொத்த வியாபாரிகள் நிர்ணயிக்கும் விலைக்கோதான் விவசாய உற்பத்திப் பொருட்களை விற்றாக வேண்டும். இதுதான் இன்றும் எழுதப்படாத சட்டமாக இருந்து வருகிறது. இதனால் காலம் காலமாக விவசாயம் செய்து வந்த பலரும் கட்டு படியாகாத விவசாயத்தை விட்டு எட்டி நிற்கின் றனர். மாற்றுத் தொழிலை தேடி நகர்ப்புறங் களுக்கு இடம்பெயர்ந்தும் வருகின்றனர்.

ஆனால் விவசாயிகளைப் பற்றியும் விவசா யத்தை பற்றியும் கவலை கொள்ள மத்திய காங்கி ரஸ், திமுக அரசு தயாராக இல்லை. இப்போது கூட உரிய காலத்தில் பொட்டாஷ் இறக்குமதி ஒப்பந்தத்தை புதுப்பித்திருந்தால் இந்த அளவு விலை உயர்வு ஏற்பட்டிருக்காது. 2011 ம் ஆண்டு மார்ச் மாதம் புதுப்பிக்க வேண்டிய பொட்டாஷ் இறக்குமதி ஒப்பந்தம் இன்றுவரை புதுப்பிக்கப் படவில்லை. மாற்று ஏற்பாடும் செய்யவில்லை. திமுகவை சேர்ந்த மு.க.அழகிரியே மத்தியில் உரத்துறை அமைச்சராக இருக்கிறார். விவசாயி களின் மனக்குமுறலுக்கும் வேதனைக்கும் காங் கிரசுடன் சேர்ந்து திமுகவும் பொறுப்பேற்க வேண்டும்.

இனியாவது உரவிலையை தீர்மானிக்கும் பொறுப்பை மீண்டும் அரசே ஏற்க வேண்டும். விவசாய இடுபொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்தி, விளைபொருட்களுக்கு நியாய மான விலை கிடைக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும். விவசாயிகளை பாதுகாப்பதாக வாய்ப்பந்தல் போடுவதால் மட்டும் பயன்ஏற்படாது.

நன்றி :தலையங்கம் தீக்கதிர்

வியாழன், 27 அக்டோபர், 2011

முன்னூறு ராமாயணங்களும் இந்து பயங்கரவாதிகளும்

டெல்லி பல்கலைக்கழகம் இப்போது சிலரின் மகிழ்ச்சிக்கும் பலரின் கோபத்திற்கும் உள்ளாகி உள்ளது. மீண்டும் ஓருமுறை இந்துவம் தனதுகொடுர முகத்தை காட்டி சிரிக்கிறது. அதை எதிர்த்து முற்போக்கு சக்திகள் களம் இறங்கி உள்ளன.


டெல்லி பல்கலைக்கழகம் வரலாறு பாட புத்தகத்தில் இருந்து ஒரு கட்டுரையை நீக்கியிருப்பது பெரும் சர்ச்சையை தோற்றுவித்துள்ளது. 

மறைந்த மொழியியல் மேதை ஏ.கே.ராமானுஜம் எழுதிய ‘முன்னூறு ராமாயணங்கள்: மொழிபெயர்ப்பு குறித்த ஐந்து உதாரணங்களும் மூன்று சிந்தனைகளும்’ என்ற கட்டுரைதான் கல்விக்குழுவால்  தடைசெய்யப்பட்டுள்ளது. 

அந்த கட்டுரையை எதிர்த்து 2008ல் பாரதிய ஜனதாவின் மாணவர் அமைப்பு ரகளையில் ஈடுபட்டது. கட்டுரை இந்துக்களின் மனதை புண்படுத்துவதாக வழக்கு தொடரப்பட்டது.  நிபுணர் குழு அமைத்து கட்டுரையை ஆய்வு செய்து, கல்விக்குழுவிடம் அறிக்கை அளித்து, அதன் பேரில் பல்கலைக்கழகம் தீர்மானிக்க சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தியது.


நிபுணர் குழுவில் மூவர் ‘கட்டுரை இருக்கட்டும்’ என்றும், ஒருவர் மட்டும் ‘நீக்கலாம்’ என்றும் பரிந்துரை செய்தனர். துணைவேந்தர் கல்விக்குழுவை கூட்டியபோது  111 உறுப்பினர்கள் கட்டுரையை  நீக்கவும், 9 பேர் எதிர்த்தும் வாக்களித்தனர். பெரும்பான்மை ஆதரவு என்ற அடிப்படையில் அந்த முடிவை குறைகூற முடியாது. எனினும், இந்து மதவாதிகளின் மிரட்டலுக்கு  அடிபணிந்து விட்டதாக  கல்வியாளர்கள் குமுறுகின்றனர். வெளிப்படையாக பலத்தை காட்டி மிரட்டும் கூட்டம் சிறிதாக இருந்தாலும், அதன் கோரிக்கை அநியாயமாக இருந்தாலும், எந்த எதிர்ப்பும் காட்டாமல் சமரசம் செய்துகொள்வது ஃபேஷனாகி வருகிறது. ராமாயணம் ஒருவர் மட்டுமே எழுதிய நூல் அல்ல. எல்லா கவிஞர்களும் ஒரே மாதிரியாக ராமாயண கதை சொல்லவில்லை. அவரவர் கற்பனைக்கும் கலாசாரத்துக்கும் காலத்துக்கும் ஏற்ப பாத்தி ரங்களையும்  வார்த்தைகளையும் மாற்றியிருக்கிறார்கள். வால்மீகிக்கும் கம்பனுக்கும் நிரம்ப வேறுபாடுகள். ஒரே திருக்குறளுக்கே எண்ணற்ற உரைகள். அதுபோல இந்தியாவின் புராண காவியத்துக்கும்  அநேக முகங்கள். அதை வரலாற்று தொகுப்பாக வழங்குவது அறிவுசார் ஆராய்ச்சி. மதத்துக்கு அங்கே எந்த வேலையும் இல்லை. 



மதம் சம்பந்தமான பிரச்னைகளில்கூட நான் சொல்வதுதான் சரியானது என அறிவிக்கும் அதிகாரம் இந்து மதத்தில் எந்த தனி மனிதருக்கும் அமைப்புக்கும் கிடையாது. இந்த நிலையில், மாணவர்களி டம் சுதந்திரமான சிந்தனையை தூண்ட வேண்டிய கல்வி நிலையங்கள் ஒதுங்கிப்போக நினைப்பது ஆரோக்யமான போக்கல்ல.

எங்களின் சிந்தனைச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையை அனுமதியோம் என்ற முழக்கத்துடன் தில்லிப் பல்கலைக் கழக மாணவர்களும் பேராசிரியர்களும் மாபெரும் அறிஞரும் கவிஞருமான ஏ.கே.ராமானுஜம் ராமாயணம் குறித்து எழுதிய உன்னதக் கட்டுரையை மீண்டும் பல்கலைக் கழகத்தின் பாடத்திட்டத்தில் சேர்த்திட வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் மேற் கொண்டனர். 

இந்த ஆர்ப்பாட்டம் தில்லிப் பல் கலைக்கழகத்தின் துணை வேந்தர் அலுவலகத்தின் முன்பு திங்களன்று நடைபெற்றது. போராட்டத்தில் ஈடு பட்ட வரலாற்றுப் பேராசிரியர் டாக் டர் சுனில் குமார், ‘‘பல்கலைக் கழகத் தின் செயல் எங்கள் படிப்புச் சுதந்தி ரம், எழுத்துச் சுதந்திரம், சிந்தனைச் சுதந்திரத்தில் தலையிடும் செயலா கும்’’ என்றும் ‘‘எங்களுக்குப் பிரிய மானதை நாங்கள் தக்க வைத்துக் கொள்வதற்காக இப்போராட் டத்தை மேற்கொண்டிருக்கிறோம்’’ என்றும் கூறினார். ‘நீங்கள் விரும்புகிறீர்களோ இல்லையோ அல்லது உங்களுக்கு சவுகரியமாக இருக்கிறதோ இல்லையோ ராமாயணத்திற்கு பல்வேறு விதமான மொழிகளில் பல்வேறுவிதமான மொழிபெயர்ப்புகள் இருக்கின்றன என்னும் உண்மையை மாற்றிட முடியாது.


 ராமானுஜத்தின் கட்டுரை மிக நுணுக்கமாக எழுதப்பட்ட அற்புதமான படைப்பு. அதனை கணிதப் பேராசிரியரான நமது துணை வேந்தர் ரத்து செய்திடத் தீர்மானித்திருக்கிறார். இது அறிவுக்கு விரோதமான , அறிவாற்றலுக்கு விரோதமான மற்றும் ஜனநாயகத்திற்கு விரோதமான செயலாகும்’’ என்று ராம்ஜாஸ் கல்லூரி வரலாற்றுப் பேராசிரியர் முகுல் மங்காலிக் கூறினார். முன்னதாக பேரணியில் வந்த மாணவர்களும் பேராசிரியர்களும் தில்லிப் பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கிடும் ராம்ஜாஸ், கிரோரிமால், செயின்ட் ஸ்டீபன்ஸ் மற்றும் இந்து கல்லூரிகள் வழியாக பேரணியாக வந்து நிறைவாக துணை வேந்தரின் அலுவலகத்தின் முன்பு சங்கமித்தனர்.

 பேரணியில் வந்த இளம் வயது மாணவர்கள் மட்டும் அல்ல, வய தான பேராசிரியர்கள் கூட, ‘இன்குலாப் ஜிந்தாபாத்’’ (புரட்சி ஓங்குக) என்று முழக்கமிட்ட வண்ணம் வந்தது குறிப்பிடத்தக்கது.



நன்றி : தீக்கதீர், தினகரன்,தி. இந்து நாளேடு