வியாழன், 28 ஏப்ரல், 2011

கோயபல்ஸ் பிரச்சாரம் எடுபடாது


மேற்கு வங்கத்தில் 34 ஆண்டுகால இடதுமுன்னணியின் ஆட்சிக்காலத்தில் எதுவுமே செய்யப்படவில்லை என்று தடாலடியாகப் பேசிவருகிறார் மம்தா பானர்ஜி, ஆமாம் ஆமாம் என்று உரத்த குரலில் முழங்குகிறார் சோனியாகாந்தி, ஏழை மக்களைப்பற்றி இடது முன்னணி கவலைப்படவே இல்லை என்கிறார் “இளவரசர்” ராகுல் காந்தி. இவர்களின் இந்த பேச்சுக்கள் மேற்கு வங்க மக்களையே அவமதிப்பதுபோல் இருக்கின்றன என்று சரியாகவே வருணித்துள்ளார் சோமநாத் சட்டர்ஜி, இடதுமுன்னணி எதையுமே செய்யவில்லை என்றால் மேற்கு வங்க மக்கள் ஏழுதேர்தல்களில் தொடர்ந்து அதற்கு வாக்களித்திருப்பார்களா என்ற கேள்வியை அவர் எழுப்பியுள்ளார். புளு கினாலும் பொருத்தமாகப் புளுக வேண்டும் என்பார்கள்.

கடந்த 34 ஆண்டுகளாக சிறப்பான முறையில் சாதனைகளை நிகழ்த்தியுள்ள மேற்கு வங்க இடது முன் னணியின் ஆட்சியை நேரில் கண்டுவரும் வங்கமக்கள், இந்த கோயபல்ஸ் பிரச்சாரத்திற்கு பலியாகிவிடுவார்கள், என்று மம்தா கும்பல் நினைத்தால், அது பகற் கனவாகவே முடியும்.

30 ஆண்டுகளாக எகிப்து நாட்டை ஆட்சி புரிந்த முபாரக்கின் ஆட்சியை மாற்றமுடியும் என்றால், மேற்கு வங்க ஆட்சியை மாற்ற முடியாதா என்று கேட் கிறார் மம்தா பானர்ஜி. எகிப்து நாட்டில் நடைபெற்று வந்தது ஒரு சர்வாதிகார ஆட்சி. ஆட்சிமாற்றத்துக்கு வாய்ப்பளிக் கும் வகையில் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை இங்கு போல் அங்கெல்லாம் முறை யாகத்தேர்தல்கள் நடத்தப்பட்டது கிடை யாதே. 1977க்குப் பிறகு ஐந்தாண்டுக ளுக்கு ஒருமுறை தேர்தல்களை நடத்தி, மக்களின் கட்டளையைப்பெற்றுத்தானே ஆட்சி பீடத்தில் இடது முன்னணி நீடித்து வருகிறது அப்போதெல்லாம் பல பொய்மூட்டைகளை அவிழ்த்துவிட்டு நீங்கள் செய்த பிரச்சாரங்கள் வங்கமக்கள் மத்தியில் எடுபடவில்லையே. அதை நாடு மறக்கவில்லை. எனவே மாற்றம் வேண் டும் என்று நீங்கள் கூக்குரலிடுவதால் எந்த பயனும் விளையாது, இப்போது இந்த சேர்ந்திசையில் தன்னையும் இணைத் துக் கொண்டுள்ள பிரதமர் மன்மோகன் சிங், ஆட்சி மாற்றத்துக்கான தருணம் வந்துவிட்டது என்கிறார். இடது முன் னணி ஆட்சி அகற்றப்படவேண்டும் என்று கடந்தகாலங்களில் இந்திரா காந்தி பிரச்சாரம் செய்துள்ளார். ராஜீவ்காந்தி பிரச்சாரம் செய்துள்ளார். அப்போதெல் லாம் வராத தருணம் இப்போது வந்துவிட் டதாக மன்மோகன் சிங் கூறுவது ஏன்? இந்தியாவை தனது இளைய பங்காளி யாக மாற்றுவதற்கு அமெரிக்கா தொடர்ந்து முயற்சித்து வருகிறது. ஆனால், அதற்கு இடதுசாரிகளின் அரசியல் வலிமை தடையாக இருக்கிறது. எனவே அவர்கள் பலவீனப்படுத்தப்படவேண்டும். தோற் கடிக்கப்படவேண்டும்.

அதே நேரத்தில் மம்தா பானர்ஜி மேற்குவங்க முதல்வரா னால்,அவர் நம்முடன் நன்கு ஒத்துழைப்பார் என அமெரிக்கா கருதிவருவதை விக்கிலீக்ஸ் இணையதளம் அம்பலப்படுத்தியுள்ளது. அமெரிக்கா கூறுவதை வேத வாக்காக கருதி செயல்படக்கூடிய மன் மோகன்சிங், அவர்கள் விருப்பத்தை மன தில் வைத்துக்கொண்டுதான் ஆட்சிமாற் றத்துக்கான தருணம் வந்து விட்டது என்று கூறுகிறாரோ?

சாதாரண மக்களுடன் குறிப்பாக இளைஞர்களுடனான தொடர்பை இடது முன்னணி அரசாங்கம் இழந்துவிட்டது என்கிறார் பிரதமர் மன்மோகன் சிங். அப் படியானால் கடந்த ஆண்டில் பெரும் பாலான கல்லூரிகளில் நடைபெற்ற மாணவர் சங்க தேர்தல்களில் இந்திய மாணவர் சங்கம் அமோக வெற்றிபெற்றது எப்படி, அவர்களுடன் நல்ல புரிதல் மார்க்சிஸ்ட் கட்சிக்கு இருப்பதனால் தானே இந்த வெற்றி சாத்தியமாயிற்று. முதலீடு, விவசாயம், கல்வி போன்றவற் றில் உறுதியான கொள்கை எதுவும் இடது முன்னணிக்கு இல்லையாம்! கூறுகிறார் மன்மோகன் சிங்.

கடந்த சில ஆண்டுகளில் தொழில் முனைவோருடன் மேற்கு வங்க அரசு செய்து கொண்ட ஒப்பந்தங்களின் எண் ணிக்கை 1362, இதன்முலம் பெறப்பட் டுள்ள முதலீடுகளின் அளவு 237000 கோடி. குஜராத், மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக அதிக முதலீடுகளை ஈர்த்துள்ள மாநிலம் மேற்குவங்கம். இரும்பு, எக்கு, உணவுப் பதப்படுத்தும் தொழில், தகவல் தொழில்நுட்பம், சுற்று லாத்துறை போன்றவற்றில் அம்மாநிலத் திற்கு கடந்த சில ஆண்டுகளில் பல்லா யிரம் கோடி ரூபாய் புதிய முதலீடு கிடைத் துள்ளது. மின்வெட்டு என்ற ஒன்று இல்லாத மாநிலம் மேற்கு வங்கம். 1977ல் ஆட்சிப்பொறுப்பை இடது முன்னணி ஏற்றபோது கொல்கத்தா நகரம் இருண்ட நகரம் என்ற பெயரைப் பெற்றிருந்தது. மின் சார உற்பத்தி அதிகரிப்புக்காக ஏராள மான திட்டங்கள் வகுக்கப்பட்டு, போர்க் கால அடிப்படையில் இடது முன்னணி அரசால் நிறைவேற்றப்பட்டதால்தான் இன்று மின்சாரத்தை மற்ற மாநிலங் களுக்கு வழங்கக்கூடிய மாநிலமாக மேற்கு வங்கம் உயர்ந்துள்ளது. மின் வெட்டு இல்லாத மாநிலமாக தமிழகம் என்று மாறும் என ஏங்கி வரும் தமிழக மக்களால் மேற்கு வங்க அரசின் மகத் தான சாதனையை நன்கு புரிந்துகொள்ள முடியும்.

நிலச்சீர்திருத்தங்களின் மூலம் 30 லட்சம் நிலமற்ற விவசாயக் குடும்பங் களுக்கு அளிக்கப்பட்ட நிலம் 13 லட்சம் ஏக்கர், 15 லட்சம் குத்தகைதாரர்களின் உரிமை பாதுகாக்கப்பட்டுள்ளது. சரியான விவசாயக்கொள்கை கடைப்பிடிக்கப் பட்டதால்தான் உணவுதானிய உற்பத்தி யில் தன்னிறைவை எட்டிமேற்கு வங்கம் சாதனை நிகழ்த்தியுள்ளது. காய்கறிகள் மற்றும் பழங்களின் உற்பத்தியில் முதலி டத்தில் உள்ள மாநிலம் மேற்கு வங்கம். சிறு தொழில் மற்றும் கிராமத் தொழில் களை வளர்த்துள்ளதிலும் முதலிடத்தில் உள்ள மாநிலம் மேற்கு வங்கம்.

பொது சுகாதாரத்திலும் பெரும் சாதனைகள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன. அம் மாநிலத்தின் 70 சதவீதம் நோயாளிகள் பொதுமருத்துவமனைகளில்தான் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆண்கள் மற்றும் பெண்களின் சராசரி ஆயுட்காலம் தேசிய சராசரியை விடக் கூடுதலாக உயர்ந்துள்ளது. குழந்தை இறப்பு விகிதம் 1981ல் 1000க்கு 62 ஆக இருந்தது. 2008ல் 1000க்கு 35 ஆகக் குறைந்துள்ளது.

ஆரம்பப் பள்ளிகளில் சேரத் தகுதி படைத்த மாணவர்களில் 99.06 சதவீதம் பேர் பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

கல்வி- வேலைவாய்ப்புகளில் முஸ்லிம் சிறுபான்மையினர் பின்தங்கிய நிலையில் இருப்பதைக் கருத்தில் கொண்டு 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ள முதல் மாநிலம் மேற்கு வங்கம், முஸ்லிம் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகைக்காக தனி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதன் மூலம் பல ஆயிரம் மாணவர்கள் பயன் பெற்றுள்ளனர்.

இவ்வாறு மேற்கு வங்க இடது முன் னணியின் சாதனைகளைக் கூறிக் கொண்டே போகலாம். ஐந்தாண்டுகாலம் ஆட்சியில் இருந்தால் ஏற்படும் அதிருப்தி காரணமாக அடுத்த தேர்தலில் ஆட்சி யை விட்டு இறக்கப்படுவதே காங்கிரஸ், பாஜக மற்றும் திமுக போன்ற கட்சிகள் ஆளும் மாநிலங்களின் அனுபவமாக இருந்து வந்துள்ளது. மக்களின் வாழ்க்கை யில் மாற்றத்தை ஏற்படுத்தும் பல சாத னைகளைப் புரிந்து வந்துள்ளதால்தான் மேற்கு வங்க இடது முன்னணியை கடந்த 34 ஆண்டுகளாக எதிரிகளால் ஆட்டவோ அசைக்கவோ முடியவில்லை.

இடது முன்னணி அரசை வங்கக்கடலில் வீசுவோம் என்று முந்தையகாலங்களில் முன்னாள் மத்திய ரயில்வே அமைச்சர் கனிகான் சவுத்ரி முழங்கிவந்தார். அவரது ஆயுட்காலம் முழுவதிலும் அவரால் அதனை செய்யமுடியவில்லை. கடந்த தேர்தலின்போதே இதேபோன்ற முழக் கத்துடன் தேர்தலை சந்தித்த மம்தா பானர்ஜி தோல்வியைத்தழுவினார். இடது முன்னணியை ஆட்சியை விட்டு எப்படியாவது இறக்கிவிடவேண்டும், எத்த கைய தில்லுமுல்லையும் செய்தாவது மேற்கு வங்க முதல்வராகிவிடவேண்டும். இதற்காக நக்சலைட்டுகள் உள்ளிட்ட எவரை வேண்டுமானாலும் பயன்படுத் திக் கொள்ளலாம் என்பதை தவிர, வேறு கொள்கையோ, கோட்பாடோ இல்லாத மம்தா, மேற்கு வங்கத்தில் ஆட்டம் போட்டு வருகிறார். மம்தாவின் துணை இல்லை என்றால் ஏற்கெனவே கிடைத்த சில எம்எல்ஏ பதவிகள் கூட இல்லாமல் போய்விடுமே என்ற அச்சத்தால் காங் கிரஸ் கட்சி வெட்கமின்றி மம்தாவின் அரா ஜகத்துக்கு உடந்தையாக இருந்து வரு கிறது. அறிவாற்றலிலும் அரசியல் உணர் விலும் முன்னணியில் உள்ள மேற்கு வங்க மக்கள் இந்த சந்தர்ப்பவாதக் கூட் டணிக்கு நல்ல பாடத்தைக் கற்பிப்பார்கள் என்பது உறுதி.

கி.இலக்குவன்

கருத்துகள் இல்லை: