ஞாயிறு, 31 ஜூலை, 2011

தனிநாடு அல்ல; சுயாட்சி மாநிலம் கோருகிறோம் சுரேஷ் பிரேமச்சந்திரன் பேச்சு

இலங்கையில் தமிழினம் அழிக்கப்படுவதையும், அவர் களின் பண்பாடு சிதைக்கப்படுவதையும், உரிமைகள் நசுக் கப்படுவதையும் சர்வதேச சமூகம் ஏற்றுக் கொள்ளப் போகிறதா? இந்தியா ஏற்கப்போகிறதா? ஜனநாயகத்தை விரும்பு வோர் ஏற்கப்போகிறார்களா? என்ற கேள்வியை இந்த மாநாட் டின் மூலம் முன்வைக்கிறோம்.

நாங்கள் தமிழ் ஈழம் கேட்க வில்லை, தனி நாடு கேட்கவில்லை, ஆயிரக்கணக்கானவர் களை இழந்த பிறகும், வாழ்வுரிமைகளை பறித்த பிறகும், சிங்கள மக்களோடு இணைந்து வாழவே நாங்கள் விரும்பு கிறோம். ஆனால், அவர்கள் அதை ஏற்றுக் கொள்ள தயா ராக இருக்கிறார்களா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. தமிழ் மக்கள் தங்களுக்கான உரிமையைத்தான் கேட்கிறார் கள். தாங்கள் வாழும் பகுதியை எப்படி மேம்படுத்த வேண்டும் என்பதை நாங்கள் தீர்மானித்துக் கொள்கிறோம் என்றுதான் அவர்கள் சொல்கிறார்கள்.

 எங்களின் மொழியை, எங்களின் வாழ்வை, எங்களின் பண்பாட்டை எப்படி வளர்க்க முடியும் என் பது எங்களுக்குத் தெரியும் என்றுதான் கூறுகிறார்கள். 1987ஆம் ஆண்டு ஏற்பட்ட இந்தியா - இலங்கை ஒப்பந்தத் தின்படி, இலங்கை அரசியல் சட்டத்தில் 13வது திருத்தம் கொண்டுவரப்படும் என்று கூறப்பட்டது. இதுவரை அது நடை பெறவில்லை. அடுத்தடுத்து 5முறை செய்யப்பட்ட வேறு திருத் தங்களால் அந்த ஒப்பந்தமும் நீர்த்துப்போய்விட்டது.

இந்த நிலையில் இந்தியாவும், சீனாவும் இலங்கை அரசுக்கு மாறிமாறி ஆதரவு தருகின்றன. இந்த விஷயத்தில் இந்தியாவுக்கு உள்ள அரசியல் நிர்பந்தமும், பொருளாதார நிர்பந்தமும் எங்களுக்குப் புரிகிறது.

ஆனால், இந்தியாவுக்கு நெருக்கடி ஏற்படும் போதெல்லாம் ஆதரவாக இருப்பவர்கள் தமிழர்கள் மட்டும்தான் என்பதை இந்திய அரசு உணர வேண்டும். இப்போதும் இந்தியாவைத்தான் நாங்கள் நம்பி யிருக்கிறோம். மாநிலங்களின் ஒன்றியம் என்ற சமஷ்டி முறையை அமல்படுத்தி வடகிழக்கு மாகாணங்களுக்கு சுயாட்சி உரிமை அளிக்க வேண்டும் என்றுதான் கோருகிறோம். இதற் காக சர்வ கட்சிக் குழு ஒன்றையும், நிபுணர் குழு ஒன்றையும் இலங்கை அரசு நியமித்தது. அந்தக் குழுக்கள் அளித்த பரிந் துரை நல்லதாகவே இருந்தது. இதனடிப்படையில் பேச்சு வார்த்தையை துவக்கலாம் என்று கூறியபோது, மீண்டும் நாடாளுமன்ற குழு ஒன்றை அமைப்பதாக இலங்கை அரசு அறி வித்துவிட்டது. இது பிரச்சனைக்கு தீர்வுகாணாமல் தாம தப்படுத்தும் யுக்தியே தவிர வேறில்லை.

இலங்கைத் தமிழர்கள் பிரச்சனைக்கு இந்திய அரசு தீர்வுகாண வலியுறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில் நம்பிக்கை யோடு முன்வைக்கிறோம். ஏனென்றால் தில்லிவரை இந்தக் கோரிக்கையை ஒலிக்கச்செய்யும் வலுவான இயக்கம் இது என்பது எங்களின் கருத்தாகும்.

கருத்துகள் இல்லை: