ஞாயிறு, 9 அக்டோபர், 2011

அமெ. தொழிலாளி வர்க்கத்தால் நொறுங்கி விழும் அமெரிக்கா

உலக முதலாளித்துவத்தின் சூதாட்டமைய மாக திகழும் அமெரிக்காவின் வால்ஸ்டிரீட் பகு தியை கைப்பற்றுவோம் என்ற முழக்கத் துடன் நடைபெற்று வரும் போராட்டத்திற்கு எண்ணற்ற தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.

ஏழு லட்சம் உறுப்பினர்களைக் கொண்ட அமெரிக்கத் தகவல் தொடர்பு ஊழியர்கள் சங்கம் தனது முழு ஆதரவை அளித்திருக் கிறது. அனைத்து அமெரிக்கர்களிடம் இருக்கும் கோபத்தை இந்தப் போராட்டம் பிரதிபலிக்கிறது. குறிப்பாக, வால் ஸ்டிரீட்டால் பின்னுக்குத் தள்ளப்பட்ட மக்களுக்கான கோரிக்கைகளை உள்ளடக்கியதாக இந்தப் போராட்டம் அமைந் திருக்கிறது என்று அச்சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் போக்குவரத்து ஊழியர் கள் சங்கம் ஒன்று ஆதரவு தெரிவித்துள்ளது. தங்கள் சங்கத்தைச் சேர்ந்த 38 ஆயிரம் பேரும் மக்களின் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவாகக் களம் இறங்குவார்கள் என்று சங்கத்தின் தலைமை அறிவித்துள்ளது. போராட்டக்காரர் களை கைது செய்து அழைத்துச் செல்லும் வாகனங்களை ஓட்ட மறுக்கும் ஓட்டுநர்களை நிர்ப்பந்திக்கக்கூடாது என்றும் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
பல்வேறு ஆசிரியர்கள் சங்கங்கள் ஒன்றி ணைந்து உருவாக்கியுள்ள ஒன்றுபட்ட ஆசிரி யர்கள் சம்மேளனமும் விரைவில் போராட்டத் திற்கு ஆதரவாக களமிறங்கப் போவதாக அறிவித் திருக்கிறது. இதில் லட்சத்திற்கும் மேற்பட் டோர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். போராட்டத்திற்கு ஆதரவான ஊர்வலம் ஒன் றை நடத்தி தங்கள் ஆதரவைத் தெரிவிக்கப் போகிறார்கள். பெரு நிறுவனங்களின் பேராசை யை விட மனிதர்களின் தேவைக்கு முக்கியத்துவம் தாருங்கள் என்று தேசிய ஒன்றுபட்ட செவிலி யர்கள் சங்கம் அறைகூவல் விடுத் திருக்கிறது.

போராட்டம் தீவிரம்

ஆதரவு அலை பெருகியுள்ள நிலையில், போராட்டக்களத்தில் இருப்பவர்களின் உறுதி அதிகரித்திருக்கிறது. அமெரிக்க நிர்வாகத்தின் அடக்குமுறையை மீறி தங்கள் போராட்டம் தொடரும் என்று அறிவித்ததோடு, பல மாநிலங் களுக்கும் போராட்டத்தை விரிவுபடுத்தியிருக் கிறார்கள். இதுவரை 700 பேருக்கு மேல் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அதனால் போராட் டம் குலையும் என்று நிர்வாகம் எதிர்பார்த்தால், ஏமாந்து போய்விடுவார்கள் என்பது போராட்டம் நடத்துபவர்களின் கருத்தாகும்

வேலையின்மை, சமூக அசமத்துவம், வீழும் வாழ்க்கை தரம் உள்ளிட்ட காரணங்களுக்காக நியூயார்க்கில் கடந்த மாதம் ஆரம்பித்த போராட்டம் இப்போது அமெரிக்காவின் 900க்கு மேற்பட்ட நகரங்களுக்குப் பரவியுள்ளது. உலகின் பல்வேறு நாடுகளில் அமெரிக்க மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் ஆர்ப்பாட்டங்களும் நடக்கவிருக்கின்றன. ஆடட்டும் ஏகாதிபத்தியக் கோட்டை!





போராடும் அமெரிக்க மக்களுடன் ஒற்றுமை காப்போம். ஏகாதிபத்திய எதிர்பியக்கங்களை இந்தியாவிலும் வளர்த்தெடுப்போம். முதலாளித்துவ இந்திய அரசு தெற்காசிய பிராந்தியத்தில் மேற்கொள்ளும் மேலாதிக்க நடவடிக்கைகளையும் பிராந்திய வல்லரசாக உருப்பெற்றிடும் நோக்கோடு தனது செல்வாக்கை நிலைநாட்டிட ராஜீய மற்றும் ராணுவ ரீதியாக மேற்கொள்ளும் திட்டங்களையும் முறியடிக்கும் வகையில் உழைக்கும் மக்களின் போராட்ட இயக்கங்களை வளர்த்தெடுப்போம்.



Watch live streaming video from globalrevolution at livestream.com

கருத்துகள் இல்லை: