குஜராத் மாநில மோடி அரசாங்கத்திற்கு எதிரான என் போராட்டம் இப்போதுதான் தொடங்கி இருக்கிறது, இது தொடரும் என்று குஜராத் மாநில அரசால் கைது செய்யப் பட்டு சிறையில் அடைக்கப் பட்டிருந்த ஐபிஎஸ் அதிகாரி யான சஞ்சீவ் பட், திங்களன்று பிணையில் (ஜாமீனில்) வெளி வந்தபின் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
குஜராத் மாநில மோடி அர சாங்கத்திற்கு எதிராகக் கருத் துக்கள் கூறியதை அடுத்து ஐபிஎஸ் அதிகாரியான சஞ்சீவ் பட், செப்டம்பர் 30 அன்று கைது செய்யப்பட்டார். குஜராத் மாநிலம்,மெகானிநகர் காவல் நிலையத்தைச் சேர்ந்த காவ லர் கே.டி.பந்த் என்பவர், கட் லோடியா காவல்நிலையத்தில் சஞ்சீவ் பட்டிற்கு எதிராக முறையீடு பதிவு செய்ததை அடுத்து சஞ்சீவ் பட் இவ்வாறு கைது செய்யப்பட்டார். மேற் படி காவலர் கே.டி.பந்த், உச்ச நீதிமன்றம் அமைத்துள்ள விசா ரணை வழக்குரைஞர் முன்பு, தான் 2002 பிப்ரவரி 27 அன்று முதலமைச்சர் நரேந்திர மோடி ஏற்பாடு செய்த கூட்டத்தில், மோடி, ‘‘முஸ்லிம்களுக்கு எதி ராக இந்துக்கள் கோபத்தை வெளிப்படுத்திட அனுமதிக்கு மாறு’’ காவல்துறையினருக் குக் கட்டளையிட்டதாக, தன் னைப் ‘‘பொய்யாக’’ உறுதி வாக்குமூலம் (அபிடவிட்) தாக்கல் செய்யுமாறு சஞ்சீவ் பட் அச்சுறுத்தினார் என்பதே அந்த முறையீடாகும். இதன் மீதே சஞ்சீவ் பட் கைது செய் யப்பட்டு, சிறையில் அடைக் கப்பட்டார்.
சஞ்சீவ் பட் பிணை விடு தலையை, பல்வேறு மனித உரிமைகள் ஆர்வலர்களும், சமூக அமைப்புகளும், எண் ணற்ற சுயேச்சை அமைப்பு களும் மகிழ்வுடன் வரவேற் றுள்ளன. அவரது இல்லத்தின் முன்பும் நகரின் பல பகுதி களிலும் மகிழ்ச்சியைப் பிரதி பலிக்கும் வகையில் பேரணி- ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.
சிறையிலிருந்து வெளி வந்த சஞ்சீவ் பட், செய்தியா ளர்களிடையே கூறுகையில், தனக்கு முன்னுள்ள மாபெரும் போராட்டத்திற்கு இது ‘‘தொடக் கம்’’ மட்டுமேயாகும் என்றார். மாநிலத்தில் சட்டத்தின் ஆட்சி தொடர்ந்து அமலில் இருந்து வருவது தனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்றார். தான் பிணையில் விடுதலையாகி யிருப்பது, 2002 ஆம் ஆண்டு நடைபெற்ற மதவெறிக் கல வரங்களில் பலியானவர்களின் வெற்றி என்றும் பட் கூறினார்.
தான் சிறையிலிருந்த நாட் களை ‘‘வார ஓய்வு நாட்கள்’’ என்று குறிப்பிட்ட சஞ்சீவ் பட், ‘‘என்னைவிட மாபெரும் லட் சியத்திற்கான என் போராட் டத்தைத் தொடர்ந்து மேற் கொள்வேன்’’ என்றார். தான் கைது செய்யப்பட்டு, நீதிமன் றத்தில் காவல் அடைப்பிற்காக ஆஜர் செய்விக்கப்படுவதற்கு முன்பு குற்றப் பிரிவு காவல் துறையினர் தன்னிடம் நடந்து கொண்டவிதம் குறித்து கருத்து எதுவும் கூற சஞ்சீவ் பட் மறுத்துவிட்டார். இது தொடர் பாக சஞ்சீவ் பட் மனைவி, உள்துறை அமைச்சருக்குக் கடிதம் எழுதியிருப்பது குறிப் பிடத்தக்கது. ‘‘நான் இது தொடர்பாக சரியான நேரத்தில், சரியான மன்றத்தின் முன் மட் டுமே பேசுவேன்’’ என்று சஞ் சீவ் பட் கூறினார்.
மோடி அரசாங்கம் தன்னை சுதந்திரமாக வாழ அனுமதிக் காது என்று தனக்குத் தெரியும் என்று சஞ்சீவ் பட் கூறினார். ‘‘அவர்கள் தங்கள் வேலை யைச் செய்யட்டும், நானும் என் வேலையைச் செய்வேன். அர சாங்கம் அடுத்து என்ன செய்ய இருக்கிறது என்பதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. நான் என் வேலையைச் செய் வேன். அவர்கள், அவர்களது வேலையைச் செய்யட்டும். நான் அவர்களை சும்மா விட்டு விடப் போவதில்லை. அதே போன்று அவர்களும் என்னை சும்மா விட்டுவிட மாட்டார்கள்’’ என்று சஞ்சீவ் பட் கூறினார்.
தான் சிறையில் அடைக் கப்பட்டிருந்த சமயத்தில் தன் பக்கமும் தன் குடும்பத்தார் பக்கமும் உற்ற துணையாக இருந்த அனைவருக்கும் சஞ் சீவ் பட் நன்றி கூறினார். குறிப் பாக தன்னுடன் பணியாற்றும் ஐபிஎஸ் சகாக்களுக்கும், ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கத் திற்கும் நன்றி கூறினார். தான் சிறையிலிருந்த காலத்தில் அவர்கள் தன் இல்லத்திற்கு வந்து தன் மனைவிக்கு ஆறு தல் கூறி தைரியம் அளித்தி ருக்கிறார்கள். ‘‘நான் மேலும் வலுவுடன் வெளியே வந்திருக் கிறேன். என் போராட்டத்தைத் தொடர தயாராகவே இருக்கி றேன்,’’ என்று சஞ்சீவ் பட் கூறினார்.
தனக்கு எதிராக ஒரு காவ லர் கொடுத்த முறையீட்டை, குஜராத் மாநிலத்திற்கு வெளியே உள்ள ஒரு ஏஜென்சி விசா ரணை செய்வதையே தான் விரும்புவதாக பட் தெரிவித் தார். ‘‘அவ்வாறு விசாரிக்கப் படுமானால், இம்மாநிலத்தில் அரசு எந்திரம் எந்த அளவிற்கு துஷ்பிரயோகம் செய்யப்பட்டது என்பதும், வழக்குகளில் சாட் சிகள் மிரட்டப்பட்டார்கள் என் பதும் வெளியாகும்’’ என்றார்.
தன் வீட்டில் காவல்துறை யினர் நடத்திய சோதனை, மோடிக்கும் மாநில அரசாங் கத்திற்கும் எதிராகத் தன் வீட் டிலிருந்த முக்கிய ஆவணங் களை அழிக்கும் நோக்கத் துடனேயே மேற்கொள்ளப்பட் டதாக சஞ்சீவ் பட் குற்றம் சாட்டினார். அதேபோன்று இதே நோக்கத்துடன்தான் தன் தாயாரின் வீட்டிலும் சென்ற ஆண்டு திருடு போனது என் றார்.
சஞ்சீவ் பட் பிணையில் வெளிவந்ததை அடுத்து மகிழ்ச் சியை வெளிப்படுத்திய அவ ரது மனைவி, நாட்டின் நீதித் துறையில் உள்ள தன் நம் பிக்கை மேலும் வலுப்பட்டிருக் கிறது என்றும், ‘‘உண்மை எப் போதும் நிலைக்கும்’’ என்ப தில் தான் எப்போதும் நம் பிக்கை கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக