வியாழன், 27 அக்டோபர், 2011

முன்னூறு ராமாயணங்களும் இந்து பயங்கரவாதிகளும்

டெல்லி பல்கலைக்கழகம் இப்போது சிலரின் மகிழ்ச்சிக்கும் பலரின் கோபத்திற்கும் உள்ளாகி உள்ளது. மீண்டும் ஓருமுறை இந்துவம் தனதுகொடுர முகத்தை காட்டி சிரிக்கிறது. அதை எதிர்த்து முற்போக்கு சக்திகள் களம் இறங்கி உள்ளன.


டெல்லி பல்கலைக்கழகம் வரலாறு பாட புத்தகத்தில் இருந்து ஒரு கட்டுரையை நீக்கியிருப்பது பெரும் சர்ச்சையை தோற்றுவித்துள்ளது. 

மறைந்த மொழியியல் மேதை ஏ.கே.ராமானுஜம் எழுதிய ‘முன்னூறு ராமாயணங்கள்: மொழிபெயர்ப்பு குறித்த ஐந்து உதாரணங்களும் மூன்று சிந்தனைகளும்’ என்ற கட்டுரைதான் கல்விக்குழுவால்  தடைசெய்யப்பட்டுள்ளது. 

அந்த கட்டுரையை எதிர்த்து 2008ல் பாரதிய ஜனதாவின் மாணவர் அமைப்பு ரகளையில் ஈடுபட்டது. கட்டுரை இந்துக்களின் மனதை புண்படுத்துவதாக வழக்கு தொடரப்பட்டது.  நிபுணர் குழு அமைத்து கட்டுரையை ஆய்வு செய்து, கல்விக்குழுவிடம் அறிக்கை அளித்து, அதன் பேரில் பல்கலைக்கழகம் தீர்மானிக்க சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தியது.


நிபுணர் குழுவில் மூவர் ‘கட்டுரை இருக்கட்டும்’ என்றும், ஒருவர் மட்டும் ‘நீக்கலாம்’ என்றும் பரிந்துரை செய்தனர். துணைவேந்தர் கல்விக்குழுவை கூட்டியபோது  111 உறுப்பினர்கள் கட்டுரையை  நீக்கவும், 9 பேர் எதிர்த்தும் வாக்களித்தனர். பெரும்பான்மை ஆதரவு என்ற அடிப்படையில் அந்த முடிவை குறைகூற முடியாது. எனினும், இந்து மதவாதிகளின் மிரட்டலுக்கு  அடிபணிந்து விட்டதாக  கல்வியாளர்கள் குமுறுகின்றனர். வெளிப்படையாக பலத்தை காட்டி மிரட்டும் கூட்டம் சிறிதாக இருந்தாலும், அதன் கோரிக்கை அநியாயமாக இருந்தாலும், எந்த எதிர்ப்பும் காட்டாமல் சமரசம் செய்துகொள்வது ஃபேஷனாகி வருகிறது. ராமாயணம் ஒருவர் மட்டுமே எழுதிய நூல் அல்ல. எல்லா கவிஞர்களும் ஒரே மாதிரியாக ராமாயண கதை சொல்லவில்லை. அவரவர் கற்பனைக்கும் கலாசாரத்துக்கும் காலத்துக்கும் ஏற்ப பாத்தி ரங்களையும்  வார்த்தைகளையும் மாற்றியிருக்கிறார்கள். வால்மீகிக்கும் கம்பனுக்கும் நிரம்ப வேறுபாடுகள். ஒரே திருக்குறளுக்கே எண்ணற்ற உரைகள். அதுபோல இந்தியாவின் புராண காவியத்துக்கும்  அநேக முகங்கள். அதை வரலாற்று தொகுப்பாக வழங்குவது அறிவுசார் ஆராய்ச்சி. மதத்துக்கு அங்கே எந்த வேலையும் இல்லை. 



மதம் சம்பந்தமான பிரச்னைகளில்கூட நான் சொல்வதுதான் சரியானது என அறிவிக்கும் அதிகாரம் இந்து மதத்தில் எந்த தனி மனிதருக்கும் அமைப்புக்கும் கிடையாது. இந்த நிலையில், மாணவர்களி டம் சுதந்திரமான சிந்தனையை தூண்ட வேண்டிய கல்வி நிலையங்கள் ஒதுங்கிப்போக நினைப்பது ஆரோக்யமான போக்கல்ல.

எங்களின் சிந்தனைச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையை அனுமதியோம் என்ற முழக்கத்துடன் தில்லிப் பல்கலைக் கழக மாணவர்களும் பேராசிரியர்களும் மாபெரும் அறிஞரும் கவிஞருமான ஏ.கே.ராமானுஜம் ராமாயணம் குறித்து எழுதிய உன்னதக் கட்டுரையை மீண்டும் பல்கலைக் கழகத்தின் பாடத்திட்டத்தில் சேர்த்திட வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் மேற் கொண்டனர். 

இந்த ஆர்ப்பாட்டம் தில்லிப் பல் கலைக்கழகத்தின் துணை வேந்தர் அலுவலகத்தின் முன்பு திங்களன்று நடைபெற்றது. போராட்டத்தில் ஈடு பட்ட வரலாற்றுப் பேராசிரியர் டாக் டர் சுனில் குமார், ‘‘பல்கலைக் கழகத் தின் செயல் எங்கள் படிப்புச் சுதந்தி ரம், எழுத்துச் சுதந்திரம், சிந்தனைச் சுதந்திரத்தில் தலையிடும் செயலா கும்’’ என்றும் ‘‘எங்களுக்குப் பிரிய மானதை நாங்கள் தக்க வைத்துக் கொள்வதற்காக இப்போராட் டத்தை மேற்கொண்டிருக்கிறோம்’’ என்றும் கூறினார். ‘நீங்கள் விரும்புகிறீர்களோ இல்லையோ அல்லது உங்களுக்கு சவுகரியமாக இருக்கிறதோ இல்லையோ ராமாயணத்திற்கு பல்வேறு விதமான மொழிகளில் பல்வேறுவிதமான மொழிபெயர்ப்புகள் இருக்கின்றன என்னும் உண்மையை மாற்றிட முடியாது.


 ராமானுஜத்தின் கட்டுரை மிக நுணுக்கமாக எழுதப்பட்ட அற்புதமான படைப்பு. அதனை கணிதப் பேராசிரியரான நமது துணை வேந்தர் ரத்து செய்திடத் தீர்மானித்திருக்கிறார். இது அறிவுக்கு விரோதமான , அறிவாற்றலுக்கு விரோதமான மற்றும் ஜனநாயகத்திற்கு விரோதமான செயலாகும்’’ என்று ராம்ஜாஸ் கல்லூரி வரலாற்றுப் பேராசிரியர் முகுல் மங்காலிக் கூறினார். முன்னதாக பேரணியில் வந்த மாணவர்களும் பேராசிரியர்களும் தில்லிப் பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கிடும் ராம்ஜாஸ், கிரோரிமால், செயின்ட் ஸ்டீபன்ஸ் மற்றும் இந்து கல்லூரிகள் வழியாக பேரணியாக வந்து நிறைவாக துணை வேந்தரின் அலுவலகத்தின் முன்பு சங்கமித்தனர்.

 பேரணியில் வந்த இளம் வயது மாணவர்கள் மட்டும் அல்ல, வய தான பேராசிரியர்கள் கூட, ‘இன்குலாப் ஜிந்தாபாத்’’ (புரட்சி ஓங்குக) என்று முழக்கமிட்ட வண்ணம் வந்தது குறிப்பிடத்தக்கது.



நன்றி : தீக்கதீர், தினகரன்,தி. இந்து நாளேடு

2 கருத்துகள்:

விடுதலை சொன்னது…

ஏ.கே.ராமனுஜனின் முந்நூறு ராமாயணங்கள் கட்டுரையை கீழ்க்கண்ட சுட்டியில் வாசியுங்கள். இதை எந்த காரணத்திற்காகவேனும் பாடத்திடத்திலிருந்து நீக்க முடியுமா என்று சிந்தியுங்கள்.
http://publishing.cdlib.org/ucpressebooks/view?docId=ft3j49n8h7&chunk.id=d0e1254&toc.depth=1&toc.id=d0e1254&brand=Estelle
அவ்வாறு நீக்கியது தவறு என்று நீங்கள் நினைத்தால் டெல்லி பல்கலைக்கழகத்திற்கு ராமனின் கட்டுரையை மீண்டும் பாடத்திட்டத்தில் சேர்த்தி அறிவுறுத்தும் கீழ்கண்ட மனுவில் ஒப்பமிட்டு ராமனின் கட்டுரையை நீக்கியதற்கு எதிர்ப்பையும், மீண்டும் சேர்ப்பதற்கு ஆதரவையும் தெரிவியுங்கள்
http://www.petitiononline.com/ramanuj/petition.html

விடுதலை சொன்னது…

மேலும் இந்த விவகாரம் பற்றி படிக்க
Many Ramayanas
publishing.cdlib.org