கற்பனை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கற்பனை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 26 ஜனவரி, 2011

வாசிப்புப் பழக்கத்தின் முக்கியத்துவம்


எழுத்தறிவு என்பது பள்ளிக் கல்வியின் ஆதாரமாகும். ஆனால், துரதிர்ஷ்டவசமாக நம் நாட்டில் எழுத்தறிவு என்பது முதியோர் கல்வி யுடன் மட்டுமே பேசப்படும் பொருளாகிவிட் டது. உலகில் உள்ள எழுத்தறிவற்ற மக்கட் தொகையில் பெரும் பகுதியினர் இந்தியா வைச் சேர்ந்தவர்கள் என்பதால் இதில் ஒன் றும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏன் இந்தி யாவில் தொடர்ந்து எழுத்தறிவற்றவர்களின் எண்ணிக்கை நீடிக்கிறது? இதற்குக் கார ணம் இந்தியாவில் ஆரம்பக் கல்வி கற்ற பின் னரும் குழந்தைகளின் எழுத்தறிவின்மை தொடருவதுதான். குழந்தைகள் எட்டாண்டு கால ஆரம்பக் கல்வியை முடிக்காமலேயே வெளிவருவதாலும், ஆரம்பக் கல்வியை விட்டு வெளி வந்த பின்னர் படிக்கும் பழக் கத்தை விட்டுவிடுவதாலும் மீண்டும் எழுத் தறிவின்மை நிலைக்கே சென்றுவிடுகின்ற னர். எழுத்தறிவு பெற்ற குழந்தைகளிடமும் தொடர்ந்து படிக்கும் பழக்கத்தையும், ஆர்வத் தையும் பள்ளிக்கூடம் அவர்களுக்கு கற்றுக் கொடுக்காத குறையுள்ளது. படிக்கும் பழக்கம் தங்களின் அறிவை வளர்த்துக் கொள்ளவும், விழிப்புணர்வுடன் செயல்படவும் உதவிடும் என்பதை உணர்பவர்கள் மிகக் குறைவு.

பள்ளிக் குழந்தைகளிடம் செய்யப்பட்ட ஆய்வில் அவர்களின் படிக்கும் திறன் மிகவும் குன்றியிருப்பதும், அவர்களுக்கு அதற்கான பயிற்சியே கொடுக்கப்படுவதில்லை என் பதும் வெளிவந்துள்ளது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. இதைச் சரி செய்வதற்கு பள்ளிக் கூட அளவில் தக்க நடவடிக்கை எடுக்க வில்லையெனில், புதிதாக நிறைவேற்றப்பட் டுள்ள கல்வி பெறும் உரிமைச் சட்டமே செயலற்றுப் போய்விடும். கற்றுக் கொடுக்கும் முறையில் மிகப் பெரிய மாற்றம் வரவேண்டும்.

பழைய கற்பிக்கும் முறையிலிருந்து ஆசி ரியர்கள் விடுபட வேண்டும். அன்றைய சமூக, கலாச்சார சூழலுக்குப் பொருந்திய கற்பித்தல் முறை இன்றைய காலச் சூழலுக்கு நிச்சயம் பொருந்தாது. அன்று மிகச் சிறுபான்மையராக இருந்த மேட்டுக் குடி மக்களுக்கு மட்டுமே கல்வி வழங்கப்பட்டது. இதனால் ஆசிரியர் தன்னுடைய மாணவர்களுக்கு எழுத்தின் வடிவத்தையும், அதன் ஒலி நயத்தையும் அவ சரமின்றி வருடக் கணக்கில் சொல்லிக் கொடுத்தார். கடுமையான பயிற்சியுடன் தேவைப்படும் போது தண்டனையும் கொடுக் கப்பட்டது. அன்றைய கல்வி முறையைப் பாராட்டிடும் சிலர், அன்று குழந்தைகள் பற்றி இருந்த கண்ணோட்டம் வேறு, இன்றிருக்கும் கண்ணோட்டம் வேறு என்பதை உணர்வ தில்லை. மேலும் அன்று கல்வி பெரும்பான் மையோருக்கு மறுக்கப்பட்ட சூழலுக்கும், இன்று கல்வி பரவலாக்கப்பட்டுள்ள சூழலுக் கும் உள்ள மாற்றத்தையும் நாம் உணர வேண் டும். அன்றைய கல்வி முறை குழந்தைகளின் இயல்பான சுபாவத்தையும், தனித்துவமான திறமைகளையும் மதிக்கத் தவறியது.

புதிய கல்வி முறை

மொழிகளைப் பயிலுவதற்கு குழந்தைக ளுக்கு இன்று புதிய யுக்திகளும் வசதிகளும் உள்ளன. குழந்தைகளின் மனோபாவத்திலும் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. உலகைப் புரிந்து கொள்ள வேண்டும், ஆய்ந்தறிய வேண் டும் என்ற ஆர்வம் குழந்தைகளிடம் இயல் பாகவே உள்ளது என்ற அடிப்படையில்தான் இன்றையக் கல்வி முறை அமைந்துள்ளது. இளம் பருவத்திலேயே அவர்களுக்கு புத்த கங்களுடனான உறவை உயிரோட்டமுள்ள தாக, அர்த்தமுள்ளதாக உருவாக்கிட வேண் டும். இல்லையேல் அவர்களின் எழுத்தறிவு பயனற்றதாகப் போய்விடும். அவர்களை அறிவு மற்றும் உணர்ச்சிப் பூர்வமாக வளர்த் தெடுக்க முடியாது.

பள்ளிகளில் பாடங்களை எந்திரகதியாக உரத்த குரலில் படிக்கும் குழந்தைகள், அவற் றின் அர்த்தத்தை உள்வாங்கிக் கொள்வதில் லை. இதனால் அவர்களுக்கு அடுத்தடுத்து புத்தகங்களைத் தேடிப் படிக்கும் ஆர்வம் வரு வதில்லை. குழந்தைகளால் பாடங்களை அதன் அர்த்தத்தை புரிந்து கொள்ளாமல் அப் படியே மனனம் செய்து ஒப்புவிக்க முடிகிறது. சூஊநுசுகூ (தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில்) முன்னாள் உறுப்பினர் சின்ன சாக்கோ ஒரு முறை ஒரு வகுப்பறையில் மாணவனை பாடத்தை வாசிக்கச் சொன்ன தும், அவன் உடனே எழுந்து நின்று “புத்தகத் துடன் படிக்கவா? புத்தகம் இல்லாமலேயே படிக்கவா?” என்று கேட்டது அனைவரையும் வியப்புக்குள்ளாக்கியது. கற்பித்தல் முறை களில் எந்த மாற்றமும் இல்லாமல் நம் பள்ளி கள் மியூசியங்கள் போல் இருப்பதை சின்ன சாக்கோ சுட்டிக் காட்டுகிறார். பழமையைப் பாதுகாப்பதில் நம் பள்ளிகள் கவனமாக இருக்கின்றன என்கிறார். இதனால் நாம் மிகப் பெரிய இழப்பிற்கு உள்ளாகிறோம்.

ஒரு ஜனநாயக நாட்டில் புத்தகம் படிக் கும் பழக்கம் உள்ள பொது மக்களின் பங்கு மிக முக்கியமானதாகும். அன்றாட சமூக, அரசி யல் பிரச்சனைகள் சம்பந்தமாக பொதுமக்கள் தங்களின் கருத்துக்களை வெளியிடுவது என்பது மிகவும் தேவையான ஒன்றாகும். விடு தலின்றி எல்லோரும் கருத்து தெரிவிப்பது என்பது கூட்டு சிந்தனைக்கும், முடிவுக்கும் இட்டுச் செல்லும். இன்றைய பரந்த உலகில் எழுத்தறிவு என்பது முக்கியமான ஆயுதமா கும். படிப்பறிவு வெறும் திறன் மட்டுமல்ல, அதுவொரு கலாச்சார அடையாளமும் ஆகும். புத்தகங்களைப் படிப்பதன் மூலம் நம்மைச் சுற்றி நடப்பவைகள் பற்றிய தெளிவான பார் வையைப் பெற முடியும். எனவே புத்தகங்களு டனான பரிச்சயத்தை இளம் பருவத்திலேயே வளர்ப்பது ஜனநாயகம் வெற்றியுடன் செயல் படுவதற்கு வழி வகுக்கும். படிப்பிற்கு இத்தகு முக்கியத்துவம் இருப்பதால் இப்பழக்கத்தை இளம் பருவத்தில் ஒரு திறனாகக் கற்றுக் கொடுக்க வேண்டும். படிக்கும் மனோபாவத்தை சிறு வயதில் கற்றுக் கொடுப்போமேயானால் அது வாழ்நாள் முழுவதும் பயன்படும் திற னாக அமையும். ஜனநாயகக் கடமைகளை ஆற்றிடவும் உதவிடும். இதை மனதிற் கொண்டு கற்பித்தல் முறைகளில் தேவை யான மாற்றங்களைக் கொண்டுவர வேண் டும். வெறுமனே புத்தகங்களை எழுத்துக் கூட்டி வாசிப்பதைத் தாண்டி, வார்த்தைக ளின் அர்த்தத்தை புரிந்து படிக்கும் அளவிற்கு குழந்தைகளின் திறனை வளர்த்தெடுக்க வேண்டும். இது வெற்றி பெற, தரமான புத்த கங்களும், குழந்தை இலக்கியங்களும் உரு வாக்கப்பட வேண்டும். புத்தகங்கள் குழந்தை கள் நேசிக்கின்றவைகளாக இருக்க வேண் டும். குழந்தைகளின் உள்ளார்ந்த ஆர்வத் தைத் தூண்டும் விதமாகவும், அவர்களை சமூ கத்துடன் இணைக்கும் படியாகவும் அமைய வேண்டும். புத்தகங்கள் சரியான சமூகப் பார் வையினைக் கொண்டிருக்க வேண்டும். அவர்கள் வாழும் சூழலில் உள்ள சமூக, கலாச்சார பன்முகத் தன்மைகளைக் கொண் டாடும் விதமாக இருக்க வேண்டும். குழந்தை களை அன்புடன் அரவணைத்துக் கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்கள் வேண்டும். ஆசிரி யர்கள் படிக்கும் பழக்கத்தை இயல்பாகவே உடையவர்களாக இருக்க வேண்டும். படிக் கும் பழக்கம் குழந்தைகளின் ஆற்றலையும் அறிவையும் வளர்க்கும் என்பதை உணர்த்தி, அவர்களை ஊக்குவிக்கும் ஆசிரியர்களாகத் திகழ வேண்டும்.

NCERTயின் பங்கு

குழந்தைகளின் படிக்கும் ஆர்வத்தைத் தூண்டிடும் வண்ணம் NCERT நாற்பது புத்த கங்களை வெளியிட்டுள்ளது. SSA திட்டத்தின் அடிப்படையில் NCERTயின் குழந்தைக் கல்வித் துறை வெளிக்கொண்டு வந்துள்ள இப்புத்தகங்கள் குழந்தைகளின் ஆர்வத்தை யும் தேவையையும் நிறைவேற்றிடும் வண் ணம் அமைந்துள்ளன. குழந்தைகளை மையப்படுத்தி எழுதப்பட்டுள்ள இச்சிறு புத்தகங்கள் புதுமையுடனும், நேர்த்தியுடனும், நிறைய படங்களுடனும் உள்ளன. “பார்க்கா” என்று பெயரிடப்பட்டுள்ள இப்புத்தக வரிசை யில் காட்டப்படும் குழந்தைகள் நம் வீடுக ளில் காணப்படும் குழந்தைகளைப் போலவே இயல்பாக இருப்பதால் இப்புத்தகங்களை குழந்தைகள் விரும்பி ஏற்றுக் கொள்வார்கள். அடிப்படையான மாற்றங்களுடன் கொண்டு வரப்பட்டுள்ள இப்புத்தகங்கள் இதற்கு முந்தைய முயற்சிகளை கேள்விக்குள்ளாக்கி, புறந்தள்ளக்கூடிய வகையில் உள்ளன. முதன் முறையாக இந்தியாவில் குழந்தைக ளுக்கான இலக்கியம் அல்லது புத்தக வரிசை உருவாக்கப்பட்டுள்ளது என்று கூறலாம். எல்லா மாநில அரசுகளையும் இது போன்ற புத்தக வரிசைகளை உருவாக்கச் சொல்லியும், ஆசிரியர்களை இத்தகு புது முயற்சிக்குப் பழக்கிடவும் NCERT கேட்டுக் கொண்டது. ஆனால் அதிர்ச்சியளிக்கக் கூடிய செய்தி என்னவென்றால் இந்த நல்ல முயற்சியில் ஈடுபட்டிருந்த NCERTயின் குழந்தைக் கல்விப் பிரிவை மூடுவதற்கான முடிவெடுக் கப்பட்டுள்ளது. இம்முடிவை மாற்றி,NCERTயின் குழந்தைக் கல்விப் பிரிவு மீண்டும் செயல்படுவதற்கான ஆணை யினை மத்திய மனித வளத் துறை அமைச் சகம் வெளியிட வேண்டும். NCERTயின் தலைமை மாநில அரசுகளையும், தன்னார்வக் குழுக்களையும், தனியார் புத்தக வெளியீட்டா ளர்களையும் குழந்தை இலக்கியங்களை உருவாக்கி அவைகளை நேர்த்தியாகவும், நிறையப் படங்களுடன் கவர்ச்சிகரமாகவும் வெளியிட ஊக்குவிக்க வேண்டும்.

சமீபத்தில் தேசிய புத்தக டிரஸ்ட் வெளியிட்டுள்ள புத்தகத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறையைச் சித்தரிக்கும் படம் அதிர்ச்சியளிக்கக் கூடியதாக இருக்கின்றது. பெண்களின் பிரச்சனைகளைச் சித்தரிக்கும் போது நாம் இன்றும் தொடர்ந்து தவறிழைக் கின்ற நிலையிலேயே இருக்கின்றோம் என் பது வருத்தத்திற்குரியது. ஏராளமான தன் னார்வக் குழுக்கள் குழந்தைகளுக்கான புத்த கங்களை வெளியிடுகிறார்கள். இவைகள் சரியான கருத்தோட்டத்துடன் தரமான புத்த கங்களாக இருக்கின்றனவா என்பதைக் கண் காணிக்க உரிய நிறுவனமும், நிபுணர்களும் இல்லாமல் இருப்பது மிகப் பெரிய குறை யாகும். இத்தகு தரக் குறைவான புத்தகங் களை அனைவருக்கும் கல்வி திட்டத்தின் நிதியிலிருந்து வாங்கி பள்ளிகளின் நூலகங் களை மாநில அரசுகள் நிரப்புகின்றன என்பது கவலையளிக்கின்றது. எனவே சூஊநுசுகூ தன்னுடைய தலைமைப் பாத்திரத்தைச் சரி யாக நிறைவேற்றி இந்தக் கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்ற எதிர்பார்ப்பு வலுப்பெற்றுள்ளது.

நன்றி ‘தி இந்து’ நாளிதழ் ஜனவரி 20

கிருஷ்ணகுமார்

கட்டுரையாளர்,

முன்னாள் இயக்குநர்-NCERT

தமிழில்: பேரா.பெ.விஜயகுமார்

வெள்ளி, 27 மார்ச், 2009

மக்களோடுதான் கூட்டணி !

ராஜகுரு












மக்களவைத் தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கிறது. பிரதமர் மன்மோகன்சிங்கும், பிரதமர் கனவில் மிதக்கும் எல்.கே. அத்வானியும்டில்லியில் ஒரு விழாவில் சந்தித்துக்கொள்கின்றனர். நமஸ்தேஜி என்று இருவரும்கைகூப்பி வணக்கம் தெரிவித்துக் கொள்கின்றனர்.


மன்மோகன்சிங் : அடுத்த பிரதமர் நீங்களா, நானான்னு மே மாதம் தெரிஞ்சுடும்!


அத்வானி : இதுக்கு மே மாதம் வரை காத்திருப்பானேன்? நான்தான் அடுத்த பிரதமர்ங்கறதிலே உங்களுக்கு இன்னும் சந்தேகம் இருக்கா?


மன்மோகன்சிங் : இதுக்கு மே மாதம் வரை காத்திருப்பானேன்? நான்தான் அடுத்த பிரதமர்ங்கறதிலே உங்களுக்கு இன்னும் சந்தேகம் இருக்கா?

மன் : இதை நீங்க உங்க கூட்டத்திலே சொல்லுங்க. பேசாம கேட்டுக்குவாங்க. என்கிட்ட சொல்லாதீங்க. உங்க அறிக்கைக்கு நான் கொடுத்த பதிலடியைப் பாத்தீங்கள்ல..?

(இருவரும் பேசிக் கொண்டே பக்கத்தில் உள்ள ஒரு அறைக்குச் சென்று இரு நாற்காலிகளை இழுத்துப் போட்டுக் கொண்டு அருகில் அமர்கின்றனர்)

அத் : பார்த்தேன், பார்த்தேன் ! அதுக்குன்னு இவ்வளவு கடுமையாவா அறிக்கை கொடுப்பீங்க? நம்ம ரெண்டு பேர் அறிக்கையையும் ஜனங்க ஒழுங்காப் படிச்சாங்கன்னா நம்ம ரெண்டு பேரையுமே பிரதமரா வர விடமாட்டாங்க !

மன் : பின்னே, இந்தியப் பிரதமர்களிலேயே ஆகப் பலவீனமான பிரதமர் நான்தான்னு நீங்க சொன்னா அதைக் கேட்டுக்கிட்டு சும்மா இருக்க நான் என்ன வாஜ்பாயா?

அத் : இப்ப எதுக்கு அவர் பேரை இழுக்கணும்? ஒரு வழியா கட்சியிலே எனக்கு லைன் கிளியர் ஆகிட்டுதுன்னு நான் நிம்மதியா இருக்கேன். நீங்க அவரை ஞாபகப்படுத்தாதீங்க. நாம பேசி ஒருமுடிவுக்கு வருவோம்...

மன் : உங்க அறிக்கையைப் பாத்துட்டு நீங்க சொல்றது சரிதான்னு ஜனங்க நெனச்சுட்டாங்கன்னா?

அத் : அதையேதான் நானும் கேக்கறேன். பாபர் மசூதியை இடிச்சதுதான் என்னோட வாழ்நாள் சாதனைன்னு நீங்க சொன்னதை, ஆமா, உண்மைதானேன்னு ஜனங்க நெனச்சுரமாட்டாங்களா?

மன் : 123 ஒப்பந்தத்தை நான் நிறைவேத்தின பிடிவாதத்தைப் பாத்தப்புறமும் என்னை நீங்க பலவீனமான பிரதமர்னு சொல்றதை நெனச்சா எனக்கு ஆச்சரியமா இருக்கு !

அத் : வெளையாடாதீங்க மன்மோகன்ஜி ! உள்நாட்டிலே உங்களுக்கு சோனியாஜீதான் பாஸ்னா, நாட்டு எல்லையைத் தாண்டிட்டா உங்க பாஸ் ஜார்ஜ் புஷ்தான்னு எனக்குத் தெரியாதா? புஷ் இல்லே ஒபாமான்னு உடனே கரெக்ஷன் கொடுக்காதீங்க...இதிலே உங்க சாதனை எங்கே வருது?

மன் : பாம்பின் கால் பாம்பறியும். நீங்க அமெரிக்க ஒப்பந்தத்தை எதிர்க்கற மாதிரி பாவ்லா பண்றதெல்லாம் `ச்ச்சும்மா’ன்னு எனக்குத் தெரியாதா?

அத் : சரி, அதை விடுங்க. பயங்கரவாதிகளை ஒடுக்கறதிலே உங்க ரெக்கார்டு என்ன?

மன் : இதுக்கு நான் தெளிவா பதில் சொல்லியிருக்கேன். பத்திரிகையை எடுத்து நல்லாப் படிங்க !

அத் : சரி, இதையெல்லாம் விடுங்க. சப்ஜெக்ட்டுக்கு வருவோம். பீகார்லயும் ஜார்க்கண்ட்லயும் உங்களை இப்படிக் கழட்டி விட்டுட்டாங்களே..!

(நக்கலாகச் சிரிக்கிறார்)

மன் : கண்ணாடியிலே முகத்தைப் பாத்துட்டு அடுத்தவங்களைக் கேலி பண்ணணும். ஒரிஸ்ஸா, மேற்கு வங்காளம், தமிழ்நாட்டிலே உங்க நெலமை என்ன?

(மன்மோகன்சிங் பலமாகச் சிரிக்கிறார்)

அத் : இப்படி நாம ஏட்டிக்குப் போட்டியா பேசிக்கிட்டே போனோம்னா பிரதமர் நாற்காலியை நேத்து வந்தவங்க கொண்டு போயிருவாங்க. நாம ரெண்டு பேரும் பாரம்பரியப் பெருமையைச் சொல்லிக்கிட்டுத் திரிய வேண்டியதுதான். அதை நெனச்சா வேற எனக்குத் தூக்கம் வர மாட்டேங்குது !

மன் : சரி, அதுக்கு என்ன செய்யலாம்கறீங்க?

அத் : அப்படிக் கேளுங்க. நம்ம ரெண்டு பேரோட கொள்கைகள்ல அதிக வித்தியாசம் இல்லேங்கறது உங்களுக்குத் தெரியும். என்ன, நாங்க முஸ்லிம்களைப் பத்தி அதிகமாப் பேசுவோம். வாய்ப்பு கிடைச்சா குஜராத்ல செஞ்ச மாதிரி காரியத்திலேயும் இறங்குவோம். நீங்க அதைச் செய்ய மாட்டீங்க. ஆனாலும் பிரதமரா இருந்த இந்த அஞ்சு வருஷத்திலே எங்க மேலே உருப்படியா ஏதாவது நடவடிக்கை எடுத்திருப்பீங்களா? சேது சமுத்திரத் திட்டத்தை நாம ரெண்டு பேரும் சேர்ந்து எப்படிக் கிடப்பிலே போட்டிருக்கோம் ! நாம ரெண்டு பேரும் ஒண்ணுக்குள்ளே ஒண்ணுங்கறதை மறந்துடாதீங்க. வெளியிலே போடற சண்டையிலே காட்டம் அதிகமா இருக்கக் கூடாது. ஞாபகம் வச்சுக்குங்க. அதனாலே ரெண்டு பேருக்குமே ஆபத்து !

மன் : நீங்க சொல்றதும் சரிதான். நம்மைத் தவிர வேற எந்த முன்னணி ஆட்சிக்கு வந்தாலும் நாம ரெண்டு பேரும் சேர்ந்து அவங்களைக் கவுத்திருக்கோம். இதுதான் நம்மோட வரலாறுங்கறதை மறந்துட முடியுமா? ஆனா எவ்வளவு சாமர்த்தியமா பேசிப் பாத்தும் கூட்டணிக் கட்சிங்க செட் ஆக மாட்டேங்குதே? அதை எப்படி சமாளிக்கறது?

அத் : இந்த விஷயத்திலே தமிழ்நாட்டு விஜயகாந்த் கிட்டேயிருந்து சில வார்த்தைகளைக் கடன் வாங்க வேண்டியதுதான். அவர் யார் கூடவும் சேர மாட்டேங்கறாரு. நம்ம நிலைமையே வேற. பல பேரு நம்ம கிட்ட நெருங்க பயப்படறாங்க. அப்படிப்பட்ட மாநிலங்கள்ல “எங்களுக்கு எந்தக் கட்சியோடவும் கூட்டணி வேண்டாம். மக்களோடதான் எங்க கூட்டணி”ன்னு தெம்பா அறிவிச்சுர வேண்டியதுதான் !

மன் : அட, இது நல்ல யோசனையா இருக்கே. கீழே விழுந்தாலும் மீசை, தாடியிலே மண் ஒட்டாம சமாளிக்கறது எப்படின்னு அப்பப்ப உங்ககிட்ட கேட்டுத் தெரிஞ்சுக்கறேன் ! தாங்க் யூ அத்வானிஜி !

(அத்வானியைக் கட்டித்தழுவிக் கொள்கிறார்)