செவ்வாய், 21 ஏப்ரல், 2009

அத்வானியின் 100 நாள் மாடல் தர்பார்

+ பொடா சட்டம் மீண்டும் கொண்டுவரப் படும்..

+ பயங்கரவாதத்தை ஒடுக்க பொருத்த மான சட்டம். 

+ சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றுவது.

+ மாநில காவல்துறைக்கு நவீன ஆயு தங்கள் வழங்கப்படும். 

+ சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்க தண்டனை வழங்கும் சட்டம். 

+ பயங்கரவாத வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றங்கள். விரைந்து விசா ரித்து நீதி வழங்குவது. 

+ சத்தீஸ்கர் மாடலை பயன்படுத்தி மாவோயிஸ்ட்டுகளை ஒடுக்குவது.

சர்க்கஸ் ரிங் மாஸ்டர் தொனியில் ஒலிக் கும் இந்த வார்த்தைகள் பாஜக வெளியிட் டுள்ள தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட் டுள்ளவை. கனவு பிரதமர் அத்வானி பதவி யேற்ற 100 நாளில் முதல்வேலையாக மேற் குறிப்பிட்டவைகளுடன் 12 உடனடி நடவடிக் கைகளாக நிறைவேற்றுவோம் என்று சபத மேற்றுள்ளனர். 

பயங்கரவாதத்திற்கு எதிராக என அறி முகப்படுத்தப்பட்ட பொடா சட்டம் நாளடை வில் சிறுபான்மை மக்களுக்கு எதிராகவும் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்தப்பட்டது. 2002ல் கோத்ரா சம்பவத்தைத் தொடர்ந்து பொடாவில் கைது செய்யப்பட்ட 103 இஸ்லாமியர்கள், 7 வருடங்கள் வரை விசாரணையின்றி சிறையில் அடைக் கப்பட்டனர். குஜராத் உயர்நீதிமன்றம், பொடா சட்டத்தின் கீழ் இவர்கள் கைது செய்யப்பட் டதற்கு எந்த முகாந்திரமும் இல்லை என்று தீர்ப்பளித்து விடுவித்தது. இருப்பினும் கொலை, வன்முறை குற்ற பிரிவுகளின் கீழ் தொடர்ந்து சிறையில் இருந்து வருகின்றனர். குஜராத் மோடி அரசு சிறுபான்மை மக்களை அச்சுறுத்தவே பொடா சட்டத்தை பயன் படுத்தியது என்பதில் சந்தேகமில்லை. 

பயங்கரவாதத்தை ஒடுக்க தற்போதுள்ள விசேஷ குற்ற சட்டங்களே போதுமானது என பொடா ரெவியு கமிட்டியும் தெரிவித்துள்ளது. பயங்கரவாதம் ஒரு அசாதாரண நிகழ்வாகும். பெரும்பகுதி மக்கள் அல்லது ஏதாவது ஒரு பகுதி மக்கள் மனதில் அச்சுறுத்தல் மூலமா கவோ ஆதரவற்ற நிலைமையை உருவாக்கு வதன் மூலமாகவோ, அப்பகுதியினரை தங் கள் கட்டுப்பாட்டிற்குள் அல்லது அதிகாரத் திற்குள் கொண்டுவருவதுதான் பயங்கரவாதம் என்று பொடா ரெவியு கமிட்டி விளக்கம் அளித் துள்ளது. மேலும் ஒவ்வொரு பயங்கரவாதியும் குற்றவாளியாக இருக்கலாம். ஆனால் ஒவ் வொரு குற்றவாளியும் பயங்கரவாதி என முத் திரையிடப்படக்கூடாது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும் என்கிறது. அத்வானியின் கூட்டம் இதை மனதில் நிறுத்தி சட்டத்தை கையாளுமா என்பது சந்தேகத்திற்கு அப்பாற் பட்டது. 

மாவோயிஸ்ட்டுகளை ஒடுக்குவது என்ற பெயரால் நிலப்பிரபுக்களின் அடியாட்களும், உள்ளூர் காவல்துறையும் சேர்ந்து அப்பாவி விவசாயிகள், தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்கள் மீது தொடுக்கப்படும் கடும் தாக்குதல்கள்தான் சத்தீஸ்கர் மாடல். இதே பாஜகவினர் நந்தி கிராம மாவோயிஸ்டுகளுடன் சேர்ந்து இடது முன்னணிக்கு எதிராக வன்முறைக்கு துணை போவது எந்த ஊர் மாடல்? 

சட்டவிரோத குடியேற்றத்தை தடுப்பதற்கு என்ன அவசரம்? ஆம் அந்த வழியாக சிறு பான்மை இஸ்லாமிய மக்களை வங்க தேசத் தவர், பாகிஸ்தான் தேசத்தவர் என்று முத்தி ரையிட்டு வெளியேற்றும் பாசிச நடவடிக் கையை தொடங்குவதுதான். 

பயங்கரவாத குற்றவாளிகளின் வழக்கு களை விரைந்து விசாரித்து நீதி வழங்குவது என்பது இவர்கள் வாதப்படி இப்போது அப் ஷல் வழக்கு நீடிப்பது போல் இல்லாமல் உட னடியாக மரண தண்டனை அளித்து தங்க ளது மதவெறி பசியை தீர்த்துக்கொள்வதுதான்.

சுருக்கமாக குஜராத் பாணியில் அத்வானி யின் மத்திய அரசும் நடைபோடும் என்பது தான் அத்வானியின் 100 நாள் கனவு ஆட்சி இருக்கும் என்பதை தேர்தல் அறிக்கை சொல் லாமல் சொல்லுகிறது. 

பயங்கரவாதம், சட்டவிரோத குடியேற்றம், மாவோயிஸ்ட்டுகளை ஒடுக்குவது இவைகள் தான் இந்திய மக்களின் உடனடி விசயங் களா? பொருளாதார நெருக்கடியால் பறிக்கப் படும் வேலைகள், திசையறியாது விழிபிதுங்கி நிற்கும் இளைஞர்கள், விளைபொருளுக்கு விலையின்றி தற்கொலைச் சாவுகளுக்கு இழுத்துச் செல்லும் விவசாயிகள், விலைவாசி உயர்வு, என எண்ணிலடங்கா பிரச்சனை களில் மூழ்கிக் கிடக்கும் இந்திய மக்களுக்கு நிவாரணம் கிடைக்கும் என பாஜகவிடம் எதிர்பார்ப்பது ஏமாளித்தனம் என்கிறார்கள். 

இந்தியாவிற்கு தேவை குஜராத் மாடல் அல்ல, நாட்டு மக்களின் வாழ்வை பாதுகாக்க மாற்று அரசுதான். அது இடதுசாரி சக்திகளின் துணையோடு மதச்சார்ப்பற்ற, ஜனநாயக இயக்கங்களின் மூன்றாவது அணியே. இந்திய மக்களின் எதிர்பார்ப்பும். நம்பிக்கையம் இதுவே.

-எஸ்.ஏ.மாணிக்கம்

கருத்துகள் இல்லை: