சனி, 28 ஜனவரி, 2012

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு  எஸ்ஸார் - லூப் டெலிகாம் உரிமையாளர்கள் டிமிக்கி


2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் தொடர்புடைய எஸ்ஸார் மற்றும் லூப் டெலிகாம் நிறுவனங்களின் உரிமையாளர்கள் வெள்ளியன்று சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

எஸ்ஸார் தொழில் குழுமத் தின் உரிமையாளர்களான அனுஷ்மன் ரூபா, ரவி ரூயா ஆகியோர் மீதும், லூப் டெலி காம் நிறுவன அதிபர்களான கிரண் கேதான், அவரது கணவர் ஐ.பி.கேதான் ஆகி யோர் மீது 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சிபிஐ வழக்குத் தொடர்ந்துள்ளது. இவர்கள் மீது சமீபத்தில் தில்லி நீதிமன் றத்தில் குற்றப் பத்திரிக்கையும் தாக்கல் செய்தது.

இதையடுத்து, கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில் இவர்கள் துபாய்க்குச் சென்று விட்டனர். இவர்களை விசாரணைக்கு வருமாறு கூறி நீதி மன்றம் அனுப்பிய சம்மன்களை, அவர்களது வீடுகள், அலுவலகங்களில் யாரும் வாங்கவில்லை. இதையடுத்து இந்த சம்மன்கள் அங்கு ஒட் டப்பட்டுள்ளன.

2008ம் ஆண்டில் வோட போன் நிறுவனத்தில் 33 சதவீத பங்குகளை வைத்திருந்த எஸ்ஸார் நிறுவனம், லூப் டெலி காமிலும் பெரும் பங்குகளை வைத்திருந்தது. ஒரு தொலைத் தொடர்பு மண்டலத்தில் 2ஜி லைசென்ஸ் பெறும் தொலைத் தொடர்பு நிறுவனம், இன் னொரு தொலைத் தொடர்பு நிறுவனத்தில் 10 சதவீதத்துக்கு மேல் பங்குகளை வைத்திருக் கக் கூடாது என்பது விதி.

ஆனால், இந்த விதியை மீறி லூப் டெலிகாமின் பெய ரைப் பயன்படுத்தி எஸ்ஸார் நிறுவனம் தனக்கு ஒதுக்கப்பட் டதை விட அதிகமான அளவு ஸ்பெக்ட்ரத்தை வாங்கியது. இதன்மூலம் எஸ்ஸார் நிறு வனம் மிகப்பெரும் லாபம் அடைந்தது. அப்போது வோடபோன் நிறுவனத்தில் பெரும் பங்கை எஸ்ஸார் நிறு வனம் வைத்திருந்தது.

இதையடுத்து எஸ்ஸார் மற்றும் லூப் டெலிகாம் நிறு வனங்களை 2ஜி வழக்கில் சிபிஐ சேர்த்தது. ஆனால், சிபிஐ விசாரணைக்கு வராமல் இழுத்தடித்த இந்த இரு நிறு வனங்களின் அதிபர்களும் ஜனவரி 27ம் தேதி வெள்ளி யன்று நேரில் ஆஜராக வேண் டும் என சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

ஆனால் உத்தரவின்படி, ரவி ரூயா, அனுஷ்மான் ரூயா, ஐ.பி கேதான், கிரண் கேதான் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இவர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறி ஞர்கள் வாதாடுகையில், எங் கள் கட்சிக்காரர்களுக்கு துபா யில் தான் சொந்த வீடுகள் உள் ளன. ஆனால் தில்லியில் உள்ள முகவரிக்கு சம்மன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எனவே அவர்களால் இந்த சம்மனை பெற முடியவில்லை என்று காரணம் கூறினர்.

மேலும் இந்த விசாரணையில் சிறப்பு நீதிபதி ஓ.பி. சைனிக்கு அதிகாரம் இருக்கிறதா என்ற கேள்வி எழுப்பும் வழக்கும் தில்லி உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது என் றும் கூறினார்.

பிரசாந்த் பூஷண்

எஸ்ஸார், லூப் நிறுவனங் கள் மீது சி.பி.ஐ. வழக்கு தொடர காலம் தாமதம் செய் வது ஏன் என்று கேள்வி எழுப்பி பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் உச்ச நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந் திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கில் அவர் வாதாடுகையில், எஸ்ஸார், லூப் நிறுவனங்களுக்கு எதி ராக, பலமான ஆதாரங்கள் இருப்பதாகவும் ஆனாலும், இந்த நிறுவனங்களுக்கு எதி ராக, ஊழல் தடுப்பு பிரிவின் கீழ் குற்றச்சாட்டு பதிவு செய் யப்படவில்லை என்றும், இந்த விவகாரத்தை உச்சநீதிமன்றம் கண்காணித்து வரும் நிலை யிலும் கூட, இவர்கள் மீது சிபிஐ மென்மையான போக் கை கடைப்பிடிக்கிறது என் றும், இந்த விவகாரத்தில், மத் திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித்தின் தலையீடு உள்ள தாகக் கூறப்படுகிறது என்றும் பிரசாந்த் பூஷண் கூறியிருந் தார். இதையடுத்தே இந்த நிறுவனங்கள் மீதான சிபிஐ யின் விசாரணை வேகம் எடுத் ததும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: