குண்டு வெடிப்பு சம்பவம் என்றாலே முஸ்லிம் சமுதாயத்தவ ரோடு தொடர்புபடுத்திவிடுவது புல னாய்வு அமைப்புகளுக்கும் காவல் துறையினருக்கும் எளிதான வழி யாகிவிட்டது.
பல்வேறு மாநிலங்களிலும் காவல் துறை இது போன்ற வேலை யைத் தான் பெரும்பாலும் செய்து வருகிறது. இதனால் முஸ்லிம் இளை ஞர்கள் தனிமைப்படும் அபாயம் தொடர்கிறது. இது ஒரு மனோதத் துவப் போர் முறை. தொடர்ச்சியாக ஒரு நபர் மீதோ ஒரு சமூகத்தின் மீதோ குற்றச் சாட்டுகளை அடுக்கிக் கொண்டே போனால் எல்லாக் குற்ற நிகழ்வுக்கும் ஒரு நபரையோ அல் லது ஒரு சமூகத்தையோ சந்தேகப் பட வைத்து விடலாம்.
இந்த துணிவில் தான் மகாத்மா காந்தியைப் படுகொலை செய்த கோட்சேயின் கும்பல் கூட முஸ்லிம் பெயரைக் கையில் பச்சை குத்திக் கொண்டிருந்தது. காந்தியின் மரணத்தை மதக் கலவரத்துக்கு காரணியாக்கப் பார்த்தது., ஆனால் மதச்சார்பற்ற வராக அன்றைய பிரதமர் ஜவஹர் லால் நேரு இருந்ததால் எதிர் வினை கள் தடுக்கப்பட்டன. முஸ்லிம்கள் பலியாகாமல் தப்பித்தனர்.
1948 ல் சதி செய்த சங்பரிவாரக் கும்பலின் வாரிசுகள் அழிந்துவிட வில்லை என்பதை மாலேகாவ் குண்டு வெடிப்பு சம்பவம் நிரூபித் தது. மசூதி அருகே ஏற்பட்ட இந்த சம்பவத்தில் பலர் கொல்லப்பட் டனர். ஆனால் பழிவிழுந்ததென் னவோ முஸ்லிம் சிறுபான்மை சமூ கத்தினர் மீது. ஆனால் கார்கரே என்ற காவல் துறைஅதிகாரியின் நேர்மையான புலனாய்வின் மூலம் இந்த சம்பவத்திற்கு பின்னால் பெண் சாமியார் பிரக்ஞாசிங்தாகூரின் திட் டம் இருந்தது அம்பலமானது. இந் தத் திட்டத்திற்கு முன்னாள் ராணுவ அதிகாரி ஸ்ரீகாந்த்புரோஹித் உடந் தையாக இருந்ததும் ஆர்டிஎக்ஸ் வெடிமருந்து பொருட்களை கள்ளத் தனமாக இந்து மதவெறி கும்பலுக்கு இவர் தானம் செய்திருப்பதும் வெளிச் சத்திற்கு வந்தது.
மாலேகாவ் குண்டு வெடிப்பு சம்பவத்திற்குக் காரணமானவர்களி டம் தொடர்ந்து விசாரணை நடத் தினால் மேலும் பல உண்மைகள் வெளியாகும் என்ற நம்பிக்கை இருந் தது. இந்த நம்பிக்கையை நாசப்படுத் தும் விதமாகக் காவல்துறை அதி காரி கார்கரே கடந்த நவம்பர்26ல் மும்பை தொடர் தாக்குதல் சம்பவங் களில் பயங்கரவாதிகளால் வஞ்சக மாகக் கொல்லப்பட்டார். அவ ரோடு மேலும் இரண்டு அதிகாரி களும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இவர்களின் மரணத்தில் மர்மம் இருக்கிறது என்று எழுப்பப்பட்ட சந்தேகக் குரல் அமுக்கப்பட்டுவிட் டது. கார்கரேயின் மரணத்தோடு மாலேகாவ் சம்பவமும் பெண்சாமி யார் மற்றும் முன்னாள் ராணுவ அதிகாரி ஆகியோர் மீதான விசாரணை யும் சவக்குழிக்கு அனுப்பப்பட்டு
விடுமோ என்கிற ஐயம் எழுந்துள்ளது.
சுதந்திர இந்தியாவின் வரலாற் றில் கரும்புள்ளியாக விழுந்தது பாபர் மசூதி இடிப்பு சம்பவம். இந்தசம்பவத்திற்கு மூல காரணமாக இருந்தவர் பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி இவரது ர(த்)த யாத்திரை கிளப்பிய மதவெறி இன் னும் அடங்கவில்லை. வருண்காந்தி வடிவத்தில் நீடிக்கிறது.
பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கு 17 ஆண்டுகளாக இழுத்துக் கொண்டிருக்கிறது. ஆனால் நாடாளு மன்றத்தின் மீது தாக்குதல் நடத்திய வழக்கு முடிவடைந்து தண்டனை யும் விதிக்கப்பட்டுவிட்டது. இந்த போக்கு நீதி முறையில் கூட மதவாதம் மறைந்து கிடக்கிறதோ என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.
ஹவாலாமோசடி குற்றச் சாட்டு கூறப்பட்ட போது மக்களவை உறுப் பினர் பதவியை ராஜினாமா செய்த வர் அத்வானி. குற்றமற்றவர் என்று நிரூபிக்கப்பட்டால் தான் மீண்டும் நாடாளுமன்றத்துக்கு வருவேன் என்று மார்தட்டியவர் அவர். ஹவாலா மோசடி வழக்கை மூச்சு விடாமல் விசாரித்த நீதிமன்றம் அத்வானிக்குப் புனிதர் பட்டம் கொடுத்துவிட்டது. ஆனால் அந்த வழக்கில் எடுத்துக் கொண்ட சப தத்தை அயோத்தி பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி எடுத்துக் கொள்ள வில்லை என்பதையும் குற்றம் சாட் டப்பட்டவரே உள்துறை அமைச்ச ராக ஆறு ஆண்டு காலம் பதவி வகித் தார் என்பதையும் பார்க்கும் போது ‘சத்தியம் தவறாத உத்தமர் போலவே நடிக்கிறார்’ என்ற பாடல் வரிகள் தான் நினைவுக்கு வருகின்றன.
ஆர்எஸ்எஸ் தலைமையிலான சங்பரிவார கும்பல் நிர்வாகத்துறை யிலும் விஷம் பரப்புவதைக் கண் கூடாகக் காட்டியவை குஜராத் வன் முறை சம்பவங்கள். மும்பை கலவர சம்பவங்கள். ஆயிரம் தலைகளோடு விஷம் கக்கும் ஆதிசேஷன் போன்ற ஆர்எஸ்எஸ்-ன் புதிய வாலாகத் தோன்றியிருப்பது ராம்சேனா.
மகாராஷ்டிர மாநிலத்தில் சிவ சேனா செய்யும் செயல்களை கர்நா டக மாநிலத்தில் ராம்சேனா செய் கிறது. கலாச்சார காவலர்கள் என்று தங்களுக்கு தாங்களே பட்டம் சூட்டிக் கொண்டு காவல்துறை மீது தாக்குதல்; கலைஞர்கள் மீது தாக்கு தல்; காதலர்தின விழா மீது தாக்கு தல் என்று தொடர்ச்சியாக நடத்தி வருவது சிவசேனா என்ற மதவெறி, இனவெறி கூட்டம். இதற்கு இணை யாக இப்போது ராம்சேனா புறப் பட்டிருக்கிறது.
கர்நாடக மாநிலம் மங்களூரில் பெண்கள் மது அருந்தி விட்டார்கள் என்று சொல்லிக் கொண்டு அவர் களை வீதியில் ஓட ஓட விரட்டி அடித் தது இந்தக் கும்பல். அண்மையில் இந்தியா - பாகிஸ்தான் நட்புறவு முயற்சியாக இருநாடுகளின் பத்திரி கையாளர்கள் சந்தித்துக் கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்ளும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் புகுந்த ராம்சேனா குண்டர் பாகிஸ் தான் செய்தியாளர்களைத் தாக்க முயற் சித்தார் என்ற செய்தி வெளியாகி யிருக்கிறது.
மதச்சாயம் பூசுவதிலிருந்து விளை யாட்டையும் விட்டு வைக்காத இந்த மதவெறிக் கூட்டத்தை கட்டுப்படுத்தி வைக்காவிட்டால் எதிர்கால இந் தியா இருள்மயமாகத்தான் இருக்கும்.
எனவே இதற்குத் தேவையான நடவடிக்கைகளையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது. இதன் விவரங்களை நாளை பார்ப்போம்.
திங்கள், 20 ஏப்ரல், 2009
சத்தியம் தவறாத உத்தமர் போலவே நடிக்கிறார்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக