நதி எச்சரிக்குமா? ஆம். அழுகி மிதக்கும் பிணங்களும், கொல்லப்பட்ட வர்கள் ரத்தத்தால் சிவப்பு நிறமாகி விட்ட அந்த நதியும், சகிக்க முடியாத துர்நாற்றமும், நதி ஓடும் கிழக்கு ஜாவா முழுமையையும் பயங்கர அச்சத்தில் உறையவைத்துக்கொண்டிருந்தது.
1965-66ல் இந்தோனேசியாவில் ஐந்து லட்சம் கம்யூனிஸ்ட்டுகள் மற்றும் ஆதர வாளர்கள் கோரப்படுகொலை செய்யப் பட்டனர்.
உலகில் இஸ்லாமியர்கள் எண்ணிக் கையில் முதலிடம் வகிக்கும் நாடு. அதேசமயம் வேறு பல மதத்தவரும், இனத்தவரும் வாழ்கிற வானவில் பூமி. தீவுக்கூட்டம் அதிகம்; அடிக்கடி சுனாமி மிரட்டும். சுனாமியப் பேரழிவுகள் மட்டு மல்ல; உலகின் மிகக் கொடிய மனிதப் படுகொலையின் பூமியும் இந்தோனே சியா என்பது வரலாற்றுச் செய்தி.
19ஆம் நூற்றாண்டிலும் 20ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலும், டச்சு நாட்டு காலனியாக இருந்தது இந்நாடு. பிலிப் பைன்ஸ், மலேசியா போன்ற நாடுகளும் அப்படியே.
1919ஆம் ஆண்டு டச்சு நாட்டு சோஷலிஸ்டான ஹெனக் செனீவிலிட் என்பவரால் 85 உறுப்பினர்களைக் கொண்ட இந்தோனேசிய சமூக ஜன நாயகக் கழகம் துவக்கப்பட்டது. டச்சு ஆதிக்கத்திலுள்ள கிழக்கு இந்தோனே சியாவில்தான் இது பிறந்தது. துவக்கத் தில் இந்தோனேசிய விடுதலைக்காக இக்கட்சி குரல் கொடுக்கவில்லை. இக் கட்சியில் ஆரம்பத்தில் டச்சுக்காரர்களே அதிகம் இருந்தனர்.
1917 ரஷ்ய புரட்சி காலகட்டத்தில் இக்கழகம் பிளவுபட்டு இந்தோனேசிய சமூக ஜனநாயகக் கட்சியாக உரு வெடுத்தது. இந்தோனேசிய துறைமுகங் களுக்கு வந்துபோன மாலுமிகள் மற்றும் ராணுவ வீரர்களைக் கொண்டு விரை விலேயே செம்படை ஒன்று அமைக்கப் பட்டது. இதன் எண்ணிக்கை மூவாயிரத் தைத் தாண்டியது. உடனடியாக ஆயுதக் கலகத்தில் இறங்கியது. பலமின்மையும் பக்குவமான சூழல் இன்மையும் மக்கள் ஆதரவு இன்மையும் இவர்களுக்கு எதி ராக அமைந்தது. டச்சு ஆதிக்கப்படை களால் கலக முயற்சி முறியடிக்கப்பட் டது. தலைவர்கள் நாடு கடத்தப்பட்டனர். 40 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப் பட்டது.
இக்கலகம் தலைவர்களிடையே கருத்து மோதலுடன் கூடிய பிளவை உருவாக்கியது. செனீவிலிட் முயற்சி யால் `இஸ்லாமிக் ஒன்றியம்’ என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு அது மக் களைக் கவர்ந்தது. இது கட்சிக்கு புத்து யிர் கொடுத்தது. 1920ஆம் ஆண்டு மே 23-ஆம் நாள் நடந்த மாநாட்டில் கட்சி பகிரங்கமாக தன்னை இந்தோனேசிய கம்யூனிஸ்ட் சங்கம் என்று அறிவித்தது. பி.கே. ஹெச். என சுருக்கமாக அழைக் கப்படும் இக்கம்யூனிஸ்ட் கட்சிதான் ஆசியாவில் உதித்த முதல் கம்யூனிஸ்ட் கட்சி. 1921ல் நடைபெற்ற கம்யூனிஸ்ட் சர்வதேச அகிலத்தில் இக்கட்சியின் சார்பாக செனீவிலிட் பங்கேற்றார்.
`இஸ்லாமிய ஒன்றியம்’ என்கிற பெயரில் கட்சிக்குள் தனியாக இயங்கிய வெகுஜன மேடையின் இறுதி நோக்கம் கம்யூனிசமே என்பதை அறிந்து கொண்ட இஸ்லாமிய மதவெறியர்கள் எதிர்ப்புக் குரல் கொடுக்கத்துவங்கினர். 1921ல் இஸ் லாமிய ஒன்றியம் உடைந்தது. ஆயினும் கட்சி நடவடிக்கைகள் தொடர்ந்தன.
வெளிநாட்டு சிறைகளில் வாடிய தலைவர்களும், தலைமறைவாக வாழ்ந்த தலைவர்களும் நாடு திரும்பியதும் தொழிற்சங்கங்கள் அமைக்கப்பட்டன. மீண்டும் கம்யூனிஸ்ட் கட்சி சுறுசுறுப் பாக இயங்கத் துவங்கியது.
கட்சியாக இயங்கியபோதும் சங்கம் என்ற பெயர் இருந்ததால் 1924ல் மாநாட் டில் இந்தோனேசிய கம்யூனிஸ்ட் கட்சி (பிகேஐ - ஞமுஐ) என பெயர் மாற்றப் பட்டது.
கட்சிக்குள் அதிதீவிர தலைமை தலையெடுத்தது. உடனடியாக டச்சு ஆதிக்கத்தை தூக்கி எறிவதென முழக்க மிட்டு, ரயில்வே வேலை நிறுத்தம் உட் பட போராட்டங்களைத் துவக்கினர். இம் முறையும் தோல்வி. தலைவர்கள் தலை மறைவாயினர். 13,000 பேர் கைது செய் யப்பட்டனர். 4,500 பேர் கடுஞ்சிறைத் தண்டனை பெற்றனர். ஆயிரக் கணக்கானோர் நாடு கடத்தப்பட்டனர். வழியிலேயே பலர் இறந்தனர்.
கட்சி ஓய்ந்துவிடவில்லை. தலை மறைவாக இருந்தே தொழிற்சங்கங்கள் உட்பட பல்வேறு அமைப்புகளை உரு வாக்கி வழிநடத்தினர். 1945ல் ஜப்பான் சரணடைந்ததைத் தொடர்ந்து இந்தோனேசிய அரசியல் களம் மறுபடியும் சூடானது. இப்போது ராணுவத்துக்குள் ளும் பிகேஐ செல்வாக்கு விரிந்தது. 1948ல் மீண்டும் விடுதலை முயற்சி. மீண் டும் தோல்வி. 36ஆயிரம் பேர் சிறை யிலடைக்கப்பட்டனர். நூற்றுக்கணக்கில் நாடு கடத்தப்பட்டனர்.
வெட்ட வெட்ட முளைக்கும் வாழை யென மீண்டும் மீண்டும் வளர்ந்தது அங்கு கம்யூனிஸ்ட் கட்சி. தீபக் நசுந் துரா அதிக் என்பவர் தலைமையில் கம் யூனிஸ்ட் கட்சி தேசிய நிலையை கணித்து புதிய தந்திரங்களை வகுத்தது. அப்போது அந்நாட்டு அதிபராக இருந்த சுகர்னோ கம்யூனிஸ்ட் அல்ல. ஆயி னும் ஜனநாயகவாதி. 1955 தேர்தலில் கம்யூனிஸ்ட்டுகள் ஆதரவுடன் அவர் பிரதமர் ஆன பிறகு அவரது செயல் பாடு மேலும் மேலும் முற்போக்குத் திசையில் பயணித்தது.
1950களில் 5ஆயிரம் ஆக இருந்த கட்சி உறுப்பினர் எண்ணிக்கை 1954ல் 15 லட்சமாக உயர்ந்தது. தேர்தலில் 16 சதம் வாக்குகளையும் 39 இடங்களையும் பெற்றது.
ராணுவத்தில் இருந்த அமெரிக்க ஆதரவு சக்திகள் 1958ல் கம்யூனிஸ்ட்டு களை இராணுவத்தில் இருந்து களை யெடுக்கவும், ஆட்சியைக் கைப்பற்றவும் செய்த முயற்சியை சுகர்னோ திறமை யாக முறியடித்தார்.
1959ல் கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டிலேயே சுகர்னோ பங்கேற்றார். தேசியம், மதம், கம்யூனிசம் என்ற மூன்று கருத்துக்களையும் ஒன்றாகக் குழைத்து இந்தோனேசிய மொழியில் இச்சொற்களின் முதல் எழுத்துக் களைக் கோர்த்து “நசகோம்” (சூஹளுஹமுடீஆ) என முழக்கமிட்டார். சுகர்னோ ஆட்சியில் கம்யூனிஸ்ட்டு கள் இளைய பங்காளிகள் ஆனார்கள்.
கட்சியின் உறுப்பினர் பலம் 30 லட்சத்தையும் தாண்டியது. சீனாவுக்கும் ரஷ்யாவுக்கும் வெளியே மிகப்பெரிய கம்யூனிஸ்ட் கட்சி இது என்றானது.
கம்யூனிஸ்ட்டுகள் வளர்ச்சி, இஸ்லா மிய மதவாத சக்திகள், ராணுவத்தில் அமெரிக்க ஆதரவு சக்திகள் இம் மூன்றையும் சமப்படுத்தி கையாள சுகர்னோ பெரும்பாடுபட்டார்.
பிரிட்டிஷ், அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசுகளின் எண்ணெய் வயல்கள் மற்றும் ஆலைகள், சொத்துக்கள் மீது கைவைக்க கம்யூனிஸ்ட் கட்சி செய்த நிர்பந்தம் அதிகரித்தது.
இனியும் தாமதித்தால் சொத்துகளை இழக்க நேரிடும், சுரண்டும் வாய்ப்பு கை நழுவிவிடும் என்பதால் வெறிகொண்ட அமெரிக்க சிஐஏ மிகப்பெரிய சதி வலையை பின்னியது.
திடீரென ராணுவ உயர் தளபதிகள் ஏழுபேர் கொல்லப்பட்டு நடு வீதியில் வீசப்பட்டனர். இதனைச் செய்தது கம்யூ னிஸ்ட்டுகள் என்று அமெரிக்க ஊடகங் களும், ராணுவ வட்டாரமும் செய்தி பரப்பின. `கம்யூனிச வன்முறை’ என்கிற பூச்சாண்டியை ஏகாதிபத்தியம் மக்கள் முன் காட்டி மிரட்டியது.
மாணவர் அமைப்பை உருவாக்கி அதற்கு ராணுவப்பயிற்சி அளித்தது சிஐஏ. மேலும் ஆயுதங்களும் வழங்கப் பட்டன.
இதற்கிடையில் சுகர்தோ என்கிற அமெரிக்க கையாள் ராணுவத் தளபதி யாகப் பொறுப்பேற்றார். சுகர்னோ ஆட்சி தூக்கியெறியப்பட்டது. பயிற்று விக்கப்பட்ட மாணவ குண்டர் படை வீதிகளில் வெறியாட்டம் போட்டது.
“மக்கள் கொந்தளிப்பை ஒன்றும் செய்ய முடியாது”
“மக்களின் தன்னெழுச்சியான கலவரம் இது”.
என ராணுவம் கூறியது. ராணுவத் திற்குச் சாதகமான இரு பத்திரிகைகள் தவிர மற்ற அனைத்து ஊடகங்களும் முடக்கப்பட்டன. உள்நாட்டிலும் வெளி நாட்டிலும் உள்ளோர் இராணுவம் சொல் வதை மட்டுமே நம்பியாக வேண்டும்.
ஜாவா, பாலி என எங்கும் நர வேட்டை தாண்டவமாடியது. கம்யூ னிஸ்ட்டுகளை மட்டுமல்ல; கம்யூ னிஸ்ட் தொழிற்சங்க உறுப்பினர்களை, ஆதரவாளர்களை யாரையும் விட்டு வைக்க வில்லை. செப்டம்பர் 30ல் துவங் கிய இதனை செப்டம்பர் எழுச்சி என இராணுவம் கூறியது.
“ஆணிவேர் சல்லிவேர் அற கம் யூனிஸ்ட்டுகளைப் பிடுங்கி எறி” என இராணுவம் கொக்கரித்தது. இன்னும் அதிகாரப்பூர்வ கணக்கு தெரியவில்லை. சுமார் 5 லட்சம் பேர் படுகொலை செய்யப் பட்டனர். கட்டுரையின் ஆரம்பத்தில் கூறிய ரத்த ஆறு அப்போதுதான் ஓடியது.
சிறையில் அடைக்கப்பட்டவர் களும் அங்கேயே மாயமான முறையில் இறந்து கிடந்தனர். இதையெல்லாம் மூடிமறைத்து மக்களின் எழுச்சி என சுகர்தோ முழங்கினார்.
பயபீதியில் மக்கள் உறைந்தனர். சிஐஏ தனது திட்டம் வெற்றிபெற்றதால் மகிழ்ந்தது. தமது சுரண்டல் பாதுகாக்கப் பட்டதால் ஏகாதிபத்தியம் கூத்தாடியது. கொன்றழிக்கப்பட்டவர்கள் கம்யூ னிஸ்ட்டுகள் என்பதால் அவர்களை மனித ஜீவனாகக்கூட இந்த மனித உரிமைக் காவலர்கள் ஏற்கவில்லை. 30 ஆண்டுகள் சுகர்தோவின் ஆட்டம் தொடர்ந்தது. ஆவணங்கள் அழிக்கப் பட்டன. வரலாறு திருத்தப்பட்டது. வெற் றிக் கண்காட்சிகள் ஜோடிக்கப்பட்டன.
ஆனால் இப்போது ஆய்வாளர்கள் சிரமப்பட்டு வரலாற்றில் புதைந்துபோன மனிதப் படுகொலையை வெளிக் கொண்டு வருகிறார்கள்.
சிஐஏ ஆவணங்களே இந்த மனிதப் படுகொலைதான் உலகின் மிகப்பெரிய படுகொலை என ஒப்புக்கொள்கின்றது.
1965-66ல் `இந்தோனேசியாவில் தங்கள் சுரண்டலுக்கு ஆபத்து என்றதும் நடத்தப்பட்ட இப்படுகொலையை மீண்டும் மீண்டும் புதிய வடிவில் எங்கும் அரங்கேற்ற அமெரிக்கா தயங்காது. சிஐஏ தயங்காது. ஊடகங்கள் ஒத்து ஊதும்.
நடந்து முடிந்த நாடளுமன்ற தேர்தல் முடிவுகளின் பின்னால் அணிவகுத்து நிற்கும் ஏகாதிபத்திய சக்திகள் தங்கள் கணக்குகளை சரியாக முடித்துள்ளனர் இந்திய முதலாளிகளோடு சேர்ந்து இடதுசாரிகளின் பலத்தை பணத்தையும் அதிகாரத்தையும் கொண்டு குறைத்து இருக்கிறார்கள். இது முடிவு அல்ல கடந்த 5 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 48 மக்கள்விரோத திட்டங்கள் இனி எந்த தடையின்றி நிறைவேறும்.
இந்தியாவில் மேற்குவங்கத்திற்கு எதிராகச் செய்யப்படும் பொய்ப் பிரச்சாரம் பழைய வரலாற்றை நினைக்கத் தூண்டுகிறது. இடதுசாரிகளுக்கு இது எச்சரிக்கை மணி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக