ஞாயிறு, 17 ஜனவரி, 2010

அதிகார வர்க்கத்திற்கு புரியும் மொழி...

ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த இளம் பெண் ருச்சிகா மரணமும் அதன் பின் விளைவு களும் இன்று தேசம் தழுவிய விவாதப் பொரு ளாக மாறியிருக்கிறது. ருச்சிகா பாலியல் துன் புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு தற்கொலைக்கு தூண்டப்பட்டார். ஆகவே இது தற்கொலை யல்ல; கொலையே. இதில் முக்கிய குற்றவாளி முன்னாள் போலீஸ் டி.ஜி.பி. ரத்தோர் என்பது குறிப் பிடத்தக்கது. 1990ம் ஆண்டு நடந்த சம்பவத் திற்கு தற்போதுதான் நீதிமன்றம் சிறிய தண்ட னை கொடுத்துள்ளது. அதிலும் அந்த போலீஸ் அதிகாரி எளிதாக ஜாமீனில் வெளிவந்துவிட்டார்.


அவசர காலத்தில் மதுரா என்ற பெண் காவல் நிலையத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட போது அதை நியாயப்படுத்த ஆட்சியாளர்கள் முயன்றதும், அதை எதிர்த்து மனித உரிமை குரல் உறுதியாக ஒலித்ததும் மறந்துவிட முடியாத பதிவுகள். மதுரா மட்டுமல்ல, தமிழகத்தில் சிதம்பரம் பத் மினி, வாச்சாத்தி வழக்கு போன்ற பல வழக்கு கள் மீண்டும் மீண்டும் அதிகார வர்க்கத்தின் ஆணவத்திற்கும் அலட்சியத்திற் கும் அநீதிக்கும் சாட்சியம் பகர்ந்துள்ளன. சமீபத்தில் காஷ்மீரில் சோபியானில் இரு இளம் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட விவகாரம் அந்த மாநி லத்தையே உலுக்கியதும், வேறு வழி இல்லாமல் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டதும், சிபிஐ சில ஜவான்களை குற்றவாளியாக்கியதும் மறக் கக் கூடாத செய்திகள்.

காஷ்மீரில் சிபிஐ மக்களின் கோபத்துக்கு பயந்து எடுத்த சில நடவடிக்கைகளைக் கூட ருச்சிகா விவகாரத்தில் எடுக்கவில்லை என்ப தும், காவல்துறை அதிகாரியை காப்பாற்ற மொத்த அதிகார வர்க்கமும் ஆளும் கூட்டமும் கூட்டணி அமைத்துச் செயல்பட்டது என்பதும் வெட்கக்கேடானது. ஆயினும், ருச்சிகாவின் தோழியின் விடாப்பிடியான முயற்சியால் இன்று நாடு தழுவிய அளவில் இந்த விவகாரம் சூடாகி யிருக்கிறது.

இப்போது மத்திய அரசு எல்லா புகார்களை யும் முதல் தகவல் அறிக்கையாக (எப்.ஐ.ஆர்) பதிவு செய்ய ஆணை பிறப்பிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கெனவே உச்சநீதிமன்றம் கைது சம்பந்தமாக பல வழி காட்டுதல்களை வழங்கியுள்ளது. அதுகுறித்து அரசு ஆணையும் வெளியிட்டுள்ளது. எப்போதா வது சில ஏடுகளில் அரசு விளம்பரமாக அது வெளியிடப்பட்டதும் உண்டு. ஆனால், எந்தக் காவல் நிலையத்திலாவது அது பின்பற்றப்படு கிறதா? கேள்விக்குறிதான்.

ஆகவே, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது மட்டும் தீர்வாகிவிடாது. அந்நிய ஆட்சி யின்போது அவர்களின் நலனைக் காப்பதற்காக உருவாக்கப்பட்ட காவல்துறை, அதே கொள்கை யோடு அதே பயிற்சியோடு மக்கள் விரோதமா கவே செயல்பட்டு வருகிறது என்கிற உண்மை யை முதலில் அங்கீகரிக்க வேண்டும். காவல் துறையின் பயிற்சியையும் நோக்கத்தையும் மனித உரிமையோடு இணைந்ததாக மாற்றிய மைக்காத வரை எத்தனை ஆணை பிறப்பித் தாலும் பயனில்லை.

அதேபோல நீதிமன்றங்களும் அதிகார வர்க்க வாக்குமூலங்களை மட்டுமே சார்ந்திருப் பதும், அடித்தட்டு மக்களின் சன்னமான முன கல்களுக்குப் பின்னால் இருக்கும் நியாயத்தை வேதனையை நீதிமன்றங்கள் முறையாக காது கொடுத்து கேட்க மறுப்பதும் தொடர்கதையாக இருக்கிறது. ஆகவே, நீதித் துறையிலும் மாற்றங் கள் தேவை.

கருத்துகள் இல்லை: