வியாழன், 13 மே, 2010

காங்கியனூரில் நடந்தது என்ன? துணை முதல்வருக்கு மறுப்பு

கே.பாலகிருஷ்ணன்

விழுப்புரம் மாவட்டம் காங்கியனூர் கிராமத்தில் நடைபெற்ற கோவில் நுழை வுப்போராட்டம் குறித்து தமிழ்நாடு சட்டப் பேரவையில் தமிழக துணை முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ள கருத்துக்கள் உண்மைக்கு புறம்பானது. காவல்துறையின் தவறுகளை மூடி மறைப்பதாகும்.

இக்கிராமத்தில் உள்ள கோவில் திருவிழாக்களில் நீண்டகாலமாக தலித் மக்கள் அனுமதிக்கப்படுவதில்லை. 2009ம் ஆண்டு நடைபெற்ற திருவிழாவி லும் பொங்கல் படைக்கச் சென்ற தலித் துகள் அடித்து விரட்டப்பட்டார்கள். தாக் கியவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அமைதியான முறையில் சாலை மறியலில் ஈடுபட்ட தலித் மக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் மீது வழக்குப்பதிவு செய்து, கைது செய்யப் பட்டார்கள்.

மாவட்ட நிர்வாகத்தின் தவறான போக்குகளை கண்டித்தும் தாமதமில் லாமல் தலித் மக்களை கோவிலுக்குள் அனுமதிக்க வேண்டுமெனவும், மாவட்ட நிர்வாகத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பலமுறை நேரில் சந் தித்து வற்புறுத்தியதோடு, ஆர்ப்பாட்டங் களும் நடத்தப்பட்டன.

மாவட்ட நிர்வாகம் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காத சூழ்நிலை யில்தான் தீண்டாமை ஒழிப்பு முன்ன ணியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யும் மாநில அளவில் நடத்தத் திட்டமிட்ட தீண் டாமை ஒழிப்பு நேரடி நடவடிக்கை யின் ஒரு பகுதியாக, காங்கியனூரில் கோவில் நுழைவுப்போராட்டம் அறிவிக் கப்பட்டது. போராட்டம் அறிவிக்கப்பட்டு ஒரு மாத காலம் ஆகியும் மாவட்ட நிர்வாகம் இப்பிரச்சனையில் சுமூக தீர்வுகாண எந்த முயற்சியும் மேற்கொள்ள வில்லை.

மாறாக செப்டம்பர் 30, அதாவது போராட்டத் தினத்தன்று ஏராளமான ஆயு தப்படையினரும் அதிரடிப்படையினரும் கிராமத்தில் குவிக்கப்பட்டிருந்தனர். போதாக்குறைக்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரும் பிரசன்னமாயிருந் தார். போராட்டத்துக்கு தலைமை தாங்கிய மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற் குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் , ஜி.லதா எம்.எல்.ஏ., மாவட்டச் செயலா ளர் ஜி.ஆனந்தன் மற்றும் ஏராளமான ஆண்களையும் பெண்களையும் கிராமத் திற்கு இரண்டு கி.மீ. தூரத்துக்கு வெளி யிலேயே காவல்துறை தடுத்து நிறுத் தியது.

காவல்துறையிடம் சுமார் 2 மணி நேரம், கோவிலுக்குள் அந்த கிராம தலித் துக்களை அனுமதிக்க வேண்டும், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், அவர்களை தலைமை தாங்கி அழைத்துச் செல்ல வேண்டும் என்பன உள்ளிட்ட பல ஆலோசனைகளை போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்கள் வற்புறுத்தினர். ஆனால், முன்மொழியப்பட்ட ஆலோச னைகள் அனைத்தையும் நிராகரித்த தோடு, “நீங்கள் கலைந்து செல்லாவிட் டால் தடியடி நடத்த வேண் டிய நிலைமை ஏற்படும்” என தொடர்ந்து மிரட்டும் பாணியிலேயே மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கூறி வந்தார்.

மேலும், சட்டமன்ற உறுப்பினர் ஜி. லதா, கோவிலுக்குள் செல்வதற்கு சட்ட மன்ற உறுப்பினருக்கே அனுமதி இல் லையா என கேட்டபோது, அவரை கீழே தள்ளி கொடூரமாகத் தாக்கியதுடன் மற்றவர்கள் மீதும் கண்மூடித்தனமாக தாக்குதல் தொடுக்கப்பட்டது. தடியடி யில் சட்டமன்ற உறுப்பினர் உட்பட 50க்கும் மேற்பட்டவர்கள் படு காய மடைந்தனர். குதிரை கீழே தள்ளியதும் இல்லாமல் குழியும் பறித்தது போல தாக்குதலில் படுகாயம் அடைந்தவர்கள் உட்பட 104 பேர் மீது வழக்கு பதிவுசெய்து, அனைவரும் கைது செய்யப்பட்டு சிறை யிலடைக்கப்பட்டனர்.

இந்த உண்மைகளையெல்லாம் மறைத்துவிட்டு, ஏதோ தள்ளுமுள்ளு ஏற்பட்டதாகவும் அதில் இரண்டு காவலர் கள் காயமடைந்ததுடன் மூன்று வாகனங் கள் சேதமடைந்ததாகவும் மு.க.ஸ்டா லின் கூறியுள்ளார். இதன்மூலம் அமைதி யாக கோவில் நுழைவுப் போராட் டத்தில் ஈடுபட்டவர்களை வன்முறை யாளர் களாக சித்தரிப்பது உண்மைக்கு புறம் பானது மட்டுமின்றி, திட்டமிட்டு மேற் கொள்ளப்படும் அவதூறு பிரச்சாரமும் ஆகும்.

ஒரு மாதத்துக்கு முன்பே போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தபோதிலும், போராட்டம் நடத்துவது வரையில் மாவட்ட நிர்வாகம் மவுனமாக இருந்தது ஏன்? போராட்டத்தின்போது மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தலை மையிலேயே தலித் மக்களை கோவி லுக்குள் அழைத்துச் செல்ல வேண்டு மென போராட்டத் தலைவர்கள் வற்புறுத் தியபோது, மாவட்ட காவல்துறை கண் காணிப்பாளர் மறுத்தது ஏன்? போராட் டத்தால் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்த பின்னர் அடுத்த ஒரு வார காலத்தில் மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி தலை மையில் தலித் மக்கள் அந்த கோவி லுக்குள் அழைத்துச் செல்லப்பட்டார்கள். மாவட்ட வருவாய்த்துறை அதிகாரியால் முடிந்த காரியம், காவல்துறை கண்கா ணிப்பாளரால் முடியாத காரியமா?

அனைத்துக்கும் மேலாக ஒரு பெண் சட்டமன்ற உறுப்பினர் தாக்கப்பட்டு, கருப்பை பாதிக்கப்பட்டு, மோசமான நிலையில் மருத்துவமனையில் அனும திக்கப்பட்டிருந்த நிலையிலும் காவல் துறையினர் மீது சிறு நடவடிக்கை கூட மேற்கொள்ளப்படவில்லை. குறைந்த பட்சம் முறையான விசாரணைக்கும் உத் தரவிடவில்லை. மாறாக இச்சம்பவத் துக்கு பொறுப்பான மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அமல்ராஜ் ஐபிஎஸ், காவல்துறை உதவி இன்ஸ்பெக்டர் ஜென ரலாக பதவி உயர்வு அளிக்கப்பட் டுள்ளதே திமுக அரசின் காவல்துறை கொள்கைக்கு அத்தாட்சியாகும். இது தான் திமுக அரசின் சமூக நீதியா?

கருத்துகள் இல்லை: