புதன், 20 அக்டோபர், 2010

திமுக அரசின் அடக்குமுறை தர்பாரை தகர்த்தெறிவோம்!

சிஐடியு சங்கத்திற்கு வாடகைக்குக் கட்டிடம் கொடுக்கக் கூடாதென்று மிரட்டுவது, சிஐடியு தலைவர்களையும், தொழிலாளர்களையும் பொய்வழக்கு போட்டு சிறையில் அடைப்பது, நீதிமன் றம் விடுதலை செய்தாலும் தலைவர் கள் விடுதலையாகி விடக்கூடாது என்ற நோக்கத்தோடு மீண்டும் ஒரு பொய் வழக்கு போட்டு தலைவர்களை சிறையிலேயே அடைத்து வைப்பது போன்ற அப்பட்டமான அடக்குமுறை மூலம் பாக்ஸ்கான் தொழிலாளர்கள் போராட்டத்தை ஒடுக்கிட திமுக அரசு முயற்சித்து வருகிறது. திமுக அரசின் தொழிலாளர் விரோதப் போக்கு புதி தல்ல. ஏற்கனவே அங்கன்வாடி ஊழியர்கள், டாஸ்மாக் ஊழியர்கள், சத்து ணவு ஊழியர்கள் போராடுகிற போது சுமூகமாகப் பிரச்சனைகளை தீர்ப்பதற் குப் பதிலாக தற்காலிக வேலை நீக்கம், நிரந்தர வேலை நீக்கம், கைது, சிறை என ஜனநாயகத் தின் குரல் வளையை திமுக அரசு நெரித்தது.

இத்தகைய தொழிலாளர் விரோதப் போக்கை எதிர்த்து வரு கிற 21.10.2010 அன்று கூட் டாக ஆர்ப்பாட்டம் நடத்தி கண்டன குரலெழுப்புவ தென சிபிஐ(எம்), சிபிஐ ஆகிய இரண்டு கட்சிக ளும் முடி வெடுத்துள்ளன.


இவ்வாறு உழைக்கும் மக்களுக் கும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் ஆத ரவாக கம்யூனிஸ்டுகள் குரலெழுப்பி னால், அரசின் மக்க

ள் விரோத கொள் கைகளை விமர்சித்தால் திமுக தலை வர் கம்யூனிஸ்டுகள் எழுப்பும் பிரச்சனைக ளுக்குத் தீர்வு காண்பதற்கு பதிலாக, விளக்க மளிப்ப தற்குப் பதிலாக கம்யூ னிஸ்டுகளை வசைபாடு கிறார்.

“ரஷ்யாவில் உள்ள கம்யூனிஸ்ட் கொள்கை புனிதமானது, ஏழைகளை வாழ வைக்கிறது. தொழி லாளர்களுக்கு உதவுகிறது. உழைப்பாளிகளுக்கு உதவி செய்கிறது. ஆனால் இந்தியா வில் குறிப்பாக இப்போது உள்ள கம்யூ னிஸ்டுகள் கம்யூனிசத்திற்கு எதிராக உள்ளனர்”(தினத்தந்தி 11-10-2010) என்று நாகையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசி இருக்கிறார் தமிழக முதல்வர்.

பாக்ஸ்கான் தொழிலாளர் களை வாழ வைக்க, அவர்களுக்கு உதவி செய்யத்தானே அவர்கள் நடத்தும் போராட்டத்திற்கு சிஐடியு மாநில பொதுச் செயலாளர் தோழர் அ. சவுந்தரராசன் தலை மை ஏற்றார். அவர் மீதும் காஞ்சிபுரம் சிஐடியு மாவட்டச் செயலாளர் தோழர் இ. முத்துக்குமார் மீதும் பொய் வழக்கு போட்டு கைது செய்து சிறையில் அடைத்தது திமுக அரசு தான். அதுவும் முதல்வர் பொறுப்பில் உள்ள காவல் துறை தான்.

அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஆதரவாக, டாஸ்மாக் ஊழியர்க ளுக்கு ஆதரவாக, சத்துணவு ஊழியர்களுக்கு ஆதரவாக, பாக்ஸ்கான் தொழிலாளர்களுக்கு ஆதரவாக, நெய்வேலி ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக கம்யூனிஸ்டுகள் குரல் கொடுத் தால் அதை கம்யூனிச விரோதம் என்கிறார் திமுக தலைவர்.

தொழிலாளர் உணர்வுகளுக்கு விரோதமான திமுக அரசு

பாக்ஸ்கான் பன்னாட்டு தொழிற் சாலையில் நிர்வாகத்தோடு திமுக தலைமையிலான தொமுச போட்ட ஒப்பந்தத்தை எதிர்த்து அங்கு பணியாற்றும் 1400 நிரந்தர தொழி லாளர்களும், 6000 ஒப்பந்த தொழி லாளர்களும் ஏற்றுக் கொள்ள மறுத்து சிஐடியுவில் சேர்ந்து ஆட் சேபனை தெரிவித்தார்கள். தொமுச போட்ட ஒப்பந்தத்தின் மீது தொழிலாளர்கள் மத்தியில் அதிருப்தியும், எதிர்ப்பும் உருவான தைக் கண்ட பாக்ஸ்கான் நிர்வா கம் எந்த சங்கத்திற்கு பெரும் பான்மை உள்ளது என்பதை தீர் மானிக்க ரகசிய வாக்கெடுப்பு நடத் திட வேண்டும் என தொழிலாளர் துறை ஆணையருக்கு கடிதம் எழு தியது. பன்னாட்டு நிறுவன நிர் வாகமே கடிதம் எழுதிய பிறகு உடனடியாக ரகசிய வாக்கெடுப்பு நடத்தி பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டிருந்தால் வேலை நிறுத்தம் என்ற பிரச்சனையே எழுந்திருக் காது. இருந்தால் தொமுச சங்கம் மட்டுமே இருக்க வேண்டும், வேறு எந்த சங்கமும் வரக் கூடாது என்ற திமுக தலைமை யின் ஜனநாயக விரோத போக்குதான் இந்த வேலை நிறுத்தத்திற்கு முக்கிய காரணம். தொழிலாளர் துறையும், மாநில திமுக அரசும் தொழிலாளர் நல னுக்கு விரோதமாக செயல்படு வதை எதிர்த்து செப்டம்பர் 22-ந் தேதியிலிருந்து பாக்ஸ்கான் தொழி லாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். வேலைநிறுத்தம் துவங்கிய பிறகாவது பிரச்சனை களுக்கு சுமூகமாக தீர்வு கண்டி ருக்கலாம். மாறாக போராட்டத்தை ஒடுக்கவே பாக்ஸ் கான் நிர்வாக மும், திமுக அரசும் முயற்சித்து வருகிறது.

ஹூண்டாய், நோக்கியா போன்ற பன்னாட்டு நிறுவனங்களில் தொழிற் சங்க உரிமைகள் மறுக்கப்படு வதும், தொழிலாளர்கள் பழிவாங்கப் படுவதும், இத்தகைய தொழிலாளர் விரோத நடவடிக்கைகளுக்கு திமுக அரசு உடந்தையாக இருப்ப தும் அனைவரும் அறிந்த ஒன்றே.

அடுக்கடுக்கான பொய் வழக்குகள்

ஃபாக்ஸ்கான் ஆலைத் தொழி லாளர்கள் போராட்டத்தை ஆத ரித்த காரணத்திற்காக அ. சவுந் தரராசன், இ. முத்துக்குமார் மற்றும் 300 தொழிலாளர்கள் மீது 9.10.2010 அன்று குற்ற எண் 652/2010-ல் வழக்குப் பதிவு செய்து கைது செய் யப்பட்டு வேலூர் சிறையில் அடைக் கப்பட்டார்கள். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அனைவரை யும் நீதிமன்றம் ஜாமீனில் விடு தலை செய்ய உத்தரவிட்ட போது 8-10-2010 அன்று குற்ற எண் 650/2010ல் பொதுச்சொத்துக்கு சேதம் விளைவித்ததாக இன்னொரு பொய்வழக்கில் அ.சவுந்தரராசன், இ.முத்துக்குமார் மற்றும் 10 தொழி லாளர்கள் வெளியே வராதபடி மீண்டும் சிறையிலடைக்கப்படு கிறார்கள். இந்த முரண்பட்ட அணு குமுறையே தலைவர்கள் மீதும், தொழிலாளர்கள் மீதும் தொடுக்கப் பட்ட வழக்குகள் அனைத்தும் பொய் வழக்குகள் என்பதை நிரூ பிக்கிறது.

தலைவர்களுக்கு கைவிலங்கு

9-10-2010 அன்று போட்ட வழக்கில் விடுதலையானபோது, மீண்டும் ஒரு பொய் வழக்கில் 12-10-2010 அன்று உத்தரமேரூர் நீதி மன்றத்திற்கு அ.சவுந்தரராசன், இ. முத்துக்குமார் மற்றும் 10 தொழிலா ளர்களை கொண்டு வருகிறபோது, கிரிமினல் குற்றவாளிகளைப் போல கைகளில் விலங்கு மாட்டி கொண்டு வந்துள்ளனர். இது அப்பட்டமான மனிதஉரிமை மீறல். ஃபாக்ஸ்கான் போராட்டத்தை ஒடுக் கிட திமுக அரசு கொடூரமான முறை யில் அடுக்கடுக்காக அடக்கு முறையை ஏவிவிட்டுள்ளது.

மீண்டும் இரும்புக் கரமா?

இன்று நேற்றல்ல, 1970களில் கலைஞர் கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது, இதேபாணியில்தான் தொழிலாளர் கள் இயக்கத்தை ஒடுக்கிட திமுக அரசு முயற்சித்தது. சிம்சன் தொழி லாளர்கள் பிரச்சனையில் தொழி லாளர்கள் விரும்பாத ஒப்பந்தத் தையும், தொழிலாளர்கள் விரும் பாத தொமுச தலைவரையும் திணிக்கத் திமுக அரசு முயற்சித் ததை எதிர்த்து சிம்சன் தொழி லாளர்கள் வீரம்செறிந்த முறையில் போராடினார்கள். இந்தப் போராட் டத்தை ஆதரித்த காரணத்திற்காக தொழிற்சங்கத்தலைவர்கள் வி.பி. சிந்தன், பி.ஆர்.பரமேஸ்வரன், ஹரிபட், குசேலர் ஆகியோரை தேசிய பாதுகாப்புச்சட்டத்தின் கீழ் திமுக அரசு கைது செய்து சிறைப்படுத் தியது. இந்த கொடிய அடக்குமுறை யை எதிர்த்து அன்றைய சிஐடியு பொதுச்செயலாளர் பி.ராமமூர்த்தி அவர்கள் சென்னை உயர்நீதிமன் றத்தில் வழக்கு தொடுத்து வாதாடி யதால் தலைவர்களை நீதிமன்றம் விடுதலை செய்தது. சிம்சன் தொழி லாளர்கள் மீது அவர்கள் விரும்பாத ஒப்பந்தத்தையும், தொமுச தலை வரையும் திணித்தது போல், இன்று பாக்ஸ்கான் தொழிலாளர்கள் மீது அவர்கள் ஏற்காத ஒப்பந்தத்தை யும், தொமுச சங்கத்தையும் திணிக்க திமுக அரசு முயற்சிக் கிறது. 1970களில் கலைஞர் கரு ணாநிதி அவர்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்குவேன் என்று கொக்கரித்தார். அந்த அடக்கு முறையை முறியடித்த பெருமை தமிழக உழைப்பாளி மக்களுக்கும், ஜனநாயக இயக்கத்திற்கும் உள்ளது.

ஃபாக்ஸ்கான் தொழிலாளர்கள் மற்றும் நெய்வேலி ஒப்பந்தத் தொழிலாளர்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள அடக்குமுறையை முறிய டித்து, உழைக்கும் மக்களின் நலன் காக்க சிபிஐ(எம்), சிபிஐ இணைந்து 21-10-2010 அன்று சென்னையில் மகத்தான கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளது. உழைப்பாளி மக்கள் திரளாகக் கலந்து கொண்டு, கண்டனக்குரல் எழுப்ப வேண்டுகிறோம்.

ஜி. ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர், சிபிஐ(எம்)

கருத்துகள் இல்லை: