ஞாயிறு, 23 ஜனவரி, 2011

காவல்துறையினர் சித்ரவதை: இளைஞர் தற்கொலை


நாகப்பட்டினம்: நாகை மாவட்டம், கீழ்வேளூர் ஒன்றியம் சாட்டியக்குடியைச் சேர்ந்த வாலிபர் சங்கத் தோழரை, வழக்கு ஒன்றில் காவல்துறையினர் கைது செய்து, காவல்நிலையத்தில் ஜட்டியோடு வைத்து அடித்துச் சித்ரவதை செய்ததால் அவமா னம் தாங்காமல் அவர் தற்கொலை செய்து கொண்டார். இந்தச் சம்பவம் சனிக்கிழமை இரவு நடந்தது.

சாட்டியக்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள் கணபதி யின் குடும்பத்தினர். இவரது மகன் ரவிச்சந் திரன் எம்.ஏ. பட்டதாரி (37). இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத்தில் முக்கியப் பொறுப்பு வகிப்பவர். இவரது வீட்டுக்கு முன்புள்ள சாலையில் நீண்ட நாட்களாக ஒரு படுகுழி அமைந்து, தண்ணீர் தேங்கி பேருந்துகள் போகும்போதும் வரும் போதும் பள்ளத்தில் உள்ள தண்ணீர் இவ ரது வீட்டு வாசலில் தெறிக்கும். பல்வேறு புகார்கள் அளித்தும் ஒன்றும் நடைபெற வில்லை.

இந்நிலையில், ரவிச்சந்திரன் சனிக்கி ழமை பிற்பகல் 3 மணி அளவில் சாலையில் அமர்ந்து, திருவாரூர் - எட்டுக்குடி செல் லும் 18ம் எண் பேருந்தை மறித்துப் போராட் டம் செய்துள்ளார். பேருந்தின் ஓட்டுநர், நடத்துநர் ஆகியோர் வலிவலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்க, காவல்துறை யினர் ரவிச்சந்திரனைக் கைது செய்து, காவல்நிலையத்தில் ஜட்டியோடு வைத்து சித்ரவதை செய்துள்ளனர்.

தகவல் அறிந்து சிபிஎம் தோழர்கள் சென்று பேச்சுவார்த்தை நடத்தியதால் ரவிச்சந்திரன் விடுவிக்கப்பட்டு வீடு சென் றார். இந்தக் கொடிய சம்பவத்தால் அவ மா னம் தாங்காமல் ரவிச்சந்திரன் அன்றி ரவே விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.

ரவிச்சந்திரனுக்கு கலைச்செல்வி (26) என்னும் மனைவியும், இரு ஆண் குழந்தை களும் உள்ளனர். கலைச்செல்வி மாதர் சங் கத்திலும் ‘வாழ்ந்து காட்டுவோம்’ அமைப் பிலும் பணியாற்றுபவர்.

இதே நிலையில் காவல்துறையினரின் சித்ரவதையால் அவமானம் தாங்காமல் ரவிச்சந்திரன் தற்கொலை செய்துள்ளார். எனவே, ரவிச்சந்திரன் குடும்பத்தினருக்கு அரசு உரிய நிவாரணம் அளிக்க வேண்டும். மேலும் அக்குடும்பத்தில் ஒரு வருக்கு அரசு வேலை அளிக்க வேண்டும் என சிபிஎம் கீழ்வேளூர் ஒன்றியச் செயலாளர் எம்.காத்த முத்து வலியுறுத்தியுள்ளார்.

கருத்துகள் இல்லை: