இந்திய அரசமைப்பு சாசனத்தின் சட்டப் பிரிவு-21 குடிமக்கள் ஒவ்வொருவரின் வாழ்வு ரிமையையும் உறுதிப்படுத்துகிறது. வாழ்வுரிமை என்கிறபோது, விலங்குகள் போல் வாழ்வதல்ல. தன்மானத்தோடு, தரமான வாழ்க்கையை வாழ்வதே வாழ்வுரிமை. அதற்கு சுகாதாரமும் கல்வியும் அடிப்படைத் தேவை. நோய் வராமல் தடுப்பதே சுகாதாரமான வாழ்வுக்கு உத்தரவாதம். அனைவருக்கும் நோய்த் தடுப்பு மருந்துகளை இலவசமாகக் கொடுப் பது ஒரு நல்வாழ்வு அரசின் கடமையாகும்.
இந்தியாவில் வருடத்திற்கு 2 கோடியே 6 லட்சம் குழந்தைகள் பிறக்கின்றன. இந்தியாவில் எல்லா மூலைகளுக்கும் பிசிஜி வேக்சின் (டி.பி. நோய்க்கு எதிரான தடுப்பு மருந்து) குழந்தை பிறந்தவுடன் கொடுக்க இலவசமாக அளிக் கப்பட்டு வருகிறது. அனைத்துக் குழந்தை களுக்குமான நோய்த்தடுப்புத் திட்டத்தின் கீழ் இது அரசாங்கத்தால் வழங்கப்படுகிறது.
இந்தியாவில் டி.பி. பரவலாகக் காணப் பட்டாலும் குழந்தைகளுக்கு டி.பி. இல்லை. குழந்தை பிறந்தவுடன் பிசிஜி கட்டாயமாக, கட்டணமில்லாமல் வழங்கப்படுவதாலேயே குழந்தைகளை கொடிய டி.பி. நோயிலிருந்து காப்பாற்ற முடிகிறது. இந்த பிசிஜி மட்டும் பிறந்தவுடன் தரப்படவில்லையனால் குழந்தை கள் மூளை டி.பி. நோயால் பாதிக்கப்பட்டு பெரும் அவதிக்கு உள்ளாக நேரிடும். அப்படி பாதிக்கப்பட்ட பின் சிகிச்சை அளித்து உயி ரைக் காப்பாற்றினாலும் சிலருக்கு மூளை வளர்ச்சி பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
இது போன்று உடல் உறுப்புகளைச் செயலிழக்கச்செய்கிற நோய்களிலிருந்தும், உயிர்க் கொல்லி நோய்களிலிருந்தும் குழந்தை களைக் காப்பாற்றவே பல வகையான நோய்த் தடுப்பு மருந்துகள் கொடுக்கப்படுகின்றன. இந்த மருந்துகளை உரிய முறையில் மிக குறைந்த விலையில் தயாரித்து அளித்து வருவது இந்தியாவில் உள்ள மூன்று பொதுத் துறை நிறுவனங்களாகும். இவற்றில் இரண்டு தமிழகத்தில் உள்ளன. சென்னை கிண்டியில் உள்ள பிசிஜி-விஎல் நிறுவனம் அறுபது வருடம் பழமையானது. குன்னூரில் உள்ள பாஸ் டியர் நிறுவனம் நூற்றாண்டு கண்டது. இதே போல் இமாசலப்பிரதேசத்தில் உள்ள சிஆர்ஐ நிறுவனமும் நூற்றாண்டு பழமையானது.
இந்த மூன்று நிறுவனங்களிலும் நோய்த் தடுப்பு மருந்து உற்பத்தியை நிறுத்த உத்தர விடப்பட்டது. காங்கிரஸ் கூட்டணி அரசின் முதல் சுற்று ஆட்சியில் அன்றைய சுகாதார அமைச்சர் அன்புமணி இராமதாஸ் இதற்கு ஆணையிட்டார். இம்மூன்று நிறுவனங்களை யும் மூடிவிட முயற்சிகள் நடந்தன.
தொடர்ந்து நடைபெற்ற மக்கள் இயக்கத் தின் பலனாகவும், மார்க்சிஸ்ட் கட்சியின் நாடா ளுமன்ற உறுப்பினர்கள் பிருந்தாகாரத், டி.கே. ரங்கராஜன் முயற்சிகளாலும் மூன்று பொதுத் துறை நிறுவனங்கள் மூடப்படுவது தடுக்கப் பட்டன.
தொடர் போராட்டத்தின் விளைவாக மத்திய அரசு தடை உத்தரவை திரும்பப் பெற் றது. உத்தரவைத் திரும்பப் பெற்றால் மட்டும் போதாது, தடுப்பு மருந்து உற்பத்திக்கு ஆணை யிட வேண்டும், நிதி ஒதுக்கி வல்லுநர்களை அனுப்பி மூன்று நிறுவனங்களிலும் கட்ட மைப்பு வசதிகளைப் பெருக்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டங்கள் தொடர்ந்தன.
அதன் விளைவாக மத்திய அரசு தடுப்பு மருந்து உற்பத்தியை தொடங்க உத்தரவிட் டது. உத்தரவிடப்பட்டு ஒன்றரை வருடங்கள் ஆகியும் இன்றைய தேதி வரையில் ஒரு அலகு (யூனிட்) மருந்து கூட பொது மக்கள் பயன்பாட்டிற்கு வரவில்லை. ஒதுக்கப்பட்ட நிதியும் செலவு செய்யப்படவில்லை. அரசின் இந்த அணுகுமுறை பல சந்தேகங்களை எழுப்புகிறது. பொதுத்துறையில் நோய்த் தடுப்பு மருந்து உற்பத்தி இல்லாமல் போனால் தனியார் துறையில் அதன் விலை பல மடங்கு உயரும். இதனால் லாபம் அடையப் போவது தனியார் நிறுவனங்களே. அதுதான் அரசின் நோக்கமா?
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நோய்த் தடுப்பு மருந்துகளை உற்பத்தி செய்து வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வந்த இந்த நிறுவனங்களால் தற்போது ஏன் உற்பத்தி கூட செய்ய இயலவில்லை?
மக்கள் பயன்பாட்டிற்கு நோய்த் தடுப்பு மருந்துகளை பொதுத் துறையில் உற்பத்தி செய்ய விடாமல் திட்டமிட்டு எந்த சக்தியா வது தடுக்கிறதா? தெரிந்தே அரசு அதற்கு துணை போகிறதா?
நோய்த் தடுப்பு மருந்து உற்பத்தி செய்யும் மூன்று பொது துறை நிறுவனங்களையும் மூடிவிட்டு அவற்றை பரிசோதனைக் கூடங் களாக மாற்ற முயற்சி நடக்கிறதா?
இந்தக் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு இந்திய அரசுக்கு உண்டு.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் காங் கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். அத்துறை இணையமைச்சர் தமிழ்நாட்டை சார்ந்த தி.மு.க.காரர். மருந்து உற்பத்தி மத்திய இரசாயன மற்றும் உரத்துறையின் கீழ் வரு கிறது. இதன் அமைச்சர் திமுகவின் மு.க.அழகிரி. இந்த விவகாரத்தில் இவர்களின் மவுனம் நமக்குக் கவலையளிக்கிறது.
மூன்றில் இரண்டு நிறுவனங்கள் தமிழகத் தில் இருக்கின்றன. தடுப்பு மருந்துக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டாலும், அதன் விலை கடு மையாக உயர்ந்தாலும் அதனால் பாதிப் பிற்கு உள்ளாகப் போவது அரசின் பொது மருத்துவமனைகளும், உள்ளாட்சி அமைப்பு களின் ஆரம்ப சுகாதார நிலையங்களும், இவற்றில் பிறக்கிற லட்சக்கணக்கான ஏழை எளிய குடும்பங்களின் குழந்தைகளே. ஆகவே இவற்றைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கும், மாநில சுகாதாரத் துறைக் கும் உண்டு.
நோய்த் தடுப்பு மருந்து, நாய்க்கடி மருந்து, பாம்புக்கடி விஷ முறிப்பு மருந்து, டெடனஸ் உள்ளிட்ட குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றத் தேவையான மருந்துகளையும், கர்ப்பிணிப் பெண்களைக் காப்பாற்றும் மருந்து களையும், நாய்க்கடிக்கும் பாம்புக்கடிக்கும் உள்ளாகிற பெரியவர்களின் உயிரைக் காப் பாற்றும் மருந்துகளையும் உற்பத்தி செய்யும் பணியை மூன்று பொதுத்துறை நோய்த் தடுப்பு மருந்து உற்பத்தி நிறுவனங்களும் தொடங்கியாக வேண்டும். எக்காரணம் கொண்டும் நோய்த் தடுப்பு மருந்து உற்பத்தி செய்யும் இம்மூன்று பொதுத்துறை நிறு வனங்களையும் உற்பத்தியில் ஈடுபடாத வெறும் பரிசோதனைக் கூடங்களாக மாற்றி விடக் கூடாது.
போதிய நிதி ஒதுக்கியும், வல்லுநர்களை வழங்கியும் இவற்றின் கட்டுமானத்தையும் தரத்தையும் உயர்த்த இந்திய அரசு உடனடி யாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இந்நிறுவனங்களின் தரத்தையும், மருந்து உற்பத்தியையும் கண்காணிக்க வேண்டிய பொறுப்பு இந்திய அரசுக்கு உண்டு. தமிழக அரசுக்கும் இதில் பொறுப்பு உண்டு. மக்கள் பயன்பாட்டிற்கான உற்பத்தியை தொடங்க ஆணையிடுமாறு மத்திய அரசை மாநில அரசு வற்புறுத்த வேண்டும். மக்களின் மருத் துவ நலன் காப்பதற்கான இக் கோரிக்கை களை வலியுறுத்திதான் இன்று மாலை தமி ழகத் தலைநகர் சென்னையில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இது குழந்தைகளின் வாழ்வுரிமை பிரச் சனை. பிறக்கிற குழந்தைகள் உயிரோடு வாழ் வது அவர்களது உரிமை. அக்குழந்தைகள் ஊனத்தோடும், நோயுடனும் வளர்ந்தால் அது சமூகச் சிக்கலாகவும் மாறும். ஆட்சி யாளர்களும் அதிகார வர்க்கத்தினரும் இதை உணர்ந்து செயல்பட வேண்டும். இதை உணர்த்துவதற்கான ஆர்ப்பாட்டத்தில் பெருந் திரளாக அனைத்துப் பிரிவு மக்களும் பங் கேற்க அழைக்கிறோம். அது நம் கடமை.
திங்கள், 28 பிப்ரவரி, 2011
குழந்தைகள் உயிருடன் விளையாடும் காங்கிரஸ்
மருத்துவர் சீ.ச. ரெக்ஸ் சற்குணம்
லேபிள்கள்:
குழந்தைகள்,
சமூகம்,
நிகழ்வுகள்,
முதலாளிகள் அடிக்கும் கொள்ளை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
1 கருத்து:
பயணம் - பொதுபுத்தியிலுள்ள முசுலீம் மீதான வன்மம்
http://powrnamy.blogspot.com/2011/02/blog-post_27.html
கருத்துரையிடுக