புதன், 23 பிப்ரவரி, 2011

ஒரு வழியாக... வேறு வழியின்றி... JPC











2ஜி ஸ்பெக்ட்ரம்

ஊழல் குறித்து விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைத்திட பிரதமர் மன்மோகன் சிங் ஒப்புக்கொண்டுள்ளார். நாடா ளுமன்றத்தின் இரு அவைகளிலும் இது தொடர்பான அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார்.

இந்த அறிவிப்பின் மூலம் நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரை சுமூகமாக நடத்திச் செல்ல அரசு வழிவகுத்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடரின்போதே இந்த முடிவை அரசு எடுத்திருந்தால், அந்தக் கூட்டத் தொடரும் முறையாக நடந்திருக்கும் என்பதை மறுப்பதற் கில்லை.

கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்ட வில்லை என்று கூறுவதைப்போல, நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்காமலே ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து விசாரணை நடத்த அரசு அனைத்துவிதமான முயற்சிகளையும் மேற் கொண்டது என்றும், ஆனால் அந்த முயற்சி வெற்றிபெறவில்லை என்றும் பிரதமர் மன்மோகன்சிங் தனது அறிவிப்பில் கூறியுள்ளார். ஊழலை ஒழிக்க அரசு உறுதியாக உள்ளது என் றும் அவர் கூறியுள்ளார்.

நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு மறுப்பது ஏன் என்பது குறித்து அரசினால் எந்த ஒரு நியாயமான காரணத்தையும் முன்வைக்க முடியவில்லை. மாறாக, எதிர்க்கட்சிகளின் மீது பழிபோடுவதிலேயே குறியாக இருந்தனர். எதிர்க்கட்சிகளுக்கு ஜனநாயகத்தின் மேல் நம் பிக்கையில்லை என்றுகூட கூறினர்.

பொதுக்கணக்குக்குழு விசாரணையே போது மானது என்று அடம்பிடித்தது அரசுத்தரப்பு. ஆனால் பொதுக்கணக்குக்குழு முன்பு ஆஜரா கத் தயார் என்று பிரதமர் மன்மோகன் சிங் ஒரு புறத்தில் சவால்விட, நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியோ, மன்மோகன் சிங் அவ்வாறு ஆஜராக மாட்டார் என்று கூறினார்.

நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு மத்திய அரசு ஒப்புக்கொண்டது எதிர்க்கட்சி களின் வெற்றி என்பதைவிட ஜனநாயகத்தின் வெற்றி என்று கூறுவதே பொருத்தமாக இருக்கும். நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பான அனைத்து அம் சங்களும் முழுமையாக வெளியே கொண்டுவரப் பட்டு, இத்தகைய இமாலய ஊழல்கள் எதிர் காலத்தில் நடைபெறாமல் இருப்பதற்கான உரிய பரிந்துரைகள் வெளிவருவதும், அந்த பரிந்துரை கள் நேர்மையாகச் செயல்படுத்தப்படும் போதும் தான் இந்தப்பணி முழுமை பெறும்.

கூட்டுக்குழு அமைப்பதற்கு மறுத்துவந்த அரசு இப்போது ஒப்புக்கொண்டுள்ளது. ஆனால் அதே நேரத்தில் இந்த விசாரணையை நீர்த்துப் போகச் செய்வதற்கான சித்து வேலைகளில் அரசு இறங்காது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. எனவே அமைக்கப்படும் குழு அனைத்துத் தரப்பினரின் பிரதிநிதித்துவம் பெற்ற தாக அமைவதும், குறிப்பிட்ட காலவரம்புக்குள் விசாரணை முடிக்கப்படுவதும் அவசியமாகும்.

வேறு வழியில்லாத நிலையில்தான் நாடாளு மன்ற கூட்டுக்குழு விசாரணை அமைக்க ஒப் புக்கொண்டோம் என்ற தொனியில் பிரதமர் அறி விப்பு அமைந்துள்ளது. ஆனால் தேசத்தையே புற்றுநோயாக அரித்துக் கொண்டிருக்கும் ஊழல் நோய்க்கு மருந்து தேடுவது தலையாயக் கடமை யாகும். தாமதமாக அரசு அறி வித்திருந்த போதும் தேவையான ஒரு முடிவு இது என்பதை மறுப் பதற்கில்லை

கருத்துகள் இல்லை: