ஊழல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஊழல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 21 ஜனவரி, 2013

லஞ்சம் கொடு, கொள்ளை அடி, நாட்டை அடிமைப்படுத்து


இந்திய நிறுவனமாகிய ஜிஎம்ஆர் வசமிருந்த, 500 மில்லியன் டாலர் மதிப்புடைய மாலே சர்வதேச விமான நிலையத்தை, மாலத்தீவு அரசு தன் பொறுப்பில் எடுத்துக்கொண்டுவிட்டது. டிசம்பர் 1-ஆம் தேதி நள்ளிரவுக்குள் எல்லாவற்றையும் கொடுத்துவிட்டு வெளியேறுங்கள் என்று மாலத்தீவு அரசு நவம்பர் 27-ஆம் தேதி  சொன்னது. அதேபோல செய்தும்விட்டது.
 ஜிஎம்ஆர் நிறுவனம் மாலத்தீவு அரசுடன் 2010-ஆம் ஆண்டு கையெழுத்திட்ட ஒப்பந்தப்படி, மாலே சர்வதேச விமான நிலையத்தை விரிவாக்கம் செய்து, பராமரித்து 25 ஆண்டுகளுக்கு அதில் கிடைக்கும் வருவாயைப் பெறலாம். ஆனால் இந்த ஒப்பந்தம்,  மாலத்தீவு அரசுக்கும் அந்நாட்டு மக்களுக்கும் சாதகமாக இல்லை என்பதால், ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டது மாலத்தீவு அரசு.
 "இந்தியாவில் இதே ஜிஎம்ஆர் நிர்வகிக்கும் புதுதில்லி சர்வதேச விமான நிலையத்தின் வருவாயில் இந்திய அரசு 45 விழுக்காடு பெறுகிறது. ஆனால், மாலத்தீவு அரசுக்கு 1 விழுக்காடு மட்டுமே கிடைக்கிறது. ஒவ்வொரு பயணியிடமும் வசூலிக்கப்படும் விமான நிலைய மேம்பாட்டுக் கட்டணம் 25 டாலர் மிக அதிகம். மாலத்தீவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரிக்கிறது. நிகழாண்டில் மட்டுமே இக்கட்டணம் மூலம் 7 மில்லியன் டாலர் கிடைத்துள்ளது. எந்த வகையிலும் மாலத்தீவு அரசுக்குப் பயன் கிடைக்காவிட்டால் எதற்காக தனியார்வசம் எங்கள் விமான நிலையம் இருக்க வேண்டும்?' என்கின்றது மாலத்தீவு அரசு.
 மாலத்தீவு மிகச் சிறிய நாடு. ஆனால், அவர்களால் ஒரு இந்திய நிறுவனத்தை ஒரு வார காலத்தில் வெளியேற்ற முடிகிறது. இதை இந்தியாவில் நம்மால் செய்திருக்க முடியுமா?
 இந்தியாவில் நாற்கரச் சாலைகளை அமைத்துள்ள தனியார் நிறுவனங்கள் பல இடங்களில் டோல்கேட் அமைத்துக் கட்டணம் வசூலிக்கின்றன. எந்தெந்தப் பகுதிகளில், இவர்கள் செலவழித்த முதலீட்டையும், அதற்குரிய நியாயமான லாபத்தையும் மீட்டெடுத்தனர் என்று கணக்கிட்டு, நாற்கரச் சாலைகளை அரசு தன் பொறுப்பில் எடுத்துக்கொள்ள முடியும். ""கட்டு - உரிமைகொள் - செயல்படுத்து - ஒப்படை'' (பி.ஓ.ஓ.டி) என்ற அடிப்படையில்தான் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதில் பல இடங்களில் ஒப்பந்தப்படி முறையான சாலைப் பராமரிப்புகூடக் கிடையாது. ஆனாலும் மக்கள் நலன் கருதி இவர்களது ஒப்பந்தத்தை ரத்து செய்ய இந்திய அரசினால் முடியுமா?
 பிரான்ஸ் மிகச் சிறிய நாடு. அந்த நாட்டில் தேனிரும்பு தொழிற்கூடம் வைத்துள்ள இந்திய வம்சாவளித் தொழிலதிபர் மிட்டல், பிரெஞ்சு அரசுக்கு உறுதி கூறியபடி சில நூறு பேருக்கு வேலைவாய்ப்புகளை அளிக்கவில்லை என்பதற்காகவும், தொழிற்சாலை விதிமுறைகளை மீறியதற்காகவும் ""ஒழுங்காக இருந்தால் இரு, இல்லையேல் வெளியேறு'' என்று கூறிவிட்டது பிரெஞ்சு அரசு. இப்போது அந்நாட்டுடன் மிட்டல்  சமாதானம் பேசி, ""உடன்படிக்கையில் உள்ளபடி நடந்து கொள்கிறேன்'' என்று உறுதி கூறியிருக்கிறார்.
 ஆனால், உலகமயம், தாராளமயமாக்கல் என்கிற பெயரில் இந்தியாவில் இன்று நடப்பதென்ன? வோடஃபோன் நிறுவனம் வெளிநாட்டில் பங்குகளை விற்றதன் மூலம் இந்தியாவுக்கு ஏற்பட்ட இழப்பை நம்மால் பெற முடியவில்லை. போபால் விஷவாயு வழக்கில் இன்றளவும் கார்பைடு நிறுவனத்திடமிருந்து உரிய இழப்பீட்டை பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்மால் பெற்றுத்தர முடியவில்லை. அந்தத் தொழிற்சாலையில் இருக்கும் விஷக்கழிவான சயனைடை அப்புறப்படுத்த முடியவில்லை. இந்திய மக்கள் பணம் ரூ.25 கோடி செலவிட்டு சயனைடு குப்பையை அள்ள நினைத்தாலும் முடியவில்லை.
 இந்நிலையில் அன்னிய நேரடி முதலீட்டை சில்லறை வணிகம் உள்பட அனைத்துத் துறைகளிலும் அனுமதித்துவிட்டோம். குறிப்பாக, காப்பீட்டுத் துறையில் அன்னிய நேரடி முதலீடு அனுமதிக்கப்படுவது சில்லறை வணிகத்தைவிட மிக ஆபத்தானது என்று பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்தும் அரசு கவலைப்படவில்லை.
 சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீடு தொடர்பான வாக்கெடுப்புடன் கூடிய விவாதத்தில் வெற்றி பெறுவதற்காக, நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தன்வசப்படுத்த வால்மார்ட் நிறுவனம் ரூ.125 கோடி செலவிட்டுள்ளதாக மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் இப்போது குரல் எழுப்புகின்றன. இது பொய் என்று யாருமே சொல்ல மாட்டார்கள். ஐக்கிய முற்போக்குக் கூட்டணியே -பல "தியாகங்கள்' செய்திருக்கும்போது, இந்தியாவில் மிகப்பெரும் சந்தையை வளைத்துக் கொழிக்கப்போகும் வால்மார்ட், தனது சில்லறை வணிகத்துக்காகச் சில்லறையைச் சிதறவிடாதா என்ன!
 உள்ளே நுழைவதற்கே லஞ்சம் கொடுத்து வருவார்கள் என்றால், இவர்கள் மத்திய அரசு சொல்லும் எந்த நிபந்தனைகளைப் பின்பற்றுவார்கள், எந்த வேலைவாய்ப்புகளை உறுதி செய்வார்கள்? விவசாயிகளும் நுகர்வோரும் பயன்பெறுவார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்?
 சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பது மாநில அரசின் விருப்பம் என்கிறார்கள். இந்த நிறுவனங்கள், முதலீட்டுக்காக அனுமதிக்கப்பட்ட விதிகளை மீறின அல்லது கடைப்பிடிக்கவில்லை என்று பொறுப்பாக்குவது யாருடைய வேலை? மத்திய அரசினுடையதா? மாநில அரசினுடையதா? 30% உள்நாட்டு கொள்முதல் கடப்பாட்டை இந்திய அளவில் இந்நிறுவனம் கணக்கு காட்டுமா? அல்லது மாநில அளவிலா? எதுவுமே தெளிவில்லை. ஆனால், கதவுகள் திறக்கப்பட்டுவிட்டன. இப்போதே 3 மில்லியன் டாலர் இறக்கியுள்ளது வால்மார்ட் என்கிறார்கள்.
 அன்னிய நேரடி முதலீடு இந்தியாவுக்குள் வருவதிலோ, பன்னாட்டு நிறுவனங்கள் இங்கே செயல்படுவதிலோ தவறில்லை. அரசு, மக்கள் நலனில் அக்கறையுடன் கண்காணிப்பு அமைப்புகளை முறையாகச் செயல்பட அனுமதிக்குமானால், தவறுகள் தட்டிக்கேட்கப்பட்டு அவ்வப்போது தடுக்கப்படுமானால், அது நிச்சயமாக நன்மை பயக்கும் என்பதில் சந்தேகமில்லை. மாலே போன்ற குட்டித் தீவுக்கு இருக்கும் தேசநலனிலான அக்கறையும் துணிவும் சர்வ வல்லமை படைத்த இந்திய அரசுக்கு இல்லாமல் இருக்கிறதே, அதுதான் நமது பிரச்னை.
 பொருளாதார தாராளமயம் என்பது லஞ்சமும், ஊழலும், முறைகேடுகளும் தாராளமயமாக்கப்படுவதன் மறுபெயராகி விட்டதுதான் நமது பிரச்னை. இதை யார் யாரிடம் சொல்லித் திருத்துவது?

புதன், 28 டிசம்பர், 2011

லோக்பால் மசோதா 1968 முதல் 2011 வரை

லோக்பால் மசோதா, உணவுப்பாதுகாப்பு மசோதா ஆகிய இரண்டு மசோதாக்களும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப் பட்டுள்ளன. டிசம்பர் 27ம் தேதி துவங்கி மூன்று நாட்களும் விவாதம் நடைபெற உள்ளது. இதற்காக நாடாளுமன்றத்தின் குளிர் கால கூட்டத்தொடர் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இம் மசோதாக்கள் குறித்து பரபரப்பும் எதிர்பார்ப்பும் உருவாகியுள்ளது இயல்பான தொன்றே. பிறப்பிலிருந்து இறப்பு வரை இந்தியாவில் அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருப்பது ஊழல். இந்திய மக்கள் தங்கள் வாழ்க்கையின் அனைத்து நிலை களிலும் ஊழலைச் சந்தித்து வருகிறார்கள்.

சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே தான் முன்வைத்துள்ளபடி இம்மசோதா அமைய வேண்டுமென வலியுறுத்தி மும்பையில் மூன்று நாட்கள் உண்ணாவிரதப்போராட்டத்தை துவக்கியுள்ளார். தில்லி ராம்லீலா மைதானத்தில் ஹசாரே குழுவினர் மற்றும் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்து கின்றனர்.

லோக்பால் மசோதாவை பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் சட்டம், நீதித்துறை தொடர்பான நிலைக்குழு செப்டம்பர் 23 முதல் டிசம்பர் 2வதுவாரம் வரை சுமார் இரண்டரை மாதங்கள் செலவிட்டு உருவாக்கியுள்ளது. நிலைக் குழுவின் முன்பு 140 பேர் ஆஜராகி இம் மசோதா குறித்து சுமார் 40 மணி நேரம் தங்களது பரிந்துரைகள், ஆலோ சனைகளை முன்வைத்துள்ளனர்.

லோக்பால் மசோதாவின் பூர்வீகம் நீண்ட நெடிய ஒன்றாகும். 1966 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட நிர்வாகச் சீர் திருத்த ஆணையம், லோக்பால் அமைப்பு உருவாக்கவேண்டியதன் அவசியத்தை வலி யுறுத்தியது. அதன் பின்னர் மத்திய அரசு மாநிலங்களவையிலும் மக்களவையிலும் 1968, 1971,1977,1985,1989,1996,1998 மற்றும் 2001ஆம் ஆண்டுகளில் லோக்பால் அமைப்பிற் கான மசோதாக்களை அறிமுகப்படுத்தியது. ஆனால் மசோதா நிறைவேற்றப்படவில்லை.

இந்தப் பின்னணியில்தான் 2011ம் ஆண்டு ஏப்ரல் 8ம் தேதி அமைச்சரவை இம் மசோதாவை உருவாக்க ஒப்புதல் அளித்தது. லோக்பால் அமைப்பு உருவாக்கப்பட வேண்டுமென்று இடதுசாரிக்கட்சிகள் தொடர்ச்சியாக குரல் கொடுத்து வந்துள்ளன. அன்னா ஹசாரே, பாபா ராம்தேவ் போன்றவர்களும் இந்தப் பிரச்சனையை சமீபத்தில் கையிலெடுத்தனர். இவர்களது பின்னணி என்ன வென்று அறியாவிட்டாலும் கூட மக்கள் இவர்களது கோரிக்கைக்கு ஆதரவளித்தனர். ஊழலுக்கு எதிராக மக்களிடம் எழுந்துள்ள விழிப்புணர்வு மற்றும் எதிர்ப்புணர் வின் வெளிப்பாடே ஆகும் இது.

லோக்பால் மசோதாவின் நகல் டிசம்பர் 22அன்று நாடாளுமன்ற உறுப்பினர் களுக்கு வழங்கப்பட்டது. 62 பக்கங்களைக் கொண்ட இந்த மசோதாவில் 15 பிரிவுகள் இடம் பெற்றுள்ளன. மத்திய அளவில் லோக் பால் அமைப்பையும், மாநிலங்களில் லோக் அயுக்தா அமைப்பையும் உருவாக்குவதற் கான பரிந்துரைகள் இம் மசோதாவில் இணைக்கப்பட்டுள்ளன.
இந்த மசோதா நிறைவேறுமா? என்ற ஐயப்பாட்டை ஊடகங்கள் எழுப்பிக்கொண்டுயிருந்தன.  மக்களவையில் இந்த மசோதா  ஒருவழியாக நிறைவேற்பட்டுள்ளது . மசோதா எந்த வடிவில் வந்தாலும் அதை ஆதரிக்க திமுகஇ திரிணாமுல் காங்கிரஸ் போன்ற கட் சிகள் தயாராக உள்ளன. அரசுக்கு நெருக்கடி ஏற்படும்போதெல்லாம் கை கொடுக்கும் ஆர்ஜேடிஇ சமாஜ்வாதிஇ பகுஜன் சமாஜ் போன்ற கட்சிகள் மசோதாவை ஆதரிக்க வில்லை என்றபோதிலும்  மசோதா நிறைவேற்பட்டுள்ளது குறிபிடதக்கது .

ஆனால் மாநிலங்களவையில் மசோதாவை நிறைவேற்றுவதற்கான பலம் ஐ.மு. கூட்டணிக்கு இல்லை. எதிர்க்கட்சியான பாஜக ஆதரித்தால்தான் மசோதாவை நிறை வேற்ற முடியும். சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவதால் மசோதாவை எதிர்ப் பதாக பாஜக கூறியுள்ளது. ஆர்ஜேடி போன்ற கட்சிகளும் வேறு சில காரணங் களைக் கூறி மசோதாவை எதிர்ப்பதாகக் கூறுகின்றன.

மகளிர் இடஒதுக்கீடு மசேதா மாநிலங் களவையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால் மக்களவையில் இம் மசோதாவை நிறைவேற்ற விடாமல் ஆர்ஜேடி, சமாஜ்வாதி போன்ற கட் சிகள் தடுத்துவிட்டன என்பது முந்தைய அனுபவம். இதைச் சாக்காக வைத்து, கருத் தொற்றுமை ஏற்படுத்தப்போவதாககக் கூறி மசோதாவை கிடப்பில் போட்டுவிட்டது மன் மோகன்சிங் அரசு.

 மசோதாவை தயாரிப்பதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குறிப்பிடத்தக்க பங்காற் றியுள்ளது. நிலையாணைக்குழுவில் இடம் பெற்றிருந்ததின் மூலம் பல்வேறு ஆலோ சனைகளை கட்சி முன்வைத்துள்ளது. எனி னும் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை. அதைத் தொடர்ந்து நடைபெற்ற அனைத் துக்கட்சி கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி முன்மொழிந்த சில தீர்மானங் கள் ஏற்கப்பட்டன. அது எந்த வடிவில் உள் ளது என்பது விவாதத்தின்போதே வெளிச் சத்திற்கு வரும். மார்க்சிஸ்ட் கட்சி தமது ஆலோசனைகள், திருத்தங்களை எழுத்துப் பூர்வமாக அளித்துள்ளது.

இதே போன்று பல்வேறு கட்சிகள் தங் களது திருத்தங்கள், கருத்துக்களை முன் வைத்துள்ளன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சியை பொறுத்தவரை சில முக்கியமான ஆலோசனைகளை முன்வைத்தது.

1. பிரதமர் பதவியையும் லோக்பால் விசா ரணை வரம்பிற்குள் கொண்டுவர வேண்டும்.

2. நாடாளுமன்ற உறுப்பினர்களையும் விசாரணை வரம்பிற்குள் கொண்டுவர வேண்டும். அதற்கு தடையாக உள்ள அரசியல் சாசனத்தின் 105வது பிரிவில் உரிய மாற்றம் செய்ய வேண்டும்.

3. மத்திய மற்றும் மாநில அரசு நிலை யில் குரூப்-ஏ, குரூப்-பி, குரூப்-சி, குரூப்-டி அதிகாரிகளை விசாரணை வரம்பிற்குள் கொண்டுவரவேண்டும். மத்திய அரசு அதிகாரிகளை லோக்பால் வரம்பிற்குள்ளும், மாநில அரசு அதிகாரிகளை லோக் அயுக்தா விசாரணை வரம்பிற்குள்ளும் கொண்டுவர வேண்டும்.

4. லோக்பால் அமைப்பின் தலைவர் உட்பட, சுதந்திரமான தேர்வுக்குழுவின் தேர்வு அடிப்படையிலேயே நியமிக்கப்பட வேண்டும்.

5. மாநிலங்களில் லோக் அயுக்தா அமைப்பை உருவாக்க தனி மசோதா தாக்கல் செய் யப்பட வேண்டும்.

மத்திய புலனாய்வுத்துறை இயக்குநர் நியமனம், லோக்பால் தேர்வுக்குழு பரிந்துரை அடிப்படையிலேயே நடைபெற வேண்டும்.

6.ஊழல் குறித்த வரையறையில் தெளி வில்லை. 1988ஆம் ஆண்டு உருவாக்கப் பட்ட ஊழல் தடுப்புச்சட்டத்தின் அடிப்படை யிலேயே வரையறுக்கப்பட்டுள்ளது. எனவே உரிய வகையில் ஊழல் குறித்த வரையறை செய்யப்பட வேண்டும்.

7. மிக முக்கியமாக பெரும் முதலாளி களையும், அவர்களது நிறுவனங்களையும் லோக்பால் விசாரணை வரம்பிற்குள் கொண்டுவர வேண்டும். தவறிழைக்கும் நிறுவனங்களின் உரிமம் மற்றும் குத்தகையை ரத்து செய்யவேண்டும். இழப்பீட்டுத் தொகையை அவர்களிடமிருந்து வசூலிக்க வேண்டும். ஊழலில் ஈடுபடும் நிறுவனங் களின் சொத்துக்களை பறிமுதல் செய்து, அரசு கஜானாவில் ஒப்படைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட முக்கியத் திருத்தங்களை மார்க்சிஸ்ட் கட்சி முன்மொழிந்துள்ளது. விவாதத்தின்போதும் முன்வைக்கும்.

இம்மசோதாவை நிறைவேற்றுவதற்கு முன்பு அரசியல் சாசன திருத்தத்தை அரசு முன்மொழிந்திருக்கவேண்டும். ஆனால் அவ்வாறு செய்யவில்லை. பலவீனமான லோக்பால் அமைப்பையே அரசு விரும்பு கிறதோ என்ற ஐயப்பாடு எழும்புகிறது.

எதிர்க்கட்சியான பாஜக மற்றும் சில கட்சிகள் எதிர்க்கும் வேகத்தைப் பார்க்கும் போது மசோதா நிறைவேறுமா? என்ற கேள்வி வலுவாகவே எழுகிறது.

லோக்பால் அமைப்பை உருவாக்கு வதற்கான போராட்டம் 1968ல் அதாவது 20ம் நூற்றாண்டில் துவங்கி இந்த நூற்றாண்டு வரை நடைபெற்று வருகிறது. இம் மசோதா வலுவான லோக்பால் அமைப்பை உரு வாக்கும் வகையில் நிறைவேற்றப்பட வேண்டு மென்று இந்திய மக்கள் எதிர்பார்க்கி றார்கள். அவர்களது விருப்பம் நிறை வேறுமா? என்பது இரண்டொரு நாளில் தெரிந்துவிடும்.

- டி.கே.ரங்கராஜன் எம்.பி.,

 மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி 

புதன், 2 நவம்பர், 2011

கருவாட்டுப் பானைக்கு காவல் இருக்கும் பூனைகள்

ஊழலுக்கு எதிரான உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார். தில்லி யில் நடந்த மாநில ஆளுநர்கள் மாநாட்டில் நிறைவுரையாற்றிய அவர், இந்த ஆருடத்தை வெளியிட்டிருக்கிறார். ஊழலுக்கு எதிராக நட வடிக்கை எடுப்பதற்காக இவர் காத்திருந்தது போலவும் இப்போதுதான் அதற்கான நேரம் வந்துள்ளது போலவும் தூக்கத்திலிருந்து திடீரென்று எழுந்தவர் போல கூறியிருக்கிறார் நாட்டின் பிரதமர்.

சுதந்திர இந்திய வரலாற்றில் ஊழல் மிகுந்த ஒரு ஆட்சிக்கு தலைமை தாங்குபவர் என்ற அவப்பெயரை சம்பாதித்திருப்பவர் பிரதமர் மன் மோகன் சிங். இவரது அரசினால் பின்பற்றப் படும் தாராளமய பொருளாதாரக் கொள்கைதான் பெருகிவரும் ஊழலின் ஊற்றுக்கண்ணாக இருக்கிறது என்பது ஊரறிந்த உண்மை.

இவரது அமைச்சரவை சகாக்கள் சசிதரூர், ஆ.ராசா, சுரேஷ் கல்மாடி, தயாநிதிமாறன் ஆகியோர் ஊழல் புகார்களில் அடுத்தடுத்து சிக்கி, பதவி விலகியுள்ளனர். ஆ.ராசா, சுரேஷ் கல்மாடி ஆகியோர் சிறையில் அடைக்கப்பட் டுள்ளனர். இதன் பொருள், மற்றவர்கள் எல்லாம் உத்தமர்கள் என்பது அல்ல. அவர்களில் பலர் இன்னமும் சிக்கவில்லை என்பதுதான்.

ஊழல் குறித்த மன்மோகன் சிங் அரசின் கண்ணோட்டம் என்ன? போபர்ஸ் ஊழலில் சிக்கிய இத்தாலி தொழிலதிபர் குவாத்ரோச்சியை தப்பவிட்டது இவரது அரசுதான். அவரை துன் புறுத்தக்கூடாது என்று மனமிரங்கி கூறியவரும் சாட்சாத் மன்மோகன் சிங்தான்.

2ஜி அலைக்கற்றை ஊழல் விசாரணையை உச்சநீதிமன்றம் கண்காணிக்காமல் இருந்திருந்தால், போபர்ஸ் ஊழலை போல அதையும் ஆழக் குழிவெட்டி புதைத்திருப்பார்கள். காமன் வெல்த் விளையாட்டு போட்டி ஊழலில் கல்மாடியை காப்பாற்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இயன்றவரை முயன்று, கடைசியில்தான் அவரை கைவிட்டது.

இப்போது அலைக்கற்றை ஊழலில் முத லாளிகள் சிலரும் சிக்கியுள்ள பின்னணியில் இவ்வாறு அவர்களை துன்புறுத்தினால் தொழில் முதலீடு குறையும் என்று ஆதங்கப்படுகிறார் சட்டத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்.

ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிக்கிய ஆ.ராசா வானாலும், காமன்வெல்த் போட்டி ஊழலில் சிக் கிய கல்மாடியானாலும் பிரதமருக்குத் தெரிந்து தான் எல்லாம் நடந்தது என்று சாதிக்கின்றனர். ஆனால் பிரதமரோ இதுகுறித்து வாய்திறப்பதில்லை.

லோக்பால் மசோதா வரம்புக்குள் பிரதமர் பதவியையும் கொண்டுவருவது குறித்து மன் மோகன் சிங் ஒவ்வொரு நாள் ஒவ்வொரு கருத்தை வெளியிடுகிறார். லோக்பால் மசோதா விசயத்தில் முடிந்தவரை காலதாமதப்படுத்தி, அதை நீர்த்துப்போகச் செய்யும் உத்தியையே இவரது அரசு பின்பற்றி வருகிறது.

ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக இவரது சகா சிதம்பரத்தை சிக்கவைக்கும் வகையில் மற் றொரு சகாவான பிரணாப் முகர்ஜி எழுதிய கடி தம் வெளியானது. ஆனால் இருவரையும் அழைத்து சமரசம் செய்து, விசயத்தை வெளியில் வராமல் பார்த்துக் கொண்டவர்தான் இவர். இப்போது வெளிநாடு பயணங்களின்போது பிரணாப் முகர் ஜியும், சிதம்பரமும் தனது பொறுப்புக்களை பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று இவர் கூறியுள்ளார்.


கருவாட்டுப்பானைக்கு பூனையை காவல் வைத்த கதைதான் இது. இந்த லட்சணத்தில் ஊழலை ஒழிக்க நேரம் வந்துவிட்டது என்று இவர் கூறுவது நகைக்கத்தக்கதன்றி வேறல்ல.

நன்றி :தலையங்கம் தீக்கதிர்

சனி, 15 அக்டோபர், 2011

‘ஊழல் செய்ய மாட்டோம் என திமுக, அதிமுக பிரச்சாரம் செய்ய முடியுமா?’

நாங்கள் ஊழல் செய்ய மாட்டோம் என திமுகவோ, அதிமுகவோ பிரச்சாரம் செய்ய முடியுமா? என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பி னரும், சட்டமன்றக்குழுத் தலைவருமான அ.சவுந்தரராசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த உள்ளாட்சித் தேர்தல் சட்டமன்றத்தில் இருந்து திமுகவை அகற்றியதைப் போல உள்ளாட்சி மன்றங்களில் இருந்து அகற்ற உள்ள தேர்தலாகும். இதே போன்று, உள்ளாட்சியில் ஏக போகம் செய்ய நினைக்கும் அதிமுக, அதற்குரிய பலனை தேர்தலுக்குப் பின் புரிந்து கொள்ளும். அறிந்து கொள்ளும். தமிழ்நாட்டில் உள்ளாட்சிகளுக்கு உரிய நிதி, உரிய அதிகாரம் இல்லாமல் உள்ளது. மேற்குவங்கம், கேரளா மட்டு மல்லாது பல மாநிலங்களில் உள்ளாட்சிகளுக்கு 30 சதவீத நிதி ஒதுக் கப்படுகிறது.உள்ளாட்சிகளிடமிருந்து அடிப்படைத் தேவைகளை எதிர் பார்க்கும் உரிமை மக்களுக்கு உள் ளது. அது தான் உள்ளாட்சியின் முக்கிய நோக்கமுமாகும். குப்பை களை அகற்றுவது, கொசுக்களை ஒழிப்பது, நோய்வராமல் தடுப்பது, அப்படி நோய் வந்தால் அவற்றை சரிசெய்ய மண்டல வாரியாக ஆரம்ப சுகாதார நிலையங்களை உருவாக்குவது தான் உள்ளாட் சியின் கடமையாகும். ஆனால், கடந்த 40 ஆண்டுகளாக இந்த வச திகள் செய்து தரப்படவில்லை. இருக்கும் நிதியை திருடும் நிலை தான் உள்ளது. இதன் காரணமாக உள்ளாட்சிகளின் கீழ் மக்கள் வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதைச் சீர்த்திருத்தம் செய்ய வேண் டியதுள்ளது.

உள்ளாட்சிகளை நடத்துபவர் கள் நேர்மையானவர்களாக, தூய் மையானவர்களாக, வெளிப்படைத் தன்மையுடன் செயல்படுபவர்க ளாக இருக்க வேண்டும். ஆனால், குடியரசுத் தலைவர் உரை உள் ளிட்டவற்றில் குறிப்பிட்டது போல ஊழல் மிகுந்ததாக உள்ளாட்சி அமைப்புகள் மாற்றப்பட்டுள்ளன. திமுக முன்னாள் மத்திய அமைச் சர் தயாநிதிமாறன் வீட்டில் சிபிஐ சோதனை நடத்தியுள்ளது. அலைக் கற்றை ஒதுக்கீட்டு ஊழலில் 9 மாதங்கள் கழித்து சிபிஐ இந்த சோதனையை நடத்தியுள்ளது பார்க்கும் போது குதிரையை வெளியே விட்டப்பின் லாயத்தை மூடுவது போல உள்ளது.


ஊழல் என்பது லட்சம், கோடி என்பதிலிருந்து 1 லட்சம் கோடி, 2 லட்சம் கோடி என ஊழலின் அளவு உயர்ந்துள்ளது. இப்படிப் பட்ட ஊழல்வாதிகளிடம் தான் மதுரை மாநகராட்சி சிக்கிக் கிடக் கிறது. திமுகவுக்கு இளைத்ததாக அதிமுக இல்லை. ஆசிரியர் இட மாறுதல், மின்வாரியத்தில் இட மாறுதல் என ஒவ்வொரு மாறு தலுக்கும் நான்கரை, ஐந்தரை லட் சம் என கேட்க ஆரம்பித்துள் ளனர். சறுக்குப்பாதையில் சறுக்கி ஊழல் சகதியில் அதிமுக விழுந் துள்ளது. உள்ளாட்சி அமைப்பு கள் முழுவதும் தங்களிடமே இருக்க வேண்டும் என்ற ஏக போகத்தின் காரணமாக சட்ட மன்றத் தேர்தலில் கூட்டணியில் இருந்த தேமுதிக, சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட கட்சிகளை வேண்டாம் என்றுள்ளது.அவர்களின் அடக்கு முறையை உணர்த்த ஒரு வெளிச்சக் கீற்றை இந்த தேர்தலில் நாம் பதிவு செய்ய வேண்டும். மக்களின் அடிப் படைத் தேவைகளை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் தான் தேமுதிக, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி அணி உருவாக்கப் பட்டுள்ளது.


எங்கள் தலைவர்கள் ஊழலற்ற நேர்மையான ஆட்சி அமைய எங் களுக்கு வாக்களியுங்கள் என பிரச் சாரம் செய்கிறார்கள். நாங்கள் ஊழல் செய்ய மாட்டோம் என திமுகவோ, அதிமுகவோ பிரச் சாரம் செய்ய முடியுமா? என அ. சவுந்தரராசன் கேள்வி எழுப்பினார். (ந.நி.)

வியாழன், 29 செப்டம்பர், 2011

கோடிகளில் புரளும் கொள்ளைக்கார அமைச்சர்கள்:பி. சாய்நாத்




ஏர் இந்தியா விமான நிறுவனம் நாம் விரும்பிய வண்ணம் செயல்படாமல் இருக்க லாம். ஆனால் கடன் மேகங்களுக்குள் அதனை அச்சமின்றி பறக்கவிட்டவர்களின் நிலை நன்றாகவே இருக்கிறது. விமானப் போக்குவரத்துத்துறையின் அமைச்சராக இருந்த பிரபுல் பட்டேலின் சொத்துக்கள் 2009 மே மாதம் முதல் 2011 ஆகஸ்டு வரை யிலான 28 மாதங்களில் தினமும் சராசரியாக ரூ.5லட்சம் என்ற அளவில் அதிகரித்திருக் கிறது. இது அவரே கொடுத்துள்ள கணக்கின் படி அறியப்படும் விபரம். இதுபோன்றவிஷயங் களில் நமது அமைச்சர்களெல்லாம் மிகவும் தன்னடக்கத்துடன் செயல்படக்கூடியவர்கள் என்பதால், இது உண்மை மதிப்பைக் குறைத்து மதிப்பிடுவதாகவே இருக்கக் கூடும். ஆனாலும் அதிகாரப்பூர்வ விபரங் களின்படி கணக்கிடவேண்டும் என்பது தவிர்க்கமுடியாதது.

2009 தேர்தலின் போது பிரபுல் பட்டேல் அளித்த பிரமாண வாக்கு மூலத்தின்படி அவரது சொத்து மதிப்பு ரூ.79 கோடி. தேர்தல் நடைபெற்றது மே மாதத்தில் என்பதால் ஏப்ரல் மாதம் வரை அவர் சேர்த்து வைத் திருந்த சொத்துக்களின் மதிப்பை அளித் திருப்பார் என்று நம்புவோம். இந்த மாதத்தில் பிரதமர் அலுவலகம் தனது இணைய தளத் தில் அவரது சொத்துக்களின் மதிப்பாக கொடுத்துள்ள தொகை ரூ.122 கோடி. இந்த அதிகரிப்பு 28 மாதங்களில் நிகழ்ந்துள்ளது என்பதால் எனது கணக்கின் படி அவர் சரா சரியாக தினமும் ரூ.5லட்சம் சேர்த்துள்ளார்.

இதற்கிடையே பிரபுல் பட்டேல் பொறுப் பில் இருந்த ஏர்இந்தியா விமானக்கம்பெனி தனது ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாமல் திணறிக்கொண்டிருக்கிறது. இந்த விமானக் கம்பெனியின் 40 சதவீத ஊழியர் களின் ஓராண்டு சம்பளத்தை பிரபுல் பட் டேல் என்ற ஒரு நபரே சம்பாதித்துள்ளார். எனவே விமானக்கம்பெனி தரை தட்டிப் போனாலும் பட்டேல் விண்ணில் உயரப் பறந்து கொண்டிருக்கிறார். தனியார் நிறுவனங் கள் நலிவடைந்தாலும் அதன் உடைமை யாளர்கள் செழிப்பாகத்தான் இருக்கின்றனர் என்று தொழில் மறுசீரமைப்பு வாரியத்தின் தலைவர் ஒருவர் சில ஆண்டுகளுக்கு முன் னர் குறிப்பிட்டது நினைவுக்கு வருகிறது. (இந்த சமன்பாடுகளுக்குள் தொழில் நிறு வனத் தலைவர்களையும் கொண்டுவந்தால் அது மலைப்பை ஏற்படுத்துவதாக இருக்கும். ஆனால் அது வேறு கதை)பிரபுல் பட்டேல் ஆற்றிய மிகச்சிறந்த பணிகளுக்காக அவ ருக்கு கேபினட் அந்தஸ்து வழங்கப்பட்டு, கனரகத் தொழில் துறை அமைச்சர் என்ற பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்தமாக மத்திய அமைச்சர் களின் சொத்துக்களை எடுத்துக்கொண்டால் ஒரு அமைச்சரின் சராசரி சொத்து ரூ. 7.3 கோடியிலிருந்து ரூ10.6 கோடியாக அதி கரித்துள்ளது. அதாவது மாதத்துக்கு அதிக மில்லை வெறும் பத்து லட்சம் தான். பட்டேல் தான் அமைச்சர்களுக்குள் எல்லாம் மிகவும் பணக்காரர். ஆனால் வேகமான வளர்ச்சி பெற்றவர் என்ற புகழுக்கு சொந்தமானவர் திமுகவின் ஜெகத்ரட்சகன்தான். பட்டேலின் சொத்து மதிப்பு ஆண்டு ஒன்றுக்கு 53 சதவீதம் என்ற அளவில் தான் அதிகரித்திருக்கிறது. ஆனால் ஜெகத்ரட்சகனோ 1092 சதவீதம் அளவில் மின்னல் வேக வளர்ச்சியைப் பெற் றுள்ளார். 2009ல் அவரது சொத்துக்களின் மதிப்பு ரூ.5.9 கோடி. அது தற்போது ரூ.70 கோடியாக அதாவது பன்னிரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. சொத்து சேர்ப்பதில் இளைய தலைமுறையைச்சேர்ந்த அமைச்சர்கள் சற்றும் பின்தங்கிவிடவில்லை. தகவல் தொடர்புத்துறை அமைச்சரான மிலின்ட் தியோரா என்ற இளைஞரின் சொத்து மதிப்பு 2004ல் ரூ.8.8 கோடி. 2009ல் இது ரூ.17 கோடி யாக அதிகரித்தது. இப்போது அது ரூ.33 கோடியாக உயர்ந்துள்ளது. ஏழு ஆண்டுகளில் அவரது சொத்துக்கள் சராசரியாக தினம் ஒரு லட்சம் அளவில் அதிகரித்துள்ளன. அதே நேரத்தில் மொத்தமாகக் கணக்கிட்டால் ஏழு ஆண்டுகளில் 4 மடங்காக அதிகரித்துள்ளது. இது ஒன்றும் மோசம் என்று கூறமுடியாது. இவரோடு ஒப்பிட்டால் விவசாயத்துறை அமைச்சர் சரத்பவாரின் வளர்ச்சி திருப்திக ரமாக இல்லை. அவரது சொத்து 28 மாதங் களில் வெறும் ரூ.4 கோடி தான் அதிகரித்து ரூ.12.5 கோடியை எட்டியுள்ளது. ஆனால் அவரது மாநிலத்தில் வேறுவிதமாகப் பேசிக்கொள்கிறார்கள். எந்த கணக்கை கொடுப்பது என்பதில் அவருக்குக் குழப்பம் ஏற்பட்டதால், மொத்த சொத்துக் கணக்கைக் கொடுப்பதற்கு பதிலாக அவர் மாதாந்திர வருவாய்க் கணக்கைக் கொடுத்துவிட்டார் என்று பேசிக் கொள்கிறார்கள்.

மிதமான அளவில் சாதனை நிகழ்த்தியுள் ளார் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சரான விலாஸ்ராவ் தேஷ்முக். 2009ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை வெறும் ரூ1.73 கோடி சொத்துக்களைத்தான் இவர் சேர்த்துள்ளார். மன்மோகன் அமைச் சரவையில் கிரிக்கெட் விளையாட்டுடன் சம் பந்தப்பட்ட கும்பலின் நிலை மிகச்சிறப் பாகவே உள்ளது. ஐபிஎல் அமைப்பின் புதிய தலைவரான ராஜீவ் சுக்லாவின் சொத்து மதிப்பு இக்காலத்தில் ரூ.7கோடியிலிருந்து 30 கோடியாக அதிகரித்துள்ளது.

இப்போது அமைச்சர்களாக இருப்பவர் கள் மற்றும் மத்திய அமைச்சர்களாக இருப் பவர்களின் சொத்துக்கள் மட்டுமே அதிகரித் துள்ளதாகக் கருதக்கூடாது. வேறு சிலரும் மேல் நோக்கி உயர்ந்துள்ளனர். இது போன்ற விஷயங்களில் எனது சொந்த மாநிலங்களான மகாராஷ்டிரா மற்றும் ஆந்திரா போன்றவை கின்னஸ் சாதனையை நிகழ்த்தக்கூடியவை. (தமிழ் நாடும் ஒரு விதத்தில் எனது சொந்த மாநிலமே. எனவே ஜெகத்ரட்சகனையும் சேர்த்துக்கொண்டால் எனது சொந்த ஊர்க் காரர்களின் பெருமையை சொல்லிமாளாது)

ஒய்.எஸ். ஜெகன்மோகன் ரெட்டி அதிகாரத் தில் இல்லை. ஆனால் இது அவரது முனைப் பான செயல்பாட்டுக்கு இடைஞ்சலாக இருக்கவில்லை. 2009 ஏப்ரலில் ரூ.72 கோடிக்கு சற்று குறைவாக இருந்த சொத்து மதிப்பு 24 மாதங்களில் ரூ.357 கோடியாக அதி கரித்துள்ளது. தினமும் சராசரியாக ரூ. 50 லட்சத்தை இவர் சேர்த்துள்ளார். பலமுனைத் தாக்குதல்களுக்கு தொடர்ந்து உள்ளாகி வரும் நிலையிலும் இவர் நிகழ்த்தியுள்ள சாதனை அற்பமானதல்ல. அடுத்த தலைமுறை அரசி யல்வாதிகளெல்லாம் கூடுதல் விசையியக் கம் கொண்டவர்களாக இருப்பார்கள் என்று அரசியல் பண்டிதர்கள் கூறுவதை நிரூபிப்ப தாக இது இருக்கிறது அல்லவா. ஐயோ பாவம் சந்திரபாபு நாயுடுதான் ஏழையாகிவிட்டார். அன்னா ஹசாரே ஏற்படுத்திய புதிய சூழலில் முன்னாள் ஆந்திர முதல்வரான சந்திரபாபு நாயுடு தானே முன்வந்து தனது சொத்து விபரங்களை அறிவித்துள்ளார். அவரது சொத்து மதிப்பு ரூ. 40 லட்சம் கூட தேறாது. அதனால் சாப்பாட்டுக்கே அவர் கஷ்டப் படுவதாக நினைத்துவிடாதீர்கள். அவரது மனைவியின் சொத்துமதிப்பு ரூ.40 கோடியை எட்டியுள்ளது. அவரது ஆடிட்டர்கள், அவரது ஜூபிலி வீட்டின் மதிப்பை அதை வாங்கிய விலையான ரூ.23.20 லட்சம் என்றே குறிப்பிட்டுள்ளனர். 10000 சதுரஅடி கொண்ட அந்த மாளிகையின் மதிப்பை அவரே 2009 தேர்தலின் போது ரூ.9 கோடி என்று தெரிவித் துள்ளார்.

மந்திரிகளின் செல்வம் மட்டுமல்ல, சட்ட மன்ற- நாடாளுமன்ற உறுப்பினர்களின் சொத் துக்களும் கூட தாறுமாறாக அதிகரித்துள் ளன. மகாராஷ்டிர மாநிலத்தில் 2004 ம் ஆண் டில் 108 ஆக இருந்த கோடீசுவரர்களின் எண்ணிக்கை 2009ல் 186 ஆக அதிகரித்துள் ளது. மத்திய அமைச்சர்களில் முக்கால் வாசிப்பேர் கோடீசுவரர்களே. இவர்கள் பதவி களில் இருந்த போதுதான் புதிய செல் வத்தை சேர்த்துள்ளனர். இவ்வாறு சொத்து விபரங்களை அறிவித்துவிட்டால் மட்டும் போதாது. அவர்கள் செலுத்தும் வருமான வரி விபரங்களும், அவர்கள் வருமான வரி அலு வலகத்துக்கு அளிக்கும் ஆண்டு வருமானக் கணக்குகளும் கூட இணையதளங்களின் மூலம் வெளியிடப்படவேண்டும். சொத்துக் கணக்குகளை முழுமையாக அளிக்காமல் தில்லுமுல்லு செய்பவர்களுக்கு தண்டனை வழங்கப்படவேண்டும். கவனமான கணக்குத் தணிக்கை தேவைப்படுகிறது. பதவியில் இருக்கும்போது இவர்களால் தினமும் ரூ. 5லட்சத்தை எவ்வாறு சேர்க்க முடிகிறது. எனவே வெறுமனே சொத்து விபரங்களை அறிவிப்பது மட்டும் போதுமானதல்ல. ஒரு வரின் சொத்துக்கள் நம்ப முடியாத அளவுக்கு மிகவும் அதிகமாக இருந்தால், அது எவ்வாறு சேர்க்கப்பட்டது என்பது குறித்த விசாரணை யும் தேவைப்படுகிறது.

கடந்த ஆண்டு ஏப்ரலில் நகர்ப்புற இந்தி யாவில் வறுமைக்கோட்டைத் தீர்மானிப் பதற்கு ரூ.20 தினச் செலவும் கிராமப்புறங் களில் ரூ.15 தினச்செலவும் போதுமானதாக திட்டக்குழு உச்சநீதிமன்றத்தில் தெரிவித் தது. இதனை இப்போது 20லிருந்து 25 ஆக தாராளமாக உயர்த்துவதற்கு அது முன்வந்துள் ளது. முறைசாராத் தொழிலாளர் நிலை குறித்த அர்ஜூன் சென்குப்தா குழுவின் அறிக்கை யை நாம் அறிவோம். 83.6 கோடி இந்தியர்கள் தினமும் ரூ.20 அல்லது அதற்குக் குறைவாக செலவு செய்து வாழ்க்கை நடத்துகின்றனர் என்று அதில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கோடீசுவரர் சங்க உறுப்பினர்கள் அந்த ஏழை மக்களின் பிரதிநிதிகளாக எப்படி செயல்படுகிறார்கள் அல்லது அவர்கள் துவக்கத்தில் அவ்வாறு செயல்பட்டுவிட்டு பின்னர் விரைவாக இணைப்பை இழந்து விடுகிறார்களா, இதனை எவ்வாறு கட்டுப் படுத்துவது, இதுகுறித்து சிந்திக்க வேண்டி யுள்ளது. அதேபோல கடந்த 20 ஆண்டு களில் ஏற்பட்ட ஆழமான மாற்றங்கள் இந்த கோடீசுவரர்களைத் தவிர மற்றவர்களைத் தேர்தல்களில் போட்டியிடக்கூட முடியாத படி (வெல்வதைப்பற்றி பேசவேண்டாம்) செய்துவிட்டதா.

ஆதாரம் : தி இந்து (21.9.2011)


தமிழில்: கி.இலக்குவன்

ஞாயிறு, 18 செப்டம்பர், 2011

பலவீனமாகும் 2ஜி வழக்கு- யாரைக் காப்பாற்ற?


நாடு இன்னும் மறந்துவிடவில்லை.

ஆறு மாதங்களுக்கு முன் 2 ஜி (இரண்டாம் தலைமுறை) அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஒருகோடியே 76 லட்சம் ரூபாய் அளவிற்கு முறைகேடுகள் நடந்திருப்பதாக எழுந்த குற் றச்சாட்டு நாட்டை ஓர் உலுக்கு உலுக்கியது. காரணம், அந்தக் குற்றச்சாட்டை பொது அரங் கில் வைத்தது எதிர்க்கட்சிகள் அல்ல. ஊட கங்கள் அல்ல. அரசை விமர்சிக்கும் சமூக நல ஆர்வலர்கள் அல்ல. விக்கிலீக்ஸ் அல்ல. அந்தக் குற்றச்சாட்டை வெளியிட்டவர் தேர் தல் கமிஷன் போல அரசமைப்புச் சட்டத் தால் சுயாட்சி வழங்கப்பட்ட மத்திய கணக்கு மற்றும் தணிக்கை ஆணையர்.

அதையடுத்து அரசியல் அரங்கம் பரபரப் பானது. ஊடகங்கள் உரத்து முழங்கின. நாடா ளுமன்றம் செயல்பட முடியாமல் நாள் கணக் கில் முடக்கப்பட்டது. தொலைத் தொடர்புத் துறைக்குப் பொறுப்பான மத்திய அமைச்சர் ஆ.ராசா மீது வழக்குத் தொடர பிரதமர் அனு மதி அளித்தார். ராசா ராஜினாமா செய்தார். மத் தியப் புலனாய்வுத் துறை விசாரணைக்கு உத் தரவாயிற்று. ராசா கைது செய்யப்பட்டு திகார் சிறைக்கு அனுப்பப்பட்டார். சாதிக் பாட்சா என்ற அவரது நண்பர் தற்கொலை செய்து கொண்டு இறந்து போனார். சதியில் கூட்டு என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனி மொழி கைது செய்யப்பட்டார். இந்தியாவின் முக்கியமான தொலைத் தொடர்பு நிறுவனங் களின் முதல் நிலை அதிகாரிகள் கைது செய் யப்பட்டனர். இவர்கள் அனைவருக்கும் ஜாமீன் மறுக்கப்பட்டு அனைவரும் இன்னும் சிறையிலேயே இருக்கிறார்கள்.

இதையெல்லாம் இன்னும் நாடு மறந்து விடவில்லை. இதற்கெல்லாம் ஆதாரமான அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த முறை கேடுகளால் அரசுக்கு கோடிக்கணக்கில் வரு வாய் இழப்பு ஏற்பட்டது என்பதையும் மறந்து விடவில்லை. அதிலும் முக்கியமாக, அரசுக்கு இழப்பு ஏற்பட்டதே தவிர அரசியல்வாதிகள், அவர்களது நிறுவனங்கள் ஆதாயம் அடைந் தன என்பதையும் மக்கள் மறந்து விடவில்லை.

ஆனால்- வரும் செப்டம்பர் 15ம் தேதி சிபிஐ 2 ஜி வழக்கில் இறுதிக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவிருக்கும் நேரத்தில், இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணை யம் (டிராய்) ஓசைப்படாமல் ஒரு குண்டை வீசி இவை அனைத்தையும் அர்த்தமில்லாத தாகச் செய்திருக்கிறது.

அது என்ன அணுகுண்டு?

‘அலைக்கற்றை உரிமம் வழங்கியதில் எவ்வளவு இழப்பு ஏற்பட்டது என்று துல்லிய மாகச் சொல்வதற்கில்லை’ என்கிறது டிராய். அது மட்டுமல்ல, ராசா அரசின் கொள்கை களைத்தான் கடைப்பிடித்தார் என்றும் சொல்கிறது.

அ ப்படி நினைப்பதற்கான காரணங்கள் என்ன?

ஒருவர் குற்றம் புரிந்திருக்கிறார் என்பதைச் சட்டம் இரண்டு அம்சங்களின் அடிப்படை யில் தீர்மானிக்கிறது. குற்ற நோக்கம் (அநளே சநய), குற்றச் செயல் (யஉவரள சநரள) என்பவை அந்த அம் சங்கள். இந்த இரண்டையும் சந்தேகத்திற்கு இடமில்லாத சாட்சியங்கள் மூலம் நிரூபித் தால் தான் சம்பந்தப்பட்டவர் குற்றம் புரிந்தார் எனக் கருதப்பட்டு தண்டனை அளிக்கப்படும். ராசா, அரசின் கொள்கைகளைத்தான் பின்பற் றினார் என்றால் அவருக்கு குற்ற நோக்கம் இல்லை என்று கருதப்பட வாய்ப்புண்டு. ஏனெனில் அவரது நோக்கம் அரசின் கொள் கைகளை நடைமுறைப்படுத்துவது. குற்றம் செய்வதல்ல. அப்படி நடைமுறைப்படுத்திய தன் காரணமாக அரசுக்கு இழப்பு ஏதும் இல்லை என்றால் அங்கே குற்றச் செயலும் நடைபெறவில்லை என்று தான் கருதப்படும்.

இதில் வேடிக்கை என்னவென்றால் இதைத்தான் ராசா, தான் கைது செய்யப்பட்ட நாளிலிருந்து சொல்லிக் கொண்டிருக்கிறார். ராசா மற்றும் கனிமொழியின் வழக்கறிஞர் சுஷீல் குமார் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி முன் வைத்த வாதங்கள் இவை: 2 ஜி அலைக் கற்றையை ஏலம் விட வேண்டாம் என்பது அரசின் கொள்கை முடிவு; அதனால் தான் ஏலம் விடவில்லை; எனவே ஏலம் விட்டிருந் தால் இவ்வளவு பணம் வந்திருக்கும், விடாத தால் அது அரசுக்கு ஏற்பட்டிருக்கும் இழப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை; இழப்பு இல்லை என்னும் போது மோசடி என்ற பேச்சுக்கே இடமில்லை. அவரது இன்னொரு வாதம்: அலைக்கற்றை உரிமம் பெற்ற ஸ்வான் டெலி காம் பிரைவேட் லிமிட்டெட், யூனிடெக் வயர் லெஸ் (தமிழ்நாடு) பிரைவேட் லிமிட்டெட் என்ற நிறுவனங்கள் தங்கள் உரிமங்களை விற்கவில்லை, தங்கள் நிறுவனங்களின் பங் குகளை அரசின் அனுமதி பெற்று அயல் நாட்டு நிறுவனங்களான எடிஸாலட், டெலி னார் நிறுவனங்களுக்கு விற்று தங்கள் மூல தனத்தை விரிவுபடுத்திக் கொண்டன. இதில் சட்டப்படி எந்தத் தவறும் இல்லை.

ஏறத்தாழ இதே குரலில் பேசுகிறது டிராய். தவறேதும் நடக்கவில்லை, இழப்பேதும் ஏற்படவில்லை என்றால் அன்று ஏன் அரசு, ராசா மீது வழக்குத் தொடர அனுமதி கொடுத் தது? ஏன் அவரைப் பதவி விலகச் சொன் னது? அவர் மீது சிபிஐ விசாரணைக்கு உத்தர விட்டது? அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தது? அவரது ஜாமீன் மனுவை எதிர்த்து வழக்காடியது? இதையெல்லாம் செய்த அரசு இப்போது ஏன் குரல் மாற்றிப் பேசுகிறது?

அதைப் புரிந்து கொள்ள வேண்டுமானால் இன்னொரு செய்தியைக் கவனிக்க வேண்டும்.

ராசாவும் கனிமொழியும் ஏலம் விட வேண் டாம் என்ற முடிவை எடுத்தது நாங்களல்ல என்ற வாதத்தை மட்டும் வைக்கவில்லை. அதை எடுத்தது பிரதமரும் மற்ற அமைச்சர் களும் தான் என்று பிரதமரையும் வழக்கிற்குள் இழுத்தனர். “நான் உங்களுக்குக் காண்பிப்பது பிரதமர், அன்றைய நிதியமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சர் ஆ.ராசா கலந்து கொண்ட கூட்டத்தின் நடவடிக்கைக் குறிப்பு (அiரேவநள) இந்தக் கூட்டத்தில் 2 ஜி அலைக்கற்றையை ஏலம் விடவோ, விற்க வோ கூடாது என்று முடிவெடுக்கப்பட்டிருப் பதைப் பாருங்கள்” என்று நடவடிக்கைக் குறிப்பை நீதிபதி முன் வைக்கிறார் சுஷீல் குமார். “உரிமம் பெற்ற நிறுவனங்கள் தங்கள் பங்குகளை அயல்நாட்டு நிறுவனங்களுக்கு விற்கும் விஷயம் பிரதமருக்கும் நிதி அமைச் சருக்கும் தெரியும். அன்றைய நிதி அமைச்சர், இன்றைய உள்துறை அமைச்சர், பங்குகளை விற்பது 2ஜி உரிமங்களை விற்பதாகாது என்று பிரதமரின் முன்னிலையில் கூறினார். முடிந் தால் இதை பிரதமர் மறுக்கட்டும்” என்று பகிரங்கமாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஏதே னும் முறைகேடுகள் இருந்தால் அதை பிரத மர் ஒரு அமைச்சர் குழுவை அமைத்து விசா ரித்திருக்கலாம். ஆனால் அவர் அதைச் செய்யவில்லை என்பது இன்னொரு வாதம்.

ராசாவும் கனிமொழியும் சிதம்பரத்தை இந்த வழக்கில் ஒரு சாட்சியாக விசாரிக்க வேண் டும் எனவும் கோரியுள்ளனர்.

இதெல்லாம் நடந்தது ஆகஸ்ட் 23ம்தேதி. பிரதமர், சிதம்பரம் ஆகியோரது பெயர்கள் இழுக்கப்பட்டதற்கு ஒரு வாரத்திற்குப் பின் டிராய், அணுகுண்டைப் போடுகிறது.

டிராய் அறிக்கை வெளியான அதே செப் டம்பர் 1ம் தேதி சிபிஐயிடமிருந்து வேறு மூன்று தகவல்கள் வெளி வருகின்றன.

ஒன்று, உச்சநீதிமன்றத்தில் 2 ஜி அலைக் கற்றை வழக்கின் தற்போதைய நிலவரம் பற்றி அது தாக்கல் செய்த அறிக்கை. அதில் ஏர் செல் நிறுவனத்தை மாக்சிஸ் நிறுவனத்திற்கு விற்குமாறு தயாநிதிமாறன் வற்புறுத்தியதாக வோ, நெருக்கடி கொடுத்ததாகவோ எந்த ஆதாரமும் இல்லை எனச் சொல்லியிருக்கிறது.

மற்ற இரண்டு தகவல்களும் அலைக்கற் றை வழக்கை விசாரித்து வரும் நீதிமன்றத் தில் தெரிவிக்கப்பட்டவை அவை: அம்பானி யோடு தொடர்புடையதாகச் சொல்லப்படும், உரிமம் பெற்ற நிறுவனங்களில் ஒன்றான ரிலையன்ஸ் - ஏடிஏஜிக்கு எந்தச் சதியிலும் பங்கில்லை என்பது ஒன்று. மற்றொன்று, அலைக்கற்றை ஒதுக்கீட்டால் பலனடைந் ததாகக் கூறப்படும் யூனிடெக் நிறுவனம் லஞ் சம் கொடுத்ததற்கான ஆதாரங்கள் ஏதும் இல்லை என்பது.

லஞ்சம் கொடுக்கப்படவில்லை என்பது உண்மையானால் லஞ்சம் பெறப்படவில்லை என்பதும் உண்மையாகி விடுமல்லவா?

இவை எல்லாம் எதைக் காட்டுகிறது?

2 ஜி வழக்கில் இன்று குற்றம் சாட்டப்பட் டுள்ளவர்களில் பலர் எந்தவிதத் தண்டனை யும் இன்றி விரைவிலேயே வெளியில் வந்து விடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என் பதைத்தான். வேறு வார்த்தைகளில் சொல்வ தானால் 2 ஜி வழக்கு தீபாவளிக்கு முன்னரே கூட புஸ்வாணமாகலாம்.

ஆனால், இன்னொரு புறம் உச்சநீதிமன் றத்தின் கண்காணிப்பு இருப்பதால், அரசு இந்த வழக்கில் தீவிரமாக இருப்பது போல் பாசாங்கு செய்து கொண்டிருக்கிறது. 2 ஜி ஊழல் புகாரில் தொடர்புள்ள பல்வேறு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 10 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு அன்னியச் செலா வணி விதிகளை மீறியிருப்பதாக அமலாக்கப் பிரிவு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்திருக்கி றது. இதில் 200 வங்கிக் கணக்குகள் சம்பந் தப்பட்டிருப்பதாகவும், ஆறு கம்பெனிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியிருப்பதாகவும், கள்ளப் பணத்தை ‘சலவை’ செய்வதைத் தடுக்கும் சட்டத்தின் கீழ் சொத்துக்களை முடக்கப் போவதாகவும் அது தெரிவிக்கிறது. சைப்ரஸ், சிங்கப்பூர், சானல் தீவுகள், மொரீஷியஸ், சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் பணம் பதுக்க/முதலீடு செய்யப்பட்டிருக்கலாம் எனத் தெரிவதாகவும் அது கூறியிருக்கிறது.

அதாவது, அரசின் ஒரு துறையான டிராய் முறைகேடு ஏதும் நடக்கவில்லை என்று சொல்கிறது. அதே நேரம் இன்னொரு அரசுத் துறையான அமலாக்கப் பிரிவு 10 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடு நடந்தி ருப்பதாகச் சொல்கிறது!

அன்னா ஹசாரேயின் அறப்போராட்டம் அரசுக்குப் பல விதங்களில் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியது. கூச்சல் குழப்பங்களுக்கு நடுவே நாடாளுமன்றத்தில் நடந்து கொண்டி ருந்த விவாதம், மக்கள் மன்றத்திற்கு வருவ தற்கு அந்தப்போராட்டம் காரணமாயிற்று. அந் தப் போராட்டம் அத்தனை பெரிய அளவில் எழுச்சி பெற, ஸ்பெக்ட்ரம் ஊழல் புகார் குறித்த செய்திகள் மக்கள் மனதில் இருந்தது ஒரு மறைமுகக் காரணம் என்று அரசியல் ஆய்வா ளர்கள் சொல்லி வருகிறார்கள்.

ஸ்பெக்ட்ரம் வழக்கை ஒரு புறம் நீர்த்துப் போகச் செய்து கொண்டிருக்கும் வேளை யில், அன்னா ஹசாரேவையும் கட்டுக்குள் வைக்க அரசு முனைந்திருக்கிறது. அவருக்கு வலதுகரமாக இருந்து போராட்டத்தை கட்டமைக்க உதவிய கிரண்பேடி, பிரசாந்த் பூஷன், அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் மீது நாடாளுமன்றத்தின் உரிமைகளை மீறியதாக நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது. நாடாளு மன்ற உறுப்பினர்களைப் பற்றித் தரக்குறை வாகப் பேசியதாகப் புகார். உரிமை மீறல் நிகழ்த் தப்பட்டதா இல்லையா என்று முடிவு செய் வது நீதிமன்றம் அல்ல. நாடாளுமன்றம் தான். எனவே அந்த முடிவு என்னவாக இருந்தா லும் அவர்கள் தலைக்கு மேல் கத்தி தொங் கிக் கொண்டிருக்கிறது.

இன்னொரு புறம் தன் மகன் பிரசாந்த் பூஷன் மூலம் உச்சநீதிமன்ற நீதிபதி ஒரு வரை விலைக்கு வாங்கலாம் என சாந்தி பூஷன், அமர்சிங்கிடம் நடத்திய உரையாடல் கொண்ட சிடி போலியானதல்ல என தில்லி போலீஸ் தெரிவித்திருக்கிறது. ‘இந்த உரை யாடல் போலியானது. வெட்டி ஒட்டப்பட்டது’ என பிரசாந்த் பூஷன் முன்பு மறுத்திருந்தார்.

முன்பு ஐ.ஆர்.எஸ். அதிகாரியாக வரு மான வரித்துறையில் பணியாற்றியபோது சில விதிமுறைகளை மீறிவிட்டார் என அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வருமானவரித்துறை நோட் டீஸ் அனுப்பியிருக்கிறது.

சமூக ஆர்வலர்களுக்கு சங்கடங்கள் ஏற் படுத்தும் அதே நேரம், கவனத்தை எதிர்க் கட்சிகள் மீது திருப்பவும் முயற்சிகள் நடக் கின்றன. செப்டம்பர் 1ம் தேதி சிபிஐயின் வழக் கறிஞர் கே.கே.வேணுகோபால், “மத்தியில் ஜனநாயகக் கூட்டணி அரசு நடைபெற்ற போதும் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் விதி மீறல்கள் நடந்துள்ளன. அது தொடர்பாக அந்த அரசில் நிதி அமைச்சராக இருந்த ஜஸ்வந்த் சிங், தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்த அருண்ஷோரி ஆகியோர் விரைவில் சிபிஐ யால் விசாரிக்கப்படுவார்கள்” என்று தெரி வித்திருக்கிறார்.

இன்னொரு புறம் இன்றைய அமைச்சர்க ளின் கைகள் சுத்தமானவை எனக்கூறாமல் கூறுவதற்காக மத்திய அமைச்சர்களின் சொத்துக் கணக்குகள் வெளியிடப்பட்டுள்ளன.

ஒருபுறம் 2 ஜி வழக்கின் அடிப்படையை யே ஆட்டம் காணச் செய்யும் தகவல், இன் னொரு புறம் குற்றச்சாட்டுக்களை நீர்த்துப் போகச் செய்யும் முயற்சிகள், மற்றொரு புறம் சமூக ஆர்வலர்களைக் களைத்துப் போகச் செய்யும் முயற்சி, வேறொரு புறம் கவனத்தை எதிர்க்கட்சிகள் மீது திருப்புதல் என மிகச் சாமர்த்தியமாக 2 ஜி விவகாரத்தில் காய்களை நகர்த்தி வருகிறது அரசு. இவற்றைப் பார்க்கும் போது நம் மனதில் எழும் கேள்வி ஒன்றுதான்.

இதெல்லாம் யாரைக் காப்பாற்ற?

மாலன்

திங்கள், 5 செப்டம்பர், 2011

நாசவேலை செய்தால் பதவி உயர்வு..!!! மத்திய அரசின் சாதனை


மக்களின் உயிர் காக்கும் மருந்துகளைத் தயாரிக்கும் பிரச்சனையொன்றில், முறையாக நடத்தப்பட்ட துறைரீதியான விசாரணைக்கு சமாதி கட்டும் வேலை நடந்து வருவதாக டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் அம்பலப்படுத்தியுள்ளது.

ஒருபுறம் மக்களின் உயிர் காக்கும் மருந்துகளைத் தயாரித்துக் கொண்டிருக்கும் அரசுக்குச் சொந்தமான மருந்து நிறுவனங்களை இழுத்து மூடும் முயற்சி நடக்கிறது. மறுபுறத்தில் இவற்றிற்கு மாற்றாக தனியார் நிறுவனங்களை முன்னிறுத்தும் வேலையும் உள்ளது. அரசுக்குச் சொந்தமான மருந்து நிறுவனங்களின் அபாரமான பணி ஆட்சியாளர்களின் மக்கள் விரோத நடவடிக்கைக்கு முட்டுக்கட்டையாக இருந்து வந்தது. இதனால் அரசு நிறுவனங்களில் சில கருப்பு ஆடுகளை உருவாக்கி அவர்கள் மூலமாக நாசவேலைகள் மேற்கொள்ளப்பட்டன. குறிப்பாக, நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள பாஸ்டியர் மருந்து மையத்தில் அத்தகைய நாசவேலை 2006 ஆம் ஆண்டில் நடைபெற்றது.



டெடானஸ் நோய்க்கான மருந்துகள் தொடர்ந்து 14 முறை கெட்டுப்போயின. அவ்வாறு தொடர்ந்து கெட்டுப்போவதற்கு வாய்ப்பில்லாததால் விசாரணை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன. இது திட்டமிட்டே செய்யப்படுகிறது என்ற குற்றச்சாட்டுகள் எழுந்ததால் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. 14 முறை மருந்துகள் கெட்டுப்போனதால் 21.2 லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. துறைரீதியான விசாரணை பல்வேறு உண்மைகளை அம்பலப்படுத்தியது. நாசவேலை நடந்துள்ளது என்பதையும் அந்த விசாரணை உறுதிப்படுத்தியது. இந்த நாசவேலையைச் செய்தவர் ஆராய்ச்சி உதவியாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்த மோகன் என்பது விசாரணையில் தெரிந்தது. அவரை உடனடியாகப் பணிநீக்கம் செய்து மையத்தின் அப்போதைய இயக்குநர் இலங்கேஸ்வரன் உத்தரவிட்டார்.

மத்திய மருந்து பரிசோதனை நிலையத்தின் கூடுதல் இயக்குநரான சுரீந்தர் சிங் இந்தத் துறைரீதியான விசாரணையை நடத்தினார். அவரது அறிக்கையில், “தற்போதுள்ள ஆவணங்களின் அடிப்படையில் நாசவேலை நடந்திருக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது. தொடர்ந்து 14 முறை மருந்துகள் கெட்டுப்போயிருக்கின்றன என்பதைப் பார்த்துக் கொண்டு அதிகாரிகள் சும்மாயிருந்திருக்க மாட்டார்கள். சம்பந்தப்பட்ட நபர்களின் நேர்மை மீது இது கேள்விக்குறியை எழுப்புகிறது. மையத்திற்கு ரூ.21 லட்சம் நஷ்டம் ஏற்பட்டது என் பது பிரச்சனையல்ல. முக்கியமான உயிர்காக்கும் மருந்துகளை விநியோ கிக்க முடியாமல் போனது என்பது தான் மிகப்பெரிய பிரச்சனை” என்று குறிப்பிட்டுள்ளார்.

அவர் அதோடு நிற்கவில்லை. இந்த நாசவேலைக்கும் தனியார் நிறுவனம் ஒன்றிற்கும் உள்ள தொடர்பு பற்றி விசாரிக்க வேண்டும் என்றும் பரிந்துரை செய்தார். மோகன் என்ற ஊழியர் பணிநீக்கம் செய்யப்பட்டதோடு சரி. சுரீந்தர் சிங்கின் அறிக்கை கிடப்பில் போடப்பட்டது. தரமான உற்பத்தி முறையைப் பின்பற்றவில்லை என்று கூறி பாஸ்டியர் மையத்தின் உரிமத்தை மத்திய அரசு ஜனவரி 15, 2008 அன்று ரத்து செய்துவிட்டது. தொழிற்சங்கங்கள், சமூக ஆர்வலர்கள் இந்தப் பிரச்சனையைக் கையில் எடுத்தாலும் தனியார் மருந்து நிறுவனங்களுக்கு ஆதரவாகவே மத்திய அரசும் இயங்கியது. கடுமையான எதிர்ப்புக்குப் பிறகு பிப்ரவரி 22, 2010 அன்று மருந்துகளைத் தயாரிப்பதற்கான ஒப்புதலை இந்த மையங்களுக்கு மத்திய அரசு வழங்கியது.

ஆனால், இன்னும் முழுமையான அளவில் இந்த மையங்களில் உயிர் காக்கும் மருந்துகள் உற்பத்தி நடக்கவில்லை. சுரீந்தர் சிங்கின் பல்வேறு பரிந்துரைகள் கண்டுகொள்ளப்படவில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக, நாசவேலை செய்ததற்காகப் பணிநீக்கம் செய்யப்பட்ட மோகன், தற்போது பாஸ்டியர் மையத்தில் அதிகாரியாகப் பணிநியமனம் செய்யப்பட்டுள்ளார். பணிநீக்கம் செய்யப்பட்டவர் எப்படி அதிகாரியானார் என்று பார்த்தால், அவரை பணிநீக்கம் செய்ததற்கான உத்தரவு மட்டும்தான் எங்களிடம் உள்ளது. துறைரீதியான விசாரணை அவர் மீது நடந்ததாகவோ அல்லது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவோ எந்தவித ஆவணங்களும் இல்லை. இந்நிலையில் அதிகாரிகள் பணியிடங்களை நிரப்புவதற்கான விளம்பரம் வெளியாகி, அதில் அவர் விண்ணப்பம் செய்து பணிநியமனம் செய்யப்பட்டுள்ளார் என்கிறது மைய நிர்வாக வட்டாரம்.

முன்னாள் இயக்குநர் இலங்கேஸ்வரனிடம் ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளிதழ் சார்பில் இதுபற்றிக் கேட்டிருக்கிறார்கள். விதிமுறைகளை ஒட்டுமொத்தமாக வளைத்திருக்கிறார்கள் என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார். மக்களின் உயிர் காக்கும் மருந்துகளில்கூட நாசவேலை செய்பவர்களைத் தண்டிக்காமல் அவர்களுக்கு பதவி உயர்வு கொடுத்து அழகு பார்க்கும் வேலையையே மத்திய அரசு செய்துள்ளது. சி- பிரிவு ஊழியராக இருந்தபோதே, பெரிய நாசவேலையைச் செய்தவர் தற்போது உயர் அதிகாரியாகப் பணியேற்கிறார் என்றால், இதுவும் ஒருவகையான நாசவேலையே என்கிறார்கள் பாஸ்டியர் மையத்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற விருப்பத்தைக் கொண்டிருக்கும் சமூக ஆர்வலர்கள்.


எங்களுக்கு அறிக்கை தரவில்லை- பாஸ்டியர் நிறுவனம்

டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழின் செய்திக்கு நிறுவனம் சார்பில் செப்டம்பர் 5ம்தேதியன்று உண்மை நிலையை விளக்கும் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், தரமற்ற மருந்து தயாரித்ததால் தற்காலிகமாக உரிமம் ரத்து செய்யப்படவில்லை. மாறாக, தரக்கட்டுப்பாடு வழிமுறைகளை செயல்படுத்துவதற்காகத்தான் என்று கூறியுள்ளனர்.

மேலும், மத்திய மருந்து பரிசோதனை நிலையத்தின் கூடுதல் இயக்குநராக இருந்து, 2006 ஆம் ஆண்டில் விசாரணை நடத்திய சுரீந்தர் சிங்கின் அறிக்கை எங்கள் நிறுவனத்திடம் தரப்படவில்லை. அதனால் அந்த அறிக்கை குறித்த செய்திகள் கேள்விக்குறியாகவே உள்ளது என்று கேள்வி எழுப்புகிறது பாஸ்டியர் நிறுவனத்தின் அறிக்கை. ஆராய்ச்சி அதிகாரி பணி நியமனம் எவ்வாறு நடைபெற்றது என்பதை விரிவாக எடுத்துரைக்கும் அறிக்கை, 2006 ஆம் ஆண்டின் நாசவேலை செய்தார் என்று பணி நீக்கம் செய்யப்பட்ட மோகன் என்பவர் அதிகாரியாக பணிநியமனம் செய்யப்பட்டுள்ளது பற்றி மவுனம் சாதிக்கிறது. தகுதி மற்றும் அனுபவமுள்ள நபரையே முறையாக தேர்வு செய்துள்ளது என்று மட்டும் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. .

2010 ஆம் ஆண்டு மீண்டும் உரிமம் புதுப்பிக்கப்பட்ட நிலையிலும், முறையான உற்பத்தி துவங்கப்படவில்லை என்கிற செய்தியை உண்மை நிலையை விளக்கும் அறிக்கை உறுதிப்படுத்துகிறது. அறிக்கையின் கடைசிப்பகுதியில், “தற்போதைய மருந்து உற்பத்தியானது உற்பத்தி நிலையிலும் உபகரணங்களிலும் சிறு சிறு தடைகளை நிவர்த்தி செய்த பிறகு தற்போது சீரான முறையில் நடந்து கொண்டு வருகிறது. கூடிய விரைவில் மருந்து விநியோகமானது ஆரம்பிக்கப்பட உள்ளது” என்று கூறப்பட்டுள்ளது. அதாவது உயிர் காக்கும் மருந்துகள் உற்பத்தி இந்த மையத்தில் முழுமையாக நடக்கவில்லை என்பதை நிறுவனத்தின் அறிக்கையே ஒப்புக்கொள்ளும் வகையில் உள்ளது.

ஞாயிறு, 4 செப்டம்பர், 2011

அன்னா ஹசாரேவும் எதிர்கட்சிகள் அரசியலும்

ஊழலுக்கு எதிராக சாதாரணமாக துவங்கிய அன்னா ஹசாரேவின் போராட் டம், மத்திய அரசு எதிர்கொண்ட விதத்தால் நாடு முழுவதும் பற்றி எரியும் பிரச்சனையாக மாறிப்போனது. ஊழல்வாதிகளுக்கும் திகார் சிறை, அதை எதிர்த்துப் போராடுபவர்களுக்கும் அதே திகார் தான் என அரசு கையாண்டதை கோடிக்கணக்கான இந்தியர்களால் சகித்துக் கொள்ள முடியாமல் நாடு முழுவதும் இளைஞர்கள், முதியோர்கள், மாணவர்கள், சாதாரண மக்கள் என அனைவரையும் ஒட்டுமொத்தமாக களத்தில் அன்னாவுக்கு ஆதரவாக களமிறங்க வைத்தது. இப்போராட்டத்திற்கு ஆதரவாக கிடைத்த எழுச்சிக்கு ஒரு உதாரணம், மும்பை டப்பா வாலாக்களின் ஒரு நாள் வேலைநிறுத்தம்.

இந்தியாவின் வர்த்தக தலைநகரான மும்பையில் வேலைக்குச் செல்வோர் முழுவதும் நாடியிருக்கும் இரண்டு விஷயங்களில் ஒன்று, மின்சார இரயில். மற்றொன்று, அவர்களுக்கான மதிய உணவை கொண்டு சேர்க்கும் டப்பா வாலாக்கள். அவர்கள் இதுவரைக்கும் எந்தவொரு காரணத்திற்காகவும் வேலை நிறுத்தமே செய்ததில்லை. இதுதான் முதல் முறை. நாடு முழுவதும் பெருமளவு விற்றுத் தீர்ந்த கதர் தொப்பிகள், “நான் அன்னாவின் ஆதரவாளன்” என வாசகம் பொறிக்கப்பட்ட டி.சர்ட்டுகள், மக்களின் கைகளில் ஒளிர் ந்து கொண்டிருக்கும் மெழுகுவர்த்திகள் என பல்வேறு காட்சிகளை காண முடிந் தது

ஊழலுக்கு எதிரான இத்தகைய வலு வான போராட்டத்தை அன்னா ஹசாரே என்கிற தனி மனிதரால் தலைமையேற்று நடத்த முடிகிற போது, நாடு முழுவதும் லட் சக்கணக்கான கட்சிக் கிளைகளை வைத் துக் கொண்டிருக்கும் எதிர்க்கட்சிகளால் ஏன் இத்தகைய போராட்டத்தை நடத்த முடியவில்லை எனவும் கேள்வி எழுப்பப் பட்டது. மேலோட்டமாக பார்த்தால் “அட, ஆமாம், ஏன் முடியவில்லை?” என்று கூட தோன்றும். ஆனால் மேலெழுந்த வாரியாக இதற்கான விடை கிடைத்து விடாது.. இந்தியாவில் அரசியல் என்பது பெரும்பாலும் கட்சிகளோடு இணைத்தே புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. கட்சி அரசியலைத் தாண்டி சித்தாந்த ரீதியிலான அரசியல் புரிதல் ஏற்படும் வரை இத்தகைய குழப்பங்கள் எழத்தான் செய்யும்.

வெளிப்படையாக சொல்ல வேண்டுமென்றால், எந்தவொரு எதிர்க்கட்சியாக இருந்தாலும், அது முதலா ளித்துவ சித்தாந்தத்தை ஏற்றுக் கொண்டி ருந்தால் ஊழலை எதிர்த்து உறுதியாக போராட முடியாது. ஏனெனில் முதலாளித் துவ அரசியல் என்பதே ஊழலை உள்ள டக்கியது தான். ஆளும் கட்சியை பல வீனப்படுத்தவும், அதன் மூலம் கிடைக்கும் அரசியல் ஆதாயத்திற்காக மட்டுமே அவர்கள் களத்தில் நிற்பார்கள். சிறந்த உதாரணம், அன்னாவின் போராட்டத்தை பாரதிய ஜனதா கட்சி ஆதரிப்பது. எடியூரப்பாவிற்கு எதிராக கர்நாடக லோக் அயுக்தாவின் குற் றப்பத்திரிகை தாக்கல், குஜராத்தில் கடந்த ஏழு ஆண்டுகளாக மோடி லோக் அயுக்தா அமைப்பை செயல்படவிடாமல் தடுப்பது போன்ற விஷயங்களும் இந்த நேரத்தில் நினைவில் கொள்ளத்தக்கது. இதுபோன்ற எதிர்க்கட்சிகளோடு, ஊழலுக்கு எதிராக தொடர்ந்து போராடும் இடதுசாரி கட்சி களையும் இணைத்து ஒன்றாக பார்ப்பது சரியான பார்வையாக இருக்காது

ஊழலுக்கு எதிராக நடைபெறும் தேசம் தழுவிய போராட்டங்களின் போது, ஊழல் எதிர்ப்பு கோஷங்களோடு நாம் சில விஷயங்களையும் சேர்த்து தேசத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றாக வேண்டியிருக்கிறது. முதலாளித்துவ அமைப்பைபாது காத்துக் கொண்டே ஊழலை முற்றாக ஒழித்து விட முடியாது. சில எதிர்ப்பியக்கங்களின் மூலம் ஆங்காங்கே கட்டுப்படுத்தலாம்.

அதே போல நவீன தாராளமய கொள்கைகளின் அமலாக்கம் நடைமுறைப்படுத் தப்படும் போது, உடன் நிகழ்வாக ஊழலும் எழும். உலகில் பல நாடுகளில் இத்தகைய உதாரணங்களை காண முடியும். நவீன தாராள மய கொள்கைகளை அமலாக்கத் துவங்கிய பிறகு, பல நாடுகளில் ஏற்பட்ட பெரும் ஊழல்களை கட்டுப்படுத்த பல புதிய சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன.

ஆகவே ஊழலுக்கு எதிரான போராட்டம் என்பது முப்பரிமாண கோணத்தில் முழு மையான வடிவம் கொள்ள வேண்டுமென் றால், அது அரசியலோடு இணைந்த போராட்டமாக நடைபெற்றாக வேண்டும். ஊழல் என்கிற அருவருப்பான கண்டு பிடிப்பை உலகிற்கு வழங்கிய தனியுடைமை முதலாளித்துவ அரசியலை புறக்கணிப் பதோடு, பொதுவுடைமை அரசியல் தான் ஊழல் எதிர்ப்பு போராட்டத்தை தலைமை யேற்று நடத்த முடியும் எனகிற உண்மை யை எந்த தயக்கமும் இன்றி உரத்துச் சொல் லியாக வேண்டும்.


ஆர்.பத்ரி

புதன், 6 ஜூலை, 2011

லோக்பால்: மார்க்சிஸ்ட் கட்சி நிலைபாடு

அறிமுகம்

கடந்த சில ஆண்டுகளாக அம்பல மாகிவரும் மோசடிகளால் ஊழல் என்பது மக்கள் மத்தியில் கவலைப்படும் விஷய மாக உருவாகியுள்ளது. கோடிக்கணக் கான மக்கள் கொடும் வறுமை, பட்டினி மற்றும் சமூகப் பொருளாதார வாய்ப்புகள் இல்லாமை ஆகியவற்றால் துயருற்றிருக்கும் நிலையில் உள்ள இந்தியா போன்ற நாட்டில், ஊழல் மூலம் மக்கள் பணத்தைக் கொள்ளையடிக்கும் குற்றம் மிகவும் கடுமையானதாகும். பொருளாதார வளர்ச்சி குறைந்துவரும் வேளையில், ஊழல் மூலம் செல்வத்தைக் குவிப்பது சமச்சீரற்ற நிலையை விரிவுபடுத்துவ தோடு, சமூகத்தின் ஒழுக்கக் கட்டமைப் பைத் தகர்க்கவும் செய்கிறது.

அண்மையில் அம்பலப்படுத்தப்பட்ட 2ஜி அலைக்கற்றை வழக்கு, காமன் வெல்த் மோசடி ஆகியவை, மக்கள் பணத்திலிருந்து ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை பெரும்நிறுவனங்கள், அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களில் ஒருபகுதியினர் சட்டவிரோதமாகக் கைப்பற்றிக் கொண்டதைக் காட்டின. இதைவிட மோசம் என்னவென்றால், நீதி கிடைப்பதைத் தடுக்கும் வகையில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் அமைச்சர் பதவியில் மாதக்கணக்கில் நீடிக்க அனு மதித்ததோடு, விசாரணைகளை தடம் புரளச் செய்யவும் வாய்ப்பளிக்கப்பட்டது. உயர்மட்டங்களில் ஊழல் என்பது பல ஆண்டுகளாக நமது அரசியல் அமைப் பில் இருக்கும் அம்சம்தான் என்றாலும், அரசின் உயர்மட்டங்களில் கொள்கை முடிவு எடுக்கும் நடைமுறையை மீறு வது தாராளமயக் காலகட்டத்தின் போக் காக உருவெடுத்துள்ளது. பெரும்முதலாளிகள், அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் ஆகியோருக்கு இடையி லான கூட்டு பெரிதாக உருவெடுத்து, ஜன நாயகத்தையே முடக்கும் அளவுக்கு மிரட்டி வருகிறது. தற்போதைய பொருளா தார ஆட்சிமுறை நமது அமைப்பை, குற்றங்களுக்கும் வேண்டியவர்களுக்கு ஆதாயம் செய்யும் மோசடித்தனத்திற்கும் சாதகமாக மாற்றியுள்ளது.

ஊழலுக்கு எதிரான போராட்டம், இன் றைய தினத்தில் மிகவும் வலுவாக இருக்க வேண்டியுள்ளது. இதை, நமது அரசியல், சட்ட, நிர்வாக மற்றும் நீதித் துறைகளில் ஒரு சில இடைக்கால ஏற் பாடுகளைச் செய்வதன் மூலம் மட்டுமே சாதித்துவிட முடியும் என்று எண்ண முடியாது; மாறாக ஒருங்கிணைந்த சீர் திருத்த நடவடிக்கைகளை செய்வதன் மூலமே சாதிக்க முடியும். லோக்பால் என்ற அமைப்பை உருவாக்கு வது அத் தகைய நடவடிக்கைகளில் ஒன்றாகும். இதற்குத் துணையாக மற்ற நடவடிக்கை களும் எடுக்கப்பட வேண்டும். குடிமக்க ளின் குறைதீர்க்கும் அமைப்பு ஒன்று சட்டரீதியாக உருவாக்கப்பட வேண்டும். நீதித்துறையின் உயர்மட்டத்தை மேற் பார்வை செய்ய தேசிய நீதித்துறை ஆணையம் அமைக்கப்பட வேண்டும். ஊழலுக்கு வழிவகுக்கும் மற்றொரு செய லான தேர்தலில் பணபலத்தைப் பயன் படுத்துவதைத் தடுக்கும் வகையில் தேர்தல் சீர்திருத்தங்கள் அவசியம். வரி கட்டாமல் இருந்து கொள்ளும் வசதி யுள்ள இடங்கள் மற்றும் வெளிநாடுக ளில் உள்ள வங்கிகள் ஆகியவற்றில் கொட்டி வைக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தை வெளிக்கொணரவும், வரி வசூலில் உள்ள ஓட்டைகளை அடைக் கவும் சீர்திருத்த நடவடிக்கைகளை அவசரமாகக் கொண்டு வர வேண்டும். பெரு முதலாளிகள்-அரசியல்வாதிகள்-அதிகாரிகளின் கூட்டை உடைக்க உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். அமைப்பு ரீதியாக முழுமை யாக மேற்கொள்ளப்படும் சீர்திருத்தமே ஊழலை வலுவாகத் தடுக்க முடியும்.

லோக்பால் மசோதா

உலகின் பல நாடுகளில் இருக்கும் ‘விசாரணை அதிகாரி’ என்ற அமைப்பை உருவாக்கும் பணி, ஊழல் மற்றும் அரசுப் பதவியைத் தவறாக பயன்படுத்துவது ஆகியவை குறித்த மக்களின் குறை களைத் தீர்க்க வாய்ப்பளித்துள்ளது. ஆனால், கடந்த நாற்பதாண்டுகளாக லோக்பால் மசோதா இந்திய நாடாளு மன்றத்தில் நிறைவேற்றப்படாமல் உள்ளது என்பது, ஊழலை ஒழிக்க போதிய அரசியல் உறுதி இல்லாததையே காட்டுகிறது. கடந்த காலத்தில் பல்வேறு அரசுகள் இந்த விஷயத்தைக் கையில் எடுத்துவிட்டு, பின்னர் பல காரணங் களைச் சொல்லிக் கிடப்பில் போட்டு விட்டன. தொடர்ந்து அம்பலமாகியுள்ள மோசடிகளால் மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி எழுந்துள்ளது. இதனால் தற்போதைய அரசும் இந்த மசோதா குறித்த விவாதத்தை துவக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. உயர்மட்டங் களில் நடக்கும் ஊழலை விசாரிக்க லோக்பால் மசோதாவை வரும் நாடாளு மன்றக்கூட்டத்தொடரில் தாக்கல் செய்ய வேண்டியது அவசியமானதாகும்.

லோக்பால் என்பதன் பங்கு மற்றும் அதன் செயல்பாடு எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்பது பற்றிய விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில், லோக்பாலை அமைப்பது குறித்து தனது நிலைபாட்டைத் தெளிவு படுத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விரும்புகிறது.

ஊழல் என்பதன் விளக்கம்





லஞ்சம், சில்லரைக் குற்றங்களை ஊக்குவித்தல், சுயநலத்திற்காக சலுகை கள், வேண்டியவர்களுக்கு தாராளம், தேர் தல் முறைகேடு, கையாடல், அதிகாரி களுக்கு லஞ்சப்பணம் மற்றும் திட்டமிட்ட குற்றங்களில் பங்கேற்பு என்று பல்வேறு வகையான நடவடிக்கைகள் ஊழல் என்று அழைக்கப்படுகிறது.

1988 ஆம் ஆண்டில் கொண்டு வரப் பட்ட ஊழல் தடுப்புச்சட்டம், ஊழல் நட வடிக்கைகளுக்குள் வரும் குற்றங்கள் எவை என்பதை வரையறுத்துள்ளது. இது மேலும் விரிவாக்கப்பட வேண்டியிருக் கிறது. தனிப்பட்ட லாபத்துக்கு அல்லது வளப்படுத்திக் கொள்வதற்கு அரசு அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கான தொடர்பு என்பது, ஊழல் பற்றிய மிகவும் குறுகிய வரம்புக்குட்பட்ட புரிதலாகவே உள்ளது. பல வழக்குகளில், தனியார் நிறுவனத்தின் லாபத்திற்காக அதிகாரம் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது. ஊழல் தடுப்புச் சட்டத்தின்படி ஒரு நபராக அந்த நிறுவனம் கருதப்பட மாட்டாது. பல சமயங்களில் லஞ்சம் மற்றும் கையாடல் களைக் கண்டுபிடிக்க முடியாமலேயே போயிருக் கும். ஆனால், அரசுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டிருக்கும். மக்களின் நம்பிக் கை தவறாகப் பயன்படுத்தப்பட்டிருக் கும். எடுத்துக்காட்டாக, தெரிந்தே அதி காரத்தைத் தவறாகப் பயன்படுத்தி பொதுத் துறை நிறுவனங்களை விற்கின்றனர்.

ஊழல் என்பதன் விளக்கம் மேலும் விரிவாக்கப்பட வேண்டும். “தெரிந்தே, நியாயமில்லாத லாபத்தை ஒரு நப ருக்கோ அல்லது நிறுவனத்திற்கோ தரு வது அல்லது சட்டங்களை மீறி நியாய மில்லாத லாபத்தை எந்தவொரு அரசு ஊழியரிடமிருந்து பெறுவது” என்பதை யும் அதில் சேர்க்க வேண்டும்.

செயல்பாடுகள் பற்றிய தெளிவு

லோக்பால் என்பது அடிப்படையில் புகார்களைப் பெறுகிற, அதை விசாரிக் கிற, அதுகுறித்து சோதனை நடத்துகிற ஒரு உண்மை அறியும் குழுவாக இருக்க வேண்டும்; மேலும், ஒருஊழல் வழக்கில் பூர்வாங்க ஆதாரம்இருக்குமானால் அது குறித்து விசாரணை நடத்தவும், ஒரு குறிப் பிட்ட காலவரையறைக்குள் தண்டனை வழங்கவும் வகை செய்யும் விதத்தில் சிறப்பு நீதிமன்றங்களுக்கு அந்த வழக்கு களை அனுப்பிவைப்பது என்ற பணி யையும் செய்ய வேண்டும். தானாகவே முன் வந்து விசாரணைகளுக்கு பரிந் துரைக்கும் அதிகாரம் லோக்பாலுக்கு இருக்க வேண்டும். ஊழல் வழக்குகள் தொடர்பாக மத்தியில் உள்ள ஒட்டு மொத்த அரசு எந்திரத்தையும் லோக்பால் தான் மேற்பார்வை செய்ய வேண்டும். இறு தியாக, நிர்வாக ரீதியான நடவடிக்கைக ளுக்கு பரிந்துரைக்கும் அதிகாரம் இருக்க வேண்டும். அந்தப் பரிந்துரைகள் ஏற்றுக் கொள்ளப்படாவிட்டால், நீதிமன்றங் களை நாடுவதற்கான வாய்ப்பும் இருப்பது அவசியம். சுயேச்சையான, பொறுப்புடன் கூடிய வெளிப்படையான மற்றும் கால வரம்புக்குள் உள்ள செயல்பாடுகளைக் கொண்ட அமைப்பாக இயங்க, குறிப்பி டத்தக்க சட்ட அதிகாரங்களும், சுயாட்சி யும் கொண்டதாக லோக்பால் இருக்க வேண்டும்.

நாடாளுமன்றம், நிர்வாகம் மற்றும் நீதித் துறை ஆகியவற்றின் அதிகாரங்களை தனித்தனியாகப் பிரித்து வைத்திருப்பது அரசியல் சட்டத்தின் அடிப்படையான அம்சமாகும். லோக்பாலின் செயல்பாட் டில் ஒரு விஷயத்தைப் பரிசீலனை செய்ய வேண்டியுள்ளது. ஊழல் விவ காரத்தை இது கையாளுமா அல்லது குறைதீர்க்கும் பணியையும் சேர்த்து செய் யுமா என்பதுதான் அது. இந்த இரண்டு பணிகளையும் தனியாகப் பிரிக்க வேண் டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி கருதுகிறது. குறைதீர்க்கும் பணிக்கு தனியான ஏற்பாடு இருக்க வேண்டும். தனியாக சட்டம் இயற்றி இதை அமைக்க வேண்டும். மக்கள் சாசனம் பற்றிய குடிமக்களின் குறைகள் போன்றவை இதன்கீழ் கொண்டுவரப்பட வேண்டும்.

தேர்வு மற்றும் லோக்பால் உறுப்பினர்கள்

லோக்பால் உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்கான நடைமுறை தெளிவான தாகவும், திறமை, அனுபவம், தகுதி ஆகிய வற்றை அடிப்படையாகக் கொண்டு வெளிப்படையானதாகவும் லோக்பால் சட்டம் இருக்க வேண்டும். அரசு நிர்வா கத்தைச் சேர்ந்தவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், நீதித்துறையின் உயர்மட் டத்தில் உள்ளவர்கள், நீதிபதிகள் மற்றும் கல்வியாளர்கள் ஆகியோரைக் கொண்ட விரிவான ஒன்றாக தேர்வுக்குழு அமைய வேண்டும். தேர்வுக்குழு உறுப்பினர் களைப் பரிசீலனை செய்யும் குழுவும் விரிவானதாக இருக்க வேண்டும்.

லோக்பால் அமைப்பு : ஒரு தலைவர் மட்டுமின்றி, லோக்பாலில் பத்து உறுப் பினர்கள் இருக்க வேண்டும். இதில் நான்கு பேர் நீதித்துறையைச் சேர்ந்தவர் களாகவும், மூன்று பேர் நிர்வாகத்துறையி லிருந்தும் (அவர்களுக்கு மத்திய குடி யாண்மைத்துறை அனுபவப்பின்னணி இருக்க வேண்டும்), எஞ்சிய மூன்று பேர் சட்டம், கல்வி மற்றும் சமூகப்பணி ஆகிய துறைகளைச் சேர்ந்தவர்களாவும் இருக்க வேண்டும். அதில் அரசியல்வாதிக்கு இடம் இல்லை என்பதைப்போல வர்த்த கம் மற்றும் தொழில்துறையைச் சேர்ந் தவர் யாருக்கும் அதில் இடமளிக்கக் கூடாது.

நீதித்துறை

உயர்மட்டத்தில் உள்ள ஊழலைத் தடுக்க வேண்டும் என்பதற்கு முன்னு ரிமை அளிக்க வேண்டும் என்றாலும், சாதாரண குடிமகனைப் பொறுத்தவரை, அன்றாடம் சந்திக்கும் ஊழல் மற்றும் அரசு நிர்வாகத்தின் லஞ்ச லாவண்யம் ஆகியவற்றிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் முக்கிய மானதாகும். இத்தகைய லஞ்ச லாவண் யத்தில் பெரும்பாலானவை மாநில அரசு அதிகார மட்டத்தில்தான் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. லோக்பாலைப் போல கொண்டுவரப்பட்ட லோக்ஆயுக்தாக் களின் கீழ் மாநில அரசு ஊழியர்கள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் மாநில அரசு நிறுவனங்கள் ஆகியவற்றை கொண்டு வர வேண்டும். மேலும், தனியாக கொண்டு வரப்பட வேண்டும் என்று எங்களால் வலியுறுத்தப்பட்டுள்ள குடிமக்கள் குறைதீர்ப்பு அமைப்பு, அனைத்து அடிப்படை சேவைகள் மற்றும் குடிமக்களின் உரிமைகள் குறித்த குறைகளைக் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

அ) பிரதமர் : போதிய பாதுகாப்பு ஏற் பாடுகளோடு, லோக்பாலின் வரம்பிற்குள் பிரதமர் கொண்டுவரப்பட வேண்டும். அனைத்து பொது சேவை ஊழியர் களோடு பிரதமர் பதவியும், 1989 ஆம் ஆண்டில் வி.பி.சிங் தலைமையிலான அரசு பதவியிலிருந்தபோது லோக்பா லின் வரம்புக்குள் கொண்டுவரப்பட்டது. அதைத்தொடர்ந்து வந்த அனைத்து முன்மொழிவுகளிலும் பிரதமர் லோக் பாலின் கீழ் கொண்டு வரப்பட்டார். 2001 ஆம் ஆண்டு லோக்பால் மசோதாவை பரிசீலனை செய்யும்போது அப்போதைய நாடாளுமன்ற நிலைக்குழு தலைவராக இருந்த பிரணாப் முகர்ஜியே இதைக் குறிப்பிட்டார். 1989 ஆம் ஆண்டிலிருந்து முதன்முறையாக, ஏராளமான ஊழல் விவகாரங்களில் மூழ்கியுள்ள அரசு இந்த ஊழல்களுக்கு நாட்டின் உயர் நிர்வாக அலுவலகத்தை பொறுப்பேற்கச் செய்வதில் மறுப்பு தெரிவித்து வருகிறது. ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ் வரும் பிரதமர் உள்ளிட்டு மத்திய அரசின் அனைத்து ஊழியர்களும் லோக்பாலின் வரம்புக்குள் வர வேண்டும்.

ஆ) நீதித்துறை : நீதித்துறையும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, மேலும் பொறுப்புள்ளதாக மாற்றப்பட வேண்டும். முன் அனுமதி வேண்டும் என்கிற கடுமையான விதிமுறை மற்றும் முதல் தகவல் அறிக்கை(எப்.ஐ.ஆர்) பதிவு செய் வதற்கும், ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கும் முன்பாக தலைமை நீதிபதியின் ஒப்புதல் தேவை என்பது போன்றவை கிட்டத்தட்ட சட்டரீதியான பாதுகாப்பையே அளித்துள்ளன. ஆனால், அவர்களை லோக்பாலுக்குக் கீழ் கொண்டு வர வேண்டும் என்ற முன் மொழிவுகள் அரசியல் சட்டரீதியாக உச்ச நீதிமன்றத்திற்கு அளிக்கப்பட்டிருக்கும் சுதந்திரத்திற்கான உத்தரவாதத்தைப் பாதிக்கும் வகையில் உள்ளன. கெட்ட நோக்கத் துடன் செயல்படுகிறார் என்கிற வெறும் குற்றச்சாட்டைக் கொண்டு நீதிபதிகளின் செயல்பாடுகளை லோக் பால் விசாரிக்கத் துவங்கினால், எந்தவித அச்சமுமின்றி நீதிபதிகளால் நடந்து கொள்ள முடியாது.

உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதி கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள், தேசிய நீதித்துறை ஆணையம் என்கிற தனிப்பட்ட அமைப்பால் கையாளப்பட வேண்டும். நீதித்துறையின் உயர்மட்டத் திற்கு நபர்களைத் தேர்வு செய்யும் பணியை இந்த ஆணையம் மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு நியமிக்கப்படுப வர்களின் நடத்தை மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து ஆணையம் விசாரிக்க வேண்டும். இதற்காக, தேவை யான சட்டத்தை நிறைவேற்ற வேண்டும். 2010 ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட நீதித்துறையின் தரம் மற்றும் பொறுப்பு மசோதா, இந்த நோக்கத்தை நிறை வேற்றப் போதுமானதாக இல்லை.

இ) நாடாளுமன்ற உறுப்பினர்கள் : நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊழல் நடவடிக்கைகள் குறித்த விசாரணைக் கான நடைமுறை, இப்போது பலவீன மானதாகவும், திருப்திகரமற்றதாகவும் இருக்கிறது. நாடாளுமன்ற உறுப் பினர்களைப் பொறுத்தவரை, அரசியல் சட்டத்தின் 105வது பிரிவு, வாக்குரிமை மற்றும் பேச்சுரிமை குறித்த பாதுகாப்பை அளிக்கிறது. உண்மையான பிரச்சனை என்னவென்றால், இந்த சுதந்திரமும், பாதுகாப்பும் நாடாளுமன்ற உறுப்பினர் களின் ஊழலுக்கு துணை போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பது தான்.

அரசியல் சட்டச் செயல்பாட்டை பரி சீலனை செய்யும் தேசிய ஆணையம் பரிந் துரைத்துள்ளபடி, 105வது பிரிவைத் திருத் துவதன் மூலம் இதைச் செய்ய முடியும்.

மாற்றாக, வாய்ப்பு இருக்கும் பட்சத் தில், நாடாளுமன்ற உறுப்பினர்களின் நாடாளுமன்ற நடவடிக்கைகள் அவர்களின் ஊழலுக்குத் துணைபோகும் வகையில் அமைந்தால், ஊழல் தடுப்புச் சட்டம் மற் றும் இந்திய குற்றவியல் சட்டம் ஆகிய வற்றின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும்.

லோக் ஆயுக்தாக்கள்

மத்தியில் அமைக்கப்படும் லோக் பாலை மாதிரியாகக் கொண்டு மாநிலங் களில் லோக் ஆயுக்தாக்கள் அமைக்க வேண்டும்.

ஊழலை அம்பலப்படுத்துவோருக்கு பாதுகாப்பு

ஊழலை ஒழிக்க, அதை அம்பலப் படுத்துவோருக்கு பாதுகாப்பு தேவை. அவர்களைக் கண்காணிப்பது மற்றும் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்துவது ஆகியவை லோக்பாலின் வரம்புக்கு உட்பட்டதாக அமைய வேண்டும். ஆனால், இதற்கு முழுமையான சட்டரீதி யான ஒப்புதல் தேவை. 2010 ஆம் ஆண் டின் பொதுநலத் தகவல்கள் வெளியீடு (தகவல் பாதுகாப்பு)மசோதா பலப்படுத் தப்பட்டு, அது உடனடியாக சட்டமாக் கப்பட வேண்டும்.

பெரு முதலாளிகள்-அரசு அதிகாரிகள் கூட்டு

ஊழலின் முக்கியமான மூலமாக ஒன்று இருப்பதை உணர்ந்தாக வேண் டிய அவசியம் உள்ளது. பெரு முதலாளி கள் மற்றும் அரசு அதிகாரிகளின் ஊழல் கூட்டுதான் தாராளமயத்தின் அடிப்படை யாக இருக்கிறது. ஊழல் மோசடி மூலம் உரிமங்கள், பணிகள், குத்தகை மற்றும் ஒப்பந்தங்கள் ஆகியவற்றைப் பெற்றிருந் தால் அவற்றை ரத்து செய்யுமாறு பரிந்துரை செய்ய, பெரும் நிறுவனங்கள் தொடர்பான வழக்குகளையும் லோக்பால் விசாரிக்க வேண்டும். அரசு ஒப்பந்தங்கள் மற்றும் உரிமங்கள் பெறுவதிலிருந்து அத்தகைய நிறுவனங் களைத் தடுக்கும் வகையில் அவற்றை கருப்புப்பட்டியலில் சேர்க்கும் அதிகாரம் லோக்பாலுக்கு இருக்க வேண்டும்.

அதேபோல், ஒரு குற்றம் நடந்து, அத னால் பலனடைந்தது நிறுவனமாக இருக்கும்பட்சத்தில், மக்கள் பணத்திற்கு ஏற்பட்ட இழப்பை திரும்பப் பெறும் வகை யில் தீர்மானமான நடவடிக்கைகளை எடுக்க லோக்பாலுக்கு அதிகாரம் இருக்க வேண்டும். இந்தப் பரிந்துரைகளை அரசாங்கம் பொதுவாக ஏற்று அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுயேச்சையான லோக்பாலை அமைப் பதற்கான சட்டத்தோடு, ஊழ லுக்கு எதிரான சட்டம் மற்றும் நிர்வாக ரீதியான கட்டமைப்பையும் பலப்படுத்த வேண் டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. கீழ்க்கண்டவை அத்தகைய நடவடிக்கைகளாக இருக்க வேண்டும்:

1) நீதித்துறையின் நடவடிக்கையைத் தன்கீழ் வைத்திருக்கக்கூடிய தேசிய நீதித் துறை ஆணையத்தை அமைக்க வேண்டும்.

2) பொதுமக்கள் குறைதீர்ப்புக்கான குடி மக்கள் சாசனத்தைப் பாதுகாக்க சட்டம்.

3) ஊழலுக்கு எதிரான நடவடிக்கை களுக்குக் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர்க ளும் வரும் வகையில் அரசியல் சட்டத்தின் 105வது விதியைத் திருத்துதல்.

4) தேர்தலில் பணபலம் விளையாடுவ தைத் தடுக்க தேர்தல் சீர்திருத்தங்கள்.

5) மாநில அளவிலான அனைத்து அரசு ஊழியர்களையும் உள்ளடக்கிய லோக் ஆயுக்தாக்களை மாநிலங்களில் அமைத்தல்.

6) கருப்புப்பணத்தை வெளிக்கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மற்றும் வெளிநாடுகளில் சட்டவிரோதமாகப் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் நிதியைப் பறிமுதல் செய்ய வேண்டும்.

தமிழில் : ஹரி

வெள்ளி, 17 ஜூன், 2011

திருடர்களே கொள்ளை அடிக்க வாங்க : 45 ஆயிரம் கோடி ரிலையன்ஸ் எரிவாயு ஊழல் வீடியோ

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், விண்வெளி அலைக்கற்றை ஊழல், காமன்வெல்த் ஊழல், ஆதர்ஷ் குடியிருப்பு ஊழல் என வரலாறு காணாத ஊழல்களின் அணிவகுப்பில் சிக்கித்திணறிக் கொண்டிருக்கும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற் போக்கு கூட்டணி அரசு, மத்திய அரசின் கருவூலத்திற்கு ரூ.45 ஆயிரம் கோடி அளவிற்கு மிகப்பெரும் இழப்பை ஏற்ப டுத்தி அம்பானியின் ரிலை யன்ஸ் கம்பெனி நடத்தியுள்ள மிகப்பெரும் எரிவாயு ஊழலி லும் சிக்கியுள்ளது. 
               "கள்ளனும் தோட்டக்காரனும் ஒன்று கூடினால் விடியு மட்டும் திருடலாம்" என்பதற்கு இனங்க காங்கிரஸ் கட்சியும் இந்தியாமுதலாளிகளும் கொள்லை அடிப்பதில் புதிய உலக சாதனை செய்து வருகிறார்கள்.

மன்மோகன் சிங் அரசின் பெட்ரோலியத்துறை அதிகாரி களும், முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனமும் சட்டத்தை ஏமாற்றி ரூ.45 ஆயிரம் கோடி அளவிற்கும் அதிகமாக மக்கள் பணத்தை சுருட்டியிருப்பதை மத்திய தலைமை கணக்கு மற் றும் தணிக்கையகம் ஆதாரப் பூர்வமாக அம்பலப்படுத்தி யுள்ளது. 

நாட்டு மக்களை அதிர்ச்சிக் குள்ளாக்கியிருக்கும் இந்த அனைத்து ஊழல்கள் தொடர் பாகவும் தொடர்ந்து மவுனம் காக்கும் பிரதமர் மன்மோகன் சிங், ரிலையன்ஸ் நிறுவனம் நடத்தியுள்ள எரிவாயு ஊழல் தொடர்பாக நாட்டு மக்களுக்கு அவசியம் பதில் சொல்லியே தீரவேண்டும் என்று மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலி யுறுத்தியுள்ளது. 

ஆந்திரா-ஒரிசா எல்லையை யொட்டி கிருஷ்ணா-கோதா வரி ஆறுகளின் கழிமுகப்பகு தியில் மிகப்பெரும் பெட்ரோ லியம்- இயற்கை எரிவாயு வளம் குவிந்திருக்கிறது. இந்த பகுதி யில் அரசு பொதுத்துறை பெட் ரோலிய நிறுவனங்கள், எண் ணெய் மற்றும் இயற்கை எரி வாயு சுத்திகரிப்பு பணியில் ஈடு பட்டிருந்தாலும், உள்நாட்டில் கிடைக்கும் இந்த மகத்தான வளத்தை கொள்ளையடித்து தனது லாபத்தை பெருக்க, பெரும் முதலாளியான முகேஷ் அம்பானி முடிவு செய்தார். இந்த பொதுச்சொத்தை பயன் படுத்துவதில் முகேஷ் அம்பா னிக்கும், அனில் அம்பானிக் கும் இடையே மோதல் கூட ஏற்பட்டது. முதலாளிகளுக்கு இடையே ஏற்பட்ட இந்த மோதலை பிரதமர் மன்மோ கன் சிங்கும், ப.சிதம்பரம் உள் ளிட்ட அமைச்சர் பெருமக்க ளும் ஓடோடிச்சென்று தீர்த்து வைக்க முற்பட்டார்கள் என் பது தனிக்கதை.

இந்நிலையில், முகேஷ் அம் பானியின் ரிலையன்ஸ் இண் டஸ்ட்ரீஸ் நிறுவனம், கிருஷ்ணா கோதாவரி இயற் கை எரிவாயு தளத்தில் (கேஜி கேஸ் பேசின்) மிகப்பெரிய 18 எரிவாயுக் கிணறுகளை, அர சிடம் ஒப்பந்தம் போட்டு பயன்படுத்தத் துவங்கியது. ஒரு குறிப்பிட்ட காலம் பயன்படுத் திவிட்டு-அதிலிருந்து பெட் ரோலியத்தையும் இயற்கை எரிவாயுவையும் எடுத்து கொள் ளை லாபம் பார்த்துவிட்டு- பின்னர் இந்தக்கிணறுகளில் பெட்ரோலியமோ அல்லது இயற்கை எரிவாயுவோ கண்டு பிடிக்கப்படவில்லை என்று கூறியது. அதைத்தொடர்ந்து இதில் பெருமளவில் மூலதனச் செலவு செய்துவிட்டதாகக் கூறி, பெட்ரோலியத்துறை யிடமிருந்து மிகப்பெருமளவி லான தொகையை கறந்து விட்டது. இந்தத்தொகையின் அளவு ரூ.45 ஆயிரம் கோடி என்று அதிர்ச்சிதரத்தக்க அறிக் கை ஒன்றை மத்திய தலைமை கணக்கு மற்றும் தணிக்கை யகம் தயாரித்துள்ளது.

193 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கையின்படி, கிருஷ்ணா கோதாவரி எண் ணெய் மற்றும் எரிவாயுக் கிண றுகளில் உற்பத்தியை பகிர்ந்து கொள்வது தொடர்பான ஒப் பந்தங்கள் ரிலையன்ஸ் இண் டஸ்ட்ரீஸ் நிறுவனத்திற்கும், பெட்ரோலிய அமைச்சகத்திற் கும் இடையே மேற்கொள்ளப் பட்டுள்ளன. இதன்படி ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பின் னர், சம்பந்தப்பட்ட எரிவாயு கிணறுகளை மீண்டும் அரசி டம் ஒப்படைக்காமல், ஒப்பந் தக்காலம் முடிந்தபின்னர் அதே கிணறுகளில் தனது தந்தை பெயரில் திருபாய் 1 மற்றும் திருபாய் 3 என சுத்திகரிப்பு ஆலைகளை முகேஷ் அம்பா னியின் ரிலையன்ஸ் நிறுவனம் அமைத்தது. எண்ணெய் வளம் கொழிக்கும் கேஜி - டி6 பிளாக் எனப்படும் தளத்தை சட்ட விரோதமாகக் கைப்பற்றியே ரிலையன்ஸ் நிறுவனம் தனது சொந்த ஆலைகளை அமைத் தது. இப்படிச் செய்ததன் மூலம் அரசு நிறுவனங்களுக்கு 117 சதவீதம் அளவிற்கு வரு மான இழப்பை ஏற்படுத்தியது. 

ரிலையன்ஸ் நிறுவனத்தின் இந்த சட்டவிரோத செயல் களை சட்டப்பூர்வமாக ‘மாற் றியதில்’ காங்கிரஸ் தலைமையி லான அரசின் பெட்ரோலியத் துறை அமைச்சகம் முனைப் புடன் செயல்பட்டது. பெட் ரோலியத்துறையில் இயற் கை எரிவாயு தளங்களுக்கு பொறுப் பான ‘ஹைட்ரோ கார்பன் பொது இயக்குநரக’த்தைச் சேர்ந்த மிக முக்கிய அதிகாரி கள் பெருமளவில் லஞ்சம் வாங்கிக்கொண்டு ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு ஆதரவாக வேலை செய்திருக்கிறார்கள். 

இந்த இயற்கை எரிவாயு தளங்களில் பணியைத்துவக்கிய போது தனது மூலதனச் செலவு என்று 2.39 பில்லியன் டாலர் களை கணக்குக்காட்டிய ரிலை யன்ஸ் நிறுவனம், பின்னர் மூலதனச்செலவினம் 8.8 பில்லியன் டாலர் என்று கணக் கை மாற்றி, அரசிடமிருந்து ரூ.45 ஆயிரம் கோடியை சுருட்டிவிட்டது. இதுதொடர் பான ஏராளமான விவரங்கள் மத்திய தலைமை கணக்கு மற் றும் தணிக்கை அதிகாரியின் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. 

நாட்டை உலுக்கியுள்ள இந்த ரிலையன்ஸ் எரிவாயு ஊழல் 2006க்கும் 2011க்கும் இடையில் நடந்துள்ளது. இந்த காலகட்டத்தில் பெட்ரோ லியத்துறை அமைச்சராக இருந்தவர் முரளி தியோரா ஆவார். இவர் மிகப்பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களின் முறைகேடுகளுக்கெல்லாம் ஏஜெண்டாக செயல்பட்ட ஒரு மூத்த காங்கிரஸ் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிர்ச்சிதரத்தக்க இந்த விவரங்கள் கடந்த 2 நாட்களாக மன்மோகன் சிங் அரசை நெருக்கடிக்கு உள்ளாக்கியுள் ளன. பிரதமர் மன்மோகன் சிங் தனது அமைச்சர்களுடன் அவ சரமாக கலந்தாலோசனைகள் நடத்தி வருகிறார். ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிக்கிய ஆ.ராசா, தயாநிதிமாறன் போன்ற மத்திய அமைச்சர்களின் வரிசையில் முரளி தியோராவும் சிக்குகி றார். இவர்கள் அனைவருக்கும் தலைமைப்பொறுப்பு வகிக்கும் பிரதமர் மன்மோகன் சிங்கும் கேள்விக்கு உள்ளாகியிருக்கிறார்

வியாழன், 16 ஜூன், 2011

ஹசாரேவுக்கு கிடைத்த வெற்று விளம்பரமும் லோக்பாலுக்கு பால் ஊற்றிய காங்கிரசும்

பால் ஊற்றும் காங்கிரஸ் காரியதரிசிகள்
மக்களை திசைத்திருப்பும் இந்திய முதலாளிகளின் வேலை ஆட்கள்

லோக்பால் மசோதா, கருப்புப்பண மீட்பு உள்ளிட்ட முக்கியமான பிரச்சனைகளில் மன் மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசு தொடர்ந்து பொறுப்பற்ற வகையில் நடந்து வருகிறது.

லோக்பால் மசோதாவுக்கான வரைவை உருவாக்கி அதன் மீது அனைத்துக்கட்சிகளின் ஆலோசனைகளைப் பெற்று நாடாளுமன்றத்தில் மசோதாவை தாக்கல் செய்திருக்க வேண்டும். பொதுமக்கள் மற்றும் குடிமைச்சமூகத்தின் கருத்துக்களையும் பெற்றிருக்க வேண்டும். அதன்பிறகு மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து விவாதம் நடத்தி மசோதாவை சட்டமாக்கியிருக்க வேண்டும்.

ஆனால் மத்திய அரசுக்கு உண்மையில் லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வேண் டும் என்பதில் அக்கறை இருப்பதாகத் தெரிய வில்லை. எனவேதான் லோக்பால் சட்டம் வருவதற்கு முன்பே அதில் எத்தனை இடங்களில் ஓட்டைபோடலாம் என்பது குறித்து மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது.

அன்னா ஹசாரே உண்ணாவிரதம் இருந்தவுடன் குடிமைச்சமூகம் என்ற பெயரில் உலா வந்த ஹசாரே உள்ளிட்ட சிலரை இணைத்துக் கொண்டு வரைவுக்குழுவை அமைத்தது. அந்த வரைவுக்குழுவில் இடம்பெற்றுள்ளவர்கள் குறித்து எதிர்மறையான செய்திகளை தொடர்ந்து வெளியிட்டு, அவர்களை அசிங்கப்படுத்துவதில் காங்கிரஸ் கட்சி கவனம் செலுத்தியது.

மறுபுறத்தில், மசோதாவை முழுமையாகத் தயார்செய்து அனைத்துக்கட்சிகளுக்கும் அனுப்புவதற்கு பதிலாக, ஆம், இல்லை என்ற பாணியில் சில கேள்விகளை அரசியல் கட்சி களுக்கு அனுப்பியது. இந்த அணுகுமுறையை பெரும்பாலான கட்சிகள் நிராகரித்து, முழுமை யான மசோதாவை தருமாறு கோரியுள்ளன.

லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வேண்டும், கருப்புப்பணத்தை வெளிக்கொணர வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரிக் கட்சிகள்தான் முதலில் குரல் கொடுத்தன என்பது மட்டுமின்றி தொடர்ச்சியாகவும் அதற்காக போராடி வருகின்றன.



ஹசாரேவுக்கு கிடைத்த வெற்று விளம்பர வெளிச்சத்தைக் கண்டு மயங்கிய, பாஜகவால் தூண்டிவிடப்பட்ட ராம்தேவ் களத்தில் குதித்தார். அவரை வரவேற்க விமான நிலையத்திற்கே மத்தியஅமைச்சர்கள் ஓடோடிச் சென்றனர். ரகசிய பேரங்கள் வெட்கமின்றி நடத்தப்பட்டன.

பிறகு வெளியே சொல்லப்படாத அந்த பேரம் மீறப்பட்டுவிட்டதாக பரஸ்பரம் குற்றம்சாட்டிக் கொண்டனர். பிறகு ராம்தேவுடன் உண்ணாவிர தம் இருந்தவர்கள் மீது போலீசார் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது.

வெறும் வாயை மென்று கொண்டிருந்த பாஜகவுக்கு வெற்றிலைபாக்கு மடித்துக்கொடுத் தது காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு. இப்போது கருப்புப்பணத்தை வெளிக்கொணர்வது, லோக்பால் மசோதா குறித்த விவாதங்களை விட அன்னா ஹசாரே, ராம்தேவ் குறித்த விவாதங்கள்தான் ஊடகங்களில் உலா வந்து கொண்டிருக்கின்றன.

திட்டமிட்டே இத்தகைய திசை திருப்பல் வேலைகளில் மன்மோகன் சிங் அரசு ஈடுபடுகிறதோ என்ற ஐயம் எழுகிறது. ஊழல் ஒழிப்பு, கருப்புப்பண மீட்பு போன்றவை சில தனிநபர் அல்லது குழுக்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனையல்ல. இது தேசத்தின் பிரச்சனை. நாட்டு மக்களையும் நாடாளுமன்றத்தையும் ஏமாற்ற முயலாமல் உருப்படியான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்திட வேண்டும்.

திங்கள், 13 ஜூன், 2011

இந்தியா மாண்புமிகு திருடர்களின் நாடு

இந்தியாவில் குழந்தைத் தொழிலாளர் உழைப் பின் மூலம் மட்டும் ஆண்டுக்கு ரூ. 1 லட்சத்து 20 ஆயிரம் கோடி கறுப்புப் பணம் உருவாக்கப் படுகிறது என்று குழந்தைகள் உரிமைக்கான அமைப்பு நடத்தியுள்ள ஆய்வில் தெரிய வந்தி ருக்கிறது. இந்தியாவில் 6 கோடி குழந்தைத் தொழிலாளர்கள் இருக்கிறார்கள் என்பதே வெட்கக்கேடான விஷயம். இவர்களின் உழைப்பையும் உறிஞ்சி கறுப்புப்பணம் சேர்க் கும் கூட்டத்தை என்னவென்று கூறுவது ?

குழந்தைத் தொழிலாளர்களை வைத்து வேலை வாங்குவதன் மூலம் மட்டுமே இவ்வளவு தொகை கறுப்புப் பணம் உருவாகிறது என்றால், மற்ற வகையில் எத்தனை லட்சம் கோடி கறுப்புப் பணம் உருவாகும்? இன்றும் இந்தியாவில் பெரும்பகுதியான தொழிற் சாலைகளில் தொழிலாளர் உரிமைகள், நலச் சட்டங்கள் அமலாவதில்லை. எத்தனை வருடம் வேலை செய்தாலும் தினக்கூலியாகவே வைத்திருக்கின்றனர். இதையெல்லாம் உரிய முறையில் கண்காணிப்பது யார்? தொழிலாளர் துறை இருந்தாலும், எல்லா தொழில் நிறுவனங் களிடமும் இவர்கள் நெருங்க முடியாது என்பது தானே உண்மை. இதுதவிர பல இடங்களில் தொழிலாளர் துறை அதிகாரிகளே தொழில் உரிமையாளர்களின் பிரதிநிதிகளாகவே இருக் கின்றனர்.

இது மட்டுமல்ல, கறுப்புப்பணம் உருவா வதற்கான அனைத்து வழிகளையும் மத்திய அரசு அகலத் திறந்துவிட்டு காவல் காக்கிறது. மேலும் இவர்களுக்கே சலுகைகளை மென்மேலும் வாரி வழங்கி வருகிறது. இந்த நிலையில் கறுப்புப் பணம் ஒழிக்கப்படும்; ஊழல் அறவே அகற்றப் படும் என காங்கிரஸ் கட்சியும் நமது பிரதமரும் வீரவசனம் பேசி வருகின்றனர். கடந்த 40 ஆண்டுகளாக லோக்பால் மசோதா படும்பாடு தான் என்ன? இதனால்தான் ராம்தேவ் போன்றவர்களும் தங்களை கறுப்புப் பணத்திற்கு எதிரானவர் போல் காட்டிக்கொள்ள முயல்கின்றனர்.

ராம்தேவ் அரங்கேற்றிய உண்ணாவிரத நாடகத்தை முடிவுக்கு கொண்டுவருவதில் சிக்கல் ஏற்பட்டவுடன் ராம்தேவ் சம்பந்தமாக இன்று பல்வேறு தகவல்களை மத்திய அரசே வெளியிட்டு வருகிறது. ஏன் இதற்கு முன்பு இந்த தகவல்கள் மத்திய அரசுக்கு தெரியாமலா இருந்தது? கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் அவரது வர்த்தக சாம்ராஜ்யம் 34 கார்ப்பரேட் நிறுவனங்களுடன் விரிவடைந்திருக்கிறது. ஸ்காட்லாந்தில் ஒரு தீவே சொந்தமாகி யிருக்கிறது. இதுபோன்ற விஷயங்களை கண்காணித்து உரிய காலத்தில் உரிய முறையில் விசாரணை நடத்தியிருந்தாலே கறுப்புப் பணம் எப்படியெல்லாம் உருவாகிறது என்பதின் ஒரு பகுதியை கண்டறிந்திருக்கலாம்.

இந்தியாவில் அமல்படுத்தப்பட்டுவரும் உலகமயம், தாராளமயம், தனியார்மயம் என்ற மூன்று கால் பூதம் இந்த கறுப்புப் பண ஊழல் பேர்வழிகளுக்கு வலுச்சேர்த்து பாதுகாப்பாய் இருந்து வருகிறது. இந்த மூன்று கால் பூதத்தை தலைமேல் தூக்கி வைத்துக்கொண்டு ஊழலையும், கறுப்புப் பணத்தையும் ஒழித்து விடுவோம் என பேசுவதில் எந்த அர்த்தமும் இல்லை. ஊழல் மற்றும் கறுப்புப் பணத்திற்கு எதிராக அரசை நிர்ப்பந்திக்கக் கூடிய வகையில் மக்கள் போராட்டக் களம் விரிவடையும் போது தான் அரசு உரிய நடவடிக்கை எடுக்க முன் வரும். அதுவரை காங்கிரஸ் மற்றும் மத்திய அரசின் வாக்குறுதி தண்ணீரில் எழுதுகிற எழுத்தாக காணாமல் போகும் என்பதே உண்மை.

வெள்ளி, 10 ஜூன், 2011

கறுப்புப்பண திருடர்கள் தப்பிக்க உதவும் கமிட்டிகள்

ஒரு தவறை மூடி மறைக்க வேண்டுமா ஒன்று கல்லைபோடு இல்லனா கமிட்டியைப்போடு என்ற வகையில் தான் இந்திய கமிட்டி நடைமுறை உள்ளது
கமிட்டி மற்றும் ஆய்வுகள் கார ணமாக கறுப்புப்பணம் மீதான நட வடிக்கையை தாமதப்படுத்துவதுடன் ஊழல் அரசியல்வாதிகள் மற்றும் தொழிலதிபர்கள் அதிகாரிகள் தங்களது முறைகேடான நிதியை நிறுவனங்களில் முதலீடு செய்துவிடுகிறார்கள் என ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக பேராசிரியர் கூறினார்.

ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் பொருளாதார ஆய்வு மையத்தின் தலைவராக உள்ள அருண்குமார் கூறுகையில், கறுப் புப் பணம் குறித்து கூடுதல் ஆய்வு கள் அல்லது கமிட்டிகள் அல்லது புதிய விசாரணை பிரிவுகள் அயல் நாட்டு அரசு நிர்வாகங்களுடன் ஒப் பந்தங்கள் ஆகியவை மேற்கொள் வது கறுப்புப் பணம் பதுக்கும் நபர்கள் மீதான நடவடிக்கையை தாமதப் படுத்தும் என்றார்.

அருண்குமார் இந்தியாவில் கறுப்புப் பணம் என்ற புத்தகத்தை யும் எழுதியுள்ளார். கறுப்புப் பணம் மீதான ஆய்வு, கமிட்டி அமைப்பு போன்ற நடவடிக்கைகள் ஏற்படுத் தும் தாமதம் காரணமாக தொழிலதி பர்கள், அரசியல்வாதிகள், பெரும் அதிகாரிகள் தங்களது பணத்தை அயல்நாட்டு நிறுவனங்களில் முத லீடு செய்துவிடுகிறார்கள். ஜார்க் கண்டைச் சேர்ந்த அரசியல்வாதி ஒருவர் கணக்கில் வராத பணத்தை ஆப்பிரிக்க சுரங்க பணிகளில் முத லீடு செய்ததையும் அவர் சுட்டிக் காட்டினார்.

இதேக் கருத்துக்களை தேசிய பொதுநிதி மற்றும் கொள்கை இன்ஸ் டிடியூட்டின் பேராசிரியர் இலா பட்நாயக் பிரதிபலித்தார். குற்றவியல் விசாரணை இயக்குநரகம் போன்ற வரி ஏய்ப்பு தொடர்பான குற்றங்களை சோதனை செய்ய வேண்டிய அவ சியம் இல்லை என்றார்.

பல்வேறு தரப்புகளில் இருந்து வந்த நிர்ப்பந்தம் காரணமாக சமீபத் தில் டிசிஐ எனப்படும் குற்றவியல் விசாரணை இயக்குநரகத்தை மத் திய அரசு அமைத்தது. ஆண்டு தோறும் லட்சக்கணக்கான தொலைபேசிப் பேச்சுப் பதிவுகள் மூலம், புலனாய்வு அமைப்புகளுக்கு தகவல்கள் கிடைக்கின்றன. குற்ற வாளிகளை தண்டிப்பதற்கு இத் தகைய தகவல்களை அரசு பயன் படுத்தலாம் என பேராசிரியர் அருண்குமார் கூறினார்.

வான்சூ கமிட்டி மதிப்பீட்டின்படி 1970ம் ஆண்டுகளில் 7 சதவீதமாக இருந்த கறுப்புப் பணம் 21 சதவீதமாக உயர்ந்தது என சங்கர் ஆச்சார்யா கமிட்டி தெரிவித்தது. ஆனால் சமீ பத்திய உலக ஒருங்கிணைப்பு அறிக் கைப்படி கறுப்புப்பண பொருளா தாரம் 50 சதவீதமாக அதிகரித்து விட்டது என்றும் அருண்குமார் கூறினார்.

கடந்த 60 ஆண்டுகளில் டஜன் கணக்கான கமிட்டிகள் பல்வேறு கோணங்களில் கறுப்பு பணத்தை ஆய்வு செய்து ஆயிரக்கணக்கான ஆலோசனைகளை அளித்தன. நூற்றுக்கணக்கான பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்டன. ஆனால், கறுப்புப்பணப் பொருளாதாரம் குறிப் பிடத்தக்க அளவில் வளர்ந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

நாட்டிலும், நாட்டிற்கு வெளியே யும் உள்ள கறுப்புப்பணபுழக்கம் குறித்து அரசு ஆய்வு மேற்கொண் டுள்ளது. இந்த ஆய்வினை பயன் பாட்டு பொருளாதார ஆராய்ச்சிக் கான தேசியக் கவுன்சில் மற்றும் தேசிய நிதி நிர்வாகம் இன்ஸ்டிடி யூட் இணைந்து நடத்தின.

வியாழன், 9 ஜூன், 2011

கொள்ளைக்கும், காவலுக்கும் காங்கிரஸ்தான் பொறுப்பா?





உலகம் கண்டிருக்காத புது அனுப வத்துடன், ஊழல் இந்தியாவில் அதிகரித் திருக்கிறது. தோண்டத் தோண்ட வெளி வரும் ஒன்றாக அவதாரம் எடுத்திருக்கிறது. முன்னாள் அமைச்சர்கள் சிறையில் அடைக் கப்பட்ட காலம் மலையேறி, இன்றைய அமைச்சர்கள், அவர்கள் ஆட்சியிலேயே ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆளாகி, அதைத் தொடர்ந்து, பதவியை ராஜினாமா செய்வதும், பின் சிறைக்கு செல்வதும், அதனைத் தொடர்ந்து அவர் கட்சி நாடாளுமன்ற உறுப் பினர்கள் சிறைபுகுவதும், இந்திய வரலாறு கண்டிராத ஒன்று. காங்கிரஸ் தலைவர் களான அசோக் சவாண், ஆதர்ஷ் வீட்டு வசதி ஊழலிலும், சுரேஷ் கல்மாடி, காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் போது ஒதுக்கீடு செய்த பணத்தில் ஊழல் செய்த விவகாரத்திலும் சிக்கியுள்ளனர். ஒருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அசோக் சவாண் மீதான விசாரணை தீவிரப்படவில்லை. ஆதர்ஷ் ஊழல் குறித்த விவரங்கள் தீப்பி டித்து எரிந்து நாசம் ஆனதாக வெளிவந்த தகவல், ஊழல் குறித்த செய்தியை விடவும் பேரதிர்ச்சியைத் தருகிறது. திமுக தலைவர் களான ஆ. ராசா, மு. க. கனிமொழி ஆகியோர் கைதைத் தொடர்ந்து, தயாநிதி மாறன் மீதான புகார்கள் தீவிரம் பெற்று வருகின்றன.

இந்நிலையில் நடந்து முடிந்த தேர்தலில் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு காரணமாக, தமிழ்நாட்டில் திமுக சந்தித்த சரிவு, காங் கிரஸையும் கீழே இழுத்துச் சென்றுள்ளது. புதுவைப்பிரதேசத்திலும் இதன் தாக்கத்தை உணர முடிகிறது.

காங்கிரஸ் கட்சி, பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன் என்ற பழமொழியைப் போல், தானே கொள்ளைக்கும், காவலுக்கும் பொறுப்பாக இருந்து நாட்டை ஏமாற்றக் கற்றுக் கொண்டதோ என்ற சந்தேகம் தவிர்க்க முடியவில்லை. கடந்த காலத்தில் போபர்ஸ் ஊழல், பங்குச்சந்தை ஊழல் உள் ளிட்ட பலவற்றிலும், ஆட்சியதிகாரம் கைமா றிய நிலையில்தான், காங்கிரஸ் கட்சி தலை வர்கள் மீது சிபிஐ விசாரணை முன் வைக்கப் பட்டது. ஆனால் இன்று ஆட்சியில் இருக் கும் போதே அரங்கேறுவது, வியப்பை மட்டும் ஏற்படுத்தவில்லை, எங்கோ ஏமாற்றப்படு கிறோமோ என்ற கேள்வியும் இணைந்தே உருவாகிறது. இந்த சதியில் மாநில பிராந் தியக் கட்சிகள் பாதிக்கப் பட்டால் காங்கிரஸ் கட்சிக்கு கவலை இல்லை என்பதையும் காண முடிகிறது. உதாரணத்திற்கு, தமிழகத் தில் திமுக சிக்கிக் கொண்டு திணருகிறது. மற்றொரு புறம், உத்தரப்பிரதேசத்தில் மாயா வதி ஆட்சிக்கு எதிராக ராகுல் காந்தியே முன் நின்று போராட்டம் நடத்துகிறார். மாயாவதி கட்சியான பகுஜன் சமாஜ் கட்சி, காங்கிரஸ் கேட்காமலேயே மத்திய ஆட்சிக்கு தனது ஆதரவை நிபந்தனையின்றித் தந்தது என்பதும் கவனிக்கத்தக்கது. விரைவுச் சாலை வசதிக்கான திட்டங்களையும், சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கான சட்டங்களையும் உருவாக்கியதும், தீவிரம் காட்டுவதும் காங்கிரஸ் - மன்மோகன் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசு, பின்பற்றுகிற பொருளாதாரக் கொள்கை யுடன் இணைந்தது. அந்த பொருளாதாரக் கொள்கையை ஒரு மாநிலக் கட்சி அமலாக் கினால், அதற்கான எதிர்ப்பை காங்கிரஸ் கட்சி முன் நின்று நடத்துவது தன்னை நேர் மையாளர் என்று காட்டிக் கொள்வதற்கான ஏற்பாடு தவிர வேறென்ன இருக்க முடியும்.

இந்தப் பின்னணியில் இருந்தே அன்னா ஹசாரேயின் ஊழல் எதிர்ப்பு உண்ணா விரதத்தையும், பாபா ராம்தேவ் என்ற யோகா குரு நிலையில் இருக்கும் ஆர்.எஸ்.எஸ். காரரின் உண்ணாவிரதத்தையும் கவனிக்க வேண்டியிருக்கிறது. ஹசாரேயின் உண்ணா விரதம், 50 தினங்களுக்கு முன்பு நிறைவு பெற்றது. அப்போது லோக்பால் மசோதாவை விரைவில் தயாரிப்பதற்கான குழு அமைத் தல் என்ற நாடகத்தை காங்கிரஸ் நடத்தியது. அமைக்கப்பட்ட குழுவில் அமைச்சர்கள், பல புகார்களுக்கு உள்ளான வழக்கறிஞர்கள், அரசு சாரா நிறுவனத்தின் பிரதிநிதிகள் இடம் பெற்றனர். இது மக்களுக்கு நம்பிக்கை அளிக் காதது மட்டும் அல்ல, ஊழல் குறித்த எதிர்ப் பை மழுங்கச் செய்வதாகவும் இருந்தது. ஹசாரேயின் உண்ணாவிரதத்திற்கு, மின் னணு மற்றும் அச்சு ஊடகங்கள் கொடுத்த ஆதரவும், நடுத்தர மக்கள் தந்த ஆதரவும் நீர்த்துப் போவதாக அமைந்ததையும் காண முடிந்தது. காங்கிரஸை மட்டும் எதிர்த்து வந்த ஹசாரே, ஒருகுறிப்பிட்ட காலம் வரை பா.ஜ.க குறித்து எதுவும் பேசவில்லை. குஜராத் சென்ற இடத்தில், மோடியின் தலை மையிலான பாஜக அரசு, மீது சில விமர்சனங் களை முன்வைத்தார். அதுவும் சஞ்சீவ் ராஜேந்திரன் பட் என்ற காவல் துறை அதி காரி, மோடி குறித்தும், பா.ஜ.க தலைமை யிலான அனைத்து இந்துத்துவா அமைப்புக ளும், குஜராத் இஸ்லாமியர்களுக்கு எதிராக செயல்பட்டதை அம்பலப்படுத்திய நிலை யில், ஹசாரே, ஊழலிலும் மோடி அரசு மலிந்து கிடக்கிறது என்ற விமர்சனத்தை முன்வைத்தார். ஹசாரே பா.ஜ.க வையும் தாக்கத் துவங்கிய பின்னரே, தற்போது, பாபா ராம்தேவ் அவதாரம் எடுத்து இருக்கிறார். இதில் ஏற்கனவே உருவாக்கப் பட்ட, ஊழல் எதிர்ப்பு ஆதரவு தளத்தைக் கைப்பற்ற வேண்டும் என்ற அரசியல் நோக்கம் புதைந்து கிடக்கிறது.

கடந்த காலத்தில் பாபா ராம்தேவ் பகி ரங்கமாக விஸ்வ‘ஹிந்து பரிஷத் மேடை களில் வலம் வந்தவர் என்பது உண்மை. விமர்சிப்பவர்களை, பாபாவின் சீடர்கள் என்ற போர்வையில் தக்க வைக்கும் ஏற்பாட்டை பா.ஜ.க கடந்த காலங்களில் செய்து தந்திருக் கிறது. மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவர் களில் ஒருவரான பிருந்தா காரத், பாபா ராம்தேவ் தயாரித்து வழங்கும் மருந்துகளில், மனிதனின் எலும்புகளும், விலங்குகளின் எலும்புகளும் பயன்படும் தகவலை அறிந்து, உலகிற்கு கொணர்ந்தார் என்பதற்காக தாக்கப்பட்டார். மார்க்சிஸ்ட் கட்சி மத்தியக் குழு அலுவலகம் தாக்கப்பட்டது. இச்செயல் களுக்கு ஆதரவாக, ஆர்.எஸ்.எஸ். அமைப் பினர், மார்க்சிஸ்ட் கட்சிக்கு எதிரான போராட் டங்களில் ஈடுபட்டனர். இந்த பின்னணியில் இருந்தே, கொஞ்ச காலம் பரபரப்பை ஏற்படுத் தாது இருந்த ராம்தேவ் இப்போது, பாஜகவை பலப்படுத்தும் நோக்கத்துடன் ஊழலுக்கு எதிரான போராட்டங்களைத் துவக்கியுள்ளார். கடந்த காலத்தில் பா.ஜ.க ஆட்சியின் போது சவப்பெட்டி ஊழலின் போதோ, கர்நாடகத் தில் எடியூரப்பா தனது வாரிசுகளுக்கு இடம் ஒதுக்கி குதூகலப்பட்ட போதோ ராம்தேவ் எங்கே இருந்தார் என்பதும் கேள்விக்கு உள்ளாகிறது. தற்போது தங்கள் துறைகளின் வேலைகளை மத்திய அமைச்சர்கள், கபில் சிபல், சுபோத் காந்த் சகாய், பவன் குமார் பன் சால் ஆகியோர் தீவிர முயற்சி எடுத்தும், தடுக்கப்படாத ஒன்றாக உண்ணாவிரத ஏற்பாடுகள் சென்று கொண்டுள்ளன.

அரசு சாரா நிறுவனங்களுக்கு, நிதி வெளிநாடுகளில் இருந்தும், இந்தியப் பெரு முதலாளிகள் நடத்தும் நிறுவனங்களில் இருந்தும் வருகிறது. அதே போல் பாபா ராம் தேவ் போன்றோர் நடத்தும் டிரஸ்டுகளுக்கு, பெரு முதலாளிகள் தான் நிதியை வாரி வழங்குகின்றனர். இந்த தானத்திற்காக வரிவிலக்கும் பெற்றுக் கொள்கிறார்கள். எல்லாவிதங்களிலும் பெரு முதலாளிக ளுக்கு ஆதரவாக நடந்து கொள்ளும் பிரதி நிதிகள் எப்படி ஊழலுக்கு எதிரான போராட் டத்தைத் தொடர்ந்து நடத்திட முடியும்.

இப்போது ஊழல் அதிகரிப்பிற்கான அடிப்படைக் காரணம் பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் இந்தியப் பெரு முதலாளிகளுக்கு ஆதரவாக அமைச்சர்கள் செயல்பட்டது ஆகும். 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில், நீரா ராடியா, ரத்தன் டாடா உரையாடல்கள் மிகமுக்கிய ஆதாரம். பன்னாட்டு நிறுவனங் களை அறிமுகம் செய்யும் ஏஜெண்டுகளின் செயல்பாடுகளை, ஜான்பெர்க்கின்ஸ் என்ற அமெரிக்கர் “ஒரு பொருளாதார அடியாளின் வாக்கு மூலம்” மற்றும் “அமெரிக்கப் பேரர சின் ரகசியம்” ஆகிய இரு புத்தகங்களில் வெளிப்படுத்தியுள்ளார். கமிஷன் அல்லது அன்பளிப்பு இல்லாமல், எந்த ஒரு புரிந் துணர்வு ஒப்பந்தமும் அமலாவதில்லை என்பது உலகமறிந்த உண்மையாக உறங்கிக் கொண்டிருக்கிறது. எனவே ஊழல் எதிர்ப்பு என்பது பன்னாட்டு மற்றும் இந்நாட்டு பெரு முதலாளிக்கு எதிரான போராட்டத்துடன் இணைந்தது. அத்தகைய பெரு முதலாளி களுக்கு ஆதரவான கொள்கைகளைக் கொண்டுள்ள காங்கிரஸோ, பா.ஜ.கவோ அல் லது அவர்களுடன் இணைந்த மாநிலக் கட்சிகளோ ஊழலுக்கு எதிரான போராட்டத் தினை நடத்தி விட முடியாது. அப்படி நடத்தினால் அது நாடகமே.

எஸ்.கண்ணன்