ஞாயிறு, 6 மார்ச், 2011

சே’ யின் மோட்டார் சைக்கில் பயண தோழர் ஆல்பர்ட்டோ கிரானாடோ மறைந்தார்
1952ம் ஆண்டில் லத்தீன்- அமெரிக்காவில் குறுக்கும் நெடுக்குமாகச் சென்ற சே குவேராவின் வரலாற்றுச் சிறப்புமிக்க பயணத்தில் கூட்டாளியாகச் சென்ற ஆல்பர்ட்டோ கிரா னாடோ சனிக்கிழமை யன்று ஹவானாவில் மர ணம் அடைந்தார். அவருக்கு வயது 88.

1961 ம் ஆண்டு முதல் கியூபாவின் தலைநகர் ஹவானாவில் வாழ்ந்த அவர் இயற்கை மரணமடைந்தார். இருபதாம் நூற்றாண்டின் மாபெரும் புரட்சியாளராக சே குவேரா உருவாவதற்கு கிரானாடோவும் சேயும் மேற்கொண்ட பயணம் மிகப் பெரும் காரணமாக அமைந்தது. அருதப் பழசான மோட்டார் சைக்கி ளுக்கு, வலுவான என்ற அர்த்தம் கொண்ட லா போடரோசா என்ற ஸ்பா னிஷ் பெயர் சூட்டி, அதில் இருவரும் பயணித்தனர்.

1952 ம் ஆண்டில் மேற் கொள்ளப்பட்ட இப்பயணத்தின் பதிவுகளை இருவரும் குறித்து வைத்திருந் தனர். இவற்றைப் பயன் படுத்தி ‘தி மோட்டார் சைக்கிள் டயரீஸ்’ என்ற பெயரில் 2004ம் ஆண்டில் வெளியான திரைப்படம் சர்வதேசப் புகழ்பெற்றது.

அர்ஜென்டினாவின் கார்டோபா நகரில் 8.8. 1922ல் கிரானாடோ பிறந் தார். சே குவேராவும் கிரா னாடோவும் சிறுபிராயத் தோழர்களாகவும். மருத்துவக் கல்லூரி மாணவர் களாகவும் இருந்தனர். 1952ம் ஆண்டில் தென் அமெரிக்காவில் பயணம் செய்தனர். சிலி, கொலம் பியா, பெரு, வெனிசுலா உள்ளிட்ட நாடுகளில் வறுமை கோரத் தாண்ட வத்தை இருவரும் கண்ட னர். பெரு நாட்டில் தொழு நோயாளிகள் குடியிருப்பில் இருவரும் தங்கினர்.

வெனிசுலாவில் இருவரும் பிரிந்தனர். தொழு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையில் கிரானாடோ பணியில் அமர்ந்தார். பயணம் முடிந்த பின் சே மருத்துவப் படிப்பை முடித்தார். பிடல், ரால் காஸ்ட்ரோக்களுடன் இணைந்த சே குவேரா கியூபா புரட்சியில் பெரும் பங்கு வகித்தார்.

சே அழைப்பின் பேரில் 1960ல் கியூபாவைச் சுற்றிப் பார்த்த கிரானாடோ 1961ல் ஹவானா பல்கலைக்கழகத் தில் பயோ கெமிஸ்ட்ரி கற்பிக்கும் பணியில் ஈடுபட் டார். பெருமைமிகு தலைவ னோடு தனக்கிருந்த நட்பை பெரிதும் மதித்த அவர், அதனைப் பெரிதுப்படுத் திக் கொள்ளவில்லை.

தன்னுடைய உடல் எரிக்கப்பட்டு சாம்பலை கியூபா, அர்ஜென்டினா மற்றும் வெனிசுலா மீது தூவப் பட வேண்டுமென்று கிரானாடோ தெரிவித்துள்ளார். அவர் எழுதிய ‘சேகுவேரா வுடன் ஒரு பயணம் - ஒரு புரட்சிக்காரனின் உருவாக் கம்’ என்ற நூல் உலகப் புகழ் பெற்ற வரலாற்று ஆவணங் களில் ஒன்றாகும்.

4 கருத்துகள்:

RAJA RAJA RAJAN சொன்னது…

ஆல்பர்ட்டோ-வுக்கு நாமும் வணக்கம் செலுத்துவோம்.

ஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன் சொன்னது…

பகிர்விற்கு நன்றி தோழா.

கோவி சொன்னது…

the world never forget the bike tour..

கோவி சொன்னது…

the world never forget the bike tour..