வெள்ளி, 1 ஏப்ரல், 2011

இப்படியும் ஓரு கலெக்டரா ! நேர்மையின் இலக்கணம்


‘‘மதுரை கலெக்டர் சகாயம், அதிமுகவினர் போல் செயல்படு கிறார். அவர் தமிழ்நாட்டில் மாற்றம் வேண்டும் என்று பேசும் அளவிற்கு சென்றுள்ளார் என்று நான் குற்றம் சாட்டுகிறேன்.’’

மத்திய அமைச்சர் மு.க.அழ கிரி, மதுரை மாவட்ட ஆட்சியர் சகாயம் குறித்து அளித்துள்ள பத்தி ரிகை செய்தி இது. இதே சகாயம் குறித்து டெக்கான் கிரானிக்கிள் மற்றும் ஆனந்த விகடன் ஆகிய இதழ்கள் அளித்துள்ள விவரங்கள் என்ன?

‘‘என்னை கோயம்புத்தூருக்கு மாற்றியிருந்த நேரம். என் பெண் யாழினிக்கு அப்போது மூன்று வயது. திடீரென்று ஒருநாள் இரவு அவள் மூச்சுவிட மிகவும் சிரமப் பட்டாள். மருத்துவமனைக்குத் தூக்கிச்சென்றேன். உடனே மருத் துவமனையில் சேர்க்கச் சொல்லி விட்டார்கள். மாதக் கடைசி என் பதால் கையில் ஆயிரம் ரூபாய் கூட இல்லை. புதிய ஊர். அறிமுகம் இல்லாத மனிதர்கள். எனக்குக் கீழே வேலை பார்க்கிறவர்களிடம் கடன் கேட்கவும் சங்கடமாக இருந் தது. காஞ்சிபுரத்தில் நான் வேலை பார்த்தபோது எனக்கு நண்பராக இருந்த ஒரு பள்ளி ஆசிரியர் அப் போது கோவைக்கு மாற்றல் ஆகி வந்திருந்தார். அவரிடம் மிகவும் தயக்கத்துடன் நான்காயிரம் ரூபாய் கடன் கேட்கவும் ஓர் அரை மணி நேரத்தில் அவர் கொண்டு வந்து கொடுத்தார். உடனே குழந்தைக்கு சிகிச்சை ஆரம்பிச்சிட்டோம். ஆனால், சம்பளம் வாங்கியதும் அந்தக் கடனை அடைத்ததும்தான் என் மனதில் இருந்த சுமை இறங் கியது.’’

- இவ்வாறு சகாயம் கூறியுள் ளார்.

மதுரையில் ஒன்பது லட்சம் ரூபாய் மதிப்பில் எல்ஐசி ஹவுசிங் லோன் மூலம் கட்டப்பட்ட ஒரு வீடு. வங்கியில் 7,172 ரூபாய் சேமிப்பு என பகிரங்கமாகத் தனது சொத்துப்பட்டியலை வெளியிட்ட இந்தியாவின் முதல் ஐஏஎஸ் அதி காரி சகாயம். ’லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து’ வாசகத்துக்குக் கீழ் தலைநிமிர்ந்து அமர்ந்திருக் கிறார் சகாயம்.

‘‘நான் அந்த கோயம்புத்தூர் சம்பவத்தை ஏன் சொல்றேன் என் றால்,அப்போது என் கட்டுப்பாட் டில் 650 மதுபானக் கடைகள் இருந்தன. உரிமம் புதுப்பிக்க கடைக்குத் தலா பத்தாயிரம் ரூபாய் என்று கொடுக்கத் தயாராய் இருந் தார்கள். நான் ஒரு வார்த்தை சொல் லியிருந்தால், அடுத்த ஐந்தாவது நிமிடம் 65 லட்சம் ரூபாய் என் வீடு தேடி வந்திருக்கும். ஆயிரம் ரூபாய் கூட கையில் இல்லாத, மகளுக்கு உடம்பு சரியில்லாத சூழ்நிலையில், மனநிலை என்ன மாதிரி இருக் கும்னு யோசித்துப் பாருங்கள். ஆனால், அதெல்லாம்தான் ஓர் அரசு அதிகாரியின் நேர்மைக்கான சோதனை. நேர்மையா இருக்கிற தில் ஒரேயொரு சிக்கல் மட்டும் தான். நாளுக்கு நாள் நமக்கு எதிரி கள் அதிகரித்துக்கொண்டே போவார்கள். அவர்களை மட்டும் சமாளித்துவிட்டால் போதும்.”

புதுக்கோட்டை மாவட்டம் பெருஞ்சுனை குக்கிராமம்தான் என் சொந்த ஊர். மற்றவர்கள் தோட்டத்து மாங்காய் தெருவில் கிடந்தால்கூட எடுத்துக்கொண்டு வரக்கூடாது என்று சொல்கிற அம்மா. நீ படித்து கலெக்டர் ஆகி, உதவின்னு கேட்டு வர்றவங்க ளுக்கு எல்லாம் உதவணும்டா என்று சொல்லிக்கொண்டே இருக் கும் அப்பா. கலெக்டர்தானே, ஆயி டுவோம்னு படிச்சேன், ஆயிட் டேன். வேலைக்கு சேர்ந்த முதல் நாள் நம்ம மனது எந்த அளவுக்கு புத்துணர்ச்சியோடவும் புனிதமாக வும் இருக்கோ, கடைசி நாளின் போதும் அதே உணர்ச்சியோடு ஓய்வு பெறணும்னு மட்டும் முடிவு பண்ணினேன்.

‘‘காஞ்சிபுரத்தில் கோட்டாட்சி யராகப் பணியாற்றிக் கொண்டிருந்த சமயத்தில் ஒரு பெரியவர், தான் வாங்கிய பெப்சியில் அழுக்குப்பட லம் இருந்ததாகப் புகார் கொடுத் தார். மாதிரியை ஆய்வுக்கூடத் திற்கு சோதனைக்காக அனுப்பிய தில், மனிதர்கள் குடிக்க லாயக்கற்ற பானம் என்று அறிக்கை வந்தது. சட்டப்படி அந்த நிறுவனம் மேல் என்ன நடவடிக்கை எடுக்க ணும்னு ஓர் அறிக்கை தயாரித் தேன். ரொம்ப யோசனைக்குப் பிறகு வட்டாட்சியரிடம் எட்டு பூட்டு மட் டும் வாங்கிட்டு வரச் சொன்னேன். எதுக்குன்னு புரியாம வாங்கிட்டு வந்தவரைக் கூட்டிக்கிட்டு மதுராந் தகத்துல இருக்குற பெப்சி கம்பெ னிக்குப் போனேன்.

நான் தயாரித்த அறிக்கையின் ஒரு நகலை கம்பெனி மேலாளரி டம் கொடுத்துட்டு, கம்பெனியைப் பூட்டி சீல் வைக்கப் போறோம். எல்லோரையும் வெளியே வரச் சொல்லுங்கன்னு சொன்னோம். அந்த மேலாளரைவிட என்கூட வந்த வட்டாட்சியர் ஆடிப்போயிட் டார். சார், ...பெரிய பிரச்சனை ஆயி டும். எதுக்கும் கலெக்டரை ஒரு வார்த்தை கேட்டுக்கலாம்னு பதறினார். கலெக்டரைக் கேட்டால் சீல் வைக்க விடமாட்டார். சட்டப் படி இந்தக் கம்பெனியை மூட நமக்கே அதிகாரம் இருக்கு. நீங்க தைரியமா உங்க கடமையைச் செய் யுங்கன்னு அவரை உள்ளே அனுப் பினேன். ஒரு மணி நேரம் கழித்து இன்னும் பதற்றத்தோடு வெளியே வந்தவர், சார்... அவங்க அமெரிக்கா வரைக்கும் பேசுறாங்க சார். முதல் வர் கிட்ட பேசுறதாச் சொல்றாங்க, சார். என்ன பண்ணலாம்னு கேட் டார். உள்ளே இருக்கிறவங்களை கைது பண்ணிட்டு சீல் வைக்க வேண்டியதுதான்னு நான் சொல் லவும்தான் எல்லாரும் பயந்து வெளியே வந்தாங்க. கம்பெனியை இழுத்து மூடி எட்டு பூட்டு களையும் போட்டு சீல் வெச்சுட் டோம்.

நான் உடனே அலுவலகத் துக்குப் போகாமல், ஒரு குக்கிராமத் துக்குப் போய் ரேசன் கடை, பள் ளிக்கூடத்தை எல்லாம் ஆய்வு செய்துவிட்டு இரவு எட்டு மணிக்கு வீட்டுக்கு வந்தேன். என் மனைவி வாசலிலேயே காத்துக்கொண்டு இருந்தாங்க. கலெக்டர், சீஃப் செக் ரடரி, உள்துறைச் செயலாளர்னு பலரும் என்னைக் கேட்டு வீட்டுக் குப் போன் பண்ணி இருக்காங்க. நான் திரும்ப எல்லோருக்கும் போன் பண்ணினேன். யாரைக் கேட்டு சீல் வெச்சீங்க? என்ன காரியம் பண்ணியிருக்கீங்க, தெரி யுமா? என்று எல்லோரும் கேள்வி கேட்டாங்க. நான் என் கடமை யைத்தான் சார் செய்தேன். மக்க ளுக்கு நல்லது செய்ததுக்காக, சஸ் பெண்ட் செய்தால் தாராளமாகச் செய்துகொள்ளுங்கள் என்று சொல்லி விட்டேன். மறு நாள் இந்த செய்தி எந்தப் பத்திரிகையிலும் பெட்டி செய்தியாகக் கூட வரவில்லை. பெப்சிக்கு சீல் வைத்த சம்பவம் ரிப்போர்ட் செய்யப்படவே இல்லை.

இரண்டு நாள் கழித்து ஜூனியர் விகடன் இதழில் மட்டும் அந்தச் செய்தி விரிவாக வந்திருந்தது. அதற்குப் பிறகுதான் பெப்சிக்கு நான் சீல் வைத்த விஷயமே வெளி உலகத்துக்குத் தெரிந்தது.

இதுவரை 15 இடங்களுக்கு என்னை மாற்றி மாற்றி பந்தாடிட் டாங்க. நாமக்கல் மாவட்டம் முழு வதும் ஒரு கோடி மரக்கன்றுகள் நடுவதற்கு திட்டமிட்டு, ஏழு லட் சம் மரக் கன்றுகளை நட்டுவிட் டோம். அவற்றின் முறையான பராம ரிப்புக்கும் ஏற்பாடு பண்ணிவிட் டோம். இன்னும் பத்தாண்டுகளில் அதிக மரங்கள் உள்ள மாவட்டமாக நாமக்கல் இருக்கும். ஏற்கனவே நொந்து போயிருக்கும் விவசாயி களை, குறை தீர்க்கும் கூட்டத் துக்கு வான்னு ஒவ்வொரு மாதமும் கலெக்டர் ஆபீசுக்கு அலைக் கழிக்கிறது நல்லாவா இருக்குன்னு நானே விவசாயிகளைத் தேடிப் போக ஆரம்பித்தேன். ஒரு நாள் இரவு முழுவதும் அந்தந்த கிராமங் களிலேயே தங்கி, அவங்க குறை களை வாழ்ந்து பார்த்துட்டு வரு வேன். அப்போதுதான் அவங்க சொல்வதற்கு முன்னாடியே அவங்க குறைகள் என்னன்னு நாம் உணர முடியும்.

இப்படிப்பட்ட சகாயம் மீதுதான் அமைச்சர் மு.க.அழகிரி குற்றம் சாட்டுகிறார்.

தீக்கதிர்

1 கருத்து:

விடுதலை சொன்னது…

மதுரை கலெக்டர் சகாயம் பரபரப்பு பேட்டி

மதுரை, ஏப் 2 (டிஎன்எஸ்) பணம்-லஞ்சம் பெற்றுக் கொண்டு வாக்கு அளிக்க கூடாது என்பது தொடர்பான விழிப்புணர்வு பிரசாரத்தை மாவட்ட கலெக்டர் சகாயம் மதுரை கலெக்டர் அலுவலகத்தில் இன்று (ஏப்.2) தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் பேசியதாவது;

தேர்தல் ஆணைய விதிமுறைக்கு உட்பட்டு தேர்தல் பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. மதுரை மாவட்டத்தை பொறுத்த வரையில் தேர்தல் அதிகாரியுமான நான், போலீஸ் கமிஷனர், சூப்பிரண்டு, வருவாய் அலுவலர்கள் ஆகியோர் சிறப்பாக தேர்தல் பணியை செய்து வருகிறோம். வருகிற சட்டசபை தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க செய்ய வேண்டும் என்பதே முக்கிய குறிக்கோள்.

பணம், லஞ்சம் பெறாத வாக்களிப்பு உரிமையை இந்த முறை மக்கள் சந்திக்க வேண்டும். இந்திய நாட்டின் மிகவும் சிறப்பானது ஜன நாயகம்தான். அச்சாணியாக உள்ள தேர்தலை நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடத்த வேண்டும். மதுரை மக்கள் நேர்மையானவர்கள். பணம் வாங்க மாட்டார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.

மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மற்றும் கிழக்கு தொகுதி தி.மு.க. வேட்பாளர் மீதும் பொய் வழக்கு போடச் சொல்லி தேர்தல் அதிகாரி சுகுமாறனிடம் நீங்கள் நிர்பந்தம் செய்ததாக அவர் புகார் தெரிவித்துள்ளாரே? என்ற கேள்விக்கு, அப்படி நான் செய்வேனா? அவர் கூறுகிற மாதிரி நான் அவரிடம் பேசவில்லை. தேர்தல் பணியை கவனிக்க கூட நேரம் இல்லாத நிலை எனக்கு உள்ளது என்றார்.

கே: தேர்தல் அலுவலர் சுகுமாறனை நீங்கள் டார்ச்சர் செய்ததாகவும், உயிருக்கு ஆபத்து ஏற்படும் என கூறியும் அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறாரே?

ப: அவர் சொல்வது முழுக்க ... முழுக்க பொய். அரசு ஊழியராக இருந்து கொண்டு மேல் அதிகாரி மீது புகார் கூறுவது ஒரு மோசமான நிலை.

கே: தேர்தல் அதிகாரி பணியில் இருந்து தன்னை விடுவிக்குமாறு சுகுமாறன் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளாரே?

ப: எப்போது கடிதம் அனுப்பினார் என்பது எனக்கு தெரியாது.

கே: ஆளும் கட்சிக்கு எதிராக நீங்கள் நடவடிக்கை எடுத்து வருவதாக புகார் கூறுகிறார்களே?

ப: என் மீது கட்சி சாயம் பூசாதீர்கள். நேர்மையாகவும், நடுநிலையோடும், நியாய மாகவும் தேர்தலை நடத்த ஏற்பாடுகளை செய்து வருகிறோம்.

கேள்வி : தேர்தல் ஆணையம் உங்களிடம் விளக்கம் கேட்டுள்ளதா?

பதில் : இதுவரை எதுவும் கேட்கவில்லை.

இவ்வாறு அவர் கூறினார். (டிஎன்எஸ்)