பரமக்குடியில் செப்டம்பர் 11ம் தேதி காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 7 மனித உயிர்கள் பறிக்கப்பட்டுள்ளன. காவல்துறையினரின் இந்த அத்துமீறிய, அராஜகமான செயலை எவ்வளவு கடுமையான வார்த்தைகளால் கண்டித்தாலும் தகும்.
தென் மாவட்டங்களின் பின்தங்கிய நிலையை குறிப்பாக தொழில் வளர்ச்சி, கல்வி, சுகாதாரம் போன்ற பல்வேறு துறைகளில் அந்த மாவட்டங்கள் பின் தங்கி இருப்பது குறித்து பல்வேறு நீதிபதி கள் தலைமையிலான விசாரணை குழுக் கள் கடந்த காலங்களில் சுட்டிக்காட் டியுள்ளதோடு, அரசு தரப்பில் மேற்கொள் ளப்பட வேண்டிய பல்வேறு நடவடிக்கை களும் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. நான்கு நேரி தொழில்நுட்பபூங்கா, சேதுக் கால் வாய் திட்டம் போன்ற திட்டங்கள் முடக் கப்பட்டுள்ளன. அந்த மாவட்டங்களில் புதிய தொழிற்சாலைகள் துவங்கப்பட வில்லை. வேலைவாய்ப்பை பெருக்க எந்தவித உருப்படியான நடவடிக்கை களும் எடுக்கப்படவில்லை.
தென் மாவட்ட மக்களின் வேலை வாய்ப்பு, கல்வி, சுகாதாரம், குடிநீர் போன்ற அடிப்படைத் தேவைகள் கூட பூர்த்தி செய்யப்படவில்லை. இந்த பின்னணி யில் தான் அந்த பகுதியில் அடிக்கடி கலவரங்கள் வெடிப்பதும், மதிப்பு மிக்க மனித உயிர்கள் பலியாவதும், 144தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதும், விசார ணைக் கமிஷன்கள் அமைக்கப்படுவதும் தொடர்கதையாகி வருகிறது.
இமானுவேல் சேகரன் நினைவு நாளில் பரமக்குடி, மதுரை, இளையான்குடி ஆகிய இடங்களில் போலீசாரால் துப் பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக 7 மனித உயிர்கள் பறிக்கப் பட்டுள்ளன. ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீது வழக்குகள் பதியப்பட்டுள்ளன. போலீசார் நடத்திய அத்துமீறிய துப்பாக் கிச் சூட்டை எந்தவகையிலும் யாரும் நியாயப்படுத்த முடியாது.
முன்னாள் முதல்வர் கருணாநிதி, பரமக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டிக்கவில்லை. மாறாக தவிர்த்திருக்க முடியும் என்றுதான் கூறியுள்ளார். திமுக ஆட்சியில் நடத்தப்பட்ட தாமிரபரணி படு கொலை, வழக்கறிஞர்கள் மீது தாக்குதல், துப்பாக்கிச்சூடுகள், லாக்-அப் மரணங் கள் போன்றவை விவாதத்திற்கு வரும் என்பதால்தான் அவர் துப்பாக்கிச் சூட்டை கண்டிப்பதை தவிர்த்துள்ளார்.
கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியை வீழ்த்தி, அதிமுக ஆட்சிப் பொறுப்புக்கு வந்த 4 மாதங்களுக்குள் இத் தகைய கொடிய நிகழ்வு நடந்துள்ளது. இதை தவிர்த்திருக்க முடியுமா? என்று கேட்டால் நிச்சயமாக தவிர்த்திருக்க முடியும். காவல்துறையினரின் முதிர்ச்சி யற்ற அணுகுமுறை, உளவுத்துறையின் செயலற்ற தன்மை ஆகியவை தான் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.
பலியான 7 பேரின் வயது, குடும்பப் பின் னணி, தொழில் ஆகியவற்றை பார்க்கும் போது அதிர்ச்சியளிக்கிறது.
துப்பாக்கிச்சூட்டில் பலியான கீழ் கொடுமலூர் என்ற ஊரைச்சேர்ந்த தீர்ப்புக்கனி(25) ஒரு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்.
மஞ்சூரை சேர்ந்த ஜெயபால் (29) செங்கல் சூளை தொழிலாளி. கலப்பு திருமணம் செய்துகொண்டவர். அவரது மனைவி தற்போது நிறைமாத கர்ப்பிணி.
வீரம்பல் கிராமத்தைச் சேர்ந்த பன்னீர் செல்வம் (50) ஒரு கூலித் தொழிலாளி. பல்லவராயனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த கணேசன் (55) ஒரு விவசாயி. இவரது மகன் குணசேகரனின் திருமணத் திற்கு பத்திரிகை கொடுக்க வந்தபோது துப்பாக்கிச்சூட்டில் சிக்கி உயிரிழந் துள்ளார்.
சடையநேரி கிராமத்தைச் சேர்ந்த முத்துக்குமார் (25) கேஸ் ஏஜென்சி ஒன்றில் பணியாற்றி வந்தவர்.
இவ்வாறு பலியானவர்கள் எளிய குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். அனை வருமே தலித்துகள்.
இந்த துப்பாக்கிச்சூடு குறித்து சட்ட மன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின் அடிப்படையில் விசாரணை கமிஷன் அமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த விசாரணை கமிஷன் அறிக்கை கிடைக்க சிறிது காலம் பிடிக்கலாம்.
ஆனால் காவல்துறையினரின் பொறுப்பற்ற முன்னெச்சரிக்கையற்ற அணுகுமுறை தான் துப்பாக்கிச்சூட்டில் 7 மனித உயிர்கள் பலியாவதற்கு காரணம் என்பது வெளிப்படையாக தெரிகிறது.
இமானுவேல் சேகரன் நினைவு நாள் அன்று ஏராளமான மக்கள் அஞ்சலி செலுத்த வருவார்கள் என்பது காவல் துறைக்கு நன்றாக தெரியும். போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந் தால் இந்த விபரீதத்தை தடுத்திருக்க முடியும். ஒரு ஜனநாயக நாட்டில் இத்த கைய நிகழ்ச்சிகள் காவல்துறையினரின் அனுமதி பெற்றுத்தான் நடக்கின்றன. அப்படி இருக்கும் போது உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யவேண்டியது அவர்க ளது பொறுப்பு தான். பரமக்குடியில் நடந் தது திடீர் கலவரம் அல்ல. ஜான் பாண் டியன் கைதை தொடர்ந்து எத்தகைய நிகழ்வுகள் நடக்கும் என்பதை யூகித்து, அதற்கேற்ப முன்னெச்சரிக்கை நடவ டிக்கை எடுத்திருக்க வேண்டும்.
வன்முறையில் ஈடுபடுவோரை யாரும் நியாயப்படுத்தப் போவதில்லை. ஆனால் அதை காரணம் காட்டி காக்கை, குருவி களை சுட்டுத் தள்ளுவது போல, சற்றும் மனிதத் தன்மையின்றி மக்களை சுட்டுக் கொல்வதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது.
தென் மாவட்டங்களின் நிலைமையை மேம்படுத்தாமல், தாழ்த்தப்பட்ட, பிற்படுத் தப்பட்ட மக்களுக்கு உரிய வேலை வாய்ப்பை உருவாக்காமல் சமூக பதற் றத்தை தடுக்க முடியாது. வெறும் சட்டம்-ஒழுங்கு பிரச்சனையாக மட்டும் பார்ப்பது எந்தவகையிலும் சரியாக இருக்காது.
உலகின் பல்வேறு நாடுகளில் தாராள மய பொருளாதாரக் கொள்கைகளை எதிர்த்து ஏதாவது ஒரு வகையில் மக்கள் போராடிக் கொண்டு தான் இருக்கிறார்கள். குறிப்பாக ஒரு விஷயத்தை சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. பிரிட்டனின் தலை நகரான லண்டனில் ஆகஸ்ட் 6ம் தேதி மிகப் பெரிய கலவரம் வெடித்தது. தொடர்ந்து 4 நாட்கள் நீடித்தது. மான்செஸ் டர், பிரமிங் ஹாம் ஆகிய நகரங்களுக்கும் கலவரம் பரவியது. பொதுச் சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன. கடைகள் சூறையாடப்பட்டன. ஆம்புலன்ஸ் வாக னங்களும் தாக்குதலுக்கு உள்ளாயின.
பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் கள் தங்கள் விடுமுறையை ரத்துசெய்து விட்டு நாடு திரும்பினர். நாடாளுமன்றம் கூட்டப்பட்டது. அந்நாட்டின் பிரதமர் டேவிட் கேமரூன் நாடாளுமன்றத்தில் பேசும்போது, பிரிட்டன் சமூகம் நோய் வாய்ப்பட்டுள்ளது என்றார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலவரம் குறித்து கவலை தெரிவித்தனர். இந்த கலவரம் குறித்து அந்நாட்டு பத்திரிகைகள் அனைத்தும் கட்டுரைகள், தலையங்கங்கள் எழுதின.
பிரபல பத்திரிகையான ‘தி எக்கனா மிஸ்ட்’ ஏடு ஆகஸ்ட் 13ம் தேதி எழுதிய தலையங்கத்தில், கலவரக்காரர்கள் மீது ரப்பர்குண்டு பயன்படுத்தியிருக்க வேண் டும், துப்பாக்கிச்சூடு நடத்தியிருக்க வேண்டும் என்றெல்லாம் கூறப்பட்ட கருத்துக்களை நிராகரித்தது. காவல்துறை பிரிட்டனின் ஜனநாயகத்தை சிதைக்க வில்லை என்பதே நிம்மதியளிக்கிறது என்றும் கூறியது. போலீசார் அவ்வாறு துப்பாக்கிச்சூடு நடத்தியிருந்தால் பிரிட் டனின் பெயர் அசிங்கப்பட்டு போயி ருக்கும். ஜனநாயகம் தலைகுனிந்திருக் கும் என்று கூறியிருந்தது அந்த ஏடு.
பிரிட்டன் அடிப்படையில் இன்றைக் கும் ஒரு ஏகாதிபத்திய நாடு. இந்தியா உட்பட பல்வேறு நாடுகளை ஆக்கிரமித்து கொடுமை செய்த நாடு. இந்தியாவில் ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந் ததும், பகத்சிங் தூக்கிலிடப்பட்டதும், அந்தமான் சிறை, சேலம் சிறை உட்பட பல்வேறு சிறைகளில் துப்பாக்கிச்சூடு நடந்ததும் பிரிட்டன் ஆட்சியில் நடந்தது. இப்போதும் இராக்கை அமெரிக்கா ஆக்கிரமிக்க பிரிட்டன் துணை நின்றது. அந்நாட்டு ஜனாதிபதி சதாம் உசேனை தூக்கில் போட துணை நின்றது. ஆப்கன் ஆக்கிரமிப்பிற்கும் உதவும் நாடுதான் அது. ஆனாலும் கூட தனது நாட்டில் ஜனநாய கம் பேணப்பட வேண்டும் என்பதில் அந்த நாடு உறுதியாக உள்ளது. சொந்த நாட்டு மக்களுக்கு எதிராக துப்பாக்கிச் சூடு நடத்த பிரிட்டன் துணியாது. அந்த மக்களும் அதை ஏற்க மாட்டார்கள்; பத்திரிகைகளும் அத்தகைய அராஜகங் களை ஏற்காது.
ஜனநாயக நாடான இந்தியாவின் ஒரு பகுதியான தமிழகத்தில் காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தி மனித உயிர் களைப் பறிப்பதை எப்படி நியாயப்படுத்த முடியும்? எப்படி ஏற்க முடியும்?
டி.கே. ரங்கராஜன் எம்.பி.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
1 கருத்து:
தலித்துகளுக்குப் பிரச்னை ஏற்படுமென்றால் பிரச்னை வராமல் தடுக்கிறோம் என்று தலித்துகளைக் கைதுசெய்வதும், தலித்துக்களால் பிரச்சனை ஏற்படுமென்றால் பிரச்னை ஏற்படுத்துபவர்கள் என தலித்துகளைக் கைதுசெய்வதும், தமிழகப் பொலிசாரின் கொள்கையாக இருக்கின்றது!!
இம்மானுவேல்சேகரனின் குருபூஜையை தடுத்து நிறுத்தி முத்தராமலிங்கத்தின் குருபூஜைக்கு இணையாக தமிழகத்தில் வளரவிடக் கூடாது என்பதுதான் அதிமுக அரசின் நோக்கமாக இருக்கின்றது!!!
- நல்லையா தயாபரன்
கருத்துரையிடுக