கர்நாடகம், மஹாராஷ்டிரா, குஜராத், ராஜஸ் தான், ஹரியானா, பஞ்சாப் ஆகிய 6 மாநிலங் களில் பருவமழை அளவு குறைந்ததால் வறட்சி நிலை உருவாகும் அபாயம் ஏற்பட்டிருப்பதாக ஒரு செய்தி கூறுகிறது. ஆகவே நிலைமையை சமாளிக்கவும், வறட்சியின் தாக்குதல்களி லிருந்து மக்களைக் காக்கவும் அரசுகள் திட்ட மிட்டு முனைப்புடன் செயல்பட வேண்டிய தேவை இருக்கிறது. அந்த வகையில் கர்நாடக மாநில அரசு ஒரு நடவடிக்கையை எடுத்துள் ளது. ஆனால், அது வரவேற்கத்தக்கதாகவோ பின்பற்றத்தக்கதாகவோ இல்லை!
மாநிலம் முழுவதும் உள்ள கிட்டத்தட்ட 34,000 இந்துக் கோவில்களில் சிறப்பு வழிபாடு கள் நடத்துவதுதான் அந்த நடவடிக்கை. “அபி ஷேகம்,” “ஜலாபிஷேகம்,” “வருண மந்திரம்” என்ற சடங்குகளை நடத்துமாறு மாநில அரசின் வருவாய்த் துறையிலிருந்து சுற்றறிக்கை அனுப் பப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு கோயிலுக்கும் ரூ.5,000 வீதம் மொத்தம் ரூ.17 கோடி நிதி ஒதுக் கீடும் செய்யப்பட்டுள்ளது. ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 2 வரையில் இந்தச் சடங்குகள் நடத்தப்படுமாம்.
மழை வேண்டி இப்படிப்பட்ட வழிபாடு களை சம்பந்தப்பட்ட கோவில் நிர்வாகிகள், அல் லது தனிப்பட்ட சில அமைப்புகளைச் சேர்ந் தோர் நடத்துவது உண்டுதான். ஆனால், அர சாங்கமே இதற்கு இவ்வாறு யாகம் நடத்தச் சொல்வதையும், மக்களின் பணத்தை அதற் காகச் செலவிடுவ தையும் கொஞ்சமும் நியாயப் படுத்துவதற்கில்லை. இரண்டு அடிப்படை யான அம்சங்களில் இது இந்தியாவின் அரச மைப்பு சாசனத்திற்கு எதிரானதுமாகும். ஒன்று - இந்தியாவின் அரசமைப்பு மதச்சார்பற்றதாக இருக்கும் என்பது மீறப்படுகிறது. இரண்டு - இந்திய சமுதாயம் அறிவியல் கண்ணோட்டத் துடன் வளர்க்கப்படும் என்ற அரசமைப்பு சாசன லட்சியம் அவமதிக்கப்படுகிறது.
பாரதிய ஜனதா கட்சியிடம் ஆட்சி சிக்கு மானால் ஒற்றை மதவாத - கலாச்சார ஆதிக்கத் தை ஏற்படுத்துகிற நோக்கத்துடன்தான் நட வடிக்கைகள் எடுக்கப்படும் என்பதற்கு இது ஒரு சரியான சான்று. இதே போன்ற மழை யாகங் களை குஜராத்தின் நரேந்திர மோடி அரசும் நடத்தியிருக்கிறது.
மழை நீர் சேகரிப்பு, அறிவியல் பூர்வமான நீர் நிர்வாகம், எதிர்பாரா நிலைமைகளுக்கான முன் தயாரிப்பு, வறட்சியை எதிர்கொள்ள போதிய உணவு தானியங்களும் இதர அத்தியாவசியப் பொருள்கள் கையிருப்பு போன்ற திட்டங்க ளைத்தான் ஒரு அரசு மேற்கொள்ள வேண்டும். அதை விடுத்து, இவ்வாறு பூசைகளை நாடுவது என்பது, கர்நாடக பாஜக தலைமையின் பதவிச் சண்டைகளைப் பார்க்கிற மக்களின் கவனத் தைத் திசை திருப்புகிற உத்தியுமாகும். மழைக் காக இன்று இவ்வாறு இப்படிப்பட்ட அபிஷேக சடங்குகளை நடத்துவோர், நாளை விலைவாசி யைக் கட்டுப்படுத்தவும், வேலை வாய்ப்பு களைப் பெருக்கவும், தொழில் வளர்ச்சிக்காக வும், விவசாயத்தில் அமோக விளைச்சலுக் காகவும், கல்விக்காகவும், சுகாதாரத்துக்காக வும் இன்ன பிற தேவைகளுக்காகவும் மத சாத் திரங்களின்படி சடங்குகளை நடத்திக் கொண் டிருப்பார்களோ என மக்களில் ஒரு பகுதியினர் கேட்பதில் முழு நியாயம் இருக்கிறது.
ஜனநாயக இயக்கங்களும், மக்களுக்கான அறிவியல் அமைப்புகளும் அரசாங்க எந்திரம் இவ்வாறு தவறாகக் கையாளப்படுவதை வன்மையாகக் கண்டிக்க வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக