திங்கள், 9 ஜனவரி, 2012

‘மீண்டும் மீண்டும் கூடாரம் அமைப்போம்!’

அமெரிக்கா முழுவதும் நடைபெற்று வரும் முதலாளித்துவ எதிர்ப்பு கைப் பற்றுவோம் போராட்டங்களின் ஒருபகுதியாக ஓக்லாந்து மற்றும் சார்லோட் டே பகுதிகளில் நடந்த ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்றதற்காக எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

2011 செப்டம்பர் 17ல் அன்று துவங்கிய கைப்பற்றுவோம் போராட்டங்கள் தளர்ச் சியடையாமல் தொடர்கின்றன. நீதிமன்றம் மற்றும் நிர்வாக உத்தரவுகள் மூலம் நாட்டின் பல பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த கூடாரங்களை காவல்துறையினர் அகற்றியுள்ளனர். ஆனால், கூடாரங்களை மீண்டும் அமைப்போம் என்ற முழக்கத்தோடு மக்கள் போராட்டங்களைத் தொடர்கிறார்கள். காவல் துறையினரின் அடக்கு முறை மக்கள் மத்தியில் பெரும் ஆவேசத்தை ஏற் படுத்தியிருக்கிறது.

ஓக்லாந்து மற்றும் சார் லோட்டே ஆகிய இரு நகரங்களில் காவல்துறை யினரின் கொடூர நடவடிக் கைகளைக் கண்டித்து பெருந்திரள் ஆர்ப்பாட்டங் கள் நடந்துள்ளன. எந்த அடக்குமுறைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடந்ததோ, அதே அடக்குமுறையைக் கொண்டு இந்த ஆர்ப்பாட்டங்களையும் கலைத்து விடலாம் என்று காவல் துறையினர் களத்தில் இறங் கினர். ஃபிராங்க் ஒகாவா பிளாசா என்ற கட்டிடத்தி லிருந்து காவல்துறையின ரின் தலைமையகம் வரை யில் பேரணியாகச் செல்ல போராட்டக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர்.

ஆனால் இடையிலேயே காவல்துறையின் கலவரத் தடுப்புப் பிரிவினரால் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டார்கள். போராட்டத்தில் பங்கேற்றவர்களை விரட்டி அடிக்கத்துவங்கினர். அவர்கள் மீது ரப்பர் குண்டுகள் வீசப்பட்டன. எட்டு பேரைக் கைது செய்து காவல்துறையினர் அழைத்துச் சென்றனர். கைது நட வடிக்கைக்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். போராட்டம் அதிக வீச் சுடன் தொடரும் என்று போராட்டக்குழுவினர் அறிவித்திருக்கிறார்கள்.



கிழக்குப்பகுதி நகரமான சார்லோட்டேயில் நடை பெற்ற பெருந்திரள் பேரணி யையும் குலைக்கும் நடவடிக்கைகளில் காவல்துறை யினர் ஈடுபட்டனர். எதிர்ப்பு தெரிவித்ததற்காக இரண்டு பேரைக் கைது செய்தனர். தேவையான எரிபொருள் இல்லாமல் கைப்பற்றுவோம் போராட்டங்கள் நின்றுவிடாது. நாங் கள் தொடர்ந்து போராடு வதன் மூலம் சக்தியைக் தக்க வைத்துக் கொள்வோம் என் கிறார் போராட்டக்குழு வினரில் ஒருவரான டை லான் போஸ்லி.

கருத்துகள் இல்லை: