திங்கள், 4 மே, 2009

மக்கள் வாழ்வு நிலையை மறைக்கும் திமுக

-அ.அன்வர் உசேன்

‘கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்தி யாவின் பொருளாதாரம் ஆண்டிற்கு 8 சதவீதம் விகிதத்தில் வளர்ந்துள்ளது’.

இவ்வாறு பெருமையுடன் குறிப்பிடு கிறது திமுகவின் தேர்தல் அறிக்கை! இந்த வளர்ச்சியின் பலன்கள் எங்கே சென்றன? சாதாரண உழைக்கும் மக்கள் இந்த பலன்களை பெற்றனரா? திமுக வின் தேர்தல் அறிக்கை இக்கேள்வி களை எழுப்பிடவோ அல்லது அதற்கு பதில் தரவோ தயாராக இல்லை.

இந்தியாவின் 40 மிகப்பெரிய பணக்காரர்களின் சொத்து மதிப்பு 2006ம் ஆண்டில் ரூ.6,80,000 கோடியாக இருந் தது. இது 2007ல் 14,04,000 கோடியாக உயர்ந்தது. இந்திய பணக்காரர்கள் வெளி நாட்டு நிறுவனங்களை வாங்கிட 2007ம் ஆண்டில் மட்டும் ரூ.1,28,000 கோடி செல விட்டுள்ளனர்.இவ்வாறு சிலரிடம் செல்வம் கொழித்த அதே நேரத்தில் பெரும்பாலான மக்களின் நிலை என்ன?ழு பட்டினிக் கொடுமைகள் அதிகமாக உள்ள 88 வளரும் நாடுகளின் பட்டி யலில் இந்தியா 66வது இடத்தில் உள் ளது.

பல ஆப்பிரிக்க நாடுகளைவிட இந்தியாவின் நிலைமை மோசமாக உள்ளது.ழு இந்தியாவின் 17 பெரிய மாநிலங்களில் 12ல் பட்டினிக்கொடுமை மிகவும் கவலை அளிக்கும் விதத்தில் உள்ளது. இவற்றில் கர்நாடகம், மகாராஷ்டிரா, குஜராத் போன்ற வளர்ந்த மாநிலங்க ளும் அடங்கும். ஒரு மாநிலம் வளர்ச்சி அடைவதாலேயே வறுமை மறைந்து விடும் எனும் கோட்பாடு தவறு என்ப தையே இது காட்டுகிறது.

இந்தியாவில் 77 சதவீதம் மக்கள் ஒரு நாளைக்கு ரூ.20க்கும் குறைவாகவே வரு மானம் ஈட்டுகின்றனர் என அரசாங்கம் அமைத்த அர்ஜூன் சென் குப்தா கமிட் டியே கூறியுள்ளது. 5 பேர் கொண்ட ஒரு குடும்பம் ஒரு நாளைக்கு இரண்டு வேளை சாதாரண சாப்பாடு சாப்பிடுவ தற்கே ரூ.70 தேவை. அப்படியெனில் 77 சதவீதம் மக்கள் எந்த அளவிற்கு வறுமை யில் உள்ளனர் என்பதை புரிந்து கொள்ள இயலும்.ழு 80 சதவீத கிராமப்புற மக்களுக்கும், 64 சதவீத நகர்ப்புற மக்களுக்கும் தேவை யான அளவு கலோரிகள் கொண்ட உணவு கிடைக்கவில்லை.

50 சதவீத பெண்களும், 75சதவீத குழந்தைகளும் ஊட்டச்சத்தின்மை நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.ழு 30 சதவீத குழந்தைகள் பிறக்கும் பொழுதே குறைவான எடையோடு பிறக்கின்றன.ழு திட்டக்குழுவின் கணக்குப்படி கிராமப் புறத்தில் ஒரு நாளைக்கு ரூ.11.80 வரு மானமும், நகர்ப்புறத்தில் ரூ.17.80 வரு மானமும் வறுமைக்கோடு என தீர்மா னிக்கப்பட்டுள்ளது. இது வறுமைக் கோடு அல்ல; மாறாக மரணக்கோடு எனில் மிகை அல்ல.இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மிகப்பெரும்பாலான மக்களை புறந்தள்ளி விட்டது என்பதே உண்மை. இதற்கு காங் கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற் போக்கு கூட்டணி ஆட்சியின் தவறான கொள்கைகளே காரணம் ஆகும். இது குறித்து திமுகவின் தேர்தல் அறிக்கை மவுனம் சாதிக்கிறது. இதில் ஆச்சரியம் எதுவுமில்லை. மத்திய ஆட்சியில் பதவி சுகத்தை திமுக முழுமையாக அனுபவித் துள்ளது.

எனவே இதுபோன்ற கேள்வி களை திமுக எழுப்பமுடியாது. எனினும் வாக்களிக்கப்போகும் மக்கள் இக்கேள்வி களை நிச்சயம் எழுப்புவர்.பொருளாதார வீழ்ச்சி - திமுகவின் தெளிவற்ற பார்வைதிமுக கூறுகின்ற 8 சதவீத வளர்ச் சிக் கூட உலக நெருக்கடிக்குப் பிறகு கடு மையாக வீழ்ச்சி அடைந்துவிட்டது. 2008ம் ஆண்டு அக்டோபர் - டிசம்பர் காலக்கட்டத்தில் இந்த வளர்ச்சி 5.3சத வீதமாக குறைந்துவிட்டது. விவசாயம்2.2 ஆக படு வீழ்ச்சி அடைந்தது. இந்த வீழ்ச்சி குறித்து திமுக தேர்தல் அறிக்கை மவுனம் சாதிக்கிறது.பொருளாதார நெருக்கடி குறித்து திமுக தேர்தல் அறிக்கை கூறுகிறது:“பொருளாதார வீழ்ச்சியினால் விவசா யம், தொழில் மற்றும் சேவைத் துறை களின் மீது ஏற்படும் பாதகமான தாக்கத் தைக் குறைத்திட மத்திய அரசாங்கம் விசேட திட்டங்களை அமுல்படுத்திட வேண்டும்”. (பக்.12)இன்னொரு இடத்தில் அறிக்கை கூறுகிறது.:“இந்தியாவிலும் சிறு தொழில்களும், குறுந்தொழில்களும் (அமெரிக்க நெருக் கடி காரணமாக) பாதகமான விளைவு களை சந்தித்து வருகின்றன. வேலை வாய்ப்புகளை அதிகரித்திட சிறு தொழில் களும், பொதுத்துறை நிறுவனங்களும் பாதுகாக்கப்பட வேண்டும்”

(பக்.21)திமுக ஏதோ அரசாங்கத்திற்கு வெளியே இருந்தது போலவும் அந்த அரசாங்கத்திற்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது போலவும் அதன் அறிக்கை கூறுகிறது. பொருளா தார நெருக்கடியை சமாளிக்க இந்திய அரசாங்கம் தேவையான நிதியை ஒதுக்க வில்லை. எவ்வித உருப்படியான திட்டத் தையும் அறிவிக்கவும் இல்லை. இதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திரும்பத் திரும்பக் கூறி வருகிறது.

பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்ட பல நாடுகள் தமது ஆண்டு உற்பத்தியில் 10 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை செலவு செய்து திட்டங்கள் வகுத்தன. ஆனால் இந்தியாவோ 0.5 சதவீதம்தான் செலவு செய்ய முன்வந்தது. ஏற்றுமதியோடு தொடர்பு டைய பல தொழில்கள் மூடுவிழா கண் டன. இந்த நெருக்கடி படிப்படியாக உற்பத்தி துறைக்கும் பரவியது. இதனால் வேலை இழப்புகள் ஏற்பட்டன.மத்திய அரசாங்கத்தின் அறிவிப்புப் படியே 2008 அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய மூன்று மாதங்களில் மட்டும் 5 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந் துள்ளனர். ஆனால் இது மிகவும் குறை வான மதிப்பீடு. குஜராத்தில் மட்டும் வைரத்தொழிலில் சுமார் 4 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். இதுவரை நாடு முழுவதும் சுமார் 1 கோடி பேர் வேலை இழந்திருப்பர் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கூடழு தகவல் தொழில்நுட்பம்ழு கோவை மற்றும் திருப்பூரில் பஞ் சாலை மற்றும் பின்னலாடைழு சென்னை மற்றும் கோவையில் போக் குவரத்து உதிரி பாகங்கள் தயாரிப்புழு வேலூர் மற்றும் ஆரணி பகுதிகளில் தோல் பொருட்கள் தயாரிப்புஎன பல தொழில்களில் வேலை இழப்புகள் ஏற்பட்டுள்ளன. ஆட்சிக்கட்டி லில் அமர்ந்து அதன் சுகத்தை அனுப வித்தபொழுது திமுக இதுகுறித்து எந்த கேள்வியையும் எழுப்பவில்லை. மாறாக மத்திய அரசு எப்படி நெருக்கடியை குறைத்து மதிப்பிடுகிறதோ அதே போல திமுக மாநில அரசும் தனது பட்ஜெட்டில் இத்தொழில்களையோ அல்லது தொழி லாளர்களையோ காப்பாற்றிட எவ்வித திட்டத்தையும் அறிவிக்கவில்லை.

மத் திய அரசின் பாராமுகத்திற்கு ஆதரவு அளித்துவிட்டு தற்பொழுது புதியதாக கோரிக்கை வைப்பது போல திமுக தனது தேர்தல் அறிக்கையில் எழுதி வைப்பது அதன் பதவி ஆசைதான் என்பது தெளிவு!வேலை நீக்கத்தை ஆதரிக்கும் திமுக“பொருளாதார வீழ்ச்சி காரணமாக வேலை இழப்புகளை சந்திக்கும் தொழி லாளர்களுக்கு ஆறுமாத ஊதியத்தை மானியமாக தரலாம். இதற்காக தொழி லாளர் வேலையில்லா நிவாரண நிதியை உருவாக்கலாம்” எனவும் திமுகவின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. (பக். 15)இந்த ஆலோசனை தமிழக முத லாளிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கும். பொருளாதாரம் நெருக்கடியை சந்திக்காத காலத்தில் அபரிமித இலாபத் தை முதலாளிகள் ஈட்டுகின்றனர். நெருக் கடி காலத்தில் அதன் நட்டங்களை தொழிலாளர் தலையில் சுமத்தி விடுகின்றனர்.எனவேதான் பொருளாதார வீழ்ச்சி யின்பொழுது வேலை இழப்பிற்கும், ஊதிய வெட்டிற்கும் தடை போட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வற்புறுத் துகிறது. ஆனால் திமுகவின் தேர்தல் அறிக்கையோ வேலை நீக்கத்தை அங்கீ கரிக்கிறது. 

வெறும் ஆறுமாத ஊதியத்தை அளித்துவிட்டு தொழிலாளர்களை வீட் டுக்கு அனுப்பிட திமுக முன்வைக்கும் ஆலோசனை கேடுகெட்டது என்பது மட் டுமல்ல; அது முதலாளிகளின் குரல் ஆகும்.பொருளாதார நிலை குறித்து திமுக வின் தேர்தல் அறிக்கை இந்திய மக்க ளின் உண்மை நிலையை பிரதிபலிப்ப தாக இல்லை.

இந்த அறிக்கை உழைக் கும் மக்களின் நலன்களுக்கு எதிராகவும் உள்ளது. தமது நலன்களுக்கு எதிராக செயல்பட்டுள்ள திமுக கூட்டணிக்கு தமிழக உழைக்கும் மக்கள் சரியான பாடம் தேர்தல் அன்று தருவார்கள் என்பதில் ஐயமில்லை.

கருத்துகள் இல்லை: