மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு மத்தியில் காங்கிரஸ் அரசு அமைக்க இடதுசாரிக் கட்சிகள் ஒத்துழைக்கும் என்று எதிர்பார்க்கும் காங்கிரஸ் தலைவர்கள் முட்டாள்களின் சொர்க் கத்தில் வாழ்கிறார்கள் என்று மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் கூறினார்.
அகில இந்திய அளவிலான மூன்றாவது மாற்று அணியின் தமிழக பிரிவாக உருவாகியுள்ள ஐந்து கட்சி கூட்டணி சார்பில் கடலூர் தொகுதியில் போட்டியிடும் அஇஅதிமுக வேட் பாளர் எம்.சி. சம்பத், புதுச்சேரி யூனியன் பிரதேசத் தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் பேராசிரியர் மு. ராமதாஸ் இருவருக் கும் ஆதரவு திரட்ட, மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் செவ்வாயன்று (மே 5) நடந்த பெருந்திரள் பொதுக்கூட் டங்களில் சிறப்புரையாற்றிய பிர காஷ் காரத் இவ்வாறு கூறினார். கடலூரில் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ். தனசேகரன் தலை மையில் நடந்த கூட்டத்தில் வேட்பா ளர் எம்.சி. சம்பத், அஇஅதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஆ.அருண் மொழித்தேவன், சௌ. பத்மநாபன் (மதிமுக), டி. மணிவாசகம் (இந்திய கம்யூ.), திருஞானம் (பாமக) உள்ளிட் டோர் உரையாற்றினர். புதுச்சேரி யில் கட்சியின் செயலாளர் வி. பெருமாள் தலைமையில், முன்னாள் மத்திய அமைச்சரும் பாமக தலைவ ருமான டாக்டர் அன்புமணி ராம தாஸ், வேட்பாளர் மு. ராமதாஸ், மாநிலக்குழு உறுப்பினர் த. முருகன், அஇஅதிமுக செயலாளர் ஏ. அன்பழகன் மற்றும் இந்திய கம்யூ., மதிமுக, இந்திய குடியரசுக் கட்சி, ஆர்எஸ்பி, பார்வர்டு பிளாக் தலை வர்களும் பங்கேற்றனர்.
இரண்டு கூட்டங்களிலும் பிர காஷ் காரத் நிகழ்த்திய உரையின் முக்கிய பகுதிகள் வருமாறு:
உலகப் பொருளாதார நெருக்கடி யால் கடந்த ஆறு மாதங்களில் நாடு முழுவதும் சுமார் 25 லட்சம் பேர் வேலை இழந்துவிட்டார்கள். காங்கி ரஸ், திமுக தலைவர்கள் இதைப் பற்றிப் பேசுவதில்லை. காரணம் இந்தப் பிரச்சனைக்கு இவர்களிடம் தீர்வு கிடையாது.
சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நிறுவனங்கள் நேரடியாக நுழைய அனுமதிப்பது, வங்கி-காப்பீடு உள் ளிட்ட நிதித்துறை தொழில்களில் அந்நிய முதலீட்டுக்கான வரம்பை உயர்த்துவது, அரசு ஊழியர்களின் பல ஆயிரம் கோடி ரூபாய் ஓய்வூ தியப் பண நிர்வாகத்தைத் தனியாரி டும் ஒப்படைத்து பங்குச் சூதாட்டத் தில் விடுவதற்கு அனுமதிப்பது போன்ற நடவடிக்கைகளை எடுக்க மன்மோகன் சிங் அரசு விரும்பியது. அவற்றை அனுமதித்திருந்தால் நாட் டின் பொருளாதார நிலைமை பல மடங்கு மோசமாகியிருக்கும். அதைத் தடுத்த பெருமை இடதுசாரி கட்சி களையே சாரும்.
சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நிறுவனங்களை அனுமதிப்பதை எதிர்க்கும் ஆவணத்தை பல அரசி யல் கட்சிகளுக்கும் மார்க்சிஸ்ட் கட்சி அனுப்பியது. அதற்கு பதில ளித்து, தாமும் எதிர்ப்பதாக பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கடிதம் அனுப்பியிருந்தார்.
காங்கிரஸ்-திமுக கூட்டணி அரசு மக்கள் விரோத கொள்கை களைக் கடைப்பிடித்ததற்கு கார ணம், அமெரிக்க அரசுக்கு அடிமை சாசனம் எழுதிக்கொடுத்துவிட்டது தான். அதனால்தான், அமெரிக்க முதலாளிகளிடமிருந்து 2 லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் மதிப் புள்ள அணு உலைகளை விலைக்கு வாங்குவதற்கான அணுசக்தி உடன் பாட்டில் மன்மோகன் சிங் அரசு கையெழுத்திட்டது. அந்த உலை களைப் பயன்படுத்தினால் மின்சார உற்பத்திச் செலவு ஒரு யூனிட்டுக்கு 8 ரூபாய் ஆகிவிடும். இதை இடதுசாரி கட்சிகள் எதிர்த்தபோது, அஇஅதி முக பொதுச்செயலாளர் ஜெயலலி தாவும் எதிர்ப்புத் தெரிவித்தார்.
காங்கிரஸ்-திமுக கூட்டணி ஆட்சி, முன்னெப்போதும் காணாத அளவுக்கு ஊழல் மலிந்த ஆட்சியாக இருக்கிறது. ஊழலைத் தடுக்கத் தவறியது மட்டுமல்ல, 1980ம் ஆண்டு களில் ராஜீவ் காந்தி ஆட்சிக்காலத் தில் நடந்த போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் வழக்கின் குற்றவாளி யான இத்தாலிய தொழிலதிபர் குவாத்ரோச் மீதான குற்றச்சி சாட்டை மத்திய புலனாய்வுத் துறை (சிபிஜ) விலக்கிக் கொண்டது. ஆனால் எதிர்க்கட்சிகள் மீது பொய் வழக்குப் போட அதே சிபிஐ பயன் படுத்தப்படுகிறது.
போபர்ஸ் ஊழலைவிட ஆயி ரம் மடங்கு ஊழல் தற்போதைய ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் நடந்திருக் கிறது. ஆனால் பிரதமர் மன்மோகன் சிங் அது பற்றி விசாரணை தேவை யில்லை என்று சொன்னார். அன் றைய நிதியமைச்சர் ப. சிதம்பரம், எல்லாம் சட்டப்படியே நடந்திருக் கிறது என்று சான்றிதழ் வழங்கி னார்.
இந்த வழிகளில் சுருட்டிய பல கோடி ரூபாய் பணத்தைத்தான் இப்போது தேர்தல் முறைகேடு களில் பயன்படுத்துகிறார்கள். அவர்களுடைய ஒரே ஆயுதம் அந்த கள்ளப் பணம்தான். பணத்தை வீசி மக்களை விலைக்கு வாங்கிவிடலாம் என்று நினைக்கிற காங்கிரஸ்-திமுக கூட்டணிக்கு மக்கள் பாடம் கற் பிக்க வேண்டும்.
காங்கிரசுக்கு மாற்று பாஜக அல்ல. இரண்டுமே கூட்டாளிக ளால் கைவிடப்பட்டுவிட்டன. காங் கிரசை இங்கே திமுக மட்டுமே சுமந்து கொண்டிருக்கிறது. நாட்டின் வளத் தையும் மக்கள் பணத்தையும் பாது காக்க, மதச்சார்பற்ற மாற்று அணி ஆட்சியமைப்பது அவசியம்.
மாநிலக் கட்சிகளுக்கு தேசியக் கண்ணோட்டம் கிடையாது என்று மன்மோகன் சிங் பேசியது கண்டனத் துக்குரியது. அவரது இந்தக் கருத்து குறித்து திமுக தனது நிலைபாட்டை ஏன் தெரிவிக்கவில்லை? மாநிலங் களில் ஆட்சி அனுபவமும், மாநில மக்கள் நலன்களில் அக்கறையும் உள்ள, மாநில வளர்ச்சிக்காக நிற்கிற கட்சிகள்தான் மத்தியில் ஒரு வலு வான, மக்களுக்கே முன்னுரிமை அளிக்கிற ஒரு கூட்டாட்சியை வழங்க முடியும். மக்கள் நலன் காக் கும் பொருளாதாரக் கொள்கைகள் அமலாகவும், எந்த நாட்டுக்கும் அடிமையாகாத சுயேட்சையான வெளியுறவுக் கொள்கையை உயர்த் திப்பிடிக்கவும், சமூகநீதியை நிலை நாட்டவும், மதவெறி-பயங்கரவாதம் இரண்டையும் வீழ்த்திடவும் மத்தி யில் மாற்று அரசு அமைந்திட வேண் டும். தமிழக மக்களும் அதற்கேற்ற திட்டவட்டமான தீர்ப்பை வழங்க வேண்டும்.
இவ்வாறு பிரகாஷ் காரத் வேண்டு கோள்விடுத்தார். அவரது ஆங்கில உரையை கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் உ.ரா. வரதராசன் தமி ழாக்கம் செய்தார்.
வியாழன், 7 மே, 2009
முட்டாள்களின் சொர்க்கத்தில் காங்கிரஸ் தலைவர்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக