சிக்மன்டுபிராய்ட் என்பவரைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அவருடைய வாரி சைப்போல செயல்பட்ட அமெரிக்கரான எட் வர்டு பெர்னிஸ் தான் நவீன பிரச்சார முறை யைக் கண்டுபிடித்ததாக அறியப்படுகிறார். முதல் உலகப்போரின் போது ஐரோப்பாவில் நடைபெற்ற ரத்தக்களறியில் அமெரிக்கா பங்கேற்பதை அமெரிக்கர்கள் விரும்பவில்லை. யுத்தத்தில் அமெரிக்கா பங்கேற்பதற்கு ஆதர வான ஒருமனப்போக்கை அமெரிக்க மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதற்காக ரகசியமான முறையில் செயல்பட்ட நவீன சிந்தனையாளர்களின் செல்வாக்கு மிக்க குழு ஒன்றில் அங்கம் வகித்தவர் தான் எட்வர்டு பெர்னிஸ். 1928ல் பிரச்சாரம் (பிராபாகான்டா) என்ற தலைப்பில் இவர் ஒரு நூலை எழுதினார். பிரச்சாரம் என்ற சொல்லுக்கு பதிலாக மக்கள் தொடர்பு என்ற சொற்றொடரை அவர் புழக் கத்துக்கு கொண்டுவந்தார்.
பொது இடத்தில் பெண்கள் புகை பிடிப்பது தவறில்லை என்ற எண்ணத்தை உருவாக்கு வதற்காக அமெரிக்காவின் புகையிலைத் தொழில் துறையினர் இவரைப் பணியமர்த்திக் கொண்டனர். புகை பிடிப்பது பெண்களின் உரிமை என்று பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்து விட்ட இவர், சிகரட்டுகளை பெண்ணுரிமைக் கான அடையாளங்களாக மாற்றினார்.
கவுதமாலாவில் ஜனநாயக முறைப்படி தேர்ந் தெடுக்கப்பட்ட அரசாங்கம் எடுத்த சமூகசீர் திருத்த நடவடிக்கைகளால் அமெரிக்கப் பழக் கம்பெனியான யுனைடெட் புரூட் கம்பெ னிக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டதையடுத்து அந்நாட்டில் கம்யூனிச அபாயம் ஏற்பட்டு விட்ட தென்று ஒருபுரளியைக் கிளப்பிவிட்டு அந் நாட்டின் ஜனநாயக அரசாங்கம் கவிழ்க் கப்படுவதற்கு வழி வகுத்தார். அதனை ஒரு விடுதலையாக சித்தரித்தார்.
பெர்னிஸ் ஒரு முரட்டுத்தனமான வலது சாரி அல்ல. மெய்மையைப் போலத் தோன்றும் பொய்களை உருவாக்குவதன் மூலம் இதனை சாதிக்கமுடியும் என்பதுடன் அந்த பொய் களே பின்னர் முக்கிய நிகழ்வுகளாக மாறி விடும் என்றும் அவர் கூறியுள்ளார். இக்காலத் தில் இதுபோன்ற நிகழ்வுகளுக்கான சில உதாரணங்கள்:
மெய்போன்ற பொய்(1): உறுதியளிக்கப்பட் டதைப்போல அமெரிக்காவின் கடைசிப் படைவீரர்களும் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அட்டவணைப்படி இராக் நாட்டைவிட்டு வெளியேறிவிட்டதாக பாரக் ஒபாமா அறிவித்துள்ளார். அமெரிக்க ராணுவவீரர் ஒருவர் இராக் நாட்டிலிருந்து குவைத் நாட்டுக்குள் நுழைவதை சித்தரிக்கும் காட்சி ஒன்றையும் தொலைக்காட்சி ஒளிபரப்பியது.
உண்மை நிலை: அமெரிக்க வீரர்கள் அனைவரும் இராக் நாட்டிலிருந்து வெளி யேறவில்லை. குறைந்தபட்சமாக 50 ஆயிரம் அமெரிக்க வீரர்கள் 94 படைத்தளங்களில் தங்கியிருந்து தொடர்ந்து செயல்படுவார்கள். வான்வழித் தாக்குதல்களிலும் தேர்ந்தெடுத் துக் கொலைசெய்யும் திட்டங்களிலும் எத்த கைய மாற்றமும் இல்லை. ராணுவ ஒப்பந்தக் காரர்களின் எண்ணிக்கை ஒரு லட்சம் என் பதிலிருந்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இராக் நாட்டு எண்ணெய் வளத்தின் பெரும் பகுதி அந்நியர்களின் நேரடிக் கட்டுப்பாட் டுக்கு இப்போது கொண்டுவரப்பட்டுவிட்டது.
மெய் போன்ற பொய் : (2) இராக் நாட் டுக்கு நற்பயன்கள் பலவற்றை வழங்கிவிட்டு அமெரிக்க ராணுவம் வெற்றிப்பெருமிதத் துடன் வெளியேறியது என்பது பிபிசி அறி விப்பாளரின்வருணனை.
உண்மை நிலை: வெற்றியுமில்லை பெரு மிதமுமில்லை. இது பேரழிவை ஏற்படுத்திய ஒரு துன்ப நிகழ்வு.30 லட்சம் உயிர்களை பலி வாங்கிய வியட்நாம் யுத்தத்தை உன்னத நோக் கம் கொண்டதாக அமெரிக்க அதிபர் ரொனால்டு ரீகன் வருணித்ததைப்போன்றது தான் இது.
மெய் போன்ற பொய்: (3) எத்தனை இராக் கியர்கள் இறந்தார்கள் என்பது தெரிய வில்லை. பல பத்தாயிரங்களாக இருக்கலாம்.
உண்மை நிலை : அமெரிக்காவின் தலை மையில் நடைபெற்ற ஆக்கிரமிப்பு யுத்தத்தின் காரணமாக பலியான இராக்கியர்கள் எண் ணிக்கை 10 லட்சம். இது தவிர 40 லட்சம் இராக்கியர்கள் வீடு வாசல்களை இழந்துள் ளனர். ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பெரும் பாலான இராக்கியக்குழந்தைகள் பாதிக்கப்பட் டுள்ளனர். இந்த புள்ளி விபரங்கள் அமெரிக்கா வைச்சேர்ந்த ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக் கழக ஆய்வாளர்களால் திரட்டப்பட்டவை. பிரிட்டிஷ் அரசின் தலைமை அறிவியல் ஆய்வாளரால் ஏற்றுக்கொள்ளப்பட்டவை.
இப்படிப்பட்ட பொய்கள் திட்டமிட்ட முறையில் பரப்பப்பட்டாலும் தங்களுடைய சொந்த அறிவாற்றல் மற்றும் மதிப்பீட்டில் நம் பிக்கையுள்ள பொதுமக்கள் இவற்றை நம்புவ தில்லை என்பது ஒரு நல்ல செய்தி. தங்க ளுடைய நாடுகளின் யுத்த முயற்சிகளை எதிர்த்து வரும் ஐரோப்பிய மக்கள் இத்தகைய பொய்ச்செய்திகளை நம்ப மறுப்பது கண்டு சிஐஏ உளவு அமைப்பு கவலை அடைந்துள் ளதை அம்பலப்படுத்தும் ஆவணம் ஒன்றை அண்மையில் பரபரப்பு ஏற்படுத்திய விக்கி லீக்ஸ் இணையதளம் வெளியிட்டுள்ளது.
ஆதாரம்: பீப்பிள்ஸ் டெமாக்ரசி 5-9-2010
தமிழில்: கி.இலக்குவன்
புதன், 15 செப்டம்பர், 2010
மக்களிடம் பரப்பப்படும் மெய் போன்ற பொய்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக