திரு பிரதமர் அவர்களே,
உச்சநீதிமன்றத்தை “மரியாதையாகக்” கடிந்து கொண்டு உணவு மற்றும் தானியங்கள் வீணாவது போன்ற பிரச்சனைகள் கொள்கை தொடர்பானவை என்று நீங்கள் கூறியதை அறிந்து பெருமகிழ்ச்சி அடைந்தேன். நீங்கள் மிகச்சரியாக சொல்லியிருக்கிறீர்கள். யாராவது ஒருவர் இதைச் சொல்லித் தீர வேண்டிய நேரமும் கூட. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசிடம் இல்லாத நேர்மையை இதன்மூலம் கொண்டு வந்திருக்கிறீர்கள். தற் போது புளுத்துக் கொண்டிருக்கும் லட்சக்கணக்கான டன் உணவு தானியங்களை என்ன செய்ய வேண்டுமென்பதை நீதிமன்றம் முடிவு செய்ய வேண்டிய விஷயம் அல்ல. உங்கள் அரசுதான் முடிவு செய்ய வேண்டும். பட்டினியாகக் கிடக்கும் மக்கள் அதை உண் பதைவிட புளுத்துப் போவதே மேல் என்று உங்கள் கொள்கை கூறி னால், அதைக் கவனிப்பது நீதிமன் றத்தின் வேலை அல்ல. நீங்கள் சொல்வது போலவே “கொள்கை யை உருவாக்கும் பகுதி” உங்களு டையதுதான். அதிகரிக்கும் பட் டினி, ஊட்டச்சத்துக்குறைவின் மை, உணவு தானியங்கள் புளுத்துப் போவது, போதிய சேமிப்பு வசதிகள் இல்லாமை ஆகிய அனைத்தும் உங்கள் கொள்கைகளால் விளைந் ததே என்பதை நாட்டின் தலைவர் ஒப்புக்கொள்கிறார் என்பதை நினைக்கும்போது மகிழ்ச்சியாகவே இருக்கிறது.(எனக்குத் தெரிந்து இவையனைத்தும் எந்த உச்சநீதி மன்ற உத்தரவுகளாலும் ஏற்பட்டு விடவில்லை).
சாதாரண மனிதனாக இருந் தால் எதிர்க்கட்சிகள், தட்பவெப்ப நிலை அல்லது சந்தையின் மர்ம மான நிகழ்வுகள் என்று எதன் மீதாவது பழியைப் போட்டு நழுவி யிருப்பார். நீங்கள் அதைச் செய்வ தில்லை. கொள்கைதான் காரணம் என்று தெளிவாகச் சொல்கிறீர்கள். இந்தக்கொள்கைகள் கச்சிதமாகத் தயாரிக்கப்பட்டவையாக இருந்தா லும், சந்தைகளுக்குள்ள வெளிப் படைத்தன்மை அதில் பெரும் அளவில் இல்லை.
என்ன இருந்தாலும், தானியங் களைச் சேமிக்க கூடுதல் கிடங்கு களைக் கட்ட ஒரு நயா பைசா கூட இவ்வளவு ஆண்டுகளாக செல வழிக்கவில்லை என்பதே கொள்கை முடிவுதான். நாடு முழுவதும் உரு வாகி வரும் நகரங்கள், விற்பனை மையங்கள், பன்முகப் பயன்பாட்டுக் கட்டிடங்கள் போன்றவற்றிற்கு மானியம் வழங்க அரசிடம் பணம் உள்ளது. தனியார் ரியல் எஸ்டேட் காரர்களை ஊக்கப்படுத்த முடி கிறது. ஆனால் தேசத்தின் உணவு தானியங்களை சேமிக்கும் இடத் தைக் கட்ட ஒன்றுமில்லை.
நாசவேலைக்கு கட்டணம் தரும் அரசு
தனியார் வசமிருக்கும் இடங் களை வாடகைக்கு எடுத்துக் கொள் ளலாம் என்பது “புதிய” எண்ணம். இது ஒரு கேள்வியை எழுப்புகிறது. 2004 முதல் 2006 வரையில் வாட கைக்கு எடுக்கப்பட்டிருந்த லட்சக் கணக்கான டன் உணவு தானியங் களை சேமிக்கும் வசதி கொண்ட வாடகை இடங்களைக் கைவிட கொள்கை ரீதியாக முடிவு எடுத்த தற்குக் காரணம் என்ன? இதற்கான ஆலோசனையைப் பெரும் கட் டணம் கொடுத்து ஒரு பன்னாட்டு ஆலோசனை நிறுவனத்திட மிருந்து பெற்றீர்கள். கூடுதல் வாட கைக்கு மீண்டும் சேமிப்புக்கான இடங்களைப் பெற நீங்கள் முடிவு செய்தால், பட்டினியால் வாடிக் கொண்டிருக்கும்(!) தனியார் பெரு நிறுவனங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும். (சொல்லப்போனால். கடந்த முறை தான் அளித்த ஆலோசனைக்கு எதிரான ஆலோசனையைத் தற் போது தந்து பணத்தைப் பெற்றுக் கொள்ளப்போகும் பன்னாட்டு ஆலோசனை நிறுவனத்திற்கும் மகிழ்ச்சியாகவே இருக்கும்.)
கால் வயிறை மேலும் சுருக்குவதா?
ஏற்கெனவே கால் வயிறாகக் கிடக்கும் கோடிக்கணக்கான மக்கள் தங்கள் உணவை மேலும் குறைத்துக் கொள்ள நிர்ப்பந்திக்கும் கொள்கைகள் பற்றி விவாதிக்க லாமா? இந்தக் கொள்கைகள் மக்க ளின் உரிமைகளை நசுக்குகையில், தங்கள் குறைகளைக் களையுங்கள் என்று சொல்லி நீதிமன்றத்தை மக்கள் அணுகும்போது, நீதிமன்றம் என்ன செய்கிறது, பிரதமர் அவர் களே? கொள்கைகளை உச்சநீதி மன்றம் வகுக்கக்கூடாது என்று நீங் கள் சொல்வது சரியே. ஆனால் உங்கள் கொள்கைகளின் விளைவு களை எதிர்கொள்ளும்போது நீதி மன்றம் என்ன செய்யும்? என்னை விட உங்களுக்கு நன்றாகவே தெரி யும், கொள்கைகள் மக்களால் உரு வாக்கப்படுகின்றன. உங்களைப் பொறுத்தவரை, பல பிரபல பொரு ளாதார வல்லுநர்களால் இது உரு வாக்கப்படுகிறது. அதில் குழந் தைத் தொழிலாளர் முறையை ஒழிக் கும் முயற்சிகளைத் தடுத்தவர் களும் அடக்கம். அதில் ஒரு வல்லு நர், “குழந்தைத் தொழிலாளர் முறை ஏழைகளுக்குத்தேவை” என்ற தலைப்பில் நியூயார்க் டைம்ஸ் நாளிதழில் கட்டுரையே எழுதினார். அதில் 13 வயதான குழந்தையைத் தனது வீட்டில் வேலைக்கு வைத் திருந்ததாக அவர் ஒப்புக்கொண் டுள்ளார்.(விலையுயர்வைக் கட்டுப் படுத்த பெட்ரோல், டீசல் விலை களுக்கான கட்டுப்பாடுகளைத் தளர்த்த வேண்டும் என்றும் அவர் ஆதரித்தார். ஒருவேளை, குழந் தைத் தொழிலாளர்களுக்கு உதவு வதற்காகவும் இருக்கலாமோ?)
பதினோராவது திட்டம் துவங்கு வதற்கு முன்பாக வறுமைக்கோட் டுக்குக் கீழ் உள்ளவர்கள் பற்றிய ஆய்வை முடித்து விடுவோம் என்று மத்திய அரசு 2006 ஆம் ஆண்டு தந்த உறுதிமொழி நிறை வேறவில்லை என்றால் உச்சநீதி மன்றம் என்னதான் செய்ய வேண் டும்? 1991 ஆம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப் படையில் 2000 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட வறுமை மதிப் பீடுகளைக்கொண்டு மாநிலங் களுக்கு உணவு தானியங்களை அரசு ஒதுக்கினால் உச்சநீதி மன்றமோ அல்லது வேறு யாருமோ என்ன செய்ய வேண்டும்? உண் மையிலேயே தானியங்களைப் பெற் றிருக்க வேண்டிய 7 கோடிப்பேர் அதைப் பெற முடியவில்லை என் பதைத்தான் 21 ஆண்டுகால புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
மேற்கூறிய விஷயங்களில் என்ன செய்வதென்று தெரியாமல் உச்சநீதிமன்றம் கைகளைப் பிசைந்து கொண்டிருக்கையில், தங்கள் கொள்கைகளை மறுபரி சீலனை செய்ய வேண்டும் என்று நான் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். உங்கள் உணவு மற்றும் விவசாயத்துறை அமைச்சர் யாரென்பதும், தற்போது அவர் எங்கிருக்கிறார் என்பதும் தங்களுக் குத் தெரியும் பட்சத்தில் இந்தக்கடி தத்தின் ஒரு நகலை அவருக்கு அனுப்பி வைத்தால் நான் மிகவும் நன்றியுள்ளவனாகவும் இருப்பேன்.
சாய்நாத் கடிதம்
(நன்றி : இந்து
தமிழில் : கணேசன்)
செவ்வாய், 28 செப்டம்பர், 2010
இது நியாயமா, பிரதமர் அவர்களே..?
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக