ஐக்கிய நாடுகள் சபையின் ஆயிரமாண்டு மேம்பாட்டு இலக்குகள் உச்சிமாநாடு நியூயார்க் நகரில் மூன்று நாட்கள் நடைபெற்றுள்ளது. 2015 ஆம் ஆண்டுக்குள் நிறைவேற்றப்பட வேண்டிய அம்சங்கள் என்று வறுமையை ஒழித்தல், அனை வருக்கும் கல்வி, குழந்தைகள் நலன் ஆகியவை உள்ளிட்ட பல்வேறு விஷயங்களைக் குறிப்பிட்டு விவாதிக்கப்பட்டுள்ளது. 192 நாடுகளும் இந்த இலக்கை அடைய நடவடிக்கைகள் எடுப்போம் என்று ஒப்புக்கொண்டு கையெழுத்திட்டுள்ளன. இதில் முதல் அம்சமே வறுமை ஒழிப்புதான்.
ஐந்து ஆண்டுக்குள் வறுமையை பாதியாகக் குறைப்போம் என்று தலைவர்கள் சூளுரைத் திருக்கிறார்கள். பல்வேறு நாடுகள் இன்னும் நெருக்கடி யிலிருந்தே விடுபடாத நிலையில் இவர்கள் கையெழுத்திட்டுள்ள ஆவணம் வெறும் ஏட்டுச் சுரைக்காயாகவே இருக்க முடியும். வறு மை குறைந்திருப்பதாக இவர்கள் காட்டும் புள்ளி விபரங்கள் சீனாவின் அபரிமிதமான சாதனைக ளால் காட்டப்படுகின்றன. கோடிக்கணக்கான சீன மக்கள் வறுமையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
உச்சிமாநாட்டில் கலந்துகொண்டு பேசிய தலைவர்களில் சிலர் வெளிப்படையாகப் பேசி யுள்ளனர். ஸ்லோவோகியாவின் பிரதமர் இவான் காஸ் பெரோவிச், 2015க்குள் வறுமை ஒழிப்பு என் பது நிபந்தனைக்குட்பட்டது. உற்பத்தி அரசின் கைகளில் இருக்க வேண்டும் என்றார். ஸ்வீட னின் பிரதமரோ, சாத்தியமற்ற இலக்குகளை நாம் நிர்ணயித்துக் கொள்கிறோம் என்று விமர்சித்தார். சீனா மற்றும் வெனிசுலா ஆகிய இரு நாடுகள் மட்டுமே தங்கள் நாடுகளில் எப்படி சாதித்துள் ளோம் என்று பட்டியலிட்டன.
வெனிசுலாவில் இதற்கு முன்பு நெருக்கடி இல்லாமல் இருந்தது என்றும், தற்போது சோச லிச நடவடிக்கைகளால் பெரும் சிக்கல் ஏற் பட்டிருக்கிறது என்றும் மேற்கத்திய நாடுகள் செய்து வரும் பிரச்சாரத்திற்கு அந்நாடு பதிலடி கொடுத்துள்ளது. பொலிவாரியப் புரட்சி நடவடிக் கைகளுக்கு முன்பாக வெறும் எட்டு விழுக்காடு மக்களுக்கான வேலைகளை மட்டுமே அரசு செய்தது. தற்போது 92 விழுக்காடு மக்களைக் கவனிக்கும் வேலையில் அரசு முனைப்பாக இருக்கிறது. சிக்கல் இருக்கத்தானே செய்யும் என்று வெனிசுலா எதிர்க்கேள்வி கேட்கிறது.
அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, நிதியுதவி களை நம்பியிருக்காதீர்கள் என்று வளரும் நாடு களுக்கு அறிவுரை வழங்கியிருக்கிறார். சொந்தக் காலில் நின்று பழகுங்கள் என்ற நேர்மையான அறிவுரைக்குப்பதிலாக, தனது கையிலிருந்து பணத்தை தரக்கூடாது என்ற எண்ணம்தான் மேலோங்கியிருப்பதாக அவரது குரல் உணர்த்து கிறது. அண்மைக்காலத்தில் விரல் விட்டு எண் ணக்கூடிய எண்ணிக்கையிலான சில நாடு களைத் தவிர மற்ற அனைத்து நாடுகளையும் புரட்டிப்போட்ட பொருளாதார நெருக்கடி தங்கள் கொள்கைகளால் வந்தவை என்ற நேர்மையான ஒப்புதல் அவரிடமிருந்து வரவில்லை.
ஐ.நா. உச்சிமாநாட்டு இலக்குகளை அடை வோம் என்று இந்தியாவும் கையெழுத்திட்டுள் ளது. 2000 ஆம் ஆண்டில் துவங்கிய இந்த முயற் சிக்குப்பிறகு இந்தியா பற்றி வெளிவந்துள்ள புள்ளிவிபரங்கள் “ஒளிரும் இந்தியா” மற்றும் “துயருறும் இந்தியா” என்று இரண்டு இந்தியாக் கள் இருப்பதையே காட்டுகின்றன. குபேரபுரி அமெரிக்காவில் பிச்சைக்காரர்கள் அதிகரித்துள் ளனர். நெருக்கடி காலகட்டத்திலும் வளர்ச்சி கண்ட சீனா மற்றும் பல்வேறு தென் அமெரிக்க நாடுகளின் அனுபவங்களை மேற்கண்ட நிகழ் வுகளோடு ஒப்பிட்டால் சோசலிசப் பாதையே ஆயிரமாண்டு இலக்குகளை அடையச் செய்யும் என்பது திண்ணம்.
திங்கள், 4 அக்டோபர், 2010
சோசலிசப் பாதைதான் இலக்கை எட்டும்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக