திங்கள், 11 ஏப்ரல், 2011

இதுதான் தன்மானமா? சுயமரியாதையா?


தமிழினத்தின் தன்மானம், சுயமரியாதை காக்கப்பட திமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்று திருச்சி யில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி கூறினார். பல் வேறு கூட்டங்களிலும் இதே கோரிக் கையை முன்வைத்துள்ளார்.

பெரியார், அண்ணா போன்றவர்கள் வலியுறுத்திய சுயமரியாதைக்கும் இன் றைக்கு கருணாநிதி தேர்தல் களத்தில் பேசுகிற சுயமரியாதைக்கும் அடிப்படையில் வித்தியாசம் உண்டு. அன்றைக்கு சொல்லப்பட்ட சுயமரியாதை, தன்மானம் போன்றவை பொதுநலத்தை அடிப்படையாகக் கொண்டது. இன்றைக்கு இவர் பேசும் தன்மானம் முழுக்க முழுக்க சுயநலத்தை அடிப்படையாகக் கொண் டது. இவர் சொல்லும் தன்மானமும் சுயமரியாதையும் தனது தேவைக்கேற்ப பேசப்படும் ஏமாற்று வித்தையாகும்.

இன்றைக்கு திமுகவின் கொள்கை பரப்புச் செயலாளர் ஆ.ராசா தில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இது கொள்கைப் போராட்டத்திற்காக நடந்த சிறைவாசம் அல்ல. மாறாக, மக்களின் பணத்தை கொள்ளையடித்ததாக தொடுக் கப்பட்ட வழக்கில் நடந்த சிறைப் பிரவேசமாகும். தமிழன் என்று சொன் னாலே இன்றைக்கு அகில இந்திய அள வில் தலைகுனிவை ஏற்படுத்தும் வகை யில் ஸ்பெக்ட்ரம் ஊழலில் திமுக சம்பந் தப்பட்டுள்ளது.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் திமுக தலைவர் கலைஞரின் குடும்ப உறுப்பினர் கள் உட்பட விசாரிக்கப்பட்டது, அவர்க ளுக்கு சொந்தமான கலைஞர் தொலைக் காட்சியில் சோதனை நடத்தப்பட்டது ஏன் என்று கேட்டதற்கு, ஊடகங்கள் இதை தொடர்ந்து பெரிதாக்கிக்கொண்டே இருந்ததால் இந்த சோதனைக்கு அனு மதித்ததாக கருணாநிதி ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அப்படியென்றால் இந்த சோதனை ஊழல் புகாரின் அடிப்படை யில் உண்மையில் நடத்தப்பட்டதா அல் லது காங்கிரஸ்- திமுக நடத்திய நாடகமா என்ற கேள்வி எழுகிறது. இதற்கு பதி லளிக்க வேண்டிய பொறுப்பு மத்திய புல னாய்வுத்துறைக்கு உண்டு.

1967ம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சி களோடு திமுக ஏற்படுத்திக்கொண்ட கூட்டணியின் அடிப்படையில் காங் கிரஸ் ஆட்சி தமிழகத்தில் இருந்து அகற் றப்பட்டது. ஆனால் இன்றைக்கு தமிழகத் தில் காங்கிரஸ் கட்சிக்கு 63 தொகுதி களை திமுக தூக்கித் தந்துள்ளது. இது வும் தமிழர்களின் தன்மானத்தையும், சுயமரியாதையையும் பாதுகாக்க நடந்த ஏற்பாடுதானா?

தமிழகத்தின் நலன்களை, தமிழக மக்களின் சுயமரியாதையை பாதிக்கும் எத்தனையோ நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்தபோதெல்லாம் திமுக கண்டுகொள்ளவில்லை. பதவி சுகமே பெரிதென்று மவுனம் சாதித்தது. ஆனால் ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிபிஐ, திமுக வையே சுற்றிச்சுற்றி வந்த நிலையில், குறிப்பாக முதல்வர் குடும்பத்தினரின் பெயர் அடிபட்ட நிலையில், மத்திய அரசிலிருந்து விலகப்போவதாக திமுக அறிவித்தது.

திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு கூடி, காங்கிரசுக்கு 60 இடங்கள் வரை தர ஒப்புக்கொண்டதாகவும் 63 தொகுதி களை தரவேண்டும் என்றும் அதுவும் தாங்கள் குறிப்பிடும் தொகுதிகளையே ஒதுக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் வலியுறுத்துவதால் மத்திய அரசிலிருந்து திமுக விலகுவதாக அறிவிக்கப்பட்டது.

மு.க.அழகிரி, தயாநிதிமாறன் உள்ளிட் டோர் ராஜினாமா கடிதங்களுடன் தன் மானத்தோடும், சுயமரியாதையோடும் தலைநகர் தில்லி நோக்கி புறப்பட்டனர். ராஜினாமா கடிதங்களை அளிக்காமல் திரும்ப மாட்டார்கள் என்று எதிர்பார்த்த நிலையில், காங்கிரஸ் கட்சி கருணைக் காக காத்துக்கிடந்தனர். கடைசியில் காங்கிரஸ் மிரட்டிக்கேட்டபடி 63 இடங் களை அதுவும் அவர்கள் கேட்டபடி ஒதுக்க ஒப்புக்கொண்டு திரும்பினர். சொந்தக் கட்சியின் தன்மானத்தையும், சுயமரியா தையையும் பாதுகாக்க முடியாத தலை வர், அந்தக் காங்கிரசும் இடம்பெற்றுள்ள கூட்டணிக்கு வாக்களிப்பதன் மூலம் தான் சுயமரியாதையையும், தன்மானத் தையும் பாதுகாக்க முடியும் என்று கூறு வது வேடிக்கையிலும் வேடிக்கை இல் லையா?

இந்தத் தேர்தலில் வெற்றிபெற திமுக மேற்கொள்ளும் இழிவான அணுகுமுறை மிகவும் கேவலமாக உள்ளது. தமிழர்கள் குறித்து பெருமைகொள்ள எத்தனையோ விசயம் உண்டு. ஆனால் மத்திய அமைச் சர் மு.க.அழகிரி, திருமங்கலம் பார் முலாவை கண்டுபிடித்து, அகில இந்திய அளவில் தமிழகத்திற்கு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளார். இந்தத் தேர்தலிலும் கூட, முதல்வர் தொகுதி உட்பட பண விநியோகம் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகின்றன. இது தமிழர்களின் தன்மானத்திற்கும் சுயமரியாதைக்கும் பெருமை சேர்க்கக்கூடிய காரியமா?

தா.கிருஷ்ணன் படுகொலை, தினக ரன் நாளிதழ் எரிப்பு, மூன்று ஊழியர்கள் படுகொலை போன்ற வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர் மு.க.அழகிரி. அவருடைய ஆதரவாளர்கள் என்று கூறப்படுபவர்கள் மிகப்பெரிய தாதாக் களாகவும், ரவுடிகளாகவும் வலம் வருகின் றனர். ஆனால் தன்னுடைய மகனின் இத்தகைய செயல்களை அடக்கி வைக்க வேண்டிய முதல்வர், மு.க.அழகிரியை அஞ்சாநெஞ்சன் என்று கூறும்போது தமக்கு புல்லரிப்பதாக கூறி உசுப்பேற்றி விட்டுள்ளார். தன்மானத்தையும், சுயமரி யாதையையும் பாதுகாக்கும் அளவுக்கு மு.க.அழகிரி ஆற்றிய நற்பணிகள் என்ன என்பதை பட்டியலிட முதல்வர் தயாரா?

இன்றைக்கு திமுகவின் பிரதான பிரச்சார பீரங்கிகளாக விளங்குபவர்கள் குஷ்பு, வடிவேலு போன்றவர்கள்தான். சொன்னதையும் செய்தோம், சொல்லாத தையும் செய்தோம் என்று கூறும் திமுக, இந்த சாதனைகளை கூறி வாக்கு கேட் காமல், திரைப்படக் கலைஞர்களை பயன்படுத்தி கூட்டம் சேர்ப்பது எத்த கைய தன்மானம் என்று தெரியவில்லை.

இன்றைக்கு திமுக என்பது திராவிட முன்னேற்றக்கழகமாக இல்லை. அது ககுமுக-வாக மாறிவிட்டது. அதாவது, கருணாநிதி குடும்ப முன்னேற்றக் கழகமாக மாறிவிட்டது. வீடு எப்படியோ நாடும் அப்படியே என்றார் அண்ணா. ஆனால் இன்றைக்கு கருணாநிதி தனது வீட்டை மட்டும் பலப்படுத்திக்கொண்டு நாடும் அப்படியே இருப்பதாக மக்களை நம்பவைக்க முயல்கிறார். அனைத்துத் துறைகளிலும் முதல்வர் குடும்பத்தின ரின் ஆதிக்கம் கொடிகட்டிப்பறக்கிறது. கேபிள் டி.வி. துவங்கி திரையரங்குகள் வரை, திரைப்படத் தயாரிப்பு தொடங்கி விமான கம்பெனிகள் வரை முதல்வர் குடும்பத்தினர் வளைக்காத துறை யில்லை. இத்தகைய தன்மானத்தையும், சுயமரியாதையையும் மேலும் வளர்ப்பதற் காகவா திமுக கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று கருணா நிதி எதிர்பார்க்கிறார்.

ஒருகாலத்தில் மத்தியில் கூட்டாட்சி; மாநிலத்தில் சுயாட்சி என்று திமுக முழக் கமிட்டது. ஆனால் காங்கிரஸ் தலைமை யிலான மத்திய அரசினால் மாநில அதி காரங்கள் கொஞ்சம் கொஞ்சமாக பறிக் கப்பட்டபோது கடிதம் எழுதியதைத் தவிர சுயாட்சியை வலுப்படுத்த திமுக செய்தது எதுவும் இல்லை. இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் படுகொலை செய்யப்பட்டபோதும் முதல் வர் கடிதம்தான் எழுதிக்கொண்டிருந்தார். இவரது கடிதங்களுக்கு மத்திய அரசு எந்த மரியாதையும் கொடுப்பதில்லை.

இப்போது கூட சோனியா காந்தி முன் னிலையில் தமிழை மத்திய ஆட்சிமொழி யாக்கவும், உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக தமிழை மாற்றவும்உதவ வேண்டுமென கருணாநிதி கோரிக்கை விடுத்தார். ஆனால் சோனியா காந்தி எந்த பதிலையும் தரவில்லை. இந்த கூட்டணி வெற்றிபெற்றால்தான் தமிழர்க ளின் சுயமரியாதையும், தன்மானமும் பாதுகாக்கப்படும் என்று கதைவிடுகிறார்.

உண்மையில் சொல்லப்போனால் தமிழர்களின் தன்மானமும், சுயமரியா தையும் பாதுகாக்கப்படவேண்டுமானால் திமுக-காங்கிரஸ் கூட்டணி முறியடிக் கப்படவேண்டும். அந்த மகத்தான பணியை சட்டப்பேரவை தேர்தலில் தமிழக வாக்காளர்கள் நிறைவேற்றுவார் கள் என்பது உறுதி.

கே.வரதராசன்


1 கருத்து:

madhanagopal சொன்னது…

யாரை திருப்தி படுத்த அம்மா வைகோவை பதினெட்டு மாதம் பொடாவில் வைத்தார்

யாரை திருப்தி படுத்த அம்மா 1000 கோடி வாங்கிக்கொண்டி வைகோவின் அரசியலை நிர்மூலப்படுதினார்

தர்மபுரியில் 3 மாணவிகளை எரித்து கொன்றது யார்?

போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள் என்று சொன்னது யார்?

பிரபாகரனை கைது செய்து , தூக்கில் இட வேண்டும் என்று சட்டசபையில் திர்மானம் போட்டது யார்?

தொட்டில் குழந்தை முதல் சுடுகாடு கூரை வரை ஊழல் செய்தது யார்?

30௦ வயது வளர்ப்பு மகனை தத்தெடுத்து , கோடியில் திருமணம் செய்து பின் கஞ்சா கேஸ் போட்டது யார்?

செரீனா மீது கஞ்சா கேஸ் போட்டது யார்?

டி என் சேஷனை விமான நிலையம் முதல் ஹோட்டல் வரை அடித்தது யார்?

சந்திரலேகா மீது திராவகம் விசியது யார்?

சுப்ரமணிய சாமிக்கு ஆபாச ஷோ காட்டியது யார்?

வக்கீல் சண்முகசுந்தரத்தை தாக்கி முடக்கி போட்டது யார்?

மத்திய அமைச்சர் அருணாசலம் பயணம் செய்த விமானத்தில் ஜாதி காரணம் காட்டி ஏறாமல் இருந்தாது யார்?

ராஜிவின் மரணத்தில் வெற்றி பேரு.. பின் அவரை கொச்சை படுத்தியது யார்?

கட்சியை சசிகலா குடும்பத்திடம் அடகு வைத்திருப்பது யார்?
௧.௫ லட்சம் அரசு ஊழியரை ஒரே கையெழுத்தில் வீட்டுக்கு அனுப்பியது யார்?

பெண்களை இரவு உடை கூட அணிய விடாமல் கைது செய்யதது யார்?
பத்திரிக்கையாளர்களை சென்னை பிச் ரோடில் அடித்து உதைத்தது யார்?
கண்ணகி சிலையை ஒழித்து வைத்தது யார்?

சீரணி அரங்கத்தை இடித்தது யார்?
மதமாற்ற தடை சட்டம், ஆடு கோழி பலி தடை சட்டம் கொண்டு வந்தது யார்?

ஒரு ரூபாய் சம்பளத்தில் கோடிகளை சேர்த்துவைத்து யார்?
பொது மக்களுக்கு வழி விடாமல் எஸ்டேட் வெளி போட்டு அடைத்தது யார்?

பஞ்சமி நிலத்தை ஆக்ரமித்த கம்னிஸ்ட் புகார் சொன்னது யார் மேலே?

சென்னாரெட்டி தவறாக நடந்து கொண்டார் என்று சொன்னது யார்?

மக்களிடம் இநருந்து தன்னை அந்நிய படுத்தி , ஹெலிகாப்ட்டர் பயணம், கூடுக்குள் பிரசாரம் செய்வது யார்?

சுனாமி வந்த நேரத்தில் மதியம் 1 மணிக்கு மேல் தான் வெளிய தூங்கி எழுந்து போயஸ் தோட்டத்தின் வெளியே வந்து .. சுனாமிய , என்ன என்று கேட்ட முதல்வர யார்?

சசிகலா, நடராஜன், திவாகரன், தினகரன், மகாதேவன், சுதாகரன் , இளவரசி, வெங்கடேஷ்.. வைகுண்டராஜன் , இன்னும் பலர் பலர்.. இவர்கள் எல்லாம் யார்?