புதன், 20 ஏப்ரல், 2011

தேர்தலின் உச்சகட்ட காமெடி:குமுதம்

“கடந்த மார்ச் 27ம் தேதி முதல் ஏப்ரல் 11ம் தேதி வரை தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் பிரச்சாரத்திற்குச் சென்றேன். விலைவாசி, மின்வெட்டு, தமிழக விவசாயிகளின் நிலைமை, மேற்கு மாவட்டங்களில் ஜவுளி, விசைத் தறி, கைத்தறி பிரச்சனை, சாயப்பட் டறை பிரச்சனை என ஆளுங்கட்சி மீது மக்கள் கடும் கோபத்தில் இருப் பதைப் பார்க்க முடிந்தது.


மதுரையில் மு.க.அழகிரியும் அவருடைய ஆட்களும் அதிகாரிக ளுக்கு இடையூறாகச் செயல்படுவதைக் கண்டு வேதனைப்பட்டேன். பணம் கொடுப்பதைப் பல வழிகளிலும் முறியடித்த கலெக்டர் சகாயத்தின் உருவபொம்மையை எரித்தார்கள். தாசில்தாரை அடித்தார்கள். அழகிரிக்கு எதிரான மனநிலை மக்கள் மனதில் கொந்தளித்துக் கொண்டிருப்பதைக் காண முடிந் தது. மதுரை மாநகர் மற்றும் சில தொகுதிகளில் திமுகவினர் பணம் கொடுத்ததைக் கையும், களவு மாகப் பிடித்துக் கொடுத்தோம்.

போலீஸ் துறையைக் கையில் வைத்திருக்கும் முதல்வரின் சொந்த ஊரான திருவாரூரில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை. எங்கள் கட்சியின் நாவலன், சிபிஐ கட்சியின் மாங்குடி ஜெயக்குமார், திமுகவின் பூண்டி கலைச்செல்வன் ஆகி யோர் கொடூரமாக வெட்டிச் சாய்க்கப்பட்டார்கள். கள்ளச்சாராயம் இங்கு அதிகமாக ஓடுகிறது. கருணாநிதி போட்டியிடும் திருவாரூரில் திமுக எதிர்ப்பு அலை அதிகமாகவே வீசி யதைப் பார்த்தேன்.

விளவங்கோட்டில் நிற்கும் எங்கள் வேட்பாளர் லீமாறோசுக்கு ஆதரவு கேட்டு பிரச்சாரம் செய்யும் போது, கூட்டணிக் கட்சியினரே, ‘வேட்பாளர் லீமாறோஸ் மக்கள் போராளி. அவரது அம்மா இன்றும் கூலி வேலைக்குத்தான் போகிறார். அவரது தொகுதி மட்டுமல்லாமல் மாவட்டம் முழுவதும் எங்கு பிரச்சனை என்றாலும், நடுரோட்டில் உட்கார்ந்து விடுகிறார். என சான்றிதழ் கொடுத்தது மனதை நெகிழ வைத்தது.

தமிழக முதல்வர் கருணாநிதி 12வது சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்கிறார். இந்தமுறை எதிரணியை விமர்சித்ததைவிட, தேர்தல் ஆணையத்தைத்தான் கடுமையாக விமர்சித்தார். எங்கள் கட்சியில் மாற்று வேட்பாளர் போடுவது என் றால், அந்த மாவட்டத்தில் உள்ள இரண்டாம் கட்டத் தலைவர்களைத் தான் போடுவோம்.

ஆனால், காங்கிரஸ் கட்சித் தலைவர் தன் மனைவிக்கு மாற்று வேட்பாளராக தன் பெயரைப் போட் டுக் கொண்டது தான் இந்தத் தேர்த லின் உச்சகட்ட காமெடி” என்று சிரிக்கிறார்.

ஜி.ராமகிருஷ்ணன்
மாநிலச் செயலாளர்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் (21.4.2011)

கருத்துகள் இல்லை: