வியாழன், 11 ஆகஸ்ட், 2011

கூர்க்கா ஒப்பந்தம் - சாதனையா? சாபக்கேடா?

டார்ஜிலிங் கூர்க்கா மக்களின் பிரச்சனை குறித்த ஒப்பந்தம் ஜூலை 18 அன்று கையெழுத்தாகியுள்ளது. மேற்கு வங்க மாநில அரசு, மத்திய அரசு மற்றும் கூர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா இடையே ஏற்பட்டுள்ள ஒப்பந்தம் வரலாற்று சிறப்பு மிக்கது என கூறப்படுகிறது. ஊடகங்களும் இதே பல்லவியை பாடுகின்றன.

உண்மையிலே இந்த ஒப்பந்தம் சிறப்புமிக்கது தானா? அப்படியானால் ஒப்பந்தம் ஏன் பகிரங்கமாக வெளியிடப் படவில்லை? இது வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தம் எனில் மேற்குவங்கத்தின் வடக்கு பகுதி முழுவதும் ஏன் இதனைக் கண்டித்து பந்த் நடந்தது?

இக்கேள்விகளுக்கு மம்தா பானர்ஜியோ அல்லது ப.சிதம்பரமோ பதிலளிக்க முன்வரவில்லை. ஏனெனில் இவற்றிற்கு திருப்திகரமான பதில்கள் தரப்பட முடியாது!

இடதுசாரிகளின் ஆட்சேபணை ஏன்?

இந்த ஒப்பந்தம் தொடர்பாக இடதுசாரி களின் ஆட்சேபணைகள் என்ன? மம்தா அரசாங்கத்தின் ஒப்பந்தம் என்பதால் இதனை குறை கூறுகின்றனரா? அல்லது ஆட்சேபணைகளுக்கு வலுவான கார ணங்கள் உள்ளனவா?

இந்த ஒப்பந்தத்தின் பல முக்கிய அம்சங்கள் இடதுமுன்னணி ஆட்சியில் இருந்த பொழுதே உருவாக்கப்பட்டதாகும். எனினும் கூர்க்கா மோர்ச்சாவின் இரு முக்கிய கருத்துக்களை இடதுமுன்னணி ஆட்சி ஏற்றுக்கொள்ளவில்லை. அவை என்ன?

“கூர்க்காலாந்து பிரதேச ஆட்சியகம்” எனும் பெயரை ஏற்றுக்கொள்ள முடியாது.

ஜல்பைகுரி மாவட்டத்தில் உள்ள டெராய் மற்றும் டூவரஸ் எனும் பகுதிகளை கூர்க்கா பிரதேசத்துடன் இணைப்பது சாத்தியம் இல்லை.

கூர்க்காலாந்து பிரதேச ஆட்சியகம் எனும் பெயரை இடதுசாரிகள் ஏன் ஆட் சேபிக்கின்றனர்?

கூர்க்கா மோர்ச்சாவின் முக்கிய கோரிக்கையே தனி கூர்க்காலாந்து மாநிலம் ஆகும். மேற்குவங்கத்தை துண் டாடி தனி மாநிலம் காண்பது என அவர் கள் கூறி வருகின்றனர். இந்நிலையில் கூர்க்காலாந்து எனும் பெயர் அக்கோரிக் கைக்கு வலு சேர்ப்பதாக அமைந்துவிடும். மேலும் இந்தப்பெயர் பல குழப்பங்களை மக்களிடையே ஏற்படுத்தும். எனவேதான் தோழர் ஜோதிபாசு அவர்கள் முதல்வராக இருந்தபொழுது 1986ல் உருவான கவுன் சிலுக்கு “டார்ஜிலிங் கூர்க்கா மலை கவுன்சில்” என்றே பெயரிடப்பட்டது. டார் ஜிலிங் மலையைச் சுற்றி கூர்க்கா இன மக்கள் மிகப்பெரும்பான்மையாக வசிப் பதால் அப்பெயர் இடம்பெற்றது. மேலும் கூர்க்காலாந்து எனும் பெயரை பயன் படுத்துவதும் தவிர்க்கப்பட்டது. ஆனால் தற்பொழுது கூர்க்காலாந்து எனும் பெயரை பயன்படுத்துவது ஏற்றுக்கொள்ளப் படுவதால் பிரிவினைவாதிகளின் வாதத் திற்கு வலுச்சேர்ப்பதாக அமையும் ஆபத்து உருவாகிட மம்தா அரசாங்கமே வழிவகுத்துள்ளது.

கூர்க்காலாந்து எனும் பெயரை கூர்க்கா மோர்ச்சாவின் தற்போதைய கோரிக்கையோடு சேர்த்து கவனிக்க வேண்டியுள்ளது. ஜல்பைகுரி மாவட்டத் தில் உள்ள டெராய் மற்றும் டூவரஸ் எனும் பகுதிகளையும் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என கூர்க்கா பிரிவினைவாதி கள் வற்புறுத்தி வருகின்றனர். ஆனால் இப்பகுதிகளில் கூர்க்கா இன மக்கள் மட்டும் வாழவில்லை. ஆதிவாசி மக்கள் மற்றும் ஏனையோரும் வாழ்ந்து வருகின் றனர். கூர்க்கா அல்லாத மக்களே அதிக மாக வசிக்கின்றனர். எனவே இந்த பகுதி களை கூர்க்கா பிரிவினைவாதிகளிடம் ஒப்படைப்பது பொருத்தமானது அல்ல என இடதுசாரிகள் கருதுகின்றனர்.

இப்பகுதிகளில் வாழும் மக்களும் தாங்கள் கூர்க்கா பிரிவினைவாதிகள் வசம் இருக்கப்போகும் புதிய பகுதியில் இணையத் தயாராக இல்லை. எனவே தான் ஒப்பந்தம் கையெழுத்தான அன்று 48 மணி நேர பந்த் நடத்தி தமது கடும் அதிருப்தியை வெளிக்காட்டியுள்ளனர்.

தற்சமயம் உருவாகியுள்ள ஒப்பந்தத் தில் டெராய் மற்றும் டூவரஸ் எனும் பகுதிகளிலுள்ள சுமார் 200 கிராமங்களை கூர்க்காலாந்து பிரதேசத்துடன் இணைப் பது எனவும் அவை எந்த பகுதிகள் என் பதை கண்டறிய ஒரு குழு அமைப்பது எனவும் மம்தா அரசாங்கம் ஏற்றுக்கொண் டுள்ளது. இது கூர்க்காலாந்து எனும் தனி மாநிலம் உருவாகிடவே வழிவகுக்கும். மேற்குவங்கத்தை துண்டாடிட வழிவகுக் கும் ஆபத்து உள்ளது என்பதால்தான் இந்த ஒப்பந்தத்தை இடதுசாரிகள் ஏற்கவில்லை.

மேலும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஒப்பந்தம் குறித்து அனைத்து அரசியல் கட்சிகளுடனோ அல்லது சட்டமன்றத் திலோ விவாதிக்கப்படவில்லை. மேற்கு வங்க மக்களுக்கும் இந்த ஒப்பந்தத்தில் என்ன உள்ளது என்பது தெரிவிக்கப் படவில்லை. ஒப்பந்தத்தில் என்ன உள் ளது என்பதை தெரிவிக்காமலேயே கை யெழுத்திடும் நிகழ்ச்சிக்கு வருமாறு மேற்குவங்க மாநில அரசாங்கம் விடுத்த அழைப்பை எதிர்க்கட்சி தலைவர் தோழர் சூர்யகாந்த மிஸ்ரா நிராகரிக்க வேண்டிய தேவை ஏற்பட்டது.

ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட கூர்க்கா மோர்ச்சா தலைவர்கள் தங்க ளின் தனி மாநிலக்கோரிக்கைக்கு முதல் படிதான் இது! விரைவில் கூர்க்காலாந்து மாநிலம் அமையும் என பகிரங்கமாக கூறி வருகின்றனர். சாதாரண கூர்க்கா மக்களின் மனோநிலையிலும் இதே கருத்து ஆழமாக விதைக்கப்பட்டுள்ளது. மறுபுறத்தில் டெராய் மற்றும் டூவரஸ் பகுதி வாழ்மக்கள் தமது உயிரே போனாலும் ஒரு சதுர இன்ச் நிலத்தைக்கூட கூர்க்கா வாதிகளிடம் ஒப்படைப்பதை அனுமதி யோம் என கூறுகின்றனர்.

மக்களிடையே ஒற்றுமைக்கு பதிலாக பிரிவினையை இந்த ஒப்பந்தம் ஏற்படுத்தி விடுமோ என இடதுசாரிகள் கவலை கொண்டுள்ளனர். எனவே இந்த ஒப்பந்தம் சாபக்கேடாக அமைந்துவிடக்கூடாது எனும் கவலை இடதுசாரிகளுக்கும் மேற் குவங்க மாநில மக்களுக்கும் ஏற்பட் டுள்ளது. ஆனால் இந்த கவலை மம்தா அரசாங்கத்திற்கு இல்லை. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட “மெத்த படித்த மேதாவி” ப.சிதம்பரத்திற்கோ அல்லது மத்திய அரசாங்கத்திற்கோ இந்த கவலை இல்லை. ஆனால் ஒன்றுமட்டும் நிச்சயம். மேற்குவங்க மக்கள் ஒருபோதும் தமது மாநிலத்தை துண்டாடுவதை அனு மதிக்கமாட்டார்கள்.

அ.அன்வர்உசேன்

கருத்துகள் இல்லை: