சென்னை போன்ற இடங்களில் ஏமாற்று வித்தை காட்டி பிழைப்பவர்களை மோடி மஸ் தான் என்று கூறுவதுண்டு. தற்போது குஜராத் முதலமைச்சரான நரேந்திர மோடிக்கு இந்த பெயர் பொருத்தமாக உள்ளது. காரணம் மத நல் லிணக்கம் காக்க அவர் புதிய அவதாரம் எடுத் திருப்பது தான்.
குஜராத்தில் தனது ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்துக்கொள்ள மக்களை இரு கூறு களாக பிரித்து அரசியல் நடத்தி வரும் மோடி, தனது அதிகாரப் பசிக்காக ஆயிரக்கணக்கான முஸ்லிம் மக்களின் உயிரைக் குடித்தவர். இதற் காக சிறப்பு நீதிமன்றத்தின் விசாரணையை எதிர் நோக்கியுள்ளார். குஜராத் கலவரத்தில் மோடி உள்பட 63 அதிகாரிகளை சேர்ப்பதா, வேண்டாமா என்பது குறித்து அகமதாபாத் விசா ரணை நீதிமன்றம் தான் முடிவெடுக்க வேண் டுமே தவிர, நேரடியாக உச்சநீதிமன்றம் அல்ல என்று தான் சமீபத்தில் தீர்ப்பு வந்ததே தவிர குஜ ராத் கலவரத்தில் மோடி குற்றமற்றவர்; அவர் மீதான குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்று அல்ல.
ஆனால் ஈறை பேனாக்கி பேனை பெரு மாளாக்கும் கலையில் தேர்ச்சி பெற்ற இந்துத்வா சக்திகள், உச்சநீதிமன்றத் தீர்ப்பை மோடிக்குக் கிடைத்த வெற்றியாக சித்தரிப்பது ஏமாற்று வேலை என்பதை நாட்டு மக்கள் நன் கறிவார்கள். குஜராத் கலவரம் நடந்தபோது காவல்துறை உயர் அதிகாரிகளாக இருந்த பலர் இப்போது மோடிக்கு எதிராக நீதிமன்றத்திலேயே சாட்சியம் அளித்துள்ளனர். கலவரத்திற்கு முக் கிய காரணகர்த்தா மோடி தான் என்று அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். கலவரத்தைத் தடுக்கா மல் வேடிக்கை பார்க்குமாறு காவல்துறையின ருக்கு உத்தரவிட்டார் என்ற உண்மைகள் எல் லாம் இப்போது வெளிச்சத்திற்கு வந்து கொண்டி ருக்கின்றன. அவரது உண்மை முகம் இப்படி இருக்கையில், நாட்டு மக்களை ஏமாற்ற உத்தமர் போல் மூன்று நாள் மத நல்லிணக்க உண்ணாவிரதத்தில் அவர் ஈடுபட்டிருப்பதை யாரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.
இதுபோன்ற மோசடிக்காரர்களால் தான் சமீப காலமாக உண்ணாவிரதம் என்ற போராட்ட வடி வத்தைச் சொன்னாலே பலர் கேலியாகப் பார்க்கி றார்கள். பல லட்சம் ரூபாய் செலவில் குளு குளு அறையில் இந்த உண்ணாவிரதம் நடைபெறு கிறது. எளிமைக்கு பெயர்போன காந்தி பிறந்த மண்ணில் தான் இந்தக் கொடுமைகள் நடக்கின் றன. இந்த உண்ணாவிரதத்திற்காக நாடு முழுவ தும் பத்திரிகைகளுக்கு அரசு செலவில் கோடிக் கணக்கான ரூபாயில் முழுப்பக்க விளம்பரம் வேறு.
இதுபோன்ற மோசடி வேலைகளால் மோடி தன்மீதுள்ள ரத்தக் கறையை மறைத்துவிட முடி யாது. கோத்ரா ரயில் நிலையத்தில் சபர்மதி எக்ஸ் பிரஸ் ரயில் எரிக்கப்பட்ட சம்பவம், அதைத் தொடர்ந்து அம்மாநிலத்தில் ஏற்பட்ட கலவரம், அதில் ஆயிரக்கணக்கான சிறுபான்மை மக்கள் கொல்லப்பட்டது, குல்பர்கா வீட்டு வசதி கழக வளாகத்தில் இருந்த காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ஈசான் ஜாப்ரி உள்பட 36 பேர் உயி ரோடு எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் ஆகி யவை மோடியின் உண்மை முகத்தை நாட்டு மக்கள் முன்பு காட்டிவிட்டது. விரைவில் விச ாரணை நீதிமன்றத்தால் தமக்கு ஆபத்து வரப் போகிறது என்று தெரிந்தவுடன் சிறுபான்மை மக்களின் நண்பன் போல் நடிக்கிறார். இதற்காக கூலிக்குச் சிலரை அழைத்துவந்து அருகி லேயே வைத்துக் கொண்டார். இப்படிப்பட்ட நாடகத்திற்கு தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள சில கட்சிகளும் அதிமுக போன்ற மதச் சார்பற்ற கட்சிகளும் வாழ்த்துத் தெரிவித்திருப் பது உண்மையிலேயே கவலையளிக்கிறது.
1 கருத்து:
தமிழக முதல்வரின் ஆதரவு கரங்கள் குறித்தும் ஏதாவது வார்த்தைகளை சேர்த்திருந்தால் இன்னும் அருமையாக இருந்திருக்கும்
கருத்துரையிடுக