செவ்வாய், 20 செப்டம்பர், 2011

உழைக்கும் மக்களை வெளியே தள்ளி மூடப்பட்ட வளர்ச்சியின் கதவுகளை உடைத்தெறியுங்கள்!


தாராளமய பொருளாதார வளர்ச்சி நடுத்தர வர்க்கத்தின் மத்தி யில் மயக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், முற்போக்கு பண்பாட்டு இயக்கப் படைப்பாளிகள் காலத்துக் கேற்றவாறு போராட்டத்தை தீவிரப் படுத்த வேண்டியது அவசியம் என்று பேராசிரியர் கே.என்.பணிக்கர் கூறினார்.

விருதுநகரில் நடைபெற்ற தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் 12வது மாநில மாநாட்டில் நிறைவு நாளன்று அவர் ஆற்றிய உரை வரு மாறு:

பண்பாட்டுத் தளத்தில் மிகச்சிக்கலான காலத்தில் நாம் சென்று கொண்டிருக்கிறோம். பண்பாட் டைப் பற்றி நாம் புரிந்து வைத்திருப் பது பற்றியும், தற்போது பண்பாட்டுத் துறையில் ஏற்பட்டு வரும் மாற் றம் பற்றியும் நமது புரிதலை நாம் விமர்சனப்பூர்வமாக மேம்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது. பண்பாட்டுத் தளத்தில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் குறித்து தத்துவார்த்தரீதி யாக நாம் விழிப்புணர்வோடு புரிந்து கொள்ளாவிட்டால், எதிர்முகாமின் தாக்குதலை நாம் எதிர்கொள்ள முடி யாது.

முதலாளித்துவ தொழிற்புரட்சி காலத்தில் பண்பாட்டுத் துறையில் ஏற் பட்ட மாற்றத்தை விட தற்போது அடிப்படையான, தீவிரமான, மிக ஆழமான மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்த சூழலில் நல்ல கதை, கவிதைகளை சுவாரஸ்யமாக எழுது வது மட்டும் போதுமானதல்ல. தத்து வார்த்தரீதியில் பண்பாட்டு மாற்றங்களை ஆழமாக உள்வாங்கிக் கொண்டு செயல்பட வேண்டும். நாம் புரிந்து கொள்ளும் அளவுக்கு சாமானிய மக்கள் புரிந்திருக்க மாட்டார்கள். எனவே நமது செயல்பாடு ஆழமான புரிதலோடு மக்களுக்கு கொண்டு செல்வதாக இருக்க வேண்டும்.

முற்போக்குப் பண்பாட்டு இயக்கம் நம் நாட்டில் 1930ம் ஆண்டுகளில் இருந்து தொடங்குகிறது. அப்போது முற்போக்கு என்பதற்கு ஓர் அர்த்தம் இருந்தது. ஏகாதிபத்திய காலனியாதிக்கத்துக்கு எதிரான தேச விடுதலை என்ற லட்சியத்தோடு பண்பாட்டுத் தளத்தில் முற்போக்கு இயக்கச் செயல்பாடுகள் அமைந்தி ருந்தன. ஆனால் 21ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், முற்போக்கு என் பதற்கான அர்த்தம் மாறியிருக்கிறது. அப்போது நாம் பயன்படுத்தியது போல இப்போது நாம் பயன்படுத்த முடியாது. 1930 - 40 களில் பண்பாட் டுத் தளத்தில் முற்போக்கு இயக்கத் தின் செயல்பாடு காரணமாக இடதுசாரி இயக்கம் முன்னேற்றமடைந்தது.

1947க்குப் பின் காலனியாதிக்கத்துக்கு பிந்தைய காலம் என்று சொல்வது பொருத்தமானதல்ல. மாறாக தற்போதைய காலத்தை நவீன கால னியாதிக்கம் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கிய காலம் என்று தான் சொல்ல வேண்டும். தாராளமய, உலகமய காலத்தில் தற்போது இந்தி யாவில் முதலாளித்துவ வளர்ச்சி ஏற்பட்டு வருகிறது. புதிய முறையில் முதலாளித்துவம் வளர்கிறது. ஏராள மான இலக்கியப் பண்பாட்டு நட வடிக்கைகளில் நடுத்தர வர்க்கம் தான் பெருமளவு செயல்படுகிறது. இன்றைய சூழலில் நடுத்தர வர்க்கம் தாராளமயத்தை ஆதரிப்பதாக மாறி யுள்ளது. நடுத்தர வர்க்கத்தைப் பொறுத்தவரை, தற்போது ஏற்பட்டு வருவதை வளர்ச்சி என்றும் நவீன மயம் என்றும் கூறி வருகிறது. நிலப் பிரபுத்துவத்தில் இருந்து நவீனமயம் ஏற்பட்டு வருகிறது என்று சொல் கிறார்கள். ஆனால் நிலப்பிரபுத்து வத்தில் அடிப்படை மாற்றம் ஏற் படாமலேயே இந்த மாற்றம் ஏற் பட்டு வருகிறது.

நான்கு வழிச் சாலைகள், பிரம்மாண்டமான மால்கள் ஏற்படுத்தப் படுவதை வளர்ச்சி, நவீனமயம் என் கின்றனர். ஆனால் நான்கு வழிச் சாலைகளுக்காக எண்ணற்ற கிரா மங்கள் மறைந்து போய்விட்டன. 70 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட மக்கள் நாளொன்றுக்கு 20 ரூபாய் கூட செல விட முடியாத நிலையில், இதை நவீனமயம் என்று சொல்ல முடி யுமா? எனவே, இதை நாம் விமர் சிக்கத் தயங்கக்கூடாது. முதலாளித் துவத் தத்துவார்த்தத் தாக்குதல் மிக வலிமையானதாக இருக்கிறது. இந்த சூழலில் நாம் பயன்படுத்தும் முற் போக்கு என்ற வார்த்தை, தற்போது முன்வைக்கப்படும் வளர்ச்சி என் பதை குறைத்து மதிப்பிடுவதாக இருக்கிறது. இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இன்றைய வளர்ச்சி என்பது ஆங் காங்கே தீவுகளாக தனித்தனியான தாக ஏற்பட்டுக் கொண்டிருக்கின் றது. மிகப்பெரும்பான்மையான கிராமங்கள், சிறு நகரங்கள் தனித்து விடப்பட்டதாக இந்த வளர்ச்சி இருக்கிறது. இவற்றை உள்ளடக் காத வளர்ச்சி எப்படி உண்மையான வளர்ச்சியாக இருக்க முடியும்? இதைப் பற்றி நாம் மக்களிடம் பேச வேண்டும். சந்தை என்பது பண் பாட்டின் மீது ஆதிக்கம் செலுத்தும் முக்கிய அம்சமாக மாறிவிட்டது. எனவே இது போன்ற விசயங் களைப் பற்றியெல்லாம் படைப் பாளிகள் படைப்புகளை உருவாக்க வேண்டும்.

இன்று ஏற்பட்டுவரும் வளர்ச்சி என்பது பெரும்பான்மை மக்களை வெளியே தள்ளி கதவுகளால் நாற் புறமும் மூடப்பட்ட ஒரு அமைப் பாக உள்ளது. இந்த கதவுகளை உடைத்திட வேண்டும். பெரும் பான்மை மக்களுக்கு வாய்ப்பு ஏற் படுத்தக் கூடியதாக இருக்க வேண் டும். இதற்காக பண்பாட்டுரீதியான செயல்பாடும் தேவை. பண்பாட்டுக் குள் செயல்படுவதும் தேவை.

பண்பாட்டுக்கும் அரசியலுக்கும் நெருங்கியத் தொடர்பு இருக்கிறது. எனவே பண்பாட்டுச் செயல்பாட் டின் முக்கியத்துவத்தைக் குறைத்து மதிப்பிடக் கூடாது. இவை இரண் டுக்கும் இடையிலான இயக்கவியல் அடிப்படையிலான தொடர்பைப் புரிந்து கொண்டு, நமது முற்போக்கு இயக்கப் படைப்பாளிகள் செயல் பட வேண்டும். ஆளும் வர்க்கங் களின் மேலாண்மை செலுத்தும் பண்பாட்டுக்கு எதிராக, உழைக்கும் மக்களின் பண்பாட்டுச் செயல் பாட்டை மேலாண்மைக்குரியதாக மாற்றும் விதத்தில் நமது செயல்பாடு இருக்க வேண்டும். இன்றைய மாற் றத்துக்கு ஏற்ப நாம் நம்மை தயார் படுத்திக் கொள்ளாமல் இன்றைய நெருக்கடிகளுக்குத் தீர்வுகாண முடியாது. எனவே முற்போக்கு கலை இலக்கியப் பண்பாட்டுத் துறை போராளிகள் இதற்குத் தயா ராகும்படி கேட்டுக் கொள்கிறேன்.   இவ்வாறு கே.என்.பணிக்கர் கூறி னார்.

கருத்துகள் இல்லை: