வெள்ளி, 18 நவம்பர், 2011

அடுத்த சதிவேலையைத் துவக்கிய அமெரிக்கா

சிரிய அரசு எதிர்ப்பாளர்கள் நடத்தியுள்ள தாக்குதல்களில் ராணுவத் தைச் சேர்ந்த எட்டு பேர் கொல்லப்பட்டுள்ளதால் லிபியாவுக்கு அடுத்த படியாக சிரியாவில் தனது சதிவேலையை அமெரிக்கா துவங்கிவிட்டதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

அமெரிக்க ஆதரவு பொம்மை அரசுகள் அதிகமாக இடம் பெற்றுள்ள அரபு லீக்கிலிருந்து சிரியாவைத் தற்காலிக நீக்கம் செய்து வைத்த நிகழ்வைத் தொடர்ந்து, ஆயுதந்தாங்கிய சிரிய அரசு எதிர்ப்பாளர்கள் தங்கள் தாக்கு தல்களைத் துவக்கியுள்ளனர். ராணுவத் தளங்களைக் குறிவைத்து இந்தத் தாக்குதல்கள் நடந்துள்ளன. ராணுவம் மற்றும் பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த எட்டுபேர் இதில் கொல்லப் பட்டுள்ளனர்.

கடந்த எட்டு மாதங்களாக அந்நிய நாடுகளின் உதவியுடன் இந்தத் தீவிர வாதிகள் செயல்பட்டு வருகிறார்கள். சிரிய ராணுவத்தின் தீவிர நடவடிக்கை யால் இந்தத் தீவிரவாதிகளின் சதிவே லைகள் முறியடிக்கப்பட்டன. ஆனால் அமெரிக்கத் தூண்டுதலின்பேரில் அரபு லீக் எடுத்துள்ள நடவடிக்கை தீவிரவாதிகளுக்கு உற்சாகம் அளித்துள்ளது. தலைநகர் டமாஸ்கசுக்கு அருகில் உள்ள ஹரஸ்தா என்ற ஊரில் சிரிய விமானப்படையின் உளவுப்பிரிவு அலுவலகம் உள்ளது. அதன்மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

டோமா, கபோன் மற்றும் சக்பா ஆகிய இடங்களில் அமைந்துள்ள ராணுவத்தளங்கள் மீதும் தாக்குதல் நடந்துள்ளது. தற்காலிக ராணுவக் கவுன்சில் ஒன்றை அமைத்துள்ளதாக சிரிய எதிர்ப்பாளர்கள் அறிவித்திருக் கிறார்கள். இந்நிலையில் தற்போதைய ஜனாதிபதி அஸ்ஸாதுக்கு ஆதரவாக நாடு முழுவதும் மீண்டும் ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன. அதில் ஆயிரக் கணக்கான மக்கள் பங்கேற்றுள்ளனர். பல்வேறு நாடுகளில் தூதரகங்கள் முன்பாக இந்த ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படுகின்றன.

எட்டு மாதங்களாக நடைபெற்று வரும் இந்தத் தாக்குதல்களைப் பயன் படுத்திக் கொண்டு, லிபியாவில் செய் தது போன்ற ஆட்சி மாற்றத்தை சிரியாவிலும் கொண்டு வர அமெரிக்கா திட்டமிட்டு வருவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. சிரியாவில் உள்ள அரசு எதிர்ப்பாளர்களுக்கு லெபனா னில் உள்ள அமெரிக்க ஆதரவு அரசியல்வாதிகள் மூலமாக ஆயுதங்கள் வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத் தக்கது.

கருத்துகள் இல்லை: