வெள்ளி, 18 நவம்பர், 2011
அடுத்த சதிவேலையைத் துவக்கிய அமெரிக்கா
செவ்வாய், 5 ஜூலை, 2011
ஜார்ஜ் புஷ்சையும், பாரக் ஒபாமா வையும் எந்த நீதிமன்றத்தில் நிறுத்துவது?
லிபியாவின் ஜனாதிபதி மும்மர் கடாபியை கைது செய்து கூண்டில் ஏற்றுமாறு சர்வதேச குற் றவியல் நீதிமன்றம் (ஐசிசி) கடந்த வாரம் வெள் ளிக்கிழமை வாரண்ட் பிறப்பித்தது. கடாபியின் மகன் செய்ப் அல் - இஸ்லாம் மற்றும் லிபியா வின் உளவுத்துறை தலைவர் அப்துல்லா அல்- சென்யூசி ஆகியோருக்கும் கைது வாரண்ட் பிறப்பித்தது.“மனிதநேயத்திற்கு எதிராக கொடிய குற்றங் கள் புரிந்த போர்க்குற்றவாளிகள் இவர்கள்” என்று குற்றம் சாட்டி, வாரண்ட் பிறப்பித்துள்ளது தி ஹேக் நகரில் உள்ள இந்த நீதிமன்றம்.
உண்மையில், தனது நாட்டில் போராட்டத் தில் ஈடுபடும் கிளர்ச்சிக்காரர்களுடன் பேச்சு வார்த்தை நடத்த தயாராக இருப்பதாகவும், நேட்டோ படைகள் தனது நாட்டை சல்லடை யாக துளைத்து வருவதை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என் றும் லிபிய ஜனாதிபதி கடாபி வேண்டுகோள் விடுத்த மறுநாளே, அவரை சர்வதேச போர்க்குற்றவாளி என்று மேற்படி நீதிமன்றம் அறிவித்துள்ளது.
லிபியாவின் எண்ணெய் வளத்தை முழுமை யாக கைப்பற்றும் நோக்கத்தோடு, அங்கு ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் கடாபியின் அரசை ஒழித்துக் கட்டும் நோக்கத்தோடு அமெ ரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் அந்நாட்டின் மீது கொடிய யுத்தத்தை நடத்தி வருகின்றன. இந்த தாக்குதலில் அமெரிக்கா வுக்கு இணையாக ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகளான பிரிட்டனும், பிரான்சும் நாசகரப் படைகளை அனுப்பி தாக்குதலை தீவிரப்படுத்தி யுள்ளன. இந்தத் தாக்குதல்களில் ஆயிரக்கணக் கானோர் பலியாகியுள்ளனர். அதுகுறித்த உண்மை விபரங்களை உலகிற்கு சொல்லாமல் மேற்கத்திய ஊடகங்கள் மூடி மறைக்கின்றன. கடாபியின் உயிரைப் பறிக்கும் எண்ணத்துடன் அவரது மாளிகையின் மீது தொடர்ந்து நேட்டோ போர் விமானங்கள் சரமாரியாக குண்டு வீசி வருகின்றன. அவரது மகனையும், 3 பேரக் குழந்தைகளையும் சில வாரங்களுக்கு முன்பு குண்டுவீசி கொன்றொழித்தது நேட்டோ படை.படுகொலைகள் புரிந்து வரும் நேட்டோ படைகளை விட்டுவிட்டு, தாக்குதலுக்கு உள் ளாகியிருக்கும் கடாபியை குற்றவாளி என்று அறிவித்திருப்பதன் மூலம், சர்வதேச குற்ற வியல் நீதிமன்றத்தின் உண்மை முகத்தை அறி யலாம்.
1999ம் ஆண்டு மார்ச் 24ம்தேதி யுகோஸ்லே வியாவில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளின் படைகளை கொண்ட நேட்டோ ராணுவத்தினர் கொடூரமான யுத் தத்தை துவக்கினர்; அந்நாட்டைத் துண்டாட முயற்சித்த அல்பேனிய தீவிரவாதிகளுக்கு ஆயுதங்கள் வழங்கி, கொசோவா பிரதேசத்தில் ரணகளத்தை ஏற்படுத்தினர்; அதையொட்டி யுள்ள செர்பியாவிலும் குண்டுமழை பொழிந்த னர்; பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்கள் அழிந்தனர். இறுதியில், எந்த யுகோஸ்லேவியா சல்லடையாக துளைக்கப்பட்டதோ, அந்த யுகோஸ்லேவியாவின் ஜனாதிபதி ஸ்லோ போடன் மிலோசெவிக்கை போர்க் குற்றவாளி என்று சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அறி வித்தது. அவர் நாடு கடத்தப்பட்டார். தி ஹேக் நகரிலுள்ள சிறையில் அடைக்கப்பட்டார். சில ஆண்டுகளுக்கு முன்பு சிறையிலேயே மர்ம மான முறையில் உயிரிழந்தார்.
தாங்கள் கைப்பற்றத் துடிக்கும் நாடுகளைத் தாக்குவது; அந்த நாடுகளின் தலைவர்களை திட்டமிட்டு போர்க்குற்றவாளி என்று சர்வதேச நீதிமன்றத்தின் பெயரால் அறிவிப்பது; நீதிமன் றமே சொல்லிவிட்டதால் அவரை கைது செய்து தண்டனை கொடுக்க வேண்டுமென்று உலக அளவில் கருத்தை உருவாக்குவது; சம்பந்தப் பட்ட நாடுகளை கபளீகரம் செய்வது என வர லாற்றில் அமெரிக்க - ஐரோப்பிய ஏகாதிபத்தி யங்களின் குற்றங்கள் தொடர்கின்றன.
சில மாதங்களுக்கு முன்பு சூடான் ஜனாதி பதி அல் பஷீருக்கும் இவர்கள் வாரண்ட் பிறப் பித்தார்கள்.
சர்வதேச நீதிமன்றம் என்ற பெயரில் நடை பெறும் இந்த அட்டூழியத்தை சீனா, ரஷ்யா, ஆப்பிரிக்க யூனியன், லத்தீன் அமெரிக்க நாடு கள், மத்திய கிழக்கு நாடுகள் என உலகின் அனைத்துப் பகுதி நாடுகளும் கடுமையாக எதிர்க்கின்றன.
உள்நாட்டில் போராட்டத்தை ஒடுக்கினார் என்ற குற்றச்சாட்டிற்காக கடாபியை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்துவது சரியென்றால், அண் டை நாடான பாலஸ்தீனத்தில் அனுதினமும் அப்பாவி மக்களை குண்டுவீசிக் கொல்கிறதே அந்த இஸ்ரேலின் பிரதமரை எந்த நீதிமன்றத் தில் நிறுத்துவது?
பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற பெயரில் கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் உல கம் முழுவதிலும் பல்வேறு நாடுகளில் கொடிய யுத்தங்களை நடத்தி, சுமார் இரண்டேகால் லட் சம் மக்களை அழித்தொழித்த அமெரிக்க ஜனா திபதிகள் ஜார்ஜ் புஷ்சையும், பாரக் ஒபாமா வையும் எந்த நீதிமன்றத்தில் நிறுத்துவது?
புதன், 4 மே, 2011
அமெரிக்கா திருந்தாதவரை பயங்கரவாதம் ஒழியாது
பயங்கரவாதி ஒசாமா பின்லே டன் கொல்லப்பட் டுள்ள போதிலும், உலகம் முழுவதிலும் தனது ராணுவத்தின் மூலமும், உள்நாட்டிலும் அரசு பயங்கரவாதத்தை ஏவி விட்டுள்ள அமெரிக்காவின் நட வடிக்கைகளில் மாற்றம் ஏற்படாத வரை பயங்கரவாதம் என்ற பிரச் சனையை வெற்றிகரமாக எதிர் கொள்ள முடியாது என்று மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறி யுள்ளது.
அமெரிக்க சிறப்புப்படையின ரால் பாகிஸ்தானில் ஒசாமா பின் லேடன் கொல்லப்பட்டுள்ளார். எனினும், இது பல்வேறு பரிமாணங்கள் கொண்ட பயங்கரவாதம் என்ற பிரச்சனை முடிந்துவிட்டது என்று பொருளாகாது.
ஒசாமா பின்லேடனின் மரணம், அல்கொய்தா அமைப்பிற்கு பின்னடைவே என்ற போதிலும், மத அடிப்படைவாதத்தால் தூண்டி விடப்படும் பயங்கரவாத வன் முறைக்கு முடிவுகட்டுகிற விளைவை ஏற்படுத்தாது. அதே நேரத்தில், “பயங்கரவாதத்திற்கு எதிரான உலகளாவிய போர்” என்ற பெயரில் நடவடிக்கைகளை மேற்கொள்ள அமெரிக்காவால் பயன்படுத்தப் பட்ட முறைகள் நிலைமையை மேலும் மோசமாக்கவே செய்துள் ளன. அல்கொய்தாவுக்கு எதிராக போராடுகிறோம் என்ற பெயரில் ஆப்கானிஸ்தானையும், இராக்கை யும் அமெரிக்கா மிகக்கடுமையாக சிதைத்தது. இந்த கொடிய போர் களில் பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிர் பறிக்கப்பட்டது.
பாகிஸ்தானில் பல ஆண்டு காலமாக பின்லேடன் வாழ்ந்தார் என்ற உண்மை, அந்த நாட்டி லுள்ள பாதுகாப்பு கட்டமைப்பிற் கும் சில பயங்கரவாத குழுக்களுக் கும் இடையே நெருங்கிய தொடர் புகள் இருப்பதை சுட்டிக்காட்டு கிறது. 1980களில் ஆப்கானிஸ்தா னில் அமைந்திருந்த சோவியத் யூனியன் ஆதரவு அரசை எதிர்த்து கலகம் செய்ய பாகிஸ்தானின் உத வியை அமெரிக்கா பெற்றிருந்தது. அமெரிக்காவின் ராணுவத்தலை மையகமான பென்டகனும், அதன் உளவு அமைப்பான சிஐஏவும் பாகிஸ்தானின் உளவு அமைப் பான ஐஎஸ்ஐ மூலமாக ஆயுதங் களையும் பெருமளவு நிதியையும் ஒசாமா பின்லேடன் போன்றவர் களுக்கு வழங்கின; இப்படித்தான் பின்னாட்களில் தலிபான் பயங்கர வாதிகளும் ஜிகாதி மத அடிப் படைவாதிகளும் ஊட்டி வளர்க்கப் பட்டார்கள்.
லிபியாவில் சமீபத்தில் துவக்கப்பட்டுள்ள ராணுவ தாக்குதலும், ஆப்கானிஸ்தானில் தொடரும் யுத்தமும், கடந்த காலத்திலிருந்து எந்த பாடத்தையும் அமெரிக்கா கற்றுக்கொள்ளவில்லை என்பதையே காட்டுகிறது. அரசு பயங்கரவாதமும் மத அடிப்படைவாதிகளின் பயங்கரவாதமும் ஒன்றையொன்று ஊட்டி வளர்க்கின்றன. ராணுவத் தாக்குதல்களையும் அரசு பயங் கரவாதத்தையும் ஏவும் அணுகு முறையை அமெரிக்கா மாற்றிக் கொள்ளாதவரை, பயங்கரவாதம் என்ற பிரச்சனையை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியாது.
ஞாயிறு, 20 மார்ச், 2011
எண்ணெய் வளத்தை கைப்பற்ற லிபியா மீது கொடிய தாக்குதல்


ஞாயிறு, 6 மார்ச், 2011
அரபு மக்களின் எழுச்சியும், அமெரிக்காவின் எரிச்சலும்
லிபிய ராணுவத்தில் ஒரு தளபதியாக இருந்த கலோனல் மும்மர் கடாபி, தனது 28வது வயதில், எகிப்து தேசத்தில் தனது நண் பர் அப்துல் நாசர் நடத்திய கிளர்ச் சிகரமான நடவடிக்கைகளால் ஈர்க்கப்பட்டு, 1969ம் ஆண்டு லிபியாவின் மன்னர் முதலாம் இட்ரிஸின் ஆட்சி யை வீழ்த்தினார். அதிகாரத் திற்கு வந்தபின்னர் நிலச்சீர் திருத்தம் மற்றும் எண் ணெய் வளம் தேசிய மயம் போன்ற முக்கிய மான, புரட்சிகரமான நடவடிக்கைகளை அமல் படுத்தினார். லிபியாவின் வரு மானம் அதிகரித்தது. இந்த வருமானத்தை பொரு ளாதார மற்றும் சமூக மேம்பாட்டிற்காக அர்ப்பணித் தார். குறிப்பாக, மிகப் பெரும் பகுதி பாலைவன மாகவும், மிகமிகக் குறைவான அளவே பயன் படுத்தக்கூடிய நிலம் கொண்டதாகவும் இருக்கிற இந்த நாட்டில் வாழும் மிகச் சிறிய எண்ணிக்கையிலான மக்களின் கல்வி மற் றும் சுகாதார வசதிகள் மேம்பாட்டிற்கு, நாட் டின் வருமானம் பெருமளவு பயன்படுத்தப்பட்டது.
பாலைவனத்தின் அடி ஆழத்தில் மிகப் பரந்து விரிந்த, கடல்போன்று நீரூற்று வளம் நிறைந்து கிடக்கிறது. இங்கு நடக்கும் விவ சாய முறைகள் குறித்து ஒரு முறை நான் கேட் டறிந்தேன். அது என்னை மிகவும் ஈர்த்தது. எதிர்காலத்தில் எண்ணெயை விட விவசாய மும், நீரூற்று வளமும் இங்கு மதிப்புமிக்கதாக மாறும்.
முஸ்லிம் நாடுகளுக்கே உரிய மத நம் பிக்கையின் குணாம்சங்கள் இருந்தாலும், இந்த அரபு தேசத்தில் வலுவான பழங்குடி யின மரபுகள் இன்னும் உறுதியாக வாழ்ந்து கொண்டிருக்கின்றன.
லிபியாவில் இருக்கும் புரட்சியாளர்கள் பிரிந்து கிடக்கிறார்கள்; அந்நாட்டின் சட்டம் மற்றும் அரசியல் நிறுவனங்கள் தொடர்பாக தங்களது சொந்த கருத்துக்களை பின்பற்றி வருகிறார்கள். கொள்கை அடிப்படையில், இவர்கள் அனைவரது கருத்துக்களையும் கியூபா மதிக்கிறது.
லிபிய அரசின் தலைமை பின்பற்றி வரும் நடைமுறைகளும் அவர்களது சொந்த கருத் தோட்டத்தில் அமைந்தவை.
இங்கு நாம் கவனிக்கவேண்டிய அம்சம் என்னவென்றால், அமெரிக்காவும் நேட்டோ ராணுவ கூட்டணியும் லிபியாவைப் பற்றி கவலைப்படவில்லை என்பது தான்; அவர் களது அடிப்படையான கவலை, அரபு உலகம் முழுவதிலும் பெரும் அலையாக எழுந்துள்ள புரட்சிகர போராட்டங்கள் பற்றியதே. இந்தப் போராட்டங்களை என்ன விலைகொடுத் தேனும் தடுத்து நிறுத்துவது தான் அமெரிக்கா மற்றும் நேட்டோ அணியின் நோக்கம்.
எகிப்திலும், துனீஷியாவிலும் மிகப்பெரும் மக்கள் எழுச்சி உருவாகும் வரையிலும், அந்த நாடுகளது தலைவர்களுடன் அமெரிக்காவும் அதன் நேட்டோ கூட்டணியும் மிகமிக நெருக் கமான உறவு கொண்டிருந்தன என்பது மறுக்கமுடியாத உண்மை.
அதேபோலவே, லிபியாவுக்கும் நேட்டோ நாடுகளுக்கும் இடையே நடந்த உயர்மட்ட சந்திப்புகளில், கடாபியுடன் அவர்களுக்கு எந்த பிரச்சனையும் இருக்கவில்லை. உலகி லேயே உயர்தரமான எண்ணெயும், இயற்கை எரிவாயுவும் கிடைக்கிற மிக முக்கியமான நாடு லிபியா. பொட்டாசியம் சப்ளையில் கூட லிபியாவுக்கு முக்கிய இடம் உண்டு. இவர்க ளுக்கு இடையே ஏற்கெனவே எழுந்த பிரச்ச னைகள் கூட பின்நாட்களில் சமரசம் செய்து கொள்ளப்பட்டன.
இதைத் தொடர்ந்து எண்ணெய் வளத்தை தோண்டி எடுத்தல் மற்றும் வெளிநாடு களுக்கு ஏற்றுமதி செய்தல் போன்ற கேந்தி ரமான துறைகள் அந்நிய முதலீட்டிற்கு திறந்து விடப்பட்டன.
பல பொதுத் துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்பட்டன. தீவிர தாராளமயம் மற்றும் தனியார்மய நடவடிக்கைகளை லிபியாவில் நடைமுறைப்படுத்துவதில் பன்னாட்டு நிதி நிறுவனம் (ஐஎம்எப்) முன்னின்று கடமையாற் றியது.
கடாபியை அஸ்னர் வெகுவாக பாராட்டி னார். அவரைத் தொடர்ந்து டோனிபிளேர், சில்வியோ பெர்லுஸ்கோனி, நிகோலஸ் சர்கோஸி, ஜெபாட்டரோ மற்றும் எனது நண் பரும் ஸ்பெயின் மன்னரும் கூட கடாபியை பாராட்டினார்கள்; புகழ்ந்தார்கள். கடந்த கால நிகழ்வுகளை மறந்து எல்லோரும் மகிழ்ச்சி யாகத் தான் இருந்தார்கள்.
ஆனால் இப்போது என்ன ஆகிவிட்டது? நான் என்னையே கேட்டுக் கொள்கிறேன்; இப்போது கடாபியை அவர்கள் ஏன் தி ஹேக் நகரில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன் றத்தில் நிறுத்தவிரும்புகிறார்கள்?
தன்னை எதிர்த்துப் போராடுகிற நிராயுத பாணிகளான குடிமக்களை துப்பாக்கிகளால் சுட்டுத் தள்ளுவதாக இவர்கள், கடாபி மீது 24 மணி நேரமும் குற்றச்சாட்டுகளை அடுக்கிக் கொண்டிருக்கிறார்கள். எனக்கு கேள்வி எழுகிறது; தனது மக்களை ஒடுக்குவதற்காக லிபியாவால் வாங்கிக் குவிக்கப்பட்டிருக்கிற ஆயுதங்கள் மற்றும் மிக நவீனமான ராணுவ தளவாடங்கள் எல்லாம் அமெரிக்காவாலும், பிரிட்டனாலும் மற்றும் இதர நாடுகளாலும் சப்ளை செய்யப்பட்டவை தான் என்பதை இவர்கள் ஏன் இந்த உலகத்திற்குத் தெரிவிக்க மறுக்கிறார்கள்?
இன்றைக்கு லிபியாவில் படைகளைக் குவித்து, அந்நாட்டின் மீது போர் தொடுத்து, அந்நாட்டை முழுமையாக ஆக்கிரமிக்கும் நோக் கில் பொய்களைக் கட்டவிழ்த்து கொண்டிருப் பதை நான் கடுமையாக எதிர்க்கிறேன்.
கடைசியாக கடந்த 2001 ம் ஆண்டு மே மாதம் நான் கடாபியை சந்தித்தேன். அமெரிக்க ஜனாதிபதி ரொனால்டு ரீகனால் தாக்கப்பட்டு 15 ஆண்டுகள் கழிந்து விட்ட தனது மிக நவீ னமான அந்த வீட்டிற்கு என்னை கடாபி அழைத்துச் சென்றார். அமெ ரிக்க ராணுவ விமானங்க ளால் நேரடியாக குண்டுவீச்சு நடத்தப்பட்ட மாளிகை அது. பெருமளவிற்கு சிதைந்து போயிருந்தது; அந்த தாக்குத லில் கடாபியின் 3 வயது செல்ல மகள் ரத்த வெள்ளத்தில் கொல்லப்பட்டாள்; ரொனால்டு ரீகனால் அந்தக் குழந்தை கொல்லப்பட்டாள். இது குறித்தெல்லாம் நேட்டோவும் சரி, மனித உரிமைகள் கமிட் டியும் சரி, அல்லது ஐ.நா. சபை பாதுகாப்புக் கவுன்சிலும் சரி எப்போதும் கவலை தெரிவித்தது இல்லை.
இதற்கு முன்பு 1977ல் நான் லிபியாவுக்கு சென்றிருந்தேன். லிபியாவில் புரட்சிகர நட வடிக்கைகள் துவங்கி 8 ஆண்டுகளுக்கு பின் னர் இந்தப் பயணம். நான் திரிபோலி நகருக் குச் சென்றேன்; செபா என்னுமிடத்தில் நடந்த பொதுமக்கள் மாநாட்டில் பங்கேற்றேன்; நீரூற் றுக்களில் இருந்து தண்ணீரை கொண்டுவந்து, விவசாய உற்பத்தி செய்யப்படும் இடங்களை முதலில் பார்வையிட்டேன்; பெங்காளி நகருக் குச் சென்றேன், அங்கு மக்கள் மிக எழுச்சி கரமான வரவேற்பை அளித்தார்கள். இரண் டாம் உலகப்போர் காலகட்டத்தில், வரலாற் றில் முக்கியத்துவம் பெற்ற மகத்தான ஒரு நாடு லிபியா. இப்போது இருப்பதை போல 60 லட்சம் குடும்பங்களை அப்போது அது பெற் றிருக்க வில்லை; இப்போது இருப்பதை போல மிகப் பெருவாரியான எண்ணெய் மற்றும் நீரூற்று வளத்தை அது கண்டறிந்திருக்க வில்லை. போர்ச்சுகீசியர்களின் காலனி ஆதிக்கத்தில் இருந்த இந்த ஆப்பிரிக்க தேசம் இரண்டாம் உலகப்போர் காலகட்டத் தில் தான் விடுதலை அடைந்தது.
அமெரிக்க ஜனாதிபதியாக ரொனால்டு ரீகன் ஆட்சியில் இருந்த காலத்தில், அங் கோலாவில் எழுந்த புரட்சிகர சக்திகளை ஒழித்துக் கட்டுவதற்காக 1962-ல் துவங்கி மிகக் கொடிய ஆயுதங்களுடன் அமெரிக்கா தாக்குதல் நடத்தியது; நமீபியாவிலும் தாக்கு தலை கட்டவிழ்த்துவிட்டது. இந்தக் கொடிய போரில், பல்லாயிரக்கணக்கான அப்பாவி ஆப்பி ரிக்க- அரபு மக்களின் உயிர்கள் பறிக்கப்பட்டன.
இன்றைக்கு லிபியாவைச் சுற்றி உருவாக் கப்படும் போர் மேகம், லட்சக்கணக்கான அரபு மக்களின் உயிருக்கு உலை வைக்கும் பேரா பத்தாக எழுந்துள்ளது.
அரபு உலகில் எழுந்துள்ள புரட்சி, அமெ ரிக்க ஏகாதிபத்தியத்திற்கு அச்சத்தை ஏற் படுத்தியுள்ளது. அரபு உலகில் இன்றைக்கு போராட்டத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் உரிமை மறுக்கப்பட்டவர்கள்; ஒடுக்கப்பட்டவர்கள்.
லிபியாவில் நெருக்கடி துவங்கியவுடன், சவூதி அரேபியாவில் தோண்டி எடுக்கப் படும் எண்ணெய்யின் அளவு நாளொன்றுக்கு 10 லட்சம் பேரல்களாக அதிகரித்துவிட்டது. மிகக் குறைந்த செலவில் எடுக்கப்படும் இந்த எண்ணெய் மூலம் அந்த நாட்டின் வருமான மும், அதைக் கட்டுப்படுத்தும் நாட்டின் வருமானமும் நாளொன்றுக்கு 100 கோடி டாலர் அளவிற்கு அதிகரித்துள்ளது.
இப்படிச் சொல்லும் போது சவூதி மக்கள் பணத்தில் நீந்திக் கொண்டிருக்கிறார்கள் என்று யாரும் கற்பனை செய்ய வேண்டாம். அங்கு வேலைக்காக அலைந்து கொண்டிருக் கும் ஆயிரக்கணக்கான கட்டுமானத் தொழி லாளர்களும், இதர பல துறைகளில் பணி யாற்றும் தொழிலாளர்களும் நாளொன்றுக்கு 13 மணி நேரம், 14 மணி நேரம் வேலை வாங்கப் படுகிறார்கள்; மிகமிகக் குறைவான கூலிக்கு!
ஏற்கனவே நடைமுறையில் இருக்கிற கேடுகெட்ட ஆட்சியமைப்பு முறையை அதி ரச் செய்துள்ளது அரபு உலகின் புரட்சிகர அலை; எகிப்திலும் துனீஷியாவிலும் தொழி லாளர்கள் வீதிகளுக்கு வந்து கிளர்ச்சியில் ஈடுபட்டார்கள்; ஜோர்டானில் தொழிலாளர் களோடு வேலை வாய்ப்பு மறுக்கப்பட்ட இளைஞர்கள் கைகோர்த்துக் கொண்டார்கள்; பாலஸ்தீனத்தில் ஆக்கிரமிப்புக்கு எதிராக மக்கள் உறுதியோடு அணி திரண்டிருக்கி றார்கள். ஏமனில் பெரும் கிளர்ச்சி நீடிக்கிறது; தனி நபர் வருமானம் அதிகமாக உள்ள நாடு என்று சொல்லப்படுகிற ஐக்கிய அரபு எமி ரேட்டிலும், பஹ்ரைனிலும் கூட கிளர்ச்சி வெடித்துள்ளது. நீடிக்கும் இந்தப் போராட்டங் கள் சவூதியிலும் எதிரொலித்துக் கொண்டி ருக்கின்றன.
இத்தகைய பின்னணியில் தான், அண்டை நாடுகளில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை அரபு உலகின் அனைத்து மக்களும் தெரிந்துகொள்ள முடியாத விதத்தில் அனைத் துச் செய்திகளும் திட்டமிட்டு திரிக்கப்படு கின்றன.
அரபு மக்களின் இந்த மகத்தான போராட் டம் எத்தகைய சூழலில் நடக்கிறது? உலகம் முழுவதிலும் உணவுப் பொருட்களின் விலை கடுமையாக அதிகரித்துள்ளது; பருவநிலை மாற்றம் மிகக் கொடிய விளைவுகளை உரு வாக்கிக் கொண்டிருக்கிறது; அதே தருணத் தில் உலகிலேயே அதிகமாக சோளத்தை விளைவிக்கும் நாடான அமெரிக்கா, தனது உற்பத்தியில் 40 சதவீதத்தையும், சோயா பீன்ஸ் உற்பத்தியில் பெருவாரியான பங்கி னையும் தனது நாட்டின் வாகனங்களுக்கு உயிரி எரிபொருள் தயாரிக்க வீணாக்கிக் கொண்டிருக்கிறது.
லிபியாவில் நேட்டோ ராணுவப் படை களின் தலையீடு இல்லாமல் ஒரு அமைதி யான தீர்வை ஏற்படுத்த வெனிசுலா ஜனா திபதி ஹியூகோ சாவேஸ் முயற்சி மேற் கொண்டுள்ளார். அவரது கருத்துக்கு உலக அளவில் பரந்துவிரிந்த ஆதரவு எட்டப்படு மானால், இராக் தேசத்தின் மக்கள் அனு பவித்த அந்தக் கொடிய போரை லிபிய மக்கள் எதிர்கொள்ளாமல் தப்பிக்கலாம்.
வெள்ளி, 4 மார்ச், 2011
அமெரிக்க ஓநாய்யே லிபியாவில் தலையிடாதே!
