புரட்சிகர பூமியாம் சோசலிச கியூபாவிற்கு எதிராக அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடைகள், வர்த்தகத் தடைகள் பற்றி நாம் அறிவோம். உலகெங்கிலும் உள்ள அமெரிக்க ஆதரவு முதலாளித்துவ ஊடகங்கள் கியூபாவிற்கு எதிராக நடைமுறைப்படுத்தி வரும் ஊடகத்தடை நாம் அதிகம் அறியாதது.
சமீப நாட்களாக கியூபாவுக்கு எதிராக உலக ஊடகங்களில் ஒரு திட்டமிட்ட அவதூறுச் செய்தி உலா வந்துகொண்டிருக்கிறது. அந்தச் செய்தி கியூபாவை ஒரு பிசாசைப்போல வர்ணிக்கிறது. கியூபாவில் மனிதஉரிமை காலில்போட்டு நசுக்கப்படுவதாகக் கதைக்கிறது. கியூபாவில் சிறைக் கைதி ஒருவர் இறந்துபோனது குறித்தே இத்தகைய செய்திகள் பரப்பப்பட்டுள்ளன.
கடந்த நான்காண்டுகாலமாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் இறந்துபோனது உண்மைதான். தனது மனைவியை பொது இடத்தில் மிகக்கொடூரமான முறையில் தாக்கிக் காயப்படுத்திய குற்றத்திற்காகவும், அவரை தடுத்து நிறுத்த முயன்ற காவல்துறையினர் மீது வன்முறைத் தாக்குதலை நடத்திய குற்றத்திற்காகவும் கைது செய்யப்பட்டு, சட்ட நடைமுறைகளின் அடிப்படையில் அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. சிறையில், அவருக்கு ஏற்கெனவே இருந்த உடல்நலக் குறைபாடுகளின் தொடர்ச்சியாக மூச்சுக்குழலில் தொற்று ஏற்பட்டு அனைத்து உறுப்புகளும் செயலிழந்தன. உலகிற்கே மருத்துவச் சேவை அளிக்கும் கியூபா, தனது நாட்டிலுள்ள இயல்பான குடிமக்களைப் போலவே சிறைவாசிகளையும் நடத்தி வருகிறது. அந்த வகையில் அதிகபட்ச மருத்துவ சிகிச்சையை அவருக்கு அளித்தது. எனினும் சிகிச்சை பலனின்றி கியூபாவின் மிகப்பெரிய மருத்துவமனையான சாண்டியாகோ டி கியூபா மருத்துவமனையில் காலமானார்.
இந்தச் செய்தியைத்தான், உண்மைகளை மறைத்துவிட்டு உலகெங்கிலும் எடுத்துச் செல்கின்றன முதலாளித்துவ ஊடகங்கள். ஒருபுறம் அமெரிக்கா, மறுபுறம் ஸ்பெயின், மற்றொருபுறம் சிலி என எதேச்சதிகார - ஏகாதிபத்திய ஆதரவு ஆட்சியாளர்கள் இந்த செய்தியை கையில் வைத்துக் கொண்டு கியூபாவுக்கு எதிராக விஷத்தைக் கக்கி வருகிறார்கள்.
கியூபாவில் சிறையில் இதுவரை கைதிகள் எவரும் இறந்ததில்லை. மிகக்கொடூரமான முறையில் எவரும் கொல்லப்படவில்லை. மரண தண்ட னைக் குற்றங்களே அங்கு நடக்கவில் லை. அப்படிப்பட்ட அற்புதத்தேசத்தின் மீது சேற்றை வாரி இறைக்கும் ஸ்பெ யின் ஆட்சியாளர்களுக்கும் சிலி ஆட் சியாளர்களுக்கும் ஏராளமான கேள்விக் கணைகள் காத்திருக்கின்றன.
ஸ்பெயின் மட்டுமின்றி, கியூபாவை திட்டித் தீர்க்கும் ஐரோப்பிய கூட்டாளி களின் ‘மிகவும் நாகரிகமான’ அரசுகள், தங்களது நாடுகளில் தற்போது நடந்து கொண்டிருக்கும் மகத்தான தொழிலாளர் இயக்கங்களின் மீது, முன்னெப் போதையும் விட கொடூரமான தாக்குதலை கட்டவிழ்த்துவிட்டிருக்கின் றனவே, ஏன்?
ஸ்பெயின் நாட்டுச் சிறைகள் நிரம்பி வழிகின்றன. அத்தனை பேரும் அந் நாட்டிற்கு வேலை தேடி ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து வந்த அப்பாவிகள். கடந்தாண்டு ஜூலை மாதம் டெரூயல் எனும் நகரில் அமைந்துள்ள சிறைக் கொட்டடியில், ஒரு சாதாரண சிறைவாசி பல மாத காலம் பட்டினிப்போராட்டம் நடத்தி இறந்துபோனார். எப்படி? அவர் மொராக்கோ நாட்டிலிருந்து பிழைப்பு தேடி இங்கு வந்தவர். எந்தக்குற்றமும் செய்யாததற்காக கைது செய்யப்பட்டார். தான் ஒரு அப்பாவி என்பதை நிரூபிப் பதற்காகவே பட்டினி கிடந்து உயிர் நீத்தார். அவரது கதறலை ஸ்பானிய அதிகாரிகள் ஏறெடுத்துக்கூட பார்க்க வில்லை.
சிலி நாட்டில் சர்வாதிகாரி பினோ செட்டின் கையாட்கள்தான் ஆட்சியி லிருக்கிறார்கள். சமீபத்தில் பள்ளிப் பாடப் புத்தகங்களில் கொடூங்கோலன் பினோசெட் பற்றி புகழ்பாடும் பாடம் இடம் பெற்றதை எதிர்த்து போராட்டத்தில் இறங்கியமாணவர்கள் மீது கொடிய அடக்குமுறை ஏவப்பட்டது. பலர் மீது பயங்கரவாத தடுப்புச்சட்டம் பாய்ந்ததே?
அமெரிக்க ஆட்சியாளர்களோ மிகவும் ‘நல்லவர்கள்’.
கியூபாவின் மனித உரிமையைப் பற்றி கவலைப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள்.உலகிலேயே மிகமிக மோசமான முறையில் மனித உரிமை களைப் பராமரிக்கிற ஒருநாடு இருக்கிறதென்றால், அது அமெரிக்காவே என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் கவுன்சிலே பளிச்சென்று சொல்லியிருக்கிறது. இந்த நாட்டின் பெண்கள் மிடுக்கான உடைகள் உடுத்தலாம்; ஆனால் ஆணுக்கு நிகரான உரிமைகள் இல்லாதவர்கள். இன ரீதியான, மத ரீதியான ஒடுக்குமுறைகளுக்கு அமெரிக்க மாகாணங்களில் ஏராளம் ஏராளம் உதாரணங்கள் மறைந்திருக்கின்றன. சிறைகள் சித்ரவதைக்கூடங்கள். இந்த நாட்டின் நீதித்துறை அடிக்கடி ‘தவறான’ தீர்ப்புகளையே வழங்கும். நீதித்துறையின் ‘தவறுகளில்’ சிக்கியவர்களுக்கு மரண தண்டனை உறுதி. உலகிலேயே சின்னஞ்சிறுவர்களையும் மன ரீதியாக பாதிக்கப்பட்டவர்களையும் கூட தூக்கிலேற்றிய பெருமைக்குரியது அமெரிக்க அரசு.
2010ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் தற்போது வரை 90 சிறை வாசிகளை தூக்கில்போட்டு கொன்றிருக்கிறது அமெரிக்க நிர்வாகம். இன்னும் 3 ஆயிரத்து 220 பேருக்கு மரணக்கயிறு காத்திருக்கிறது.
கடந்தாண்டு நவம்பர் மாதத்தில் கலிபோர்னியாவில் உள்ள மிகப் பெரும் சிறை ஒன்றில் அனைத்துக் கைதிகளும் ஒட்டுமொத்த மாகப் பட்டினிப்போராட்டம் நடத்தினார்கள். அவர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் ஏவப்பட்டது. மூன்றுபேர் அடி வாங்கியே செத்துப்போனார்கள்.
உள்நாடு மட்டுமின்றி ஆப்கானிஸ்தான், இராக், பாகிஸ்தான், லிபியா உள்பட பல்வேறு நாடுகளில் அமெரிக்கா கொன்று குவித்த உயிர்கள் ஏராளம் ஏராளம்.
ஆனால், பேரிடர்களின் போது மட்டுமின்றி, இயல்பான காலங் களிலும் கூட பல்வேறு நாடுகளில் ஆயிரக்கணக்கான மருத்துவர் களை சேவைக்காக அனுப்பி, லட்சக்கணக்கான உயிர்களை பாது காத்துக் கொண்டிருக்கிற மகத்தான வரலாறு படைத்தது சோசலிச கியூபா.
முதலாளித்துவ ஊடகங்கள் உரைக்க மறுக்கிற உண்மை இது.
-எஸ்.பி.ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக