கலைஞர் டி.வி. அலுவலகத்தில் மத்திய புலனாய்வுக் கழக (சிபிஐ) அதிகாரிகள் விடிய விடிய அதிரடி சோதனை நடத்தினர்.
இதனிடையே ஸ்வான் டெலிகாம் நிறுவனம் மூலம் நடைபெற்ற பணப்பரி மாற்றம் தொடர்பாக பதிலளிக்குமாறு ஏராளமான கேள்விகளை முதலமைச் சரின் மகளும், திமுக நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழிக்கு அனுப்பியுள்ளது என்ற தகவலும் வெளி யாகியுள்ளது.
ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி சூறையாடப்பட்ட 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் கைது செய்யப்பட் டுள்ள முன்னாள் மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசா விடமும், ஸ்வான் டெலிகாம் நிறுவனத் தின் அதிபர் ஷாகித் உசேன் பல்வா உள் ளிட்டவர்களிடமும் தீவிர விசாரணை நடத்திய சிபிஐ, இந்த ஊழல் விவகாரத் தில் நடந்த ஏராளமான பணப்பரிவர்த் தனைகள் குறித்த விபரங்களை ஆதாரத் துடன் கைப்பற்றியுள்ளது. ஏற்கெனவே தில்லியில் உள்ள ஆ.ராசாவின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் அதிரடி சோதனை நடத்திய சிபிஐ, தமிழ கத்தில் கடந்த மாதம் 40க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தியது. பெரம்பலூரிலும் நீலகிரியிலும் இந்த சோதனைகள் நடத்தப்பட்டன. சென் னையில் ஏராளமான இடங்களில் சோதனை நடந்தது.
இந்த சோதனைகளில் கைப்பற்றப் பட்ட ஆவணங்களையும், தற்போது ராசா உள்ளிட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் கிடைத்த விவரங்களை யும் அடிப்படையாகக் கொண்டு, திமுக தலைவரது குடும்பத்தின் சொந்த தொலைக்காட்சியான கலைஞர் டி.வி.யை சிபிஐ குறிவைத்தது.
ஆ.ராசா தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்தபோது மிகக் குறைந்த விலைக்கு விற்பனை செய்த 2ஜி அலைக்கற்றை உரிமங்களால் கொள் ளை லாபம் ஈட்டிய ஷாகித் உசேன் பல் வாவின் ஸ்வான் டெலிகாம் நிறுவனம், டிபி ரியாலிட்டி நிறுவனத்தின் துணை நிறுவனமான சினியுக் பிலிம்ஸ் என்ற கம்பெனியின் மூலம் கலைஞர் தொலைக்காட்சிக்கு ரூ.214 கோடி பணம் தந்ததாக சிபிஐ குற்றம்சாட்டி யுள்ளது. ஆனால் சினியுக் நிறுவனம் தங்களது கலைஞர் டிவியின் பங்கு களை வாங்குவதற்காகவே ரூ.214 கோடி யை முதலீடு செய்ததாகவும், பங்கு விலையை நிர்ணயிப்பதில் சிக்கல் எழுந் ததால் அந்தப்பணத்தை திருப்பி ரூ.31 கோடி வட்டியோடு சேர்த்து சினியுக் நிறுவனத்திடமே தந்துவிட்டதாகவும் கலைஞர் தொலைக்காட்சி நிர்வாகம் விளக்கம் கூறியது. மேலும் சினியுக் நிறு வனத்திற்கும் டி.பி. ரியாலிட்டி நிறுவனத் திற்கும் உள்ள தொடர்பு குறித்து தங் களுக்கு ஏதும் தெரியாது என்றும் கலைஞர் தொலைக்காட்சி கூறியது.
ஆனால் சிபிஐ இதை நம்பவில்லை.
அடிமாட்டு விலைக்கு 2ஜி அலைக் கற்றை உரிமங்கள் ஒதுக்கியதற்காக லஞ்சமாக தரப்பட்ட பணத்தில் ஒரு பகுதிதான் மேற்கண்ட ரூ.214 கோடி என்றும், ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம் வெளிச்சத்திற்கு வருவதற்கு முன்பு இந்தப்பணத்தை கலைஞர் தொலைக் காட்சிக்கு டி.பி.ரியாலிட்டி நிறுவனம் கொடுத்ததாகவும், பின்னர் பிரச்சனை பெரிதான நிலையில் அதை கலைஞர் தொலைக்காட்சி திருப்பித் தந்துவிட்ட தாகவும் சிபிஐ கருதுகிறது.
இந்தப்பின்னணியில், வியாழனன்று இரவு தில்லியில் இருந்து 10 அதிகாரிகள் கொண்ட சிபிஐ சிறப்புக்குழு சென்னை வந்தது. சிபிஐயின் ஊழல் தடுப்பு பிரி வைச் சேர்ந்த இந்தக்குழு, தில்லி நீதிமன் றத்தால் அளிக்கப்பட்ட தேடுதல் வாரண்டுடன் வந்திருந்தது.
சென்னையில் திமுக தலைமை அலு வலகமான அண்ணா அறிவாலயத்தில் அமைந்துள்ள கலைஞர் டிவி அலுவல கத்திற்குள் வியாழனன்று நள்ளிரவு புகுந்த சிபிஐ அதிகாரிகள் விடிய விடிய சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கலைஞர் டிவியின் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
நள்ளிரவு சுமார் 12 மணி அளவில் துவங்கிய இந்த சோதனை வெள்ளி யன்று அதிகாலை 5.30 மணி வரை நீடித் தது என்று தகவல்கள் தெரிவித்தன.
மேலும், கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குநர் சரத்குமாரின் வீட்டிலும் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். அவரது வீட்டிலிருந்து சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது. சிபிஐயின் அதிரடி சோத னையில் சிக்கிய கலைஞர் டி.வியில் தமிழக முதலமைச்சரின் மனைவி தயாளு அம்மையாருக்கு 60 சதவீதம் பங்குகளும் மகள் கனிமொழிக்கு 20 சதவீதம் பங்குகளும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான கருணாநிதியின் குடும்பத்திற்குச் சொந்தமான கலைஞர் டி.வி. அலுவலகத்தில் மத்திய புலனாய்வுக் கழக (சிபிஐ) அதிகாரிகள் ரெய்டு செய்ய வந்தனர் அவர்களை இப்போது வரவேண்டாம் இரவு 12 மணிக்கு மேல் வந்தா நாங்க ஓத்துழைப்பு தருவோம் என்று மிரட்டினர் அதை கேட்டு சிபிஐயும் கேட்டு சென்று இந்தியாவில் முதன் முதலாக திரும்பி போய் வந்து விடிய விடிய அதிரடி சோதனை நடத்தினர்.
மற்ற இடங்களில் அதிரடியாக ரெய்டு செய்யும் சிபிஐ(காங்கிரஸ்) அவர்கள் சொன்ன நேரத்தில் வந்ததின் பின்னணி என்ன இதை படிக்கும் உங்களுக்குதான் தெரியும்.....
1 கருத்து:
சிபிஐ யாரு? அந்த மதுரை தினகரன் பத்திரிக்கை அலுவலகம் எரிப்பு மூவர் சாவு வழக்கு விசாரிச்சவுங்களா!, பத்திரமோசடின்னு சரத்பவார், நம்மூர் காவல்துறை அதிகாரிகள் மேல் விசாரணை பண்ணிட்டு 2006ல அப்துல் கரீம் தெல்கியை மட்டும் சிறையில போட்டாங்களே அவுகலா!! சரி...எதாவது 'காதுகுத்து கல்யாணத்துக்கு' கலைஞர் மண்டபத்தை புக் பண்ணிட்டு, அப்படியே நிகழ்ச்சியை கலைஞர் டிவில மானாட புரோக்கிராமுக்கு முந்துன ஸ்லாட்டுல போட சொல்லி கேட்கப் போயிருப்பாங்க. இதைப் போய் என்னமோ ....ஏதோன்னுட்டு போய்....
கருத்துரையிடுக