வியாழன், 18 ஆகஸ்ட், 2011

உலகை உலுக்கிய கவிதை: ........கறுப்பாக இருப்பது...



பிறக்கும்போது நான் கறுப்பாக இருக்கிறேன்


பின் வளரும் போதும் கறுப்பு


பனிக்காலத்திலும் கறுப்பு


வெயிலில் நடக்கையிலும் கறுப்பு


காய்ச்சலடித்துக் கிடக்கும் போதும் கறுப்பு


சாகும் தறுவாயிலும் நான் கறுப்பு தான்..


ஆனால் நீ


பிறக்கும்போது ரோஜா நிறத்தில் இருக்கிறாய்


வளர்கையில் வெள்ளை


பனிக்காலத்தில் நீலம்


வெயிலில் செல்கையில் சிவப்பு


காய்ச்சலில் பச்சை நிறம்


இறக்கும்போது நீ சாம்பல் நிறம்


இந்த லட்சணத்தில்


என்னைப் போய் 'நிறத்துக்காரன்' என்று


அழைக்கத் துணிய முடிகிறது உனக்கு!






மால்கம் எக்ஸ் அவர்களது மேற் கோளாகவும், யாரோ ஆப்பிரிக்கச் சிறுமி எழுதிய 2007-ம் ஆண்டின் சிறந்த கவிதை என்றும் விதவிதமாகச் சொல்லப்படும் மேற்படி கவிதை நிறவெறியின் வலியை - பல மணி நேர ஆவேச உரையோ, ஒரு நீண்ட நெடும் கட்டுரையோ சொல்லத் துடிக்கிற செய்தியை, காத்திரமாகச் சொல்லி விடுகிறது.

2 கருத்துகள்:

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

உண்மைதான்!!!!!!!!

பனித்துளி சங்கர் சொன்னது…

அருமையானக் கவிதை . பகிர்ந்தமைக்கு நன்றி