வெள்ளி, 4 நவம்பர், 2011

இப்படியும் சில நீதிபதிகள்!


உச்ச நீதிமன்றத்தில் ஐந்தாண்டு காலம் நீதிபதியாக பணியாற்றி, உச்ச நீதிமன்ற வரலாற்றில் முத்திரை பதிக்கும் சில தீர்ப்புகளை வழங்கியவரும், அண்மையில் ஓய்வு பெற்ற வருமான மார்க்கண்டேய கட்ஜூ, ஓய்வு பெறு வதற்கு முன்பாக ஒப்பந்தத் தொழிலாளர் களைப் பற்றிய வழக்கில் அவர் வழங்கிய தீர்ப்பு மேலும் ஒரு முத்திரை பதித்துள்ளது. தொழிலாளர் விரோதக் கொள்கையைக் கடைப்பிடிக்கும் மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் கிடைத்த ஒரு சவுக்கடியாகும்.

இவர், 2006ம் ஆண்டுதான் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அதற்கு முன்னால் சென்னை உயர்நீதிமன்றத்திலும், தில்லி உயர்நீதிமன்றத்திலும் தலைமை நீதிபதியாகவும் பணியாற்றியுள்ளார்.

கவுரவக்கொலை என்று கூறப்படும் காட்டுத் தனமான இந்தக் கொடுமையை செய்வோ ருக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்று உயர்நீ திமன்றங்களுக்கு தாக்கீது அனுப்பியவர்.

வரதட்சணைக் கொடுமையால் மரணம், மணப்பெண் உயிரோடு எரித்தல் போன்ற குற் றங்களுக்கு மரண தண்டனை வழங்கினார்.

உணர்வின்றி, செயலின்றி கிடக்கும் நோயாளிகளை சுலப மான முறையில் அவர்கள் மீது இரக்கம் கொண்டு மரணத்தைத் தழுவ செய்வது என்ற ஏற்பாட்டுக்கு சம்மதத்தோடும், உயர்நீதிமன்ற வழிகாட்டுதலோடும் வழி வகுத்தவர்.

நக்சலைட் என்று குற்றம் சாட்டப்பட்ட (மனித உரிமை காப்பாளர்) பினாயக் சென்னை விடுதலை செய்தவர். 27 ஆண்டுகளாக லாகூர் சிறையில் (பாகிஸ்தான்) வாடிக்கிடந்த இந்திய பிரஜை கோபால்தாஸ் என்பவரை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்யக்கோரி பரிந்துரை செய்தார். பாகிஸ் தான் அரசும் அவரை விடுதலை செய்தது. இப் படி சில துணிகரமான நடவடிக்கைகளையும், தீர்ப்புகளையும் வழங்கியுள்ளார்.

(அபூர்வமாக, அரிதிலும் அரிதாக மரண தண்டனைகளை வழங்க சட்டத்தில் இட முள்ள போது, அப்படிப்பட்ட கொடுமையான குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்பது இவர் வாதம்.)

“உலகமய வளர்ச்சி, தாராளமய வளர்ச்சி என்ற பெயரால் ஒப்பந்தத் தொழிலாளர்கள் மனிதாபிமானமற்ற முறையில் சுரண்டும் கொடுமையை உச்சநீதிமன்றம் ஏற்க இய லாது” என்று தீர்ப்பு எழுதினார்- அத்தி பூத் தாற் போல் சில நேரங்களில் சில நீதிபதி களால்தான் இப்படிப்பட்ட தீர்ப்புகளை வழங்க முடிகிறது. சட்டம் எப்படி இருந்தாலும் நீதிபதிகளின் சமூகப் பார்வைகளும் இதற்கு அடிப்படையாக இருக்க வேண்டும்.

இந்திய ஒப்பந்தத் தொழிலாளர் சட்டம்-89, தொடர்ந்து தொழிலாளர்களை சுரண்ட வழிவகுக்கும் ஒரு சட்டமாகும். முதலாளிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு லாப வேட்டை விகிதாச்சாரத்தை பல மடங்கு உயர்த்திக் கொள்ள வாய்ப்பு உருவாகிறது. முத லாளிகளின் வாதமே, ஒப்பந்த தொழிலாளர்கள் எங்களின் தொழிலாளர்களே அல்ல என்பதுதான். அவர்களுக்கும், ஒப்பந்த ஏஜெண்டு களுக்கும்தான் சம்பந்தம், ஏஜெண்டுகளின் அதிகாரத்தின் கீழ்தான் அவர்கள் பணிபுரி கிறார்கள் என சட்டத்துக்குள் ஒளிந்து கொள்கிறார்கள்.

தனியார் தொழிற்சாலைக்கு மட்டும் இந்த நிலை என்பதில்லை. மத்திய அரசும், மாநில அரசுகளுமே ஒப்பந்தத் தொழிலாளர்களைப் பயன்படுத்திக் கொள்ளும் முறை மிக சர்வ சாதாரணமாக அமல்படுத்தப்படுகிறது.

சில குறிப்பிட்ட தொழில்துறைகளில் ஒப் பந்தத் தொழிலாளர்களைப் பயன்படுத்தக் கூடாது என்ற அரசின் விதிமுறை இருந்தும் அமல்படுத்தப்படுவதில்லை.

உதாரணமாக, உச்சநீதிமன்றம் 1996ம் ஆண்டு வழங்கிய தீர்ப்பு இதற்கு ஒரு சாட்சி.

ஏர் இந்தியா விமானத்துறையில் ஒப்பந்தத் தொழிலாளர்களை நியமிக்கக்கூடாது என்ற விதியை அந்த நிர்வாகம் மீறியது. இதை விசா ரித்த நீதிமன்றம், ஒப்பந்தத் தொழிலாளர்கள் இத்துறையில் பணி அமர்த்தக்கூடாது என்று இருப்பதால், இப்போது பணிபுரியும் ஒப்பந் தத் தொழிலாளர்கள் அனைவரையும் ஒழுங்கு முறை தொழிலாளர்களாக நியமிக்கத் தீர்ப்பு வழங்கியது. இப்படிப்பட்ட தீர்ப்பு 2001ம் ஆண்டு நீதிமன்றத்தின் மற்றொரு தீர்ப்பால் மாற்றப்பட்டு விட்டது. ளுவநநட ஹரவாடிசவைல டிக ஐனேயை டுவன என்ற வழக்கில் தீர்ப்பு தலைகீழாக மாற்றப்பட்டு விட்டது. ஒப்பந்தத் தொழிலாளர்கள் பெரும்பகுதி வந்தேறிகளாக இருப்பார்கள், கூட்டுப் பேர சக்தி இல்லாது பலஹீனமானவர்களாக இருப்பார்கள். உயிர் வாழவே கஷ்டமான ஜீவனம் நடத்தும் விளிம்பு நிலையில் உள்ளவர்கள். இவர்களின் அவல நிலையை முதலாளிகளும் பயன்படுத் திக் கொள்கிறார்கள். தரகர்களும் பயன்படுத் திக் கொள்கிறார்கள். ஒரு பக்கம் நவீன இயந்தி ரங்களைக் கொண்டு வந்து ஆட்களைக் குறைப்பது, மறுபக்கம் நிரந்தர பணி அமர்த் தல் முறையை குறைப்பது, தற்காலிக தொழி லாளர்களை நியமிப்பது என்ற முறை மிக நேர்த்தியாக அமல்படுத்தப்படுகிறது.

 இந்தியா முழுவதும் இது அமலாக்கப்படுகிறது. தமிழகத்தில் கூட ஏராளமான உழைப்பாளி கள் பீகார், உத்தரப்பிரதேசம், ஒரிசா, பூடான், மணிப்பூர் போன்ற மாநிலங்களிலிருந்து வந்து பணியாற்ற குடியேறுகிறார்கள். குறிப் பாக சென்னையிலும், சென்னையை அடுத்த மாவட்டங்களிலும் வெளி மாநில மக்கள் பணி புரிகிறார்கள், கடுமையாக உழைக்கிறார் கள்; சுரண்டப்படுகிறார்கள். எட்டுமணி நேர வேலை எங்கோ மறைந்து போனது.

மத்திய அரசின் உலகமயம், தாராள மயம், தனியார் மயம் என்கிற புதியபொருளாதாரக் கொள்கையின் வெளிப்பாடு என்பது சாதா ரண மக்கள் மீது இடியாக விழுகிறது.

உழைப்பாளிகளுக்கு எதிராக இந்தியா முழுவதும் இதுபோன்ற கோரத்தாண்டவம் கொடிகட்டிப் பறக்கின்ற வேளையில், நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு வழங்கிய தீர்ப்பு ஆற் றில் சிக்கித் தவிக்கும் ஒருவருக்கு ஆலமரக் கிளை ஒன்று சிக்கியது போன்ற சம்பவமாகும்.

“தொழிலாளர்கள்-முதலாளிகள் தொழில் உறவு என்பது ஆரோக்கியமாக இல்லை. ஒப்பந்தத் தொழில் முறையைப் பயன்படுத்தி முதலாளிகள், தொழிலாளர்களுக்கு உள்ள சட்டரீதியான உரிமைகளை அமல்படுத்தாது அலட்சியப்படுத்துகிறார்கள், குறைக்கிறார் கள்” என்ற பொருளில் நீதிபதிகள் மார்க் கண்டேய கட்ஜு , சி.கே. பிரசாத்- இருவரும் குறிப்பிட்டுள்ளார்கள்.

தொழில் உறவு சம்பந்தமாக சட்டத்தில் உள்ள சட்ட ரீதியான உரிமைகளை அமல் படுத்துவதை முதலாளிகள் தவிர்க்கிறார்கள். ஒப்பந்தத் தொழிலாளர்கள் எங்கள் தொழி லாளர்கள் அல்ல, அவர்கள் ஒப்பந்த ஏஜெண் டுகளின் தொழிலாளர்கள் என்று தந்திரம் பேசி சூழ்ச்சி செய்கிறார்கள். இவர்களின் இந்தத் தப்பித்துக் கொள்ளும் முயற்சிகளுக்கு முடிவு கட்டுவது இன்றைய கால கட்டத் துக்கு தேவையானது.

நீதிபதிகள் மேலும் சொன்னது :-

தொழிற்சட்டங்கள், தொழிலாளர்களின் - பணியாளர்களின் உரிமைகளைப் பாதுகாக் கவே உருவாக்கப்பட்டுள்ளன. காரணம், முதலாளிகளும், தொழிலாளிகளும் கூட்டுப் பேர சக்தியில் சம பலமாக இருக்க இயல வில்லை என்பதனால்தான் தொழிலாளர் உரிமை சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள் ளன. ஆகவே இந்தச் சூழலில் தொழிலாளர் கள் பாதுகாக்கப்பட வேண்டும். அவர்கள் சுரண்டலுக்கு ஆளாக்கப்படக்கூடாது.

“ஆயினும் இந்தப் புதிய தந்திரத்தை, தப்பித்துக்கொள்ளும் சூழ்ச்சியை சில முத லாளிகள் பயன்படுத்திக்கொள்கிறார்கள். அவர்கள் எங்களுக்கு சம்பந்தப்பட்ட தொழி லாளர்கள் அல்ல, காண்ட்ராக்ட் ஏஜெண்டு களுக்கு சம்பந்தப்பட்டவர்கள் என்று சொல்லி, தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய அடிப்படை உரிமைகளைக் கூட அமல்படுத்தாது தப்பித்துக் கொள்கிறார்கள்.

பிகல்வாரா துக்த் உபடக் சகாகாரிக் லிமிடெட்(க்ஷடமைடறயசய னுரபனா ருவயீயனயம ளுயாயமயசமை டுவன) நிறுவனத்துக்கு எதிராக உச்சநீதிமன்றம் இந்தத் தீர்ப்பு வழங்கியது”.

அந்தத் தொழிலாளர்களை வேலையில் அமர்த்த உத்தரவு போட்டது தனியார் நிறுவ னம்தான், ஒரு தொழிலாளிக்கு ஒரு நாள் கூலி ரூ.70 என தன் கணக்கில் காட்டியதும் இந்தத் தனியார் நிறுவனம்தான். ஆனால் இந்த ஊதியம், ஒப்பந்தத் ஏஜெண்டிடம் தரப் பட்டு, ஏஜெண்ட் மூலம் தொழிலாளிக்கு ரூ.56 என ஒருநாள் ஊதியமாக குறைத்து வழங்கப் பட்டுள்ளது.

இந்த உண்மைகளை புறந்தள்ளி விட்டு, அவர்கள் ஒப்பந்தத் தொழிலாளர்கள் தான்- என்ற வார்த்தைக்குள் புகுந்து கொண்டு கொள்ளை லாபம் அடிக்கும் தொழிலாளர் விரோதப் போக்கை எதிர்த்து தொழில் நீதிமன் றமும், ராஜஸ்தான் நீதிமன்றமும் வழங்கிய தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.

அவர்கள் தினக்கூலிகள், தற்காலிக ஊழியர்கள், அவ்வப்போது வேலைக்காகத் தேவைப்படுகிறவர்கள் என்று சொல்லியும் முதலாளிகள் தப்பித்துக் கொள்கிறார்கள். ஆனால் அந்தத் தொழிலாளர்கள் வேலை செய்வதோ அந்த முதலாளிகளின் தொழிற் கூடத்தில்தான். ஆகவே, இந்த நீதிமன்ற அமர்வு வெளிப்படையாக, உறுதியாக ஒன் றை சொல்ல விரும்புவது, இனி உச்சநீதி மன்றம் இதுபோன்ற தொழிலாளர் விரோத செயல்பாடுகளுக்கு ஆதரவு தராது.

உலகமய வளர்ச்சி, தாராளமய வளர்ச்சி என்ற பெயரால் தொழிலாளர்களைச் சுரண் டும் மனித வதையை இனி ஏற்க இயலாது என்றும் உச்சநீதிமன்றம் வன்மையாக தன் கருத்தை பதிவு செய்கிறது.

உச்சநீதிமன்ற (அண்மையில் ஒய்வு பெற்று விட்ட) நீதிபதிகளான மார்கண்டேய கட்ஜு, சி.கே.பிரசாத் ஆகியோரை இந்த துணிகர மான தீர்ப்பிற்காக பாராட்டியே ஆக வேண்டும்.

இந்தப் புதிய பொருளாதாரக் கொள்கை யை தொழிலாளர்களுக்கு எதிராக அமல்படுத் தும், மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இந்தத் தீர்ப்பு ஒரு சாட்டை அடி என்று சொல்லியே ஆக வேண்டும்.

தே.இலட்சுமணன்.

கருத்துகள் இல்லை: