இஸ்ரேல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இஸ்ரேல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 7 ஜனவரி, 2009

ஐ.நா. பள்ளி மீது இஸ்ரேல் பீரங்கி தாக்குதல்: 42 பேர் பலி


இஸ்ரேல் குண்டு வீச் சால் பாதிக்கப்பட்ட மக் கள் தங்கியிருந்த ஐ.நா. பள்ளி மீது இஸ்ரேல் நடத் திய பீரங்கி தாக்குதலுக்கு 42 பேர் பலியானார்கள். இஸ் ரேல் போரை நிறுத்த வேண் டுமென்று சர்வதேச அள வில் நிர்ப்பந்தங்கள் அதி கரித்துள்ளன.

பீரங்கி குண்டுகளால் கிழியுண்ட மக்கள் ரத்த வெள்ளத்தில் மிதந்தனர். பள்ளியிலும், சாலையிலும் உடல்கள் சிதறிக் கிடந்தன. இஸ்ரேல் பீரங்கிகளின் இரு குண்டுகள் சாலையில் வெடித்தன. இதனால் அரு கில் உள்ள கட்டிடங்களில் வசிப்பவர்கள் காயம் அடைந்தனர். இக்குண்டு வீச்சில் 42 பேர் மாண்டனர். ஏராளமானவர்கள் காயம் அடைந்தனர்.

கடந்த நான்கு நாட்க ளாக காசாவில் வசிக்கும் மக்கள் இஸ்ரேல் தரைப் படையினரால் வேட்டை யாடப்படுகின்றனர். வீடு வாசல்களை இழந்து உற வுகளைப்பறி கொடுத்த மக்கள் தஞ்சம் புகுந்திருந்த பள்ளி மீதும் இஸ்ரேல் பீரங்கிகள் தாக்கியுள்ளன. வீடுகளை இழந்த மக்களும், பயந்து வெளியேறிய மக்க ளும் ஜபல்யா அகதிகள் முகாமில் ஐ.நா.வால் நடத் தப்படும் அல்- பகோரா பள்ளியில் தஞ்சம் அடைந் திருந்தனர். பள்ளியில் வகுப்பு கள் நிறுத்தப்பட்டன. இந் தப் பள்ளி குறித்த அனைத்து விவரங்களையும் இஸ்ரே லுக்கு ஐ.நா. கொடுத்துள் ளது. படைகள் இந்தத் தாக் குதல்களில் இருந்து விலக்கு அளிப்பதற்காக அளிக்கப் பட்ட விபரங்கள் இவை. ஆனாலும், இஸ்ரேல் அக் கட்டிடத்தை தாக்கியுள் ளது.

ஹமாஸ் அமைப்பு மக் களைக் கேடயமாகப் பயன் படுத்துகிறது என்று இஸ் ரேல் கூறியது. பள்ளியில் இருந்து பீரங்கிகள் படை களை நோக்கி திருப்பப்பட் டதால் இஸ்ரேல் படைகள் தாக்கியதாக இஸ்ரேல் சொல்கிறது. இறந்தவர் களில் இருவர் இஸ்லாமிய ஜிகாதி பீரங்கிப் படையினர் என்று அது கூறியது.

காசா பகுதியில் இஸ் ரேல் தாக்குதலால் இறந்த பொதுமக்களின் எண் ணிக்கை 77 ஆக உயர்ந் துள்ளது என்று மருத்துவர் கள் கூறினர். டிசம்பர் 27 முதல் நடைபெற்று வரும் இஸ்ரேல் தாக்குதலில் 667 பேர் கொல்லப்பட்டனர் என்றும், 2700க்கு மேற்பட் டோர் காயம் அடைந்தனர் என்றும் பாலஸ்தீன சுகா தார அமைச்சகம் சொல் கிறது.

ஞாயிறு, 4 ஜனவரி, 2009

இஸ்ரேலின் கொலைவெறி

பாலஸ்தீனத்தின் காசா பகுதியை இஸ்ரேலியப் படைகள் முற்றுகையிட்டு கடும் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளன. இதனால் பாலஸ்தீன மக்களின் உயிருக்கும் உடமைகளுக் கும் பேரழிவு ஏற்பட்டுள்ளது.

கடந்த ஒருவார காலமாக காசாவை தாக்கி வரும் இஸ் ரேலியப் படைகள் சனிக்கிழமை இரவு முழுவதும் காசா மீது கொடூரத் தாக்குதல் நடத்தின. சனிக்கிழமை இரவில் இருளைப் பயன்படுத்தி இஸ்ரேல் தரைப்படை காசாவில் நுழைந்தது. ஏராளமான டாங்குகள் காசாவில் புகுந்தன. காசா நகரம், பெய்ட் லாஹியா மற்றும் பெய்ட் ஹானுன் நகரங்களைச் சுற்றி கடும் தாக்குதல் நடந்தது. மக்களுக்கு எரிவாயு வழங்கும் கிட்டங்கி தாக்கப்பட்டதில் பெருந்தீ பற்றி எரிந்தது.

பன்னிரண்டுக்கும் மேற்பட்ட ஹமாஸ் இயக்கத்தினர் கொல்லப்பட்டார்கள் என்று இஸ்ரேல் தரைப்படை கூறியது. ஒன்பது இஸ்ரேலியர் மடிந்ததாக ஹமாஸ் கூறு கிறது. காசா நகர் முழுவதும் மின் விநியோகம் தடைபட்டுள் ளது. கடும் தாக்குதல் நிலவுவதால், படுகாயம் அடைந்தவர் களை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல மருத்துவ ஊர்திகள் அங்கு செல்ல முடியவில்லை.

ஏறத்தாழ பத்தாயிரம் இஸ்ரேல் படையினர் ஒட்டு மொத்த காசாவையும் சுற்றி வளைத்து போரில் ஈடுபட் டுள்ளனர். ஹமாஸ் பாதுகாப்பு அமைப்புகளை அழிப்பது டன், ஹமாஸ் தலைவர்களைக் கொல்லவும் இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது. ஹமாஸ் திருப்பி அடித்தால் போர் தீவிரப்படுத்தப்படும் என்று இஸ்ரேலின் பிரதமர் வேட் பாளரும் தற்போதைய அயல்துறை அமைச்சருமான டிசிபி லிவ்னி மிரட்டியுள்ளார்.

இஸ்ரேல் விமானப்படைகள், 7 சுரங்கப் பாதைகள் உள்ளிட்ட 40 இலக்குகள் மீது தாக்குதல் தொடுத்தன. காசா நகரிலும், எல்லைப் பகுதிகளிலும் உள்ள மக்கள் வெளியேற வேண்டுமென்று எச்சரிக்கும் பிரசுரங்களை இஸ்ரேல் வீசியது. ஒரு ஹமாஸ் படைத் தலைவர், 4 குழந்தைகள் உள் ளிட்ட 16 பேர், விமானத் தாக்குதலுக்கு பலியாகி உள்ளனர். இதைத்தொடர்ந்து பலி எண்ணிக்கை 500ஐத் தாண்டி யுள்ளது.

கண்டன தீர்மானத்தை தடுத்த அமெரிக்கா

ஐ.நா.சபை, ஜன. 4 -

காசாவில் இஸ்ரேலின் தாக்கு தலை உடனடியாக நிறுத்த வேண்டுமென்று ஐ.நா. பாது காப்புக் கவுன்சில் நிறைவேற்ற இருந்த தீர்மானத்தை அமெரிக்கா தடுத்து நிறுத்தியது.

காசா மீது இஸ்ரேல் தரை வழித்தாக்குதலைத் தொடங்கியுள்ளது. இஸ்ரேலின் கொடூரத் தாக்குதலைக் கண்டித்து உலகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் - பேர ணிகள் நடைபெற்று வரு கின்றன.

இந்நிலையில் காசா பகுதியில் உடனடி போர் நிறுத்தம் வேண்டுமென்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அறிக்கை வெளியிட வேண்டுமென்று லிபியா வேண்டுகோள் விடுத்தது. இஸ் ரேலின் நடவடிக்கையைக் கண்டிக்க மறுத்துவரும் அமெரிக்கா இங்கும் தலையிட்டு, இஸ்ரேல் குறித்த அறிக்கையை தடுத்துவிட்டது.

ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலின் ரகசியக் கூட்டத்தில் நடைபெற்ற விவாதங்களில் எந்த வொரு முடிவையும் எடுக்கவிடாமல் அமெரிக்கா தடுத்தது என்று பாதுகாப்புக் கவுன்சிலில் உறுப் பினராக உள்ள ஒரே அரபு நாடான லிபியாவின் ஐ.நா.வுக்கான தூதர் கியாடல்லா எட்டால்ஹி கூறினார்.

சமரச அடிப்படையில் அறிக்கையில் கூர்மையைக் குறைக்கும் முயற்சிகளில் கூட கருத்தொற் றுமை ஏற்பட அமெரிக்கா அனு மதிக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

செவ்வாய், 30 டிசம்பர், 2008

இஸ்ரேலின் தாக்குதலும் அமெரிக்காவின் கபடவேடமும்

காசா பகுதிக்குள் வான்வழி தாக்குதலை இஸ்ரேல் நடத்தியதில் சுமார் 250க்கும் மேற்பட்டோர் மாண்டுள்ளனர். சுமார் 800க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். இத்துடன் இஸ்ரேல் நிற்கவில்லை. இஸ்ரேல், காசா எல்லையில் டாங்குகளைக் குவித்து வருவதால் தரைவழிதாக்குதல் உருவாகும் அபாயம் உள்ளது.

பாலஸ்தீனியர்களை அழிப்பதென்று கங்கணம் கட்டிக்கொண்டு இஸ்ரேல் செயல்படுகிறதென்று கூறுவதே சரியானதாக இருக்கும். இப்பகுதியில் பொருளாதாரத் தடைகளை விதித்து ஆயிரக்கணக்கானவர்களை பட்டினியால் கொல்ல முயல்கிறது என்று ஐ.நா. கண் காணிப்புக்குழு குற்றம் சாட்டியுள்ளதை இங்கு நினைவு கூருவது நலம்.

காசா பகுதியில் வாழும் மக்களுக்கு அனுப்பப்படும் உணவு உள்ளிட்ட உதவி பொருட் களை அங்கு கொண்டு செல்ல இஸ்ரேல் அனு மதிக்க வேண்டும் என்று மத்திய கிழக்கு பகுதி ஐ.நா. தூதர் ராபர்ட் ஷெர்ரி கூறியுள்ளார். காசா மீது நடத்தப்பட்ட தாக்குதலால் துன்புறும் ஏழை மக்கள் பலர் எகிப்துக்குள் நுழைய முயன் றனர். வறுமையால் உழலும் மக்கள் இஸ் ரேலின் பயங்கரவாதத்துக்கு பலியாகின்றனர்.

காசாவில் உடனடியாக போர் நிறுத்தப்பட வேண்டுமென்று ஐ.நா.பாதுகாப்புக்குழு கூறி யுள்ளது. ஐ.நா. பொதுச் செயலாளரும் இதை வலியுறுத்தியுள்ளார். பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளும், ஐரோப்பிய யூனியனும், சீனா, ஜப்பான் ஆகிய ஆசிய நாடுகளும், லத்தீன் அமெரிக்க நாடுகளும் தங்களது கண்டனக் குரலை எழுப்பியுள்ளன.

ஹமாஸ்தான் போருக்கு காரணம் என்று பழியை ஹமாஸ் மீது போடுவதுடன் அமெரிக்கா நிறுத்திக் கொண்டுவிட்டது. அதன் எடுபிடி நாடுகள் என்ன தவறு செய்தாலும் அவர்களை விட்டுக் கொடுக்காத ‘நல்லகுணம்’ அமெரிக் காவிடம் உண்டு. அந்த நல்லெண்ணத்தில் இஸ்ரேலைக் கண்டிக்க அமெரிக்கா முன்வர வில்லை.

இந்திய அரசும் இஸ்ரேலின் போர் நட வடிக்கைகளை இதுவரை கண்டிக்கவில்லை. அமெரிக்காவின் இளைய கூட்டாளியாக மாறவிரும்பும் இந்தியா அதன் கண்ணசைவை எதிர்நோக்கி உள்ளது. ஆளுங்கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கண்டனம் தெரிவித்த பின் அரசு கண்டனம் தெரிவிக்க தயங்குவதின் காரணம் வெளிப்படையான விஷயம்.

உலகளாவிய பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்று முழங்கிவரும் அமெரிக்கா, அரசு பயங்கரவாதத்தை நடத்தும் இஸ்ரேலைத் தட்டிக்கேட்காமல் அதற்கு துணை நிற்பது அதன் கபடவேடத்தை அம்பலப்படுத்துகிறது.

பாலஸ்தீனத்திலும், காசாவிலும் இஸ்ரேல் எடுத்து வரும் ராணுவ மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் மனிதநேயத்துக்கும் அமைதிக்கும் எதிரான நடவடிக்கைகள். இஸ்ரேல் தாக்குதலை நிறுத்த வேண்டும். வறுமையில் உழலும் காசாவுக்கு அனுப்பப்படும் மனிதநேய உதவிகளுக்கு தடைவிதிக்கக்கூடாது. ஹமாஸ் உள்ளிட்ட பாலஸ்தீன அமைப்புகளுடன் இஸ்ரேல் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு சுமூகமான தீர்வினை எட்டவேண்டும். இது குறித்து அமெரிக்கா உள்ளிட்ட அனைத்து நாடு களும் இஸ்ரேலை நிர்ப்பந்திக்க வேண்டும்.