வீடியோ லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வீடியோ லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 13 அக்டோபர், 2011

வால் ஸ்டிரீட்டைக் கைப்பற்றுவோம்!



அமெரிக்காவின் நியூயார்க் நிதி மாவட்டத்தில் துவங்கிய பெரு நிறுவன ஊழலுக்கு எதிரான போராட்டம் உலகம் முழுவதும் 1,400 நகரங்களுக்குப் பரவியுள் ளது.

ஆக்குபய் டுகெதர் (http://www.occupytogether.org/) என்ற இணையதளத்தையும் போராட்டக்காரர்கள் துவக்கியுள்ளனர். அனைத்து இடங்களில் நடைபெறும் போராட்டங்களையும் ஒருங்கிணைக்க இந்தத் தளம் உதவும் என்று போராடி வரும் குழுக்கள் முடிவு செய்துள்ளன. அக்டோபர் மாதத்தில் இந்தப் போராட்டம் மற்றும் போராட்டத்திற்கு ஆதரவான இயக் கங்கள் 1,496 நகரங்களில் நடைபெறும் என்று திட்ட மிடப்பட்டுள்ளது. அமெ ரிக்க நகரங்களில் ஆர்ப் பாட்டக்காரர்களை வன் முறை மூலமே காவல்துறை யினர் எதிர்கொண்டுள் ளனர்.

டல்லாஸ், அட்லாண்டா, சியாட்டில் மற்றும் பாஸ்டன் ஆகிய நகரங்களில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற ஆர்ப்பாட்டங் களைக் கலைக்க காவல்துறை யினர் வன்முறையையே கை யாண்டிருக்கிறார்கள். பாஸ் டனில் 130 பேர் கைது செய் யப்பட்டனர். “எழுச்சி பெறு சிகாகோ கூட்டணி” சார்பில் சிகாகோ நகர வீதிகளில் பெருந்திரள் பேரணி நடைபெற்றது. ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்ற இந்தப் பேரணி யை சீர்குலைக்கும் நோக்கத் தில் 27 பேர் கைது செய்யப் பட்டு, சிறையில் அடைக் கப்பட்டுள்ளனர்.

வாஷிங்டனில் வெள்ளை மாளிகை அருகில் முகாம டித்திருக்கும் ஆர்ப்பாட்டக் காரர்கள் மேலும் நான்கு மாதங்கள் அங்கேயே இருந்து போராட்டத்தைத் தொட ரப் போவதாக அறிவித்தி ருக்கிறார்கள். வால் ஸ்டி ரீட்டை மையமாகக் கொண்டே கொள்கைகளை வகுத்து வருவதே பொருளாதார நெருக்கடி, வறுமை, பொரு ளாதார ஏற்றத்தாழ்வு மற் றும் உயர் மட்டத்தில் ஊழல் ஆகியவை ஏற்பட்டு வரு கின்றன என்று அமெரிக்க மக்கள் கருதுவதே போராட் டத்திற்கு ஆதரவு பெருகி யுள்ளதற்குக் காரணமாகும்.

ஆர்ப்பாட்டம் செய்து வரும் மக்கள், ஆப்கானிஸ் தான் மற்றும் இராக் ஆகிய நாடுகளில் மேற்கொள்ளப் பட்டுள்ள ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக் கையையும் முன்வைத்திருக் கிறார்கள். ‘நியூயார்க் டைம்ஸ்’ நாளிதழில் வெளியான ஆய் வொன்றில், அமெரிக்கக் குடும்பத்தினரின் சராசரி வருமானம் மேலும் சரிந் துள்ளது என்று தெரிவிக்கப் பட்டிருக்கிறது. தங்கள் போராட்டம் நியாயமா னது தான் என்பதை இந்த ஆய்வு காட்டுவதாக போராட் டக்குழுவினர் சுட்டிக் காட் டுகிறார்கள்.


ஐரோப்பாவிலும் தாக்கம்

அமெரிக்காவில் நடை பெற்று வரும் முதலாளித் துவ எதிர்ப்புப் போராட் டம் பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு ஐரோப்பிய நாடு களிலும் தாக்கத்தை ஏற் படுத்தியுள்ளது. விரல் விட்டு எண்ணக்கூடிய அள வில் இருக்கும் பெரும் பணக் காரர்களுக்காக பெரும் பான்மை மக்களின் நலன் களைக் காற்றில் பறக்க விடு வதை அனுமதிக்க முடி யாது என்று அந்த நாடுகளி லும் மக்கள் போர்க்குரல் எழுப்பியுள்ளனர்.

வெள்ளி, 17 ஜூன், 2011

திருடர்களே கொள்ளை அடிக்க வாங்க : 45 ஆயிரம் கோடி ரிலையன்ஸ் எரிவாயு ஊழல் வீடியோ

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், விண்வெளி அலைக்கற்றை ஊழல், காமன்வெல்த் ஊழல், ஆதர்ஷ் குடியிருப்பு ஊழல் என வரலாறு காணாத ஊழல்களின் அணிவகுப்பில் சிக்கித்திணறிக் கொண்டிருக்கும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற் போக்கு கூட்டணி அரசு, மத்திய அரசின் கருவூலத்திற்கு ரூ.45 ஆயிரம் கோடி அளவிற்கு மிகப்பெரும் இழப்பை ஏற்ப டுத்தி அம்பானியின் ரிலை யன்ஸ் கம்பெனி நடத்தியுள்ள மிகப்பெரும் எரிவாயு ஊழலி லும் சிக்கியுள்ளது. 
               "கள்ளனும் தோட்டக்காரனும் ஒன்று கூடினால் விடியு மட்டும் திருடலாம்" என்பதற்கு இனங்க காங்கிரஸ் கட்சியும் இந்தியாமுதலாளிகளும் கொள்லை அடிப்பதில் புதிய உலக சாதனை செய்து வருகிறார்கள்.

மன்மோகன் சிங் அரசின் பெட்ரோலியத்துறை அதிகாரி களும், முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனமும் சட்டத்தை ஏமாற்றி ரூ.45 ஆயிரம் கோடி அளவிற்கும் அதிகமாக மக்கள் பணத்தை சுருட்டியிருப்பதை மத்திய தலைமை கணக்கு மற் றும் தணிக்கையகம் ஆதாரப் பூர்வமாக அம்பலப்படுத்தி யுள்ளது. 

நாட்டு மக்களை அதிர்ச்சிக் குள்ளாக்கியிருக்கும் இந்த அனைத்து ஊழல்கள் தொடர் பாகவும் தொடர்ந்து மவுனம் காக்கும் பிரதமர் மன்மோகன் சிங், ரிலையன்ஸ் நிறுவனம் நடத்தியுள்ள எரிவாயு ஊழல் தொடர்பாக நாட்டு மக்களுக்கு அவசியம் பதில் சொல்லியே தீரவேண்டும் என்று மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலி யுறுத்தியுள்ளது. 

ஆந்திரா-ஒரிசா எல்லையை யொட்டி கிருஷ்ணா-கோதா வரி ஆறுகளின் கழிமுகப்பகு தியில் மிகப்பெரும் பெட்ரோ லியம்- இயற்கை எரிவாயு வளம் குவிந்திருக்கிறது. இந்த பகுதி யில் அரசு பொதுத்துறை பெட் ரோலிய நிறுவனங்கள், எண் ணெய் மற்றும் இயற்கை எரி வாயு சுத்திகரிப்பு பணியில் ஈடு பட்டிருந்தாலும், உள்நாட்டில் கிடைக்கும் இந்த மகத்தான வளத்தை கொள்ளையடித்து தனது லாபத்தை பெருக்க, பெரும் முதலாளியான முகேஷ் அம்பானி முடிவு செய்தார். இந்த பொதுச்சொத்தை பயன் படுத்துவதில் முகேஷ் அம்பா னிக்கும், அனில் அம்பானிக் கும் இடையே மோதல் கூட ஏற்பட்டது. முதலாளிகளுக்கு இடையே ஏற்பட்ட இந்த மோதலை பிரதமர் மன்மோ கன் சிங்கும், ப.சிதம்பரம் உள் ளிட்ட அமைச்சர் பெருமக்க ளும் ஓடோடிச்சென்று தீர்த்து வைக்க முற்பட்டார்கள் என் பது தனிக்கதை.

இந்நிலையில், முகேஷ் அம் பானியின் ரிலையன்ஸ் இண் டஸ்ட்ரீஸ் நிறுவனம், கிருஷ்ணா கோதாவரி இயற் கை எரிவாயு தளத்தில் (கேஜி கேஸ் பேசின்) மிகப்பெரிய 18 எரிவாயுக் கிணறுகளை, அர சிடம் ஒப்பந்தம் போட்டு பயன்படுத்தத் துவங்கியது. ஒரு குறிப்பிட்ட காலம் பயன்படுத் திவிட்டு-அதிலிருந்து பெட் ரோலியத்தையும் இயற்கை எரிவாயுவையும் எடுத்து கொள் ளை லாபம் பார்த்துவிட்டு- பின்னர் இந்தக்கிணறுகளில் பெட்ரோலியமோ அல்லது இயற்கை எரிவாயுவோ கண்டு பிடிக்கப்படவில்லை என்று கூறியது. அதைத்தொடர்ந்து இதில் பெருமளவில் மூலதனச் செலவு செய்துவிட்டதாகக் கூறி, பெட்ரோலியத்துறை யிடமிருந்து மிகப்பெருமளவி லான தொகையை கறந்து விட்டது. இந்தத்தொகையின் அளவு ரூ.45 ஆயிரம் கோடி என்று அதிர்ச்சிதரத்தக்க அறிக் கை ஒன்றை மத்திய தலைமை கணக்கு மற்றும் தணிக்கை யகம் தயாரித்துள்ளது.

193 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கையின்படி, கிருஷ்ணா கோதாவரி எண் ணெய் மற்றும் எரிவாயுக் கிண றுகளில் உற்பத்தியை பகிர்ந்து கொள்வது தொடர்பான ஒப் பந்தங்கள் ரிலையன்ஸ் இண் டஸ்ட்ரீஸ் நிறுவனத்திற்கும், பெட்ரோலிய அமைச்சகத்திற் கும் இடையே மேற்கொள்ளப் பட்டுள்ளன. இதன்படி ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பின் னர், சம்பந்தப்பட்ட எரிவாயு கிணறுகளை மீண்டும் அரசி டம் ஒப்படைக்காமல், ஒப்பந் தக்காலம் முடிந்தபின்னர் அதே கிணறுகளில் தனது தந்தை பெயரில் திருபாய் 1 மற்றும் திருபாய் 3 என சுத்திகரிப்பு ஆலைகளை முகேஷ் அம்பா னியின் ரிலையன்ஸ் நிறுவனம் அமைத்தது. எண்ணெய் வளம் கொழிக்கும் கேஜி - டி6 பிளாக் எனப்படும் தளத்தை சட்ட விரோதமாகக் கைப்பற்றியே ரிலையன்ஸ் நிறுவனம் தனது சொந்த ஆலைகளை அமைத் தது. இப்படிச் செய்ததன் மூலம் அரசு நிறுவனங்களுக்கு 117 சதவீதம் அளவிற்கு வரு மான இழப்பை ஏற்படுத்தியது. 

ரிலையன்ஸ் நிறுவனத்தின் இந்த சட்டவிரோத செயல் களை சட்டப்பூர்வமாக ‘மாற் றியதில்’ காங்கிரஸ் தலைமையி லான அரசின் பெட்ரோலியத் துறை அமைச்சகம் முனைப் புடன் செயல்பட்டது. பெட் ரோலியத்துறையில் இயற் கை எரிவாயு தளங்களுக்கு பொறுப் பான ‘ஹைட்ரோ கார்பன் பொது இயக்குநரக’த்தைச் சேர்ந்த மிக முக்கிய அதிகாரி கள் பெருமளவில் லஞ்சம் வாங்கிக்கொண்டு ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு ஆதரவாக வேலை செய்திருக்கிறார்கள். 

இந்த இயற்கை எரிவாயு தளங்களில் பணியைத்துவக்கிய போது தனது மூலதனச் செலவு என்று 2.39 பில்லியன் டாலர் களை கணக்குக்காட்டிய ரிலை யன்ஸ் நிறுவனம், பின்னர் மூலதனச்செலவினம் 8.8 பில்லியன் டாலர் என்று கணக் கை மாற்றி, அரசிடமிருந்து ரூ.45 ஆயிரம் கோடியை சுருட்டிவிட்டது. இதுதொடர் பான ஏராளமான விவரங்கள் மத்திய தலைமை கணக்கு மற் றும் தணிக்கை அதிகாரியின் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. 

நாட்டை உலுக்கியுள்ள இந்த ரிலையன்ஸ் எரிவாயு ஊழல் 2006க்கும் 2011க்கும் இடையில் நடந்துள்ளது. இந்த காலகட்டத்தில் பெட்ரோ லியத்துறை அமைச்சராக இருந்தவர் முரளி தியோரா ஆவார். இவர் மிகப்பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களின் முறைகேடுகளுக்கெல்லாம் ஏஜெண்டாக செயல்பட்ட ஒரு மூத்த காங்கிரஸ் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிர்ச்சிதரத்தக்க இந்த விவரங்கள் கடந்த 2 நாட்களாக மன்மோகன் சிங் அரசை நெருக்கடிக்கு உள்ளாக்கியுள் ளன. பிரதமர் மன்மோகன் சிங் தனது அமைச்சர்களுடன் அவ சரமாக கலந்தாலோசனைகள் நடத்தி வருகிறார். ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிக்கிய ஆ.ராசா, தயாநிதிமாறன் போன்ற மத்திய அமைச்சர்களின் வரிசையில் முரளி தியோராவும் சிக்குகி றார். இவர்கள் அனைவருக்கும் தலைமைப்பொறுப்பு வகிக்கும் பிரதமர் மன்மோகன் சிங்கும் கேள்விக்கு உள்ளாகியிருக்கிறார்

ஞாயிறு, 24 ஏப்ரல், 2011

திருட்டு பயன் சாய்பாப சாவுக்கு வாழ்த்துகள்: வீடியோ







ஒரு சக மனிதன் இறப்பில் எந்த கொருர மகிழ்ச்சியும் காணமுடியாது . ஆனால் எல்லோறையும் முட்டாளக்கி அதில் பிழைப்பு நடத்திய போலி சாமியார்களின் மரணம் நிச்சயம் நிம்மதியை தருகிறது. அவர் உடல் மக்கி போக கடவ......






ஞாயிறு, 10 ஏப்ரல், 2011

நாங்க புள்ள மட்டும்தான் தரல வேணும்ன்னா தரோம் மந்திய அமைச்சர் :வீடியோ



புதுச்சேரியில் பிரச்சாரத்தில் ஈடுப்பட்ட மத்திய அமைச்சர் நரி நாராயணசாமி மிகவும் திமீர்தனமாகவும் தெனாவெட்டாகவும் உங்களுக்கு நாங்க புள்ளதான் தரல மத்த எல்லாம் கொடுத்துட்டோம் என்று பேசி மிகந்த கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பல்வேறு இடங்களில் அவருக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது உடனே நான் நகைச்சுவைக்காக கூறினேன் என்று மழுப்பி உள்ளார்

திங்கள், 4 ஏப்ரல், 2011

காங்கிரசை நாம் ஏன் வீழ்த்த வேண்டும் வீடியோ


காமன் வெல்த் ஊழல் பற்றி சீமான் :-

ராகுல் காந்தி பற்றி சீமான் :-

டாஸ்மாக் பற்றி சீமான் :-

கருப்பு பணம் பற்றி சீமான் :-
Seeman about India's Black money

காங்கிரசை நாம் ஏன் வீழ்த்த வேண்டும் என்பது பற்றி சீமான் :-