தோல்வி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தோல்வி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 19 ஜூன், 2011

கல்வி கொள்ளையில் சிறந்த தமிழ்நாடு

தடையற்ற கட்டணக்கொள்ளை

தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள சூழலில், தனியார் பள்ளிகளில் வசூலிக்கப்படும் கல்விக் கட்டண கொள்ளை பெற்றோர்களை மிகப்பெரும் அளவிற்கு பாதித்துள்ளது. இதனால் மாநிலத்தில் ஆங்காங்கே கல்விக் கட்டண உயர்வை எதிர்த்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டணங்களை முறைப்படுத்திட, நீதிபதி கோவிந்தராஜன் குழு அமைக்கப்பட்டு, கட்டண விகிதம் தீர்மானிக்கப்பட்டது. இதுவே அதிகமாக இருந்தது. இக்கட்டணம் தங்களுக்கு போதாது என 6400 பள்ளி நிர்வாகங்கள் முறையீடு செய்த சூழலில், திமுக அரசு கட்டணத்தை மறு பரிசீலனை செய்திட நீதிபதி ரவிராஜபாண்டியன் குழுவை புதிதாக நியமித்தது.

இந்தக்குழு ஆறுமாத கால அவகாசத்தை எடுத்துக்கொண் டும் கூட, இந்தாண்டு பள்ளிகள் திறக்கும் வரையிலும் கூடுதலாக எவ்வளவு கொள்ளை அடிக்கலாம் என்ற கட்டண விபரங்களை அறிவிக்கவில்லை. இதற்கிடையில் குழுத் தலைவர் நீதிபதி ரவிராஜபாண்டியன் ராஜினாமா செய்துள்ளார். இப்போது அறிவிக்கப் பட்டுள்ள கல்விக் கட்டணம் முந்தைய கட்டணத்தை விட மிக அதிகமாக உயர்த்தப்பட் டுள்ளது. எடுத்துக்காட்டாக, சென்னை எஸ்பிஓஏ மெட்ரிக் பள்ளியின் 11வது வகுப்பிற்கான கட்டணம் ரூ.11 ஆயிரம் என்ப தை ரூ.25 ஆயிரம் என உயர்த்தி அறிவித்துள்ளது.

புதிய கட்டணம் குறித்த விபரங்களை பொதுமக்கள் அறியும் வகையில் உடன் அறி விக்காததால், பள்ளி நிர்வாகங் கள் ரகசியமாக வைத்துக் கொண்டு தங்கள் விருப்பத்திற்கு கட்டணத்தை வசூலித்துள் ளன. இதற்கும் மேலாக சீருடை கள், நோட்டுப்புத்தகங்கள் கட் டணத்தை சம்பந்தப்பட்ட பள் ளிகளே தீர்மானித்துக்கொள்ள லாம் என்று தடையற்ற கொள் ளைக்கு வாய்ப்பளித்துள்ளது. மக்களை மிக மோசமாக பாதிக்கும் நீதிபதி ரவிராஜ பாண்டியன் குழுவின் கல்விக் கட்டண அறிவிப்பில் அரசு தலையிடுவதில் சட்டக்குறுக் கீடுகள் இருக்குமானால், அவ சரச் சட்டத்தின் மூலம் திருத் தம் கொண்டு வந்து, அரசு தலை யிட்டு திரும்பப் பெற வேண் டும். கடந்த ஆண்டின் கல்விக் கட்டணத்தை இந்த ஆண்டும் அமல்படுத்திட வேண்டும். வங்கிக் காசோலைகள், வரை வோலைகள் மூலம் மட்டுமே கட்டணம் பெறுவதை கட் டாயப்படுத்த வேண்டும் என மாநில அரசை மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு கேட்டுக்கொள் கிறது.

கல்வி உரிமைச்சட்டம்

அனைவருக்கும் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2010ம் ஆண்டு ஏப்ரலில் இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இச்சட் டம் ஏழைகளுக்கு கல்வி தரு வதற்கு சில திட்டங்களை உரு வாக்கியுள்ளது. எடுத்துக்காட் டாக, அனைத்து மட்ட தனி யார் கல்வி நிறுவனங்களிலும் 25 சதவிகித இடங்களை இல வச கல்விக்கு ஒதுக்கிட வேண் டும் என இச்சட்டம் குறிப்பிடு கிறது. இப்படிப்பட்ட சட்டத் தை தமிழகத்தில் அமலாக்கிட அதற்கான விதிகள் தமிழகத்தில் இதுகாறும் உருவாக்கப்பட வில்லை. காலதாமதமின்றி விதிகளை உருவாக்கி, இச்சட் டப் பயன்கள் தமிழகத்திற்கு கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சமச்சீர்க் கல்வி

சமச்சீர் கல்வி திட்டத்தில் பொதுப் பாடத்திட்டத்தை முற்றிலுமாக நிறுத்தி வைப்பது என்ற அதிமுக அரசின் முடிவு சரி அல்ல. இப்பிரச்சனை நீதிமன்றங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு உச்சநீதிமன்றம் 1 மற்றும் 6ம் வகுப்புகளுக்கு ஏற்கனவே உள்ள பொதுப் பாடத்திட்டத்தை அமலாக்க வேண்டும். 10 வரையிலான இதர வகுப்புகளுக்கு நிபுணர் குழு அமைக்கப்பட்டு, பரிந்துரை களைப் பெற்று மூன்று வாரங் களுக்குள் சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்பளிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது. நிபுணர் குழுவிற்கு தமிழக அரசு கல்வியாளர்கள் என்று இரண்டு தனியார் பள்ளி உரிமையாளர்களை (கொள்ளை அடிப்பவர்களையே ) அறிவித்துள்ளது. இது ஏற்கக்கூடியதாக இல்லை. பொருத்தமான கல்வியாளர் களை இக்குழுவில் இணைக்க வேண்டும். திமுக அரசு சமச்சீர் கல்வித் திட்டத்தில் பல அம் சங்களை அமலாக்கவில்லை. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பொதுப்பாடத்திட்டம் என்ற முதல் படியை இந்தாண்டு அமு லாக்கிக் கொண்டே, சமச்சீர் கல்வி சம்பந்தப்பட்ட அனைத்து அம்சங்களையும் அமலாக்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு தீர்மானத்தின் ஒரு பகுதி.

வெள்ளி, 17 ஜூன், 2011

திருடர்களே கொள்ளை அடிக்க வாங்க : 45 ஆயிரம் கோடி ரிலையன்ஸ் எரிவாயு ஊழல் வீடியோ

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், விண்வெளி அலைக்கற்றை ஊழல், காமன்வெல்த் ஊழல், ஆதர்ஷ் குடியிருப்பு ஊழல் என வரலாறு காணாத ஊழல்களின் அணிவகுப்பில் சிக்கித்திணறிக் கொண்டிருக்கும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற் போக்கு கூட்டணி அரசு, மத்திய அரசின் கருவூலத்திற்கு ரூ.45 ஆயிரம் கோடி அளவிற்கு மிகப்பெரும் இழப்பை ஏற்ப டுத்தி அம்பானியின் ரிலை யன்ஸ் கம்பெனி நடத்தியுள்ள மிகப்பெரும் எரிவாயு ஊழலி லும் சிக்கியுள்ளது. 
               "கள்ளனும் தோட்டக்காரனும் ஒன்று கூடினால் விடியு மட்டும் திருடலாம்" என்பதற்கு இனங்க காங்கிரஸ் கட்சியும் இந்தியாமுதலாளிகளும் கொள்லை அடிப்பதில் புதிய உலக சாதனை செய்து வருகிறார்கள்.

மன்மோகன் சிங் அரசின் பெட்ரோலியத்துறை அதிகாரி களும், முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனமும் சட்டத்தை ஏமாற்றி ரூ.45 ஆயிரம் கோடி அளவிற்கும் அதிகமாக மக்கள் பணத்தை சுருட்டியிருப்பதை மத்திய தலைமை கணக்கு மற் றும் தணிக்கையகம் ஆதாரப் பூர்வமாக அம்பலப்படுத்தி யுள்ளது. 

நாட்டு மக்களை அதிர்ச்சிக் குள்ளாக்கியிருக்கும் இந்த அனைத்து ஊழல்கள் தொடர் பாகவும் தொடர்ந்து மவுனம் காக்கும் பிரதமர் மன்மோகன் சிங், ரிலையன்ஸ் நிறுவனம் நடத்தியுள்ள எரிவாயு ஊழல் தொடர்பாக நாட்டு மக்களுக்கு அவசியம் பதில் சொல்லியே தீரவேண்டும் என்று மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலி யுறுத்தியுள்ளது. 

ஆந்திரா-ஒரிசா எல்லையை யொட்டி கிருஷ்ணா-கோதா வரி ஆறுகளின் கழிமுகப்பகு தியில் மிகப்பெரும் பெட்ரோ லியம்- இயற்கை எரிவாயு வளம் குவிந்திருக்கிறது. இந்த பகுதி யில் அரசு பொதுத்துறை பெட் ரோலிய நிறுவனங்கள், எண் ணெய் மற்றும் இயற்கை எரி வாயு சுத்திகரிப்பு பணியில் ஈடு பட்டிருந்தாலும், உள்நாட்டில் கிடைக்கும் இந்த மகத்தான வளத்தை கொள்ளையடித்து தனது லாபத்தை பெருக்க, பெரும் முதலாளியான முகேஷ் அம்பானி முடிவு செய்தார். இந்த பொதுச்சொத்தை பயன் படுத்துவதில் முகேஷ் அம்பா னிக்கும், அனில் அம்பானிக் கும் இடையே மோதல் கூட ஏற்பட்டது. முதலாளிகளுக்கு இடையே ஏற்பட்ட இந்த மோதலை பிரதமர் மன்மோ கன் சிங்கும், ப.சிதம்பரம் உள் ளிட்ட அமைச்சர் பெருமக்க ளும் ஓடோடிச்சென்று தீர்த்து வைக்க முற்பட்டார்கள் என் பது தனிக்கதை.

இந்நிலையில், முகேஷ் அம் பானியின் ரிலையன்ஸ் இண் டஸ்ட்ரீஸ் நிறுவனம், கிருஷ்ணா கோதாவரி இயற் கை எரிவாயு தளத்தில் (கேஜி கேஸ் பேசின்) மிகப்பெரிய 18 எரிவாயுக் கிணறுகளை, அர சிடம் ஒப்பந்தம் போட்டு பயன்படுத்தத் துவங்கியது. ஒரு குறிப்பிட்ட காலம் பயன்படுத் திவிட்டு-அதிலிருந்து பெட் ரோலியத்தையும் இயற்கை எரிவாயுவையும் எடுத்து கொள் ளை லாபம் பார்த்துவிட்டு- பின்னர் இந்தக்கிணறுகளில் பெட்ரோலியமோ அல்லது இயற்கை எரிவாயுவோ கண்டு பிடிக்கப்படவில்லை என்று கூறியது. அதைத்தொடர்ந்து இதில் பெருமளவில் மூலதனச் செலவு செய்துவிட்டதாகக் கூறி, பெட்ரோலியத்துறை யிடமிருந்து மிகப்பெருமளவி லான தொகையை கறந்து விட்டது. இந்தத்தொகையின் அளவு ரூ.45 ஆயிரம் கோடி என்று அதிர்ச்சிதரத்தக்க அறிக் கை ஒன்றை மத்திய தலைமை கணக்கு மற்றும் தணிக்கை யகம் தயாரித்துள்ளது.

193 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கையின்படி, கிருஷ்ணா கோதாவரி எண் ணெய் மற்றும் எரிவாயுக் கிண றுகளில் உற்பத்தியை பகிர்ந்து கொள்வது தொடர்பான ஒப் பந்தங்கள் ரிலையன்ஸ் இண் டஸ்ட்ரீஸ் நிறுவனத்திற்கும், பெட்ரோலிய அமைச்சகத்திற் கும் இடையே மேற்கொள்ளப் பட்டுள்ளன. இதன்படி ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பின் னர், சம்பந்தப்பட்ட எரிவாயு கிணறுகளை மீண்டும் அரசி டம் ஒப்படைக்காமல், ஒப்பந் தக்காலம் முடிந்தபின்னர் அதே கிணறுகளில் தனது தந்தை பெயரில் திருபாய் 1 மற்றும் திருபாய் 3 என சுத்திகரிப்பு ஆலைகளை முகேஷ் அம்பா னியின் ரிலையன்ஸ் நிறுவனம் அமைத்தது. எண்ணெய் வளம் கொழிக்கும் கேஜி - டி6 பிளாக் எனப்படும் தளத்தை சட்ட விரோதமாகக் கைப்பற்றியே ரிலையன்ஸ் நிறுவனம் தனது சொந்த ஆலைகளை அமைத் தது. இப்படிச் செய்ததன் மூலம் அரசு நிறுவனங்களுக்கு 117 சதவீதம் அளவிற்கு வரு மான இழப்பை ஏற்படுத்தியது. 

ரிலையன்ஸ் நிறுவனத்தின் இந்த சட்டவிரோத செயல் களை சட்டப்பூர்வமாக ‘மாற் றியதில்’ காங்கிரஸ் தலைமையி லான அரசின் பெட்ரோலியத் துறை அமைச்சகம் முனைப் புடன் செயல்பட்டது. பெட் ரோலியத்துறையில் இயற் கை எரிவாயு தளங்களுக்கு பொறுப் பான ‘ஹைட்ரோ கார்பன் பொது இயக்குநரக’த்தைச் சேர்ந்த மிக முக்கிய அதிகாரி கள் பெருமளவில் லஞ்சம் வாங்கிக்கொண்டு ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு ஆதரவாக வேலை செய்திருக்கிறார்கள். 

இந்த இயற்கை எரிவாயு தளங்களில் பணியைத்துவக்கிய போது தனது மூலதனச் செலவு என்று 2.39 பில்லியன் டாலர் களை கணக்குக்காட்டிய ரிலை யன்ஸ் நிறுவனம், பின்னர் மூலதனச்செலவினம் 8.8 பில்லியன் டாலர் என்று கணக் கை மாற்றி, அரசிடமிருந்து ரூ.45 ஆயிரம் கோடியை சுருட்டிவிட்டது. இதுதொடர் பான ஏராளமான விவரங்கள் மத்திய தலைமை கணக்கு மற் றும் தணிக்கை அதிகாரியின் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. 

நாட்டை உலுக்கியுள்ள இந்த ரிலையன்ஸ் எரிவாயு ஊழல் 2006க்கும் 2011க்கும் இடையில் நடந்துள்ளது. இந்த காலகட்டத்தில் பெட்ரோ லியத்துறை அமைச்சராக இருந்தவர் முரளி தியோரா ஆவார். இவர் மிகப்பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களின் முறைகேடுகளுக்கெல்லாம் ஏஜெண்டாக செயல்பட்ட ஒரு மூத்த காங்கிரஸ் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிர்ச்சிதரத்தக்க இந்த விவரங்கள் கடந்த 2 நாட்களாக மன்மோகன் சிங் அரசை நெருக்கடிக்கு உள்ளாக்கியுள் ளன. பிரதமர் மன்மோகன் சிங் தனது அமைச்சர்களுடன் அவ சரமாக கலந்தாலோசனைகள் நடத்தி வருகிறார். ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிக்கிய ஆ.ராசா, தயாநிதிமாறன் போன்ற மத்திய அமைச்சர்களின் வரிசையில் முரளி தியோராவும் சிக்குகி றார். இவர்கள் அனைவருக்கும் தலைமைப்பொறுப்பு வகிக்கும் பிரதமர் மன்மோகன் சிங்கும் கேள்விக்கு உள்ளாகியிருக்கிறார்

வியாழன், 16 ஜூன், 2011

ஹசாரேவுக்கு கிடைத்த வெற்று விளம்பரமும் லோக்பாலுக்கு பால் ஊற்றிய காங்கிரசும்

பால் ஊற்றும் காங்கிரஸ் காரியதரிசிகள்
மக்களை திசைத்திருப்பும் இந்திய முதலாளிகளின் வேலை ஆட்கள்

லோக்பால் மசோதா, கருப்புப்பண மீட்பு உள்ளிட்ட முக்கியமான பிரச்சனைகளில் மன் மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசு தொடர்ந்து பொறுப்பற்ற வகையில் நடந்து வருகிறது.

லோக்பால் மசோதாவுக்கான வரைவை உருவாக்கி அதன் மீது அனைத்துக்கட்சிகளின் ஆலோசனைகளைப் பெற்று நாடாளுமன்றத்தில் மசோதாவை தாக்கல் செய்திருக்க வேண்டும். பொதுமக்கள் மற்றும் குடிமைச்சமூகத்தின் கருத்துக்களையும் பெற்றிருக்க வேண்டும். அதன்பிறகு மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து விவாதம் நடத்தி மசோதாவை சட்டமாக்கியிருக்க வேண்டும்.

ஆனால் மத்திய அரசுக்கு உண்மையில் லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வேண் டும் என்பதில் அக்கறை இருப்பதாகத் தெரிய வில்லை. எனவேதான் லோக்பால் சட்டம் வருவதற்கு முன்பே அதில் எத்தனை இடங்களில் ஓட்டைபோடலாம் என்பது குறித்து மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது.

அன்னா ஹசாரே உண்ணாவிரதம் இருந்தவுடன் குடிமைச்சமூகம் என்ற பெயரில் உலா வந்த ஹசாரே உள்ளிட்ட சிலரை இணைத்துக் கொண்டு வரைவுக்குழுவை அமைத்தது. அந்த வரைவுக்குழுவில் இடம்பெற்றுள்ளவர்கள் குறித்து எதிர்மறையான செய்திகளை தொடர்ந்து வெளியிட்டு, அவர்களை அசிங்கப்படுத்துவதில் காங்கிரஸ் கட்சி கவனம் செலுத்தியது.

மறுபுறத்தில், மசோதாவை முழுமையாகத் தயார்செய்து அனைத்துக்கட்சிகளுக்கும் அனுப்புவதற்கு பதிலாக, ஆம், இல்லை என்ற பாணியில் சில கேள்விகளை அரசியல் கட்சி களுக்கு அனுப்பியது. இந்த அணுகுமுறையை பெரும்பாலான கட்சிகள் நிராகரித்து, முழுமை யான மசோதாவை தருமாறு கோரியுள்ளன.

லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வேண்டும், கருப்புப்பணத்தை வெளிக்கொணர வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரிக் கட்சிகள்தான் முதலில் குரல் கொடுத்தன என்பது மட்டுமின்றி தொடர்ச்சியாகவும் அதற்காக போராடி வருகின்றன.



ஹசாரேவுக்கு கிடைத்த வெற்று விளம்பர வெளிச்சத்தைக் கண்டு மயங்கிய, பாஜகவால் தூண்டிவிடப்பட்ட ராம்தேவ் களத்தில் குதித்தார். அவரை வரவேற்க விமான நிலையத்திற்கே மத்தியஅமைச்சர்கள் ஓடோடிச் சென்றனர். ரகசிய பேரங்கள் வெட்கமின்றி நடத்தப்பட்டன.

பிறகு வெளியே சொல்லப்படாத அந்த பேரம் மீறப்பட்டுவிட்டதாக பரஸ்பரம் குற்றம்சாட்டிக் கொண்டனர். பிறகு ராம்தேவுடன் உண்ணாவிர தம் இருந்தவர்கள் மீது போலீசார் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது.

வெறும் வாயை மென்று கொண்டிருந்த பாஜகவுக்கு வெற்றிலைபாக்கு மடித்துக்கொடுத் தது காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு. இப்போது கருப்புப்பணத்தை வெளிக்கொணர்வது, லோக்பால் மசோதா குறித்த விவாதங்களை விட அன்னா ஹசாரே, ராம்தேவ் குறித்த விவாதங்கள்தான் ஊடகங்களில் உலா வந்து கொண்டிருக்கின்றன.

திட்டமிட்டே இத்தகைய திசை திருப்பல் வேலைகளில் மன்மோகன் சிங் அரசு ஈடுபடுகிறதோ என்ற ஐயம் எழுகிறது. ஊழல் ஒழிப்பு, கருப்புப்பண மீட்பு போன்றவை சில தனிநபர் அல்லது குழுக்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனையல்ல. இது தேசத்தின் பிரச்சனை. நாட்டு மக்களையும் நாடாளுமன்றத்தையும் ஏமாற்ற முயலாமல் உருப்படியான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்திட வேண்டும்.

திங்கள், 13 ஜூன், 2011

இந்தியா மாண்புமிகு திருடர்களின் நாடு

இந்தியாவில் குழந்தைத் தொழிலாளர் உழைப் பின் மூலம் மட்டும் ஆண்டுக்கு ரூ. 1 லட்சத்து 20 ஆயிரம் கோடி கறுப்புப் பணம் உருவாக்கப் படுகிறது என்று குழந்தைகள் உரிமைக்கான அமைப்பு நடத்தியுள்ள ஆய்வில் தெரிய வந்தி ருக்கிறது. இந்தியாவில் 6 கோடி குழந்தைத் தொழிலாளர்கள் இருக்கிறார்கள் என்பதே வெட்கக்கேடான விஷயம். இவர்களின் உழைப்பையும் உறிஞ்சி கறுப்புப்பணம் சேர்க் கும் கூட்டத்தை என்னவென்று கூறுவது ?

குழந்தைத் தொழிலாளர்களை வைத்து வேலை வாங்குவதன் மூலம் மட்டுமே இவ்வளவு தொகை கறுப்புப் பணம் உருவாகிறது என்றால், மற்ற வகையில் எத்தனை லட்சம் கோடி கறுப்புப் பணம் உருவாகும்? இன்றும் இந்தியாவில் பெரும்பகுதியான தொழிற் சாலைகளில் தொழிலாளர் உரிமைகள், நலச் சட்டங்கள் அமலாவதில்லை. எத்தனை வருடம் வேலை செய்தாலும் தினக்கூலியாகவே வைத்திருக்கின்றனர். இதையெல்லாம் உரிய முறையில் கண்காணிப்பது யார்? தொழிலாளர் துறை இருந்தாலும், எல்லா தொழில் நிறுவனங் களிடமும் இவர்கள் நெருங்க முடியாது என்பது தானே உண்மை. இதுதவிர பல இடங்களில் தொழிலாளர் துறை அதிகாரிகளே தொழில் உரிமையாளர்களின் பிரதிநிதிகளாகவே இருக் கின்றனர்.

இது மட்டுமல்ல, கறுப்புப்பணம் உருவா வதற்கான அனைத்து வழிகளையும் மத்திய அரசு அகலத் திறந்துவிட்டு காவல் காக்கிறது. மேலும் இவர்களுக்கே சலுகைகளை மென்மேலும் வாரி வழங்கி வருகிறது. இந்த நிலையில் கறுப்புப் பணம் ஒழிக்கப்படும்; ஊழல் அறவே அகற்றப் படும் என காங்கிரஸ் கட்சியும் நமது பிரதமரும் வீரவசனம் பேசி வருகின்றனர். கடந்த 40 ஆண்டுகளாக லோக்பால் மசோதா படும்பாடு தான் என்ன? இதனால்தான் ராம்தேவ் போன்றவர்களும் தங்களை கறுப்புப் பணத்திற்கு எதிரானவர் போல் காட்டிக்கொள்ள முயல்கின்றனர்.

ராம்தேவ் அரங்கேற்றிய உண்ணாவிரத நாடகத்தை முடிவுக்கு கொண்டுவருவதில் சிக்கல் ஏற்பட்டவுடன் ராம்தேவ் சம்பந்தமாக இன்று பல்வேறு தகவல்களை மத்திய அரசே வெளியிட்டு வருகிறது. ஏன் இதற்கு முன்பு இந்த தகவல்கள் மத்திய அரசுக்கு தெரியாமலா இருந்தது? கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் அவரது வர்த்தக சாம்ராஜ்யம் 34 கார்ப்பரேட் நிறுவனங்களுடன் விரிவடைந்திருக்கிறது. ஸ்காட்லாந்தில் ஒரு தீவே சொந்தமாகி யிருக்கிறது. இதுபோன்ற விஷயங்களை கண்காணித்து உரிய காலத்தில் உரிய முறையில் விசாரணை நடத்தியிருந்தாலே கறுப்புப் பணம் எப்படியெல்லாம் உருவாகிறது என்பதின் ஒரு பகுதியை கண்டறிந்திருக்கலாம்.

இந்தியாவில் அமல்படுத்தப்பட்டுவரும் உலகமயம், தாராளமயம், தனியார்மயம் என்ற மூன்று கால் பூதம் இந்த கறுப்புப் பண ஊழல் பேர்வழிகளுக்கு வலுச்சேர்த்து பாதுகாப்பாய் இருந்து வருகிறது. இந்த மூன்று கால் பூதத்தை தலைமேல் தூக்கி வைத்துக்கொண்டு ஊழலையும், கறுப்புப் பணத்தையும் ஒழித்து விடுவோம் என பேசுவதில் எந்த அர்த்தமும் இல்லை. ஊழல் மற்றும் கறுப்புப் பணத்திற்கு எதிராக அரசை நிர்ப்பந்திக்கக் கூடிய வகையில் மக்கள் போராட்டக் களம் விரிவடையும் போது தான் அரசு உரிய நடவடிக்கை எடுக்க முன் வரும். அதுவரை காங்கிரஸ் மற்றும் மத்திய அரசின் வாக்குறுதி தண்ணீரில் எழுதுகிற எழுத்தாக காணாமல் போகும் என்பதே உண்மை.

ஞாயிறு, 12 ஜூன், 2011

பத்திரிகையாளர்கள் கொலை ‘சாதனை’ பட்டியலில் இந்தியா

பத்திரிகையாளர்கள் கொலை செய்யப்படுவதில் தீர்வு காண முடியாத நாடு கள் பட்டியலில் இந்தியா 7வது இடம் பெற்றுள்ளது. பெருமைப்பட்டுக் கொள்ள முடியாத பட்டியலில், மோச மான சாதனை நிலையில் இந்தியா நின்று கொண் டிருக்கிறது.

கடந்த 2010ம் ஆண்டு ஜனவரி 1ம்தேதி முதல் 2010ம் ஆண்டு டிசம்பர் 31ம்தேதி வரை 13 நாடுகள் 5 அல்லது அதற்கு மேற்பட்ட பத்திரி கையாளர்கள் கொலை களில் தீர்வு காண முடியாத நிலையில் உள்ளன. பத்திரி கையாளர்கள் கொலையில் 70 சதவீதம் பேர் பணி சார்ந்த விஷயங்களிலேயே கொல்லப்பட்டுள்ளனர்.

ஒவ்வொரு நாட்டின் மக்கள் தொகையை கருத் தில் கொண்டு, தீர்வு காணப் படாத பத்திரிகையாளர்கள் கொலை விபரப் பட்டியல் தயாரிக்கப்படுகிறது.

தீர்வு காணப்படாத பத் திரிகையாளர்கள் கொலை கள் பட்டியலில் இராக் முத லிடத்தில் உள்ளது. அங்கு இந்த காலகட்டத்தில் 92 தீர்வு காணப்படாத பத்திரி கையாளர்கள் கொல்லப் பட்டனர். பிலிப்பைன்சில் 56 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மக்கள் தொகை அடிப் படையில் பத்திரிகையா ளர்கள் கொலையில் இராக், சோமாலியா, பிலிப் பைன்ஸ், இலங்கை, கொலம்பியா நாடுகள் உள்ளன.

பத்திரிகையாளர்கள் கொலை தொடர்பான பட் டியல் இந்த மாதம் துவக் கத்தில் வெளியானது. பாகிஸ் தான் 10வது இடத்திலும், வங்கதேசம் 11வது இடத்தி லும் உள்ளன. பத்திரிகை யாளர்கள் கொலை பட்டி யலில் இலங்கை, ஆப்கா னிஸ்தான், நேபாளம், பாகிஸ் தான், வங்கதேசம், இந்தியா ஆகிய நாடுகளும் உள்ளன.

ஜோதிர்மாய் என்ற எழுத்து போராளி படுகொலை


மும்பையில் மூத்த பத்திரிகையாளர் ஜோதிர்மாய் தேயை சுட்டுக் கொன்ற கயவர்கள், மும்பையை தலைமை யிடமாகக் கொண்டு இயங்கும் பெட் ரோலிய மாபியா கும்பலை சேர்ந்தவர் களாக இருக்கக்கூடும் என்று காவல் துறையினர் தெரிவிக்கின்றனர். மும்பையிலிருந்து வெளியாகும் ‘மிட் டே’ என்ற ஏட்டின் சிறப்புப் புலனாய்வு ஆசிரியராக 56 வயதான மூத்த பத்திரி கையாளர் ஜோதிர்மாய் தே பணியாற்றி வந்தார். இவர் மும்பையின் நிழலுலக தாதாக்களின் கொடிய நடவடிக்கைகள் குறித்தும், பெட்ரோலிய கடத்தல் மாபியா கும்பலுக்கும் அதிகாரிகள் மற்றும் அரசி யல்வாதிகளுக்கும் இடையிலான தொடர் புகளை அம்பலப்படுத்தி வந்தார். இந்நிலையில் சனிக்கிழமையன்று மும்பை புறநகர் பகுதியான போவாய் எனு மிடத்தில் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் பத்திரிகையாளர் தே கொடூர மான முறையில் சுட்டு படுகொலை செய் யப்பட்டார். இச்சம்பவம் மும்பை மட்டு மின்றி நாடு முழுவதும் பெரும் அதிர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது.

   தேயின் இறுதி நிகழ்ச்சிகள் ஞாயிறன்று கத்கோபாரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது.  பெரும் எண்ணிக்கையிலான ஊடகத்துறையினர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். கொல்லப்பட்ட இந்த துணிச்சல்மிக்க பத்திரிகையாளருக்கு சுபாஷ் சர்மா என்ற மனைவியும், தாயாரும் உள்ளனர்.


தாங்க முடியாத கட்டணக் கொள்ளை! உயிர் ஆயுதம் ஏந்திய உன்னிகிருஷ்ணன்

தொழில்நுட்ப படிப்பிற்கு மகளுக்கும், பள்ளியில் மகனுக்கும் கட்டணம் செலுத்த முடியாத தந்தை ஒருவர் ஏக்கத்தில் கடிதம் எழுதி வைத்து விட்டு விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டார். கட்டணக் கொள்ளை காரணமாக தற்கொலை செய்வது அதிகரித்து வருவதால் கோவை மக்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

கோவை எஸ்ஐஎச்எஸ் காலனி யைச் சேர்ந்தவர் உன்னிகிருஷ் ணன் (42). இவரது உடல் சிங்காநல்லூர் ரயில் நிலையத்தில் வியாழன் நள்ளிர வில் ரயில்வே போலீசாரால் கண்டெ டுக்கப்பட்டது. வெள்ளியன்று அவ ரது உடல் கோவை அரசு மருத்துவ மனைக்குக் கொண்டுசெல்லப்பட்டு பிரேத பரிசோதனைக்குப் பின்னர் அவரது குடும்பத்தினரிடம் ஒப்ப டைக்கப்பட்டது. உன்னிகிருஷ்ணன் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்ட தாகவும், தான் மனம் வெறுத்து தற் கொலை செய்யக் காரணம் தனது மகள், மகனுக்கு கல்விக் கட்டணம் கூட கட்ட முடியாத வறுமைதான் என்று கடிதம் எழுதி வைத்திருந்த தாகவும் போலீசார் தெரிவித்தனர். கடிதத்தைக் கைப்பற்றி வழக்குப் பதிவு செய்து கோவை ரயில் நிலையப் போலீசார் தீவிர விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

உன்னிகிருஷ்ணன் தனது குடும்பத் தினருடன் ஒண்டிப்புதூர் கம்மவார் வீதியில் வசித்து வந்தார். அவரது மனைவி நந்தினி, மகள் சுபிக்ஷா(19), மகன் திவேக் (16). மகள் சுபிக்ஷா கோவை கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரியில் பி.இ (கம்ப்யூட்டர் சயின்ஸ்) இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். மகன் திவேக் என்.ஜி.ஆர். மேல்நிலைப் பள் ளியில் 10 ம் வகுப்பு தேர்வெழுதி மொத்தம் 474 மதிப்பெண்கள் பெற்று சிறப்பாக தேறினார். மனைவி நந்தினி சிப்ஸ் தயாரிக்கும் கடையில் தினக் கூலி தொழிலாளியாக உள்ளார். உன்னிகிருஷ்ணன் கடந்த ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னர் பால சுப்பிர மணியா பஞ்சாலையில் நிரந்தரத் தொழிலாளியாக பணியாற்றி வி.ஆர். எஸ் பெற்றவர். சமீபகாலம்வரை பெருந்துறையில் தனியார் மில்லில் பணியாற்றி வந்துள்ளார். மகளுக்கு முதலாமாண்டு படிக்க ரூ.32 ஆயிரத்து 500 செலுத்தியுள்ளனர். இந்த ஆண்டு ரூ.25 ஆயிரத்து 500 செலுத்துமாறு கல்லூரி நிர்வாகம் கூறியுள்ளது. நல்ல மதிப்பெண்கள் பெற்ற போதிலும் பணம் இல்லாத காரணத்தால் மகன் திவேக்கை ஒட்டர்பாளையத்தில் உள்ள கதிரிமில் மேல்நிலைப் பள்ளி யில் சேர்த்துள்ளனர். கடந்த ஒரு வார காலமாகவே மகள், மகன் படிப்பிற்கு பணம் செலுத்திட, எங்காவது சென்று பணம் தயார் செய்து வருகிறேன் என்று சென்றுவிட்ட உன்னிகிருஷ் ணனை மீண்டும் குடும்பத்தினர் பிணமாகத்தான் பார்த்துள்ளனர்.

“யாருக்கு கஷ்டமென்றாலும், நல்ல, கெட்ட காரியங்களிலும் முன் னின்று என் அப்பா செயல்படுவார். பிளஸ் 2 வரையே படித்திருந்த அப்பா எனக்கும், தம்பிக்கும் கணக்குப் பாடம் சொல்லித் தருவார். நாங்கள் டியூசன் சென்றதேயில்லை. என் தம்பி பத்தாம் வகுப்பில் கணக்கில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் எடுத்திருக்கான், தெரியுமா அண்ணா” என்று அழுத வாறே சுபிக்ஷா கூறியது கூடியிருந் தோர் கண்களை குளமாக்கியது.
தீக்கதிர்

வெள்ளி, 10 ஜூன், 2011

கறுப்புப்பண திருடர்கள் தப்பிக்க உதவும் கமிட்டிகள்

ஒரு தவறை மூடி மறைக்க வேண்டுமா ஒன்று கல்லைபோடு இல்லனா கமிட்டியைப்போடு என்ற வகையில் தான் இந்திய கமிட்டி நடைமுறை உள்ளது
கமிட்டி மற்றும் ஆய்வுகள் கார ணமாக கறுப்புப்பணம் மீதான நட வடிக்கையை தாமதப்படுத்துவதுடன் ஊழல் அரசியல்வாதிகள் மற்றும் தொழிலதிபர்கள் அதிகாரிகள் தங்களது முறைகேடான நிதியை நிறுவனங்களில் முதலீடு செய்துவிடுகிறார்கள் என ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக பேராசிரியர் கூறினார்.

ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் பொருளாதார ஆய்வு மையத்தின் தலைவராக உள்ள அருண்குமார் கூறுகையில், கறுப் புப் பணம் குறித்து கூடுதல் ஆய்வு கள் அல்லது கமிட்டிகள் அல்லது புதிய விசாரணை பிரிவுகள் அயல் நாட்டு அரசு நிர்வாகங்களுடன் ஒப் பந்தங்கள் ஆகியவை மேற்கொள் வது கறுப்புப் பணம் பதுக்கும் நபர்கள் மீதான நடவடிக்கையை தாமதப் படுத்தும் என்றார்.

அருண்குமார் இந்தியாவில் கறுப்புப் பணம் என்ற புத்தகத்தை யும் எழுதியுள்ளார். கறுப்புப் பணம் மீதான ஆய்வு, கமிட்டி அமைப்பு போன்ற நடவடிக்கைகள் ஏற்படுத் தும் தாமதம் காரணமாக தொழிலதி பர்கள், அரசியல்வாதிகள், பெரும் அதிகாரிகள் தங்களது பணத்தை அயல்நாட்டு நிறுவனங்களில் முத லீடு செய்துவிடுகிறார்கள். ஜார்க் கண்டைச் சேர்ந்த அரசியல்வாதி ஒருவர் கணக்கில் வராத பணத்தை ஆப்பிரிக்க சுரங்க பணிகளில் முத லீடு செய்ததையும் அவர் சுட்டிக் காட்டினார்.

இதேக் கருத்துக்களை தேசிய பொதுநிதி மற்றும் கொள்கை இன்ஸ் டிடியூட்டின் பேராசிரியர் இலா பட்நாயக் பிரதிபலித்தார். குற்றவியல் விசாரணை இயக்குநரகம் போன்ற வரி ஏய்ப்பு தொடர்பான குற்றங்களை சோதனை செய்ய வேண்டிய அவ சியம் இல்லை என்றார்.

பல்வேறு தரப்புகளில் இருந்து வந்த நிர்ப்பந்தம் காரணமாக சமீபத் தில் டிசிஐ எனப்படும் குற்றவியல் விசாரணை இயக்குநரகத்தை மத் திய அரசு அமைத்தது. ஆண்டு தோறும் லட்சக்கணக்கான தொலைபேசிப் பேச்சுப் பதிவுகள் மூலம், புலனாய்வு அமைப்புகளுக்கு தகவல்கள் கிடைக்கின்றன. குற்ற வாளிகளை தண்டிப்பதற்கு இத் தகைய தகவல்களை அரசு பயன் படுத்தலாம் என பேராசிரியர் அருண்குமார் கூறினார்.

வான்சூ கமிட்டி மதிப்பீட்டின்படி 1970ம் ஆண்டுகளில் 7 சதவீதமாக இருந்த கறுப்புப் பணம் 21 சதவீதமாக உயர்ந்தது என சங்கர் ஆச்சார்யா கமிட்டி தெரிவித்தது. ஆனால் சமீ பத்திய உலக ஒருங்கிணைப்பு அறிக் கைப்படி கறுப்புப்பண பொருளா தாரம் 50 சதவீதமாக அதிகரித்து விட்டது என்றும் அருண்குமார் கூறினார்.

கடந்த 60 ஆண்டுகளில் டஜன் கணக்கான கமிட்டிகள் பல்வேறு கோணங்களில் கறுப்பு பணத்தை ஆய்வு செய்து ஆயிரக்கணக்கான ஆலோசனைகளை அளித்தன. நூற்றுக்கணக்கான பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்டன. ஆனால், கறுப்புப்பணப் பொருளாதாரம் குறிப் பிடத்தக்க அளவில் வளர்ந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

நாட்டிலும், நாட்டிற்கு வெளியே யும் உள்ள கறுப்புப்பணபுழக்கம் குறித்து அரசு ஆய்வு மேற்கொண் டுள்ளது. இந்த ஆய்வினை பயன் பாட்டு பொருளாதார ஆராய்ச்சிக் கான தேசியக் கவுன்சில் மற்றும் தேசிய நிதி நிர்வாகம் இன்ஸ்டிடி யூட் இணைந்து நடத்தின.

வியாழன், 9 ஜூன், 2011

நொடிந்த விவசாயிகளின் வேதனை தீர்க்குமா ஜெ அரசு?





நெல் விலை

விவசாயம் கட்டுப்படியாகாத தொழிலாக மாறிக்கொண்டிருக்கிறது. வேளாண் இடு பொருட்களின் விலையும் தொடர்ந்து அதி கரித்து வருகிறது. இதற்கேற்ப கட்டுப்படி யான விலை கிடைக்காத காரணத்தால் விவ சாயிகள் உணவு தானிய உற்பத்தியை கை விட்டு, வேறு பயிர்களுக்கு மாறுவது அதி கரித்து வருகிறது. எனவே நெல் உற்பத்தியில் ஈடுபடும் விவசாயிகளை ஊக்கப்படுத்தும் வகையில் நெல் விலையை உயர்த்த வேண்டி யது அவசியம் என்பதை சுட்டிக்காட்டு கிறோம்.

எனவே, இந்த ஆண்டு நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.1500 விலையாக அரசு அறிவிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.

கரும்பு விலை

விதை, உரம் உள்ளிட்ட இடுபொருட் களின் விலை உயர்ந்தும், வெட்டுக்கூலி கடுமையாக அதிகரித்துள்ளது. எனவே, இந்த ஆண்டு கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ.3000 தீர்மானித்து அறிவிக்க வேண்டும். கரும்பு விலை குறித்து தீர்மானிக்க உடனடியாக முத்தரப்புக் கூட்டத்தை நடத்திட அரசு முன் வர வேண்டும். அத்துடன் வெட்டுக்கூலியை ஆலைநிர்வாகமே ஏற்க அரசு முயற்சி எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். மேலும் கூட்டுறவு சர்க்கரை ஆலைகளை பாதுகாக்கும் விதத்தில் கூட்டுறவு ஆலை கள் மீதான ரூ.1,625 கோடி கடன் தொகையில் வட்டி, அபராத வட்டியை அரசு தள்ளுபடி செய் வதுடன், அசல் தொகையை அரசின் பங்கு தொகையாக மாற்றி கூட்டுறவு ஆலை களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மா விலை

தருமபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் கூடுதலாக மா விவசாயம் நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு 1 டன் மாம்பழம் ரூ.15000க்கு விற்றது. இந்த ஆண்டு டன் ரூ.3000 என்ற அளவுக்கு விலை வீழ்ச்சியடைந்துள்ளது. இந்த விலை வீழ்ச்சிக்கு வியாபாரிகளின் கூட்டுச் சதியே காரணம். எனவே, அரசு முத்தரப்புக் கூட்டத் தை நடத்தி மா விவசாயிகளுக்கு கட்டுப்படி யான விலை கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடன்

கூட்டுறவு வங்கிகள், நிதியின்றி கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளன. இதனால், கடன் கோரிய விவசாயிகளில் பெரும்பகுதி யானவர்களுக்கு கடன் கிடைக்காமல், தனி யாரிடம் கூடுதல் வட்டிக்கு கடன் பெற்று தொடர்ந்து பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். எனவே, கூட்டுறவு வங்கிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய அரசு முன்வர வேண்டும்.

மின்சாரம்

விவசாயத்துக்கு மின் இணைப்புக் கோரி சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக விவசாயி கள் காத்துக்கிடக்கின்றனர். மின்விநியோகம் சீராக இல்லாததால், மின் மோட்டார்கள் பழுதடைந்து பெரும் இழப்புக்கு விவசாயிகள் உள்ளாகின்றனர். பல மாவட்டங்களில் 4 மணி நேரம் மட்டுமே விவசாயத்திற்கு மும் முனை மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலைமைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாசனப் பிரச்சனைகள்

காவிரி நடுவர்மன்ற தீர்ப்புப்படி கர்நாடகத்திலிருந்து தமிழகத்திற்கு பெற வேண்டிய தண்ணீரை பெறுவதற்கு அரசு முயற்சிக்க வேண்டும். உச்சநீதிமன்றத்தில் உள்ள இதுதொடர்பான வழக்கை விரைவாக முடிக்க உரிய கவனம் செலுத்த வேண்டும். அண்டை மாநிலங்களுடனான நதிநீர்ப்பிரச் சனைகளில் தமிழகத்தின் பாசன உரிமை யை பாதுகாக்கும் விதத்தில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண தீவிர கவனம் செலுத்த வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம்.

வேளாண் விளைநிலங்களை பாதுகாக்க

தமிழகத்தில் வேளாண் விளைநிலங்கள் வேறு பணிகளுக்கு மாற்றப்படுவது வேகமாக நடைபெற்று வருகிறது. விவசாய நிலங்களை வேறு பணிகளுக்கு மாற்றுவதை தடை செய்யும் வகையில் புதிய சட்டம் ஒன்றை கொண்டு வர அரசு முன்வர வேண்டும்.

நிலம் தொடர்பாக

பெரும்பாலான கிராமப்புற மக்களின் வாழ்வாதாரம் நிலமேயாகும். நிலஉச்சவரம்பு சட்டத்தை கறாராக அமல்படுத்தி நிலமற்ற ஏழைகளுக்கு நிலம் வழங்க வேண்டும்.

நீண்டகாலமாக அரசு புறம்போக்கு நிலங் களில் பயிர் செய்து வாழ்ந்து வரும் விவசாயி களின் அனுபவ நிலங்களுக்கு பட்டா வழங்க வேண்டும்.அரசுக்கு சொந்தமான தரிசு நிலங்களை நிலமற்ற ஏழைகளுக்கு இலவச மாக வழங்கிட வேண்டும்.

ஆதிவாசி மக்களுக்கு, வனஉரிமைச் சட்டம்- 2006ஐ அமல்படுத்தி, அவர்களின் அனுபவ நிலங்களுக்கு பட்டா வழங்க வேண்டும். மலைப்பகுதிகளில் பட்டா வழங்க தடைவிதிக்கும் அரசாணை எண்.1168ஐ உடனடியாக அரசு ரத்து செய்ய வேண்டும்.

பல லட்சக்கணக்கான மக்கள் பல்வேறு வகையான புறம்போக்குகளில் நீண்டகால மாக வசித்து வருகின்றனர். போக்குவரத் துக்கு இடையூறு, பாசனத்திற்கு பாதிப்பு போன்ற இடங்களைத் தவிர வேறு எந்த வகை யான புறம்போக்காக இருந்தாலும் அவர் களுக்கு குடிமனைப்பட்டா வழங்க வேண்டும்.

திண்டுக்கல் மாவட்டத்தில் பெரியம்மா பட்டி, ஆண்டிப்பட்டி, பாலசமுத்திரம், ஆகிய கிராமங்களில் நிலஉச்சவரம்பு சட்டத்தின் கீழ் உபரி நிலம் 1971ம் ஆண்டு கையகப்படுத் தப்பட்டாலும் அந்த நிலங்கள் - நிலமற்ற ஏழைகளுக்கு வழங்கப்படாத நிலையில், தொடர்ந்த பல போராட்டங்களின் விளைவாக முதல்கட்டமாக 513.17 ஏக்கர் நிலம் 339 பயனாளிகளுக்கு மதுரை நிலச்சீர்த்திருத்த உதவி ஆணையாளரால் நில ஒப்படை உத்தரவு 11.05.2005 அன்று வழங்கப்பட்டது. ஆனால் இன்று வரை அந்நிலங்கள் உரிய பயனாளிகளுக்கு ஒப்படைக்கப்படவில்லை.

எனவே மேற்படி கிராமத்தில் ஒப்படை உத்தரவு வழங்கப்பட்டுள்ளவர்களுக்கு நிலத் தினை வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறோம்.

விழுப்புரம் மாவட்டம் - வானூர் வட்டம் பொம்மையார்பாளையம் கிராமத்தில் இருந்த 360 ஏக்கர் அனாதீன புறம்போக்கு நிலம் - மயிலம் பொம்மைபுர ஆதினம் ஸ்ரீமத் சிவஜான பால்ய சுவாமிகள் திருமடம் பெயருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. மேலும் இதே மடத்தின் பெயருக்கு மேற்படி கிராமத்தில் 28.74 ஏக்கர் அனாதீன புறம்போக்கு நிலம் பி.மெமோ பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த கிராமத் தில் பல தலைமுறைகளாக வசித்து வரும் சுமார் 1000 குடும்பங்களுக்கு வீட்டுமனை பட்டா கூட இதுகாறும் வழங்கப்படவில்லை.

மடத்துக்கு வழங்கப்பட்டுள்ள மோசடி பட்டாவையும், பி.மெமோவையும் ரத்து செய்து, அந்த நிலங்களை மீட்டு நிலமற்ற ஏழைகளுக் கும் தலித் மக்களுக்கும் வழங்குவதோடு, வீட் டுமனைப்பட்டா கோரியுள்ள அனைவருக் கும் வீட்டுமனைப்பட்டா வழங்கிட நட வடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறோம்.

நீலகிரி மாவட்டம், கூடலூர் வட்டம் நிலாம்பூர் ஜென்மம் நிலப்பிரச்சனை நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது. ஜென்மம் எஸ்டேட் பிரிவு 17ன் கீழ் ஜமீன்தார்களிடம் குத்தகைக்கு பெற்றிருந்த 7 பெரிய எஸ் டேட்டுகளின் குத்தகை காலம் முடிவுற்ற நிலையில், அந்த சுமார் 35,269 ஏக்கர் நிலங் களை அரசு தேயிலை தோட்டக்கழகம் எடுத் துக் கொள்ளலாம். அந்த நிலங்களில் நீண்ட காலமாக சாகுபடி செய்து வரும் ஏழை நடுத்தர குத்தகை விவசாயிகளுக்கு தலா 2 ஏக்கர் வீதம் பட்டா வழங்கிட வேண்டும்.

கடந்த ஆண்டு நவம்பர் -டிசம்பர் மாதங் களில் பெய்த கடும் மழை மற்றும் சூறாவளிக் காற்றினால் பயிர்பாதிப்பு, கால்நடை உயிரி ழப்பு உட்பட பல பாதிப்புகளுக்கு ஆயிரக் கணக்கானோர் உள்ளாயினர். பாதிக்கப்பட்ட வர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படவில் லை. எனவே, வெள்ளப்பாதிப்புகளுக்குள் ளான அனைவருக்கும் வெள்ளநிவாரணம் வழங்கிட அரசு முயற்சிக்க வேண்டும்.

எண்டோசல்பான் பூச்சிக்கொல்லி மருந்து மனித உயிருக்கும், பல்லுயிர்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்திலும் எண் டோசல்பான் பூச்சிமருந்தை பயன்படுத்த வும், உற்பத்தி மற்றும் விற்பனை செய்வதை யும் தடை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் ஒன்றி யம் சிகரலப்பள்ளி கிராமத்தில் ஸ்ரீ அக்குவா பைன் இண்டஸ்ட்ரீஸ் எனும் குடிநீர் சுத்தி கரிப்பு ஆலைக்கு தி.மு.க ஆட்சி காலத்தில் வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்யக் கோரி 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். இப் போராட்டத்தில் ஈடுபட்ட 4 பெண்கள் உட்பட 14 விவசாயிகள் மீது பொய்வழக்கு போடப் பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். நிலத் தடி நீரை சுரண்டும் மேற்படி நிறுவனத்துக்கு அளிக்கப்பட்ட அனுமதியை ரத்து செய்வது டன் விவசாயிகள் மீது போடப்பட்ட பொய்வழக் கை திரும்பப் பெற வேண்டுகிறோம்.

விவசாயிகள் மற்றும் கிராமப்புற மக் களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பாக தமிழக வேளாண் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டை யனை தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் கே.பாலகிருஷ் ணன் எம்எல்ஏ, பொதுச்செயலாளர் பெ.சண்முகம், மாநிலப் பொருளாளர் அ.நாகப்பன் ஆகியோர் சந்தித்து மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டவை இவை

கொள்ளைக்கும், காவலுக்கும் காங்கிரஸ்தான் பொறுப்பா?





உலகம் கண்டிருக்காத புது அனுப வத்துடன், ஊழல் இந்தியாவில் அதிகரித் திருக்கிறது. தோண்டத் தோண்ட வெளி வரும் ஒன்றாக அவதாரம் எடுத்திருக்கிறது. முன்னாள் அமைச்சர்கள் சிறையில் அடைக் கப்பட்ட காலம் மலையேறி, இன்றைய அமைச்சர்கள், அவர்கள் ஆட்சியிலேயே ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆளாகி, அதைத் தொடர்ந்து, பதவியை ராஜினாமா செய்வதும், பின் சிறைக்கு செல்வதும், அதனைத் தொடர்ந்து அவர் கட்சி நாடாளுமன்ற உறுப் பினர்கள் சிறைபுகுவதும், இந்திய வரலாறு கண்டிராத ஒன்று. காங்கிரஸ் தலைவர் களான அசோக் சவாண், ஆதர்ஷ் வீட்டு வசதி ஊழலிலும், சுரேஷ் கல்மாடி, காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் போது ஒதுக்கீடு செய்த பணத்தில் ஊழல் செய்த விவகாரத்திலும் சிக்கியுள்ளனர். ஒருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அசோக் சவாண் மீதான விசாரணை தீவிரப்படவில்லை. ஆதர்ஷ் ஊழல் குறித்த விவரங்கள் தீப்பி டித்து எரிந்து நாசம் ஆனதாக வெளிவந்த தகவல், ஊழல் குறித்த செய்தியை விடவும் பேரதிர்ச்சியைத் தருகிறது. திமுக தலைவர் களான ஆ. ராசா, மு. க. கனிமொழி ஆகியோர் கைதைத் தொடர்ந்து, தயாநிதி மாறன் மீதான புகார்கள் தீவிரம் பெற்று வருகின்றன.

இந்நிலையில் நடந்து முடிந்த தேர்தலில் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு காரணமாக, தமிழ்நாட்டில் திமுக சந்தித்த சரிவு, காங் கிரஸையும் கீழே இழுத்துச் சென்றுள்ளது. புதுவைப்பிரதேசத்திலும் இதன் தாக்கத்தை உணர முடிகிறது.

காங்கிரஸ் கட்சி, பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன் என்ற பழமொழியைப் போல், தானே கொள்ளைக்கும், காவலுக்கும் பொறுப்பாக இருந்து நாட்டை ஏமாற்றக் கற்றுக் கொண்டதோ என்ற சந்தேகம் தவிர்க்க முடியவில்லை. கடந்த காலத்தில் போபர்ஸ் ஊழல், பங்குச்சந்தை ஊழல் உள் ளிட்ட பலவற்றிலும், ஆட்சியதிகாரம் கைமா றிய நிலையில்தான், காங்கிரஸ் கட்சி தலை வர்கள் மீது சிபிஐ விசாரணை முன் வைக்கப் பட்டது. ஆனால் இன்று ஆட்சியில் இருக் கும் போதே அரங்கேறுவது, வியப்பை மட்டும் ஏற்படுத்தவில்லை, எங்கோ ஏமாற்றப்படு கிறோமோ என்ற கேள்வியும் இணைந்தே உருவாகிறது. இந்த சதியில் மாநில பிராந் தியக் கட்சிகள் பாதிக்கப் பட்டால் காங்கிரஸ் கட்சிக்கு கவலை இல்லை என்பதையும் காண முடிகிறது. உதாரணத்திற்கு, தமிழகத் தில் திமுக சிக்கிக் கொண்டு திணருகிறது. மற்றொரு புறம், உத்தரப்பிரதேசத்தில் மாயா வதி ஆட்சிக்கு எதிராக ராகுல் காந்தியே முன் நின்று போராட்டம் நடத்துகிறார். மாயாவதி கட்சியான பகுஜன் சமாஜ் கட்சி, காங்கிரஸ் கேட்காமலேயே மத்திய ஆட்சிக்கு தனது ஆதரவை நிபந்தனையின்றித் தந்தது என்பதும் கவனிக்கத்தக்கது. விரைவுச் சாலை வசதிக்கான திட்டங்களையும், சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கான சட்டங்களையும் உருவாக்கியதும், தீவிரம் காட்டுவதும் காங்கிரஸ் - மன்மோகன் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசு, பின்பற்றுகிற பொருளாதாரக் கொள்கை யுடன் இணைந்தது. அந்த பொருளாதாரக் கொள்கையை ஒரு மாநிலக் கட்சி அமலாக் கினால், அதற்கான எதிர்ப்பை காங்கிரஸ் கட்சி முன் நின்று நடத்துவது தன்னை நேர் மையாளர் என்று காட்டிக் கொள்வதற்கான ஏற்பாடு தவிர வேறென்ன இருக்க முடியும்.

இந்தப் பின்னணியில் இருந்தே அன்னா ஹசாரேயின் ஊழல் எதிர்ப்பு உண்ணா விரதத்தையும், பாபா ராம்தேவ் என்ற யோகா குரு நிலையில் இருக்கும் ஆர்.எஸ்.எஸ். காரரின் உண்ணாவிரதத்தையும் கவனிக்க வேண்டியிருக்கிறது. ஹசாரேயின் உண்ணா விரதம், 50 தினங்களுக்கு முன்பு நிறைவு பெற்றது. அப்போது லோக்பால் மசோதாவை விரைவில் தயாரிப்பதற்கான குழு அமைத் தல் என்ற நாடகத்தை காங்கிரஸ் நடத்தியது. அமைக்கப்பட்ட குழுவில் அமைச்சர்கள், பல புகார்களுக்கு உள்ளான வழக்கறிஞர்கள், அரசு சாரா நிறுவனத்தின் பிரதிநிதிகள் இடம் பெற்றனர். இது மக்களுக்கு நம்பிக்கை அளிக் காதது மட்டும் அல்ல, ஊழல் குறித்த எதிர்ப் பை மழுங்கச் செய்வதாகவும் இருந்தது. ஹசாரேயின் உண்ணாவிரதத்திற்கு, மின் னணு மற்றும் அச்சு ஊடகங்கள் கொடுத்த ஆதரவும், நடுத்தர மக்கள் தந்த ஆதரவும் நீர்த்துப் போவதாக அமைந்ததையும் காண முடிந்தது. காங்கிரஸை மட்டும் எதிர்த்து வந்த ஹசாரே, ஒருகுறிப்பிட்ட காலம் வரை பா.ஜ.க குறித்து எதுவும் பேசவில்லை. குஜராத் சென்ற இடத்தில், மோடியின் தலை மையிலான பாஜக அரசு, மீது சில விமர்சனங் களை முன்வைத்தார். அதுவும் சஞ்சீவ் ராஜேந்திரன் பட் என்ற காவல் துறை அதி காரி, மோடி குறித்தும், பா.ஜ.க தலைமை யிலான அனைத்து இந்துத்துவா அமைப்புக ளும், குஜராத் இஸ்லாமியர்களுக்கு எதிராக செயல்பட்டதை அம்பலப்படுத்திய நிலை யில், ஹசாரே, ஊழலிலும் மோடி அரசு மலிந்து கிடக்கிறது என்ற விமர்சனத்தை முன்வைத்தார். ஹசாரே பா.ஜ.க வையும் தாக்கத் துவங்கிய பின்னரே, தற்போது, பாபா ராம்தேவ் அவதாரம் எடுத்து இருக்கிறார். இதில் ஏற்கனவே உருவாக்கப் பட்ட, ஊழல் எதிர்ப்பு ஆதரவு தளத்தைக் கைப்பற்ற வேண்டும் என்ற அரசியல் நோக்கம் புதைந்து கிடக்கிறது.

கடந்த காலத்தில் பாபா ராம்தேவ் பகி ரங்கமாக விஸ்வ‘ஹிந்து பரிஷத் மேடை களில் வலம் வந்தவர் என்பது உண்மை. விமர்சிப்பவர்களை, பாபாவின் சீடர்கள் என்ற போர்வையில் தக்க வைக்கும் ஏற்பாட்டை பா.ஜ.க கடந்த காலங்களில் செய்து தந்திருக் கிறது. மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவர் களில் ஒருவரான பிருந்தா காரத், பாபா ராம்தேவ் தயாரித்து வழங்கும் மருந்துகளில், மனிதனின் எலும்புகளும், விலங்குகளின் எலும்புகளும் பயன்படும் தகவலை அறிந்து, உலகிற்கு கொணர்ந்தார் என்பதற்காக தாக்கப்பட்டார். மார்க்சிஸ்ட் கட்சி மத்தியக் குழு அலுவலகம் தாக்கப்பட்டது. இச்செயல் களுக்கு ஆதரவாக, ஆர்.எஸ்.எஸ். அமைப் பினர், மார்க்சிஸ்ட் கட்சிக்கு எதிரான போராட் டங்களில் ஈடுபட்டனர். இந்த பின்னணியில் இருந்தே, கொஞ்ச காலம் பரபரப்பை ஏற்படுத் தாது இருந்த ராம்தேவ் இப்போது, பாஜகவை பலப்படுத்தும் நோக்கத்துடன் ஊழலுக்கு எதிரான போராட்டங்களைத் துவக்கியுள்ளார். கடந்த காலத்தில் பா.ஜ.க ஆட்சியின் போது சவப்பெட்டி ஊழலின் போதோ, கர்நாடகத் தில் எடியூரப்பா தனது வாரிசுகளுக்கு இடம் ஒதுக்கி குதூகலப்பட்ட போதோ ராம்தேவ் எங்கே இருந்தார் என்பதும் கேள்விக்கு உள்ளாகிறது. தற்போது தங்கள் துறைகளின் வேலைகளை மத்திய அமைச்சர்கள், கபில் சிபல், சுபோத் காந்த் சகாய், பவன் குமார் பன் சால் ஆகியோர் தீவிர முயற்சி எடுத்தும், தடுக்கப்படாத ஒன்றாக உண்ணாவிரத ஏற்பாடுகள் சென்று கொண்டுள்ளன.

அரசு சாரா நிறுவனங்களுக்கு, நிதி வெளிநாடுகளில் இருந்தும், இந்தியப் பெரு முதலாளிகள் நடத்தும் நிறுவனங்களில் இருந்தும் வருகிறது. அதே போல் பாபா ராம் தேவ் போன்றோர் நடத்தும் டிரஸ்டுகளுக்கு, பெரு முதலாளிகள் தான் நிதியை வாரி வழங்குகின்றனர். இந்த தானத்திற்காக வரிவிலக்கும் பெற்றுக் கொள்கிறார்கள். எல்லாவிதங்களிலும் பெரு முதலாளிக ளுக்கு ஆதரவாக நடந்து கொள்ளும் பிரதி நிதிகள் எப்படி ஊழலுக்கு எதிரான போராட் டத்தைத் தொடர்ந்து நடத்திட முடியும்.

இப்போது ஊழல் அதிகரிப்பிற்கான அடிப்படைக் காரணம் பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் இந்தியப் பெரு முதலாளிகளுக்கு ஆதரவாக அமைச்சர்கள் செயல்பட்டது ஆகும். 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில், நீரா ராடியா, ரத்தன் டாடா உரையாடல்கள் மிகமுக்கிய ஆதாரம். பன்னாட்டு நிறுவனங் களை அறிமுகம் செய்யும் ஏஜெண்டுகளின் செயல்பாடுகளை, ஜான்பெர்க்கின்ஸ் என்ற அமெரிக்கர் “ஒரு பொருளாதார அடியாளின் வாக்கு மூலம்” மற்றும் “அமெரிக்கப் பேரர சின் ரகசியம்” ஆகிய இரு புத்தகங்களில் வெளிப்படுத்தியுள்ளார். கமிஷன் அல்லது அன்பளிப்பு இல்லாமல், எந்த ஒரு புரிந் துணர்வு ஒப்பந்தமும் அமலாவதில்லை என்பது உலகமறிந்த உண்மையாக உறங்கிக் கொண்டிருக்கிறது. எனவே ஊழல் எதிர்ப்பு என்பது பன்னாட்டு மற்றும் இந்நாட்டு பெரு முதலாளிக்கு எதிரான போராட்டத்துடன் இணைந்தது. அத்தகைய பெரு முதலாளி களுக்கு ஆதரவான கொள்கைகளைக் கொண்டுள்ள காங்கிரஸோ, பா.ஜ.கவோ அல் லது அவர்களுடன் இணைந்த மாநிலக் கட்சிகளோ ஊழலுக்கு எதிரான போராட்டத் தினை நடத்தி விட முடியாது. அப்படி நடத்தினால் அது நாடகமே.

எஸ்.கண்ணன்

புதன், 8 ஜூன், 2011

எங்கே போனார்கள்? இந்த யோக்கிவான்கள்


உலகமே அழிந்துவிட்டது போல கூப்பாடு போட்டுக் கொண்டிருக்கிறது பாரதிய ஜனதா கட்சி.

நீதிபதிகள் தானாகவே முன்வந்து வழக்கு தொடுக்கிறார்கள் என்ன கொடுமை இது. பெரியார் இதைத்தான் "உச்ச நீதிமன்றம் அல்ல உச்சி குடுமி மன்றம்" என்றாரோ!

வாஜ்பாய் ஆட்சியிலும் மன்மோகன்சிங் ஆட்சியிலுமாக தீவிரமாக அமலாக்கப்பட்டிருக்கும் நாசகர நவீன தாராளமயக் கொள்கைகளால் விலைவாசி உயர்ந்து, வேலைகள் இழந்து, ஒட்டுமொத்தத்தில் நிம்மதியை இழந்து கடுமையான மன அழுத்தத்திற்குள் தள்ளப்பட்டுள்ள இந்திய மக்களிடையே, மன அமைதிக்காக யோகாகலை யின் மீது ஏற்பட்டுள்ள ஆர்வத்தை தனது தொழில் சாம் ராஜ்யமாக மாற்றிக் கொண்டிருக்கும் ‘யோகா குரு’ வான சாமியார் ராம் தேவ் நடத்திய உண்ணாவிரதத்தை மத்திய அரசு பலப் பிரயோகம் செய்து கலைத்த நிகழ்வு ‘ஒரு பாசிச நடவடிக்கை’ என்று ஆர்எஸ்எஸ்சும், பாஜக வும் கூக்குரல் எழுப்பியுள்ளன.

தில்லி ராம்லீலா மைதானத்தில் அமைதியான முறையில் உண்ணாவிரதம் மேற் கொண்டவர்கள் மீது போலீசை ஏவியது, ஜனநாயக விரோதமானதே; கண்டிக் கத்தக்கதே!

ஆனால், இது ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு நிகரானது என்ற வர்ணனையோடு மதவெறி சங்பரி வாரத்திற்கு வால்பிடிக்கும் கார்ப்பரேட் ஊடகங்கள் ஊதித்தள்ளிக் கொண்டிருப்பதும், நாடே தலைகீழாக கவிழ்ந்துவிட்டது போல ஒப்பாரி வைப்பதும் சகிக்கவில்லை.


ராம்தேவை கைது கூட செய்யாமல், பாதுகாப்பாக ஹரித்துவாருக்கு அனுப்பி வைத்த செயல், அத்வானியின் மொழியில் ‘பாசிசம்’ என்றால், மேற்குவங்கத்தில் மார்க்சிஸ்ட்டுகளை அழித்தொழிக்கும் கொடூரத்தில் மம்தா பானர்ஜி இறங்கியிருக்கிறாரே, அதற்கு என்ன பெயர்?

வங்கம் முழுவதும், சட்டமன்றத் தேர்தல் முடிவுக்குப் பிறகு கடந்த இருபதே நாட்களில் சுமார் 20 இடதுசாரித் தோழர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்களே, கார்ப்பரேட் ஊடக நிருபர்கள் எங்கே போனார்கள்?

மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகங்கள், சிஐடியு அலுவல கங்கள், இடது முன்னணி அலுவலகங்கள் என 25க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டிருக் கின்றனவே, என்டிடிவி, சிஎன்என்-ஐபிஎன், டைம்ஸ் நவ் போன்ற செய்திக் சேனல்களின் எடிட்டர்கள் என்ன செய்கிறார்கள்?

சிபிஎம் அலுவலகங்களை சூறையாடி, ஆயுதங்களை தாங்களே கொண்டு வந்து வைத்துவிட்டு, ஆயுதம் இருந்ததால் கைப்பற்றினோம் என்று திரிணாமுல் குண்டர்கள் கொலைவெறித்தாண்டவம் ஆடுகிறார்களே, ‘ஜாலியன் வாலாபாக் படுகொலை’ பேசும் அறிவு ஜீவிகள் எங்கே போனார்கள்?

எஸ்.பி.ஆர்.
அரசியல் தெளிவு பெற படியுங்கள் தீக்கதிர்

திங்கள், 6 ஜூன், 2011

விக்கிலீக்ஸ்: சீனா தியானன்மென் சதுக்கத்தில் படுகொலை நடக்கவில்லை

ஜூன் 4, 1989 அன்று சீனாவின் தியானன்மென் சதுக்கத்தில் ஆயிரக்கணக்கான மாணவர்களை அந்நாட்டு ராணுவம் சுட்டுக்கொன்று விட்டதாக பரப்பப்பட்டது அண்டப்புளுகுதான் என்று விக்கிலீக்ஸ் கேபிள்கள் அம்பலப்படுத்தியுள்ளன.

சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கில் உள்ள தியானன்மென் சதுக்கத்தில் மாணவர்கள் கூடி போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தை அந்நிய மாணவர்கள் தூண்டிவிட்டார்கள் என்றும், அந்த அந்நிய மாணவர்களுக்கு சீன எதிர்ப்புச் சக்திகள் ஆதரவு இருந்தது என்றும் செய்திகள் வெளியாகியிருந்தன. இந்தச் செய்திகளை மறைத்துவிட்டு, அந்தச் சதுக்கத்தில் ரத்தக்களறி ஏற்பட்டதாகவும், மூவாயிரத்துக்கும் குறையாத மாணவர்கள் சீன ராணுவத்தால் கொன்று குவிக்கப்பட்டதாகவும் மேற்கத்திய ஊடகங்கள் பிரச்சாரம் செய்தன. அந்தச் செய்திகளை அப்படியே வெளியிட்டு பிரச்சாரத்தை இந்திய மண்ணிலும் தொடர இந்திய ஊடகங்கள் உதவின.

ஏகாதிபத்தியத்தின் பல்வேறு சட்டவிரோத வேலைகளை அம்பலப்படுத்திவரும் விக்கிலீக்ஸ், தியானன்மென் சதுக்கத்தில் படுகொலை எதுவும் நடைபெறவில்லை என்பதை சீனாவில் உள்ள அமெரிக்கத் தூதரகக் கேபிள்கள் மூலமாக நிரூபித்துள்ளது. பிரச்சனை ஏற்பட்ட சமயத்தில் அமெரிக்கத் தூதரகத்திலிருந்து மூன்று கேபிள்கள் அனுப்பப்பட்டுள்ளன.

 அதன் விபரங்கள் வருமாறு:

கிளர்ச்சி செய்து வந்த மாணவர்கள் தலைநகர் பெய்ஜிங்கின் மையப்பகுதியை வாரக்கணக்கில் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள். சாலைகளுக்கு நடுவில் பேருந்துகளை நிறுத்தி போக்குவரத்து நடைபெற்றால் தடை செய்திருந்தனர். அந்தத்தடைகளை யாரும் அகற்றி விடக்கூடாது என்பதற்காக ஆட்கள் மாறி, மாறி காவலுக்கு இருந்தனர். தியானன்மென் சதுக்கத்தில் ஆர்ப்பாட்டம் நடத்திய மூவாயிரம் மாணவர்கள் காவல்துறையோ அல்லது ராணுவமோ உள்ளே நுழைய முடியாது என்ற நம்பிக்கையில் இருந்தனர். அதனால் வாரக்கணக்கில் தங்கள் போராட்டத்தை மாணவர்கள் தொடர்ந்தனர். ஆனால், அவர்களின் எதிர்பார்ப்புகளை மீறி காவல்துறையும், ராணுவமும் தியானன்மென் சதுக்கத்திற்குள் நுழைந்துவிட்டன.

மாணவர்களைக் கலைப்பதற்காக கண்ணீர்ப்புகைக் குண்டுகளை மட்டுமே ராணுவம் கொண்டு வந்தது. ஆனால் அவர்கள் நடவடிக்கை எடுப்பதற்கு முன்பாகவே ஆர்ப்பாட்டம் செய்து வந்த மாணவர்கள் கலைந்து சென்றனர். இதை ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கியவரும், சீனாவை வெறுப்பேற்ற நோபல் பரிசு வழங்கப்பட்டவருமான லியு சியா வோபோ உறுதிப்படுத்தினார். அவ்வாறு அமைதியாகக் கலைந்து செல்லுமாறு அவரும் மாணவர்களிடம் கோரிக்கை விடுத்திருந்தார். அதை, சிலி நாட்டுத் தூதுவரும் உறுதிப்படுத்துகிறார். மாணவர்கள் அனைவரும் அமைதியாக சதுக்கத்தின் தென் கிழக்கு மூலை வழியாக வெளியேறினர் என்கிறார் அவர்.

இந்த சம்பவம் நடந்தபோது பிபிசி செய்தி நிறுவனத்தின் செய்தியாளராகப் பணியாற்றிய ஜேம்ஸ் மில்ஸ், 2009 ஆம் ஆண்டில் தனது செய்தி தவறானது என்பதை ஒப்புக் கொண்டிருக்கிறார். “தியானன்மென் சதுக்கத்தில் படுகொலை நடக்கவில்லை. உள்ளே நுழைந்த ராணுவத்துடன் பேச்சுவார்த்தை நடந்தது. அதற்குப்பிறகு ஆர்ப்பாட்டக்காரர்கள் அமைதியாகக் கலைந்து சென்றனர்.” தியானன்மென் சதுக்கத்தில் இருந்து மூன்று மைல் தொலைவில் நடந்த மற்றொரு சம்பவத்தில்தான் ராணுவத்தினர் துப்பாக்கியால் சுட நேர்ந்தது என்கிறார் அவர். சதுக்கத்திற்கான பாதையை அடைத்திருந்த கும்பலுடன் ராணுவமும், காவல்துறையும் மோத நேர்ந்தது. அப்போது, கண்ணீர்ப்புகைக்குண்டுகள் மற்றும் ரப்பர் குண்டுகள் ஆகியவற்றை பயன்படுத்தியும் நிலைமை கட்டுக்குள் வராததால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. அப்போதும்கூட, அந்தக்கும்பல் ஏற்படுத்தியிருந்த தடைகள்தான் அவர்களுக்கே பாதகமாக இருந்தது.

தியானன்மென் சம்பவத்தை நேரில் பார்த்த சிலி நாட்டுத்தூதுவர், சதுக்கத்தில் குழுமியிருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது ராணுவம் சுடவில்லை என்கிறார். மற்றொரு நாட்டின் தூதரும் இதை உறுதிப்படுத்தினார். அவர் சதுக்கத்தின் செஞ்சிலுவைச் சங்க கூடாரத்தில் நின்று பார்த்திருக்கிறார். இது குறித்து கருத்து தெரிவித்த அவர், திடீரென்று ராணுவம் தோன்றியபோது நான் பயந்தேன். ஆனால் அங்கு துப்பாக்கிச்சூடு எதுவும் நடக்கவில்லை என்றார். அப்போதைய கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கைகளும், உட்கட்சி சுற்றுக்கு விடப்பட்ட குறிப்புகளும் இத்தகைய செய்திகளைத்தான் கூறுகின்றன.


இவ்வாறு விக்கிலீக்ஸ் கேபிள்கள் சீன எதிர்ப்புப் பிரச்சாரத்தை அம்பலப்படுத்தியுள்ளன. உலகம் முழுவதும் கம்யூனிஸ்டுகள், இடதுசாரிகள் மற்றும் ஜனநாயக சக்திகளுக்கு எதிராக மேற்கத்திய நாடுகள் எவ்வாறெல்லாம் பொய்ப்பிரச்சாரங்களைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது என்பதை விக்கிலீக்ஸ் பெரிய அளவில் தொடர்ந்து அம்பலப்படுத்தியுள்ளது.

(செய்தி ஆதாரம் : டெலிகிராப்(ஜூன் 4)

ராம்தேவ்வை கொல்ல சதியா? ஆர்எஸ்எஸ் அரசியல் நாடகம்

ஊழலுக்கு எதிரான மக்களின் உணர்வை மழுங்கடிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக சமீபத்தில் சமூக சேவகர் அன்னா ஹசா ரேயை உண்ணாவிரதம் இருக்கச் செய்ததன் மூலம், ஊடகங்களைப் பயன்படுத்தி அவரை மகாத்மா காந்தி அளவிற்கு உயர்த்தி மக்களிடையே முன்னிறுத்தியதன் மூலம், ஊழல் எதிர்ப்பு என்பது ஒரு தனி நபர் போராட்டமாக ஒடுக்கப்பட்டது.

ஹசாரேயின் போராட்டத்தை அறுவடை செய்து கொள்ள காங்கிரசும், பாஜகவும் தீவிரமாக முயற்சித் துக்கொண்டிருக்கின்றன. இந் நிலையில், ஊழலுக்கு எதிரான மக்களின் உணர்வை தனது மதவெறி அரசியலுக்கு பயன்படுத்தி, இந்திய அரசியலில் வீழ்ந்து கிடக்கும் மத வாத பாஜகவை மீண்டும் ஆட்சிக் கட்டிலுக்கு கொண்டுவரும் நோக் கத்தோடு ஆர்எஸ்எஸ் அமைப்பு, தனது தீவிர ஆதரவாளர்களில் ஒருவரும், யோகா கலையின் மூலம் மக்களிடையே ஓரளவு அறிமுகம் செய்யப்பட்டிருப்பவருமான சாமி யார் ராம்தேவை உண்ணாவிரதத் தில் இறக்கிவிட்டு

அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேடும் முயற்சியில் ஈடுப்பட நினைத்தபோது அதை முறியடிக்க நினைத்து இரவு 1 மணிக்கு இந்த கையாலகாத காங்கிரஸ் போலிஸ் போக!
இதுதான் சரியான நேரம் என்று ஆர். எஸ்.எஸ் கும்பல் பத்தலுக்கு தீவைக்க.
கலவரத்திற்கு தொடக்கத்தை ஏற்படுத்த இதைப்பயன்படுத்தி ராம்தேவ்வை கொலை செய்துவிட்டு நாடு முழுவதும் கலரத்தை உண்டாக்கும் நோக்கம் தோல்வி அடைந்துவிட.
ராம்தேவ் பொம்பள வேசத்தில் தப்பித்து ஓட
சுமார் 18 கோடியில் போட்ட திட்டம் தோல்வியில் முடிந்துவிட்டது.

இந்நிலையில்

என்னை கொன்று ஒழித்துவிட வேண்டும் என்று மத்திய அரசு நினைக்கிறது. இதற்காக சதி திட்டம் தீட்டப்பட்டது. டெல்லி போலீசார் என்னை கொல்வதுடன் என் ஆதரவாளர்களையும் அதிக அளவில் கொன்று குவிக்க திட்டமிட்டனர். ஆனால் அது நடைபெறவில்லை.

மின்சார ஜெனரேட்டர்கள் மீது தண்ணீரை ஊற்றினார்கள். பெரிய அளவில் மக்களை கொன்று குவிக்கும் நோக்கத்துடன் நடந்து கொண்டனர். எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டதால் தான் நான் சுடிதார் அணிந்து தப்பிச் சென்றேன்.என்று ராம்தேவ் பத்திரிக்கையாளரிடம் புலம்பி உள்ளார்.


ஞாயிறு, 5 ஜூன், 2011

ஊழலை எதிர்க்க லோக்பால் மசோதாவால் முடியுமா?




லோக்பால் சட்டமுன்வடிவை நிறைவேற்றுவதற்கான முயற்சிகள் கடந்த பல ஆண்டுகளில் எவ்வித முன்னேற்றத்தையும் ஏற்படுத்திடவில்லை என்பதையே அது தொடர்பாக நாட்டில் நடைபெற்றுவரும் வாதங்களும் எதிர்வா தங்களும் எடுத்துரைப்பதாகத் தோன்று கின்றன. ஊழலுக்கு எதிராக லோக்பால் போன்றதொரு சட்டம் கொண்டுவர வேண்டுமென்கிற கருத்துரு மறைந்த மொரார்ஜி தேசாய் தலைமை தாங்கிய நிர் வாக சீர்திருத்தங்கள் குழுவால் 1969இல் முதலில் கொண்டுவரப்பட்டது. இவ்வாறு ஒரு அமைப்பை நிறுவியபின் இதனைத் தொடர்ந்து இதேபோன்ற நிறுவனங்களை மாநில அளவிலும் லோக் அயுக்தா என்ற பெயரில் அமைத்திட வேண்டும் என்றும் கூறப்பட்டது. எதிர்பார்த்ததைப்போலவே, இவற்றைக் கொண்டுவருவதற்குப் பல் வேறு முனைகளிலிருந்தும் எதிர்ப்புக் கிளம்பியதால் இவ்வாறு அமைப்புகள் ஏற் படுத்தப்படுவது நீண்ட காலத்திற்குக் கிடப்பில் போடப்பட்டுவிட்டன.

ஐக்கிய முன்னணியின் முன் முயற்சி

போபர்ஸ் ஊழல் நாட்டைக் குலுக் கியதை அடுத்து நாட்டில் ஓர் அரசியல் கொந்தளிப்பு ஏற்பட்ட சமயத்தில் இடது சாரிக் கட்சிகள் 1990களில் இச்சட்டமுன் வடிவினைக் கொண்டுவர நிர்ப்பந்தம் கொடுத்தன. 1996இல் ஒரு குறைந்தபட்ச பொது செயல் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற உறுதிமொழியின் அடிப் படையில் இடதுசாரிக் கட்சிகள் வெளியி லிருந்து ஆதரவு அளிப்பது என்கிற நிபந் தனையுடன் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி உருவானது. அந்த குறைந்த பட்ச பொது செயல் திட்டத்தில் தூய்மை யான நிர்வாகம் என்ற பிரிவில் கூறப்பட்டி ருந்ததாவது: “ஐக்கிய முன்னணி ஓர் ஊழலற்ற தூய்மையான நிர்வாகத்தினை அளிக்க உறுதி பூண்டுள்ளது. லோக் பால் அமைப்பதற்காக ஒரு சட்டமுன் வடிவு பதினோராவது மக்களவையில் முதல் பட்ஜெட் கூட்டத் தொடரில் அறி முகப்படுத்தப்படும். இந்தச் சட்டமுன் வடிவின்கீழ் பிரதமர் அலுவலகமும் கொண்டுவரப்படும். இந்தச் சட்டத் தின்கீழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் லோக்பால் அமைப்பின் முன்பு ஒவ்வோராண்டும் தங்கள் சொத் துக்களை பிரகடனம் செய்திட வேண் டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டி ருக்கிறது.”

இன்றையதினம், ஊழலுக்கு எதிராகப் புனிதப்போரைத் துவக்கி இருப்பதாகக் கூறுவோருக்கு மத்தியிலும் ஆழமான முறையில் கருத்து வேறுபாடுகள் மீண் டும் ஒருமுறை உருவாகி இருக்கின்றன. அதாவது இந்தச் சட்டமுன்வடிவின் வரம் பெல்லைக்குள் பிரதமரையும் அவருடைய அலுவலகத்தையும் கொண்டுவர முடியுமா என்பது குறித்தே இந்தக் கருத்து வேறு பாடுகள் உருவாகி இருக்கின்றன.

1997இல் தேவ கவுடா தலைமையிலிருந்த ஐக்கிய முன்னணி அரசாங்கம் கொண்டுவந்த இந்தச் சட்டமுன்வடிவு அப்போதும் இதேபோன்ற கருத்துவேறு பாடுகளில் சிக்கிக்கொண்டதால் இது வெளிச்சத்திற்கு வராமலேயே கிடப்பில் போடப்பட்டு விட்டது. பின்னர் அமைந்த ஸ்திரமற்ற ஐக்கிய முன்னணி அரசாங்க மும் இதில் எந்த முன்னேற்றத்தையும் ஏற் படுத்த முடியவில்லை.

அதனைத் தொடர்ந்து 1998இலிருந்து நடைபெற்ற பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்க மும், இப்போது ஊழலுக்கு எதிராகப் போராடுபவர்களாகத் தங்களைக் காட் டிக் கொண்டபோதிலும், அப்போது இந்தப் பிரச்சனை மீது வாயை மூடிக்கொண்டு இருந்துவிட்டது. ‘எதிர்க்கட்சியாக இருக் கும்போது ஊழலுக்கு எதிராகப் போராடு வது, ஆட்சியிலிருக்கும்போது அதற்கு நேரெதிராகச் செயல்படுவது’ என்பது தான் பாஜக கொள்கைபோலும்! (கர்நாடக நிகழ்ச்சிப் போக்குகளைப் பார்த்தாலே இதனைப் புரிந்து கொள்ள முடியும்.)

ஐ.மு.கூட்டணி-1 உறுதிமொழி

இடதுசாரிகள் நிர்ப்பந்தம் அளித்த தை அடுத்து, மீண்டும் ஒருதடவை, 2004 இல் ஐ.மு.கூட்டணி-1 அரசாங்கத்தின் குறைந்தபட்ச பொது செயல் திட்டத்தில், “லோக்பால் சட்டமுன்வடிவு சட்டமாக் கப்படும்” என்ற உறுதிமொழி மீண்டும் வலியுறுத்தப்பட்டது.

லோக்பால் சட்டத்தின் அதிகார வரம் பெல்லைக்குள் பிரதமரையும் சேர்ப்பது தொடர்பான பிரச்சனை மட்டுமல்ல, சச் சரவுக்கு இடமுள்ள மேலும் பல பிரச் சனைகள் குறித்தும் விவாதித்துத் தீர்வு காணப்பட வேண்டியுள்ளது. நீதித்துறை யை இதில் சேர்ப்பது, நாடாளுமன்றத் திற்குள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடந்துகொள்ளும் நடத்தை ஆகியன போன்ற பிரச்சனைகளும் இருக்கின்றன. நம் அரசியலமைப்புச் சட்டத்தில் அரசு அதிகாரிகளை மிகவும் எளிதான முறை யில் டிஸ்மிஸ் செய்வது அல்லது நீக்கு வது என்பதிலிருந்து அவர்களைப் பாது காக்கக்கூடிய வகையில் நன்கு வரை யறுக்கப்பட்ட பிரிவுகள் ஏற்படுத் தப்பட்டிருக்கின்றன.

இந்திய அயல்துறைப் பணிகள் , இந்திய ஆட்சிப் பணிகள் போன்ற மத்திய அரசுப் பணியாளர்களும், உச்ச நீதிமன்ற உயர்நீதிமன்ற நீதிபதிகளும் இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார்கள். அரசியலமைப்புச் சட்டத் தின் இத்தகைய ஷரத்துக்களும் திருத் தப்பட வேண்டுமா? லோக்பால் அமைப் பில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் தனியாகவோ அல்லது சேர்ந்தோ ஏறத் தாழ நீதித்துறை போன்றே செயல்படக் கூடிய அதிகாரங்களைப் பெறுகிறார்களா? அப்படியெனில் தற்போது இருந்து வரும் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் அல்லது மத்தியக் குற் றப்புலனாய்வுக் கழகம் போன்றவற்றின் தகுதிநிலை அல்லது தேவை என்னவாக இருந்திடும்?

இத்தகைய பிரச்சனைகள் தொடர்பாக அரசியல் கட்சிகள் உட்பட பல்வேறு அமைப்பினர் மத்தியில் கலந்தா லோசனைகள் மேற்கொள்ளும் நடை முறையை மத்திய அரசு துவக்கியிருக்கிறது. அதன் இறுதி வெளிப்பாட்டிற்காக நாடு காத்துக்கொண்டிருக்க வேண்டியிருக்கிறது. எல்லாமும் முடிந்தபின், நம் அர சியலமைப்புச் சட்டத்தின் வரையறைகளின்படி, நம் கலந்தாலோசனைகளின் தரநிர்ணயம் எந்த அளவில் அமைந்திருந் தாலும், இறுதியாக இது தொடர்பாக நாடாளுமன்றத்தால் மட்டுமே ஒரு சட்டம் நிறைவேற்றப்பட்டு, பிரகடனப் படுத்த முடியும். எனவே, இவ்வாறு பல் வேறு தரப்பினர் முயற்சிகள் மேற் கொண்டபோதிலும், நாடாளுமன்றத்தின் முன் லோக்பால் சட்டமுன்வடிவைக் கொண்டுவராமல் மத்திய அரசு தப்பிக்க முடியாது.

தேசிய நீதித்துறை ஆணையம்

ஆயினும் அதே சமயத்தில் வேறு சில அம்சங்கள் குறித்தும் போதிய கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. மேல்மட் டங்களில் நடைபெறும் ஊழல்களை ஒழித்துவிட, லோக்பால் சட்டத்தின் கீழ் ஏற்படுத்தப்படும் அமைப்புகள் போது மானவைகளா? அவற்றால் நாட்டில் நடைபெறும் ஊழல்களை முற்றிலுமாக ஒழிக்க முடியாவிட்டாலும், குறிப்பிட்ட அளவிற்குத் தடுக்கக்கூடிய விதத்திலா வது செயல்பட முடியுமா? மேல்மட்டங் களில் நடைபெறும் ஊழல்களுக்கு எதி ராக ஒரு வலுவான போராட்டம் பல முனைகளிலும் நடத்தப்பட வேண்டும். லோக்பால் சட்டத்தின் கீழ் ஏற்படுத்தப் படும் அமைப்புகளின் அதிகார வரம் பெல்லைக்குள் பிரதமர் மற்றும் பிரதமரின் அலுவலகத்தையும் கொண்டுவரக் கூடிய அதே சமயத்தில், வேறு பல நட வடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டி யிருக்கிறது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இடதுசாரிக் கட்சிகளும் பல ஆண்டு காலமாகவே தேசிய நீதித்துறை ஆணையம் அமைக் கப்பட வேண்டும் என்று கோரி வருகின்றன. நீதிபதிகள் மற்றும் உயர் நீதித்துறை அலுவலர்கள் நியமனங்களைத் தீர்மானிப்பதோடு, நீதித்துறையினரால் மேற் கொள்ளப்படும் நெறிதவறிய நடத்தை களை விசாரிக்கக்கூடிய விதத்திலும் அதிகாரங்கள் இவ்வாணையத்திற்கு அளிக்கப்பட வேண்டும். அரசியலமைப் புச் சட்டத்தின் தற்போதைய நடைமுறை யின்படி தவறிழைத்த ஒரு நீதிபதியை நீக்குவது என்பது அவ்வளவு எளிதல்ல. அவரை நீக்க வேண்டும் என்றால் நாடாளுமன்றத்தின் மூலம் பணிநீக்கத் தீர்மானம் கொண்டு வரப்பட வேண்டும். இது எளிதில் கை யாளமுடியாத ஒன்றாக அமைந்திருக் கிறது. நடைமுறையில் ஊழல் பேர் வழிகளை அவ்வளவு எளிதாக அகற்ற முடியவில்லை. எனவே, லோக்பால் சட்டத்துடன் அதேபோன்றதொரு தேசிய நீதித்துறை ஆணையமும் அமைக்கப்பட வேண்டியிருக்கிறது. இந்தத் திசைவழி யிலும் கலந்தாலோசனைகளைத் தொடங்கிட அரசு முன்வர வேண்டும்.

தேர்தல் நிதித்தொகுப்பு

இந்த வேலைகளைச் செய்து கொண் டிருக்கும் சமயத்திலேயே, ஜனநாயக முறையில் வேட்பாளர்களைத் தேர்ந் தெடுப்பதைக் கடுமையாகப் பாதிக்கக் கூடிய விதத்தில், தேர்தல்களில் பண பலம் பயன்படுத்தப்படுவதை முற்றிலு மாக ஒழிக்கமுடியாவிட்டாலும் கணிச மான அளவிற்குக் கட்டுப்படுத்தக்கூடிய வகையில், நடைபெற்ற தேர்தல்களில் கிடைத்திட்ட அனுபவங்களிலிருந்து அர்த்தமுள்ள உறுதியான தேர்தல் சீர் திருத்தங்களைக் கொண்டுவரவும் நட வடிக்கைகள் தொடங்கப்பட வேண்டும்.

தேர்தல்களுக்கு அரசே நிதி அளிப் பது தொடர்பாக சில விவாதங்கள் தொடங்கப்பட்டிருக்கின்றன. இதனை மேலும் முன்னெடுத்துச் செல்ல வேண்டி யிருக்கிறது. உயர் இடங்களில் உள்ள லஞ்ச ஊழல்களைக் களைந்திட உண் மையிலேயே அரசு ஆர்வம் கொண்டிருந் தால், அரசியல் கட்சிகளுக்கு அனைத்து கார்ப்பரேட் நிறுவனங்களும் நிதி அளிப் பது தடை செய்யப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எப்போதும் கூறி வந்திருக்கிறது. அரசியல் ஊழலுக்கு இது ஒரு முக்கியமான மூலகாரணமாக விளங்குகிறது. ஏனெனில் இவ்வாறு இவை அரசியல் கட்சிகளுக்கு நிதி அளிப்பது என்பதை ஒரு முதலீடாகவே கருதுகின்றன. நம் நாட்டின் ஜனநாயக அமைப்பை வலுப்படுத்தவும், ஒருங்கி ணைக்கவும் கார்ப்பரேட் நிறுவனங்கள் நிச்சயம் பங்களித்திட வேண்டும்தான். இதற்கு அவை தங்கள் நன்கொடைகள் மற்றும் நிதி உதவிகளை நேரடியாகவே தேர்தல் ஆணையத்திடமே அதனால் நிர் வகிக்கப்படும் நிதித்தொகுப்பிற்கு அளித் திடலாம். அல்லது தேர்தல் செலவினங் களுக்கு நிதி அளிப்பதற்காக அரசாங்கம் ஏதேனும் அமைப்பினை உருவாக்கி னால் அதனிடம் செலுத்திடலாம்.

மேல்மட்டங்களில் உள்ள லஞ்ச லாவண்யங்களைக் கட்டுப்படுத்த இவ் வாறு ஒரே சமயத்தில் பல்வேறு அமைப் புகள் உருவாக்கப்பட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டியது மிகவும் அவசியமாகும்.

நிறைவாக மேல்மட்டங்களில் காணப் படும் லஞ்சத்தை முற்றிலுமாக ஒழிக்க வேண்டியது அவசியம் என்று மீண்டும் ஒருமுறை அடிக்கோடிட்டுக் கூற வேண் டிய தேவையில்லை. கடந்த சில ஆண்டு களில் பல்வேறு ஊழல்கள் மூலமாகவும் சூறையாடப்பட்டுள்ள பல லட்சம் கோடி ரூபாய்களும் அவ்வாறு கொள்ளையடிக் கப்படுவதிலிருந்து தடுக்கப்பட்டு, நாட்டு மக்களுக்கு உணவுப் பாதுகாப்பை ஏற் படுத்திடவும் கல்வி மற்றும் சுகாதாரத் தை அளித்திடவும் பயன்படுத்தப்பட்டி ருக்குமானால், சிறந்ததோர் வாழ்க்கை யை நாட்டு மக்களுக்கு அளிக்கக்கூடிய வகையில் மிகவும் தரமான முறையில் நம் நாடு மாற்றியமைக்கப்பட்டிருக்கும். எனவே, ஊழலை ஒழிப்பதற்கான போராட்டம் அறநெறி அடிப்படையிலும், பொருளியல் அடிப்படையிலும் சிறந்த தோர் இந்தியாவை உருவாக்க மிகவும் அவசியமானதாகும்.

தமிழில்: ச.வீரமணி

சனி, 4 ஜூன், 2011

இப்படித்தான் இருப்பார்களா ?கம்யூனிஸ்டுகள்!

எத்தனை இரவுகள் பசியோடும் பட்டினியோடும் போராடினர். எத்தனை துப்பாக்கிச் சூடுகள், தூக்குக் கயிறு, சிறை, சித்திரவதை, குண்டாந்தடிகள். இவர்கள் சிந்திய இரத்தக் கறையை மறைக்கத்தான் சிறைச் சாலைக்கு சிவப்பு வர்ணம் பூச ஆரம்பித்தனர் என்ற வாதத்தை மறுக்க யார் இருக்கிறார்கள்?


கஞ்சி இல்லாதவனுக்காகவும் காலில் செருப்பு இல்லாதவனுக்காகவும் கந்தை இல்லாதவனுக்காகவும் தனது படிப்பு, பட்டம், பதவி, பட்டாடை, சொத்து சுகம் அனைத்தையும் இழந்து, பஞ்சை பராரிகளைப் போல் வாழ்ந்த அந்த ‘ பசை” பற்றற்ற துறவிகளை யார் கண்டு கொண்டனர்? 


யார் தலையிலோ விழுந்த இடிகளை எல்லாம் தன் தலையில் தாங்கிக் கொள்ள ஓடிய கால்களை நீங்கள் ஒரு முறையேனும் பார்த்திருக்-கின்றீர்களா? எத்தனை வெடிப்புகள்? எத்தனை காயங்கள்? அவர்கள் ஓடும் பாதை மலர் படுக்கை அல்ல! கல்லும் முள்ளும் நிறைந்த பாதைதான்.


அய்யோ! வலிக்கிறதே என்று என்றாவது ஒருநாள் முணு முணுத்திருப்பார்களா? வலியால் அழுதால் கூட உள்ளுக்குள்தான் அழுதிருப்பார். ஊருக்குத் தெரிய ஒரு நாளும் அழுதிருக்க மாட்டார்கள்.


இவர்களின் லட்சியம் எல்லாம் பாலுக்கு அழாத பிள்ளை, கூழுக்கு அழாத அன்னை, படிப்பிற்கு ஏங்காத மாணவன், வேலைக்கு அலையாத இளைஞர், நோயுக்கு அழாத மனிதர், வீட்டிற்கு, ஏங்காத குடும்பம். இதுதானே? இது உனக்குக் கிடைத்தால் எனக்கும் கிடைக்கும் இது உனக்கு கிடைக்காமல் நான் மட்டும் பெறுவதா? ச்சீ! ச்சீ!! அதை அனைவரும் பெற எத்தனை யுகயுகங்கள் ஆனாலும் அனைவரும் பெறும் வரை காத்திருப்போம் அனைவரும் பெறப் போராடுவோம். இவை அனைத்தும் ஒருசேரக் கிடைப்பது கனவல்ல நிஜம்.

நீங்களும் நானும் ஒரு சேர சிந்தித்தால் ஒரு நொடியில் சாத்தியமே ஆனால் நீங்கள் எல்லாம் இன்னும் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி பற்றிய கனவிலேயே மிதக்கும் போது உங்களை கைதூக்கிவிட இன்னும் கடினப் பாதையைத்தான் நான் கடக்க வேண்டியுள்ளது என தான் சிந்தும் வியர்வையையும், இரத்தத்தைப் பற்றியும் கவலைப்படாது ஒரு மனிதன் நமக்காக உழைத்துக் கொண்டிருக்கிறானே அவன் யார்? அவன்தானே அய்யா ‘கம்யூனிஸ்ட்” அவன் பாடுகளை எல்லாம் நமக்காகத்தானே சுமந்தான். அதைப் பார்த்தறிந்தோமா?



வண்ண வண்ண மேடைகள் அமைத்து, வகைக்கொரு விளக்கேற்றி பளபளக்கும் பட்டாடை கட்டி, பலரை ஆடவிட்டு, பாடவிட்டு பொய்யை பலவாறு பேசவிட்டு எளிதாக ஏமாற்றினர். ஏமாந்த நம் தலையில் ‘மாவரைக்கும்” மக்கள் தலைவர்களை நம்பினோம் ஏமாந்தோம் அரிதாரத்தைக் கொண்டு அதிகாரத்தைக் கைப்பற்றினர்.


ஆட்சியை அதிகாரத்தை அரியணையை யாருக்கு நாம் தந்தோம். ஆடல்காட்டி, பாடல் கூட்டி நம் செல்வங்களை எல்லாம் மூட்டை கட்டி ஏப்பம் விடும் எத்தர்களுக்குத்தான் தந்தோம்.


இவர்கள் அதிகாரத்திற்கு வந்தவுடன் மக்கள் வளத்தைப் பெருக்கினர். ஆம் தன்மக்கள் வளத்தைப் பெருக்கினர். தம்குடும்பச் சொத்துக்களையே நாட்டுக்கு அளித்த கம்யூனிஸ்ட்டுகள் எங்கே? அரசு சொத்துக்களைத் தங்களுக்கு என சூறையாடும் இன்றைய தலைவர்கள் எங்கே?

முன்னர் எல்லாம் பெஷாவர் சதிவழக்கு கான்பூர் சதிவழக்கு மீரட் சதிவழக்கு லாகூர் சதிவழக்கு நெல்லை சதிவழக்கு, மதுரை சதி வழக்கு, சென்னை சதி வழக்கு என புகழ்பெற்ற சதி வழக்குகளில் கம்யூனிஸ்ட் தலைவர்கள் எல்லாம் சிறையில் இருந்தனர்.
சிறையில் இருந்த பலரும் கம்யூனிஸ்ட் ஆனார்கள் அன்று. ஆட்சியில் இருப்பவர்கள் எல்லாம் சிறைக்கு போகிறார்கள் இன்று கம்யூனிஸ்ட்டுகள் சிறைக்குப் போனது நாட்டுக்காக இந்தக் கழிசடைகள் சிறைக்குப் போவது திருட்டுக்காக.



திகார் சிறை இன்றைய ஆட்சியாளர்களை வாவா என அழைக்கிறது. இவர்கள் எல்லாம் நாட்டிற்காக மாடாய் உழைத்து ஓடாய்த் தேய்கிறார்களே அதற்காகவா? எண்ணிப் பாருங்கள்; ஆ.இராசா, மதுகோடா, சுரேஷ் கல்மாடி,  கனிமொழி அடுத்து தயாநிதி
 இன்னும் இன்னும் இதுபோல் சிக்கிக் கொண்டவர் சிலர். தப்பித் திரிபவர் பலர்.


தேசிய மயமாக்கப்பட்ட “பங்குச் சந்தை” ஊழலுக்கு அப்பாற்பட்டவர்கள் உலகையே திரும்பிப் பார்க்க வைத்த ‘ஸ்பெக்டரம்” ஊழலை வெளிச்சமிட்டுக் காட்டியவர்கள் ஃபோபர்ஸ் பீரங்கி ஊழலை வெளிக்கொண்டு வந்தவர்கள் சர்க்காரியா கமிஷன் முன்பு கலைஞரை நிற்க வைத்தவர்கள் இப்படி எத்தனையோ ஊழலை ஊருக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியவர்கள் கம்யூனிஸ்டுகள் தான்.


சுடுகாட்டு கொட்டகையிலும் ஊழல், சவப்பெட்டி வாங்கியதிலும் ஊழல், கார்கில் வீரர்களின் விதவை மனைவிமார்களுக்கு வீடு கட்டும் திட்டத்திலும் ஊழல், காமன்வெல்த் விளையாட்டிலும் ஊழல், ஊழல், ஊழல், ஊழல். காங்கிரஸ் ஆட்சி ஊழல் காட்டாட்சி நடத்துகிறது. தத்தார் அரசாளும் தனிக்காட்டு இராஜியத்தில், கத்திரிக்கோல் மந்திரியாம் கன்னக்கோல் காவலராம்.