ஞாயிறு, 27 மார்ச், 2011

திமுகவின் கேப்பையில் நெய் வடிகிறது! கேளுங்கள்!!எடுபடாது; புருடா; காப்பி; ஜெராக்ஸ்” இப்படிப்பட்ட முத்துக்களை உதிர்த்திருப்பது யார்? ஏன்? எதற்கு? நீங்கள் மனதில் நினைப் பது சரிதான்! ஆம், அதிமுக தேர்தல் அறிக்கையைத்தான் திமுக கூட்டணியின் தலைவர்கள் இவ்வாறாக ‘கோரஸ்’ பாடியுள்ளனர். மாமியார் உடைத்தால் மண் சட்டியாம்; மருமகள் உடைத்தால் பொன்சட்டியாம்! இதுதான் இவர்களின் ‘அகராதி’யாம்!

திமுக 5 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்தபோது, சொன்னதையும் செய்தார்களாம்; சொல்லாததையும் செய்தார்களாம்! உண்மை; ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும்; கலைஞர் காப்பீட்டு திட்டம் என்கிற பெயரால் ‘ஸ்டார் ப்ளஸ்’ என்கிற பெரும் தனி யார் கம்பெனிக்கு பல்லாயிரம் கோடி ரூபாயை கொட்டிக்கொடுப்போம் என்று சொல்லவில்லை; ஆனால் செய்திருக்கிறார்கள். கூரை இல்லா காரை (கான்கிரீட்) வீடாக்குவதில் கந்துவட்டிக்காரர்களிடம் சிக்க வைப் போம் என்று சொல்லவில்லை; ஆனால் செய்திருக்கிறார்கள்! இப்படி பற்பல!

இவர்கள் (திமுக) மிக்ஸி, கிரைண்டர், இதற்கு மேல் வாஷிங் மிஷின் கூட கொடுப்பார்களாம். ஆனால் அது ‘புருடா’ இல்லையாம்! இவர்களின் ஆட்சிக்காலத்தில் இலங்கையில் தமிழர்கள் கொத்துக்கொத்தாக படுகொலை செய்யப்பட்டபோது நீலிக்கண்ணீர் வடித்துவிட்டு, உண் ணாவிரதத்தைத் துவங்கிய அடுத்த வினாடியே முடித்துவிட்டு, இனிமேல் ஆட்சிக்கு வந்துதான் இலங்கை தமிழர்களை காப்பாற்றப் போகிறார் களாம்! இது ‘புருடா’இல்லையாம்! அதுபோல் சேது சமுத்திரத் திட்டத் தையும் இனி ஆட்சிக்கு வந்துதான் நிறைவேற்றப்போகிறார்களாம்! இது புருடா இல்லையாம்!

இனிமேல் தமிழக மக்களுக்கு செய்வதற்கு எதுவுமே பாக்கி (மிச்சம்) இல்லையென்று ‘அந்திம’ காலத்தில் கதையளந்து கொண்டிருக்கிறார்கள். இது காப்பியோ, ஜெராக்ஸோ இல் லையாம்; ஒரிஜினலாம்; எடுபடுமாம்! கேளுங்கள் கேப்பையில் நெய் வடி கிறதாம்!

சென்ற தேர்தலின்போது, அதிமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிதான் ‘லேப்-டாப்’ என்கிற மடிக்கணினி! இதை திருமா பாஷையில் சொன் னால்- “...திமுக தலைவர் கருணா நிதி மாணவர்களின் படிப்பு மற்றும் குடும்பத்தை கெடுக்கும் குட்டிச் சாத்தானான கலர் டி.வி.யை வழங்கு கிறேன் என்கிறார். அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவோ மாண வர்களின் நலனுக்காக லேப்-டாப் தருகிறேன் என்கிறார்” கதாநாயகி யும் ‘டூப்பிளிகேட்’ என்பதற்கு வேறெதுவும் சான்று வேண்டுமா?

காப்பி அடித்தால் மாணவர்க ளுக்கு ‘பனிஷ்மெண்ட்’ (தண்டனை) உண்டாம்; மருத்துவர் ஐயா சொல்கிறார். அதுவும் 5 இல்லையாம்; நிரந்தரமாக வாம்! நல்லது! காப்பி அடித்தால் தண்டனை என்றால்?... திருடி னால்? அதற்கு பாராட்டா? சீராட்டா? பரிசளிப்பா? என்ன தருவது? என்பதை தேர்தலுக்குப் பிறகாவது ஐயா சொல்லுவார்கள் என்று நம்புவோமாக? திருட்டு இதோ...

60 வயதானவர்களுக்கு பஸ் பாஸ் என்று கதாநாயகியில் இருக் கிறது; கட்டப்பஞ்சாயத்து, மணல் கொள்ளை போன்றவற்றை தடுக்க கதாநாயகி எதுவும் சொல்லவில் லை! இந்நிலையில், மார்ச் 23ல் திரு வாரூரில் திமுக கூட்டம்; இதற்கு மறுநாள் மார்ச் 24ல் திருச்சியில் அதிமுக தேர்தல் அறிக்கை வெளி யிடப்பட உள்ளது. இதில் என்ன இருக்கிறதென்பதை உளவுத்துறை ‘மோப்பம்’ பிடித்துவிட்டது. அதனால் கலைஞர் 23ம் தேதி திருவாரூர் பொதுக்கூட்டத்தில், கதாநாயகிக்கு புதியதாக ஒரு ‘மேக்கப்’ போடுகிறார் பாருங்கள்... “..நமது தேர்தல் அறிக் கையை படித்த சிலர் என் காதுக ளில் கிசுகிசுக்கிறார்கள்; கிசுகிசுப்பு மிகவும் அபாயகரமானது...” என்றெல் லாம் பீடிகை போட்டுவிட்டு... “பஸ் பாஸ் பெறும் வயதை 58 என்றும், கட்டப்பஞ்சாயத்து, மணல்கொள் ளையை ஒழிக்க (இதற்கு தற்போ தைய 5 ஆண்டுகால ஆட்சியில், குண்டர்சட்டம் பாய்ந்து பாய்ந்து ஓய்ந்துவிட்டது) புதிய சட்டம் கொண்டு வரப்படும்...” என ‘பிற்சேர்க்கை’ ஒன்றை ‘ஒட்டு’ போட்டார்! இன் னும் தேர்தல் முடிவதற்குள் ஓட்டுக் காக என்னென்ன ஒட்டுப்போட போகிறாரோ... பாவம்!

பி.தங்கவேலு

1 கருத்து:

விடுதலை சொன்னது…

கருணாநிதி அரசின் ஐந்தாண்டு சாதனைகள் :

1.ஸ்பெக்ட்ரம் மூலம் ஒருலட்சத்து எலுபத்தைந்தாயிரம் கோடி ரூபாய் சுருட்டியது (அமெரிக்க பத்திரிக்கை வரை தமிழனை அறிமுகபடுத்தியது)
2.இரண்டு மகன்கள் ஒரு மகள் பேரன் முதலானோருக்கு பதவி
3.குடும்ப சண்டையில் மதுரை தினகரன் அலுவலகத்தில் மூன்று பேர் உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்டது
4.ஐந்தாண்டுகளில் 634 பாராட்டு விழாவுக்கு தலைமை தாங்கியது
6.ஐந்தாண்டுகளில் ஏழு உலக புகழ் பெற்ற திரைப்படங்களுக்கு வசனம் எழுதியது
7.ஒட்டு மொத்த தமிழ் சினிமாவை தன் குடும்பத்தின் கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்தது
8.கட்சிக்கு புதிய உறுப்பினர் சேர்க்காமல் அடுத்த கட்சியினரை விலைக்கு வாங்கியது (மதிமுக கூட்டரத்தையே காலி பண்ணிய புண்ணியவான்)
9.ஒட்டு மொத்த ஊடகத்தையும் (பத்திரிக்கை ,தொலைக்காட்சி உட்பட) தன் குடும்பத்தின் கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்தது
10.ஓட்டுக்கு பணம் என்ற அற்புத திட்டத்தை உலகுக்கே அறிமுகபடுத்தியது
11.ஐந்தாண்டு காலம் தினம் இரண்டு மணி நேரம் கரண்ட் கட் (சென்னையை தவிர) இதுதான் மிகப்பெரிய சாதனை
12.பன்னாட்டு கம்பெனிகளுக்கு தடையற்ற மின்சாரம் ஓட்டு போட்ட மக்களுக்கு பரிசு இல்லாத மின்சாரத்துக்கு கட்டண உயர்வு
13.அரைமணி நேரம் உண்ணாவிரதம் (கின்னஸ் சாதனை இதுவரை யாரும் முறியடிக்க முடியாத சாதனை) இருந்து இலங்கை போரை நிறுத்தியதாக நாடகம் ஆடியது
14.அரசு பணத்தை செலவு செய்து கோவையில் குடும்ப மாநாடு நடத்தியது(தனது குடும்பம் மட்டும் பார்த்து ரசிக்க தனி மேடை)
15.அரசு பணத்தில் இலவச டிவி கொடுத்து கேபிள் இணைப்பை தனது பேரன்கள் மூலம் குடுத்து (சுமங்கலி கேபிள், ராயல் கேபிள்) குடும்ப வருமானத்தை பெருக்கியது
16.மனைவி, துணைவி, பெரியமகன், சின்னமகன், பேரன்கள், ஆகியோர் இடையே சண்டை சச்சரவுகள் வராமல் தமிழ் நாட்டை தனித்தனி மண்டலங்களாக பிரித்து கொடுத்தது (ஐந்தாண்டு காலம் இவர் இதற்க்கு தான் அதிக நேரம் செலவிட்டார்)
17.இலவசங்கள் கொடுத்து ஆட்சியை பிடிக்கலாம் என நிரூபித்த மேதை
இன்னும் நிறைய சாதனைகள் செய்துள்ளார் எழுதிக்கொண்டே போகலாம் தமிழக மக்களே மீண்டும் இவரை ஆறாவது முறையாக முதல்வராக்கினால் இது போல் நிறைய சாதனை செய்வார். திருவாரூரில் இருந்து திருட்டு ரயில் ஏறி சென்னை வந்து தனது சாம்ராஜ்ஜியத்தை நிறுவியவர் மீண்டும் திருவாரூக்கே போகிறார் மன்னனாக.