செவ்வாய், 29 மார்ச், 2011

சொல்லாததையும் செஞ்சாங்கல்ல... திமுக


‘‘சொன்னதை மட்டுமல்ல

சொல்லாததையும் செய்தது திமுக அரசு”

அப்படின்னு அடிக்கடி திமுக தலைவர்களும் கூட்டணிக் கட்சிக் காரங்களும் பேசறாங்களே அதுக்கு என்னப்பு அர்த்தம்? எனக்கு ஒரு சந்தேகம். சொல்லாததை எப்படி அப்பு செய்ய முடியும்?

என்னலே. சுத்த மொண்ணையா இருக்க. செல்போன் கம்பெனி களுக்கு லைஸென்ஸ் குடுக்குற விஷயத்துல மத்திய மந்திரியா இருந்த ராசா 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய்க்கு முறைகேடு செய்வார்னு சொன்னாங்களா? சொல்லல, ஆனா செஞ்சாங்கல்ல...

ஓ...நீயி அப்படிவர்ரியா? இப்பத் தான் புரியுது. ஊழல்ல மாட்ற மந்தி ரிய ஜெயில்ல வச்சித்தான் ஸ்டா லின் மாதிரி தலைவரெல்லாம் பாப் பாருன்னு சொல்லல. ஆனா செஞ் சாங்க. சரிதான். அப்புறம். என்னல் லாம் சொல்லாதத செஞ்சாங்கப்பு...

ஆட்சிக்கு வந்தவொடனே ஆரம் பிச்சாங்க பாரு அடிதடி அரசியலு... சென்னை மாநகராட்சித் தேர்தல் ரணகளமாயிருச்சுல்ல. கையில வீச்சருவா, கார்ல உருட்டுகட்ட. கூட்டணியில இருந்த பாமக கூட பதறிப்போச்சுல்ல. கோர்ட்டுல கேச போட்டு 99வது வார்டுக்கு திரும்ப தேர் தல் நடந்துச்சு. அப்ப விழுந்த கரும் புள்ளிதான் போலீஸ் அதிகாரி லத் திகா சரணுக்கு. இப்ப நடக்குற தேர் தல்ல லீவு போட்டுட்டுப் போக வேண்டியதாயிருச்சு. இதையெல் லாம் சொன்னாங்களா? இல்ல... ஆனா செஞ்சாங்கல்ல.

நீதிக்குத்தல வணங்குறோம்னு வக்கணையா வசனம் பேசுவாங்க. ஆனா, நீதிமன்றத்துக்குள்ளயே போலீச ஏவி வக்கீல்கள மட்டுமல்ல நீதிபதியையே பதம் பாத்தாங்க. கருப்பு கோட்டெல்லாம் செவப் பாயி, பாத்துக்க இதுதான் கருப்பு சிவப்புன்னு காட்டுனாங்க. இதை யெல்லாம் சென்னாங்களா? இல்ல... செஞ்சாங்கல்ல..

சமச்சீர் கல்விய நாங்கதான் கொண்டாந்தோம்னு பீத்திக்கிறாங் களே. இதோட பின்னணி தெரி யுமா? முத்துக் குமரன் குழுன்னு ஒண்ண போட்டாங்க. அதோட அறிக்கைய கெணத்துல போட் டாங்க. அத அமல்படுத்துன்னு கேக் கப்போனாங்க எஸ்எப்ஐ மாணவர் கள். கோட்டையைக் கைப்பற்ற வந்துட்டாங்கன்னு காவல்துறை கண்மூடித்தனமா அடிச்சு நொறுக் குச்சு. இதைச் சொன்னாங்களா? இல்லியே. செஞ்சாங்கல்ல.

இன்னொண்ணையும் சொல் றேன் கேட்டுக்க. சென்னையில சட்டக் கல்லூரி இருக்கு. அதுவும் ஐகோர்ட்டு மூக்கு நுனியில. மாணவர்களுக்குள்ள மோதல். ஒரு குரூப்பு இன்னொரு குரூப்பைக் கொலவெறியோட தாக்குது. இதப் பாத்துகிட்டு செவர் வச்சமாதிரி நிண்ணுது போலீசு. இந்தக் காட்சிய மனசாட்சி உள்ள யாரும் மறக்க மாட்டாங்க. காவல்துறை கையாலா காததா கருணை இல்லாததா கட மையாற்றாததா இருக்கும்னு சொன்னாங்களா? இல்ல. செஞ்சாங் கல்ல.

ஒரேயடியா அப்படி சொல்லிட முடியுமா அப்பு? செல்போன் உதிரி பாக கம்பெனியில போராட்டம் நடத்துன சிஐடியு தலைவர கைது பண்ணி சட்டம் ஒழுங்க பாதுகாத் தங்கல்லியா?

ஆமாமா... நல்லா பாதுகாத் தாங்க. ஃபாக்ஸ்கான் கம்பெனிங் கிறது செல்போனுக்கு உதிரிபாகம் செய்யறது. இந்தக் கம்பெனியில தொழிலாளர்களுக்கு ஆதரவா ஜனநாயக முறைப்படிதான் போராட் டம் நடத்துனாங்க. தொழிலாளர் களின் தோழன்னு பேசுறவர் ஆட்சி யில போலீஸ் என்ன பண்ணுச்சி? சிஐடியு தலைவர் சவுந்தரராசன கைது பண்ணுச்சி-ஜெயில்ல அடைச் சுது. கோர்ட்டுக்குக் கூட்டிவரும் போது கையில வெலங்கு மாட்டிச்சு. வெளங்குமாலே இந்த அரசாங்கம்? இந்த மாதிரி அராஜகம் பண்ணு வோம்னு சொன்னாங்களா? இல்ல செஞ்சாங்கல்லியா?

அப்படியே இந்தப் பக்கம் வா. பெண்களுக்கு அதச் செய்றேன் இதச் செய்றேன்னு பெருமையா சொல்லிக்கிறாங்களே! லதாங்குறது சிபிஎம் கட்சியோட எம்.எல்.ஏ. அவங்கள போலீஸ் என்ன பண் ணுச்சி தெரியும்ல?

அவங்க மொதல்ல என்ன பண் ணினாங்கன்னு சொல்லுங்க அப்பு.

அனைத்து சாதியினரும் அர்ச்சகராக நாங்கதான் அஸ்திவாரம் போட்டோம்னு சொல்றாங்களே. இவங்க ஆட்சிக் காலத்துல காங்கியனூர் கோயிலுக்குள்ள தலித்துகள அழைச்சிகிட்டு போகலாம்னு புறப்பட்டாங்க. இதுதப்பா? பொண் ணுண்ணும் பாக்கல. எம்எல்ஏன்னும் பாக்கல, புடிச்சித் தள்ளி பூட்ஸ் காலால மிதிச்சு. சொல்ல முடியாத வேதன. பல நாள் ஆஸ்பத்திரியில படுக்கவச்சிட்டாங்க.

தலித் மக்கள மனுஷனாக்கிய சீனிவாசராவ் நினைவு நாளன்னிக்கு இப்படியெல்லாம் துவம்சம் பண்ணுவோம்னு சொன்னாங்களா? இல்லியே. ஆனா செஞ்சாங்கல்ல.

சொல்லாததையும் செய்வோம் கிறது இதுதானா? அம்மாடியோவ். இவங்க சங்காத்தியமே கூடாது அப்பு. இத ஊரு பூரா சொல்லி வைக் கிறேன் பாரு ஆப்பு.

- மயிலைபாலு

கருத்துகள் இல்லை: